E6 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
Hi mam

கண்ணன் அனைத்து காரணங்களையும் தன் தரப்புக்கு சாதகமாய்தான் பார்க்கின்றார்,திருமணம் முடிந்தால் எல்லோரும் இயல்பாய் எதிர்பார்ப்பது குழந்தைதானே, இதில் கண்ணன் வீட்டார் என்ன விதிவிலக்காக,இதில் சுந்தரியுடனான திருமணம் பிடிக்கவில்லையென்று தன்குடும்பத்தாருக்கு முதலிலேயே தெரியும்தானே,இதில் குழந்தை விடயம் தெரிந்த போது முதலில் அதிற்சியாய் இருந்தாலும் ,எல்லோரும் ஆறமரப்பேசியிருந்தால் எல்லோரும் கண்ணனை உயர்வாகத்தான் நினைத்திருப்பார்கள்,பிடிக்காத திருமணமாயிருந்தாலும் தன்வாழ்கையை சரி செய்ய நினைக்கின்றார் என்று,ஏன் கண்ணன் கூட தன் வாழ்க்கையை சுந்தரிகூட இணைத்ததிற்கு காரணம்கூட அதுதானே,அப்படியாவது மனைவியை தனக்கு பிடிக்கவேண்டுமென்று,ஆனால் விவாகரத்து கேட்டதற்கு கண்ணன் நினைத்திருந்த காரணம் வெறும் கண்துடைப்பு ,அது எப்படி தன்தாயார் நடு வீட்டில் வைத்து சுந்தரியை பிடிக்கல பிடிக்கல என்று சொல்லிவிட்டு எப்படி இப்படி குழந்தைவரை வந்தது என்று கேட்டுவிட்டார் ,அதுவும் சுந்தரி பாட்டியிடம் சுந்தரியிடமும் தன் வீட்டினர் முன்பும் கேட்டுவிட்டார் என்று,அதனால் தாய்க்கும் இவருக்கும் மனஸ்தாபம் வந்து அவமானம் வந்துவிட்டதாம்,அத்தோடு சுந்தரியை நிமிர்ந்துமுகம் பார்க்க அவமானமாம்,இதனால் வீட்டை விட்டு வெளியேறி நண்பனுடன் இருந்து மேற்கொண்டு எதுவும் தோன்றாமல் வயது முதிர்ச்சி இல்லாமல் விவாகரத்து கேட்டு அனுப்பினாராம்,அது எல்லாம் சரி என்னுடைய கேள்வி விவாகரத்து கேட்டு அனுப்பினால் அல்லது பிரிந்தால் , இந்த அவமானங்கள் எல்லாம் போய்விடுமா,அறுதி உறுதியாக சுந்தரியுடனான திருமணத்தை மறுத்த மகன் அடுத்த மாதமே தந்தையாகிவிட்டார் என்று அறிந்தால் அதிற்சியாகத்தானே இருக்கும் அவருக்கு அதை ஜீரணித்துக்கொள்ள அவகாசம் வேண்டுமல்லவா ,அந்த அதிற்சியில் சொல்வந்ததை ஒழுங்காக சொல்லமுடியாமல் வார்த்தைகள் தவறுதலாக வந்துவிழுந்து சுந்தரிப்பாட்டியுடன் வாக்குவாதமாகிவிட்டது,ஆனால் அதை விமலா அவர்கள் கேட்ட இடமும் கேட்டதொனியும் தவறாக போய்விட்டது,அக்கேள்வி தன்மகனையும் மருமகளையும் ஏன் வயிற்றில் இருந்த குழந்தையையும் அவமானப்படுத்தும் செயல்தான்,அதற்காக ஒருவரையுமே எதிர்கொள்ளமுடியவில்லை என்றகாரணத்திற்கு விவாகரத்து செய்யலாமா,அவர்களின் வழக்கு நீதி மன்றம் வரும்வரைகூட கண்ணன் சுந்தரியுடன் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கவில்லைத்தானே,பின்பும் பெரிய வயிற்றுடன் பார்த்தபோது குழந்தைக்காக என்று நினைத்துத்தான் சுந்தரியை திரும்ப தன்னுடன் வாழ வருமாறு கேட்டிருப்பார்,பின்பும் கண்ணனுக்குத்தெரியும்தானே தனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கும் என்று ,அக்குழந்தையைப்பற்றி எந்தவித தகவல் சேகரித்தோ அல்லது அக்கறை காட்டியதாகவோ தெரியவில்லை, கண்ணனுக்கு பிடிக்கல என்ற சொன்ன பெண்ணுடன் தான் வாழ்ந்துவிட்டேன் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது ,அதனை ஒரு கௌரவக்குறைசலாக நினைத்தபடியால்தான்,இப்படி விவாகரத்து வரை போனார்,அதுவும் தன் மனைவி தன்குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கின்றார் என்று தெரிந்தபின்தானே விவாகரத்து கோரினார்,பிறகு என்ன நீதிமன்றம்வரை வந்துவிட்டு சேர்ந்து வாழக்கூப்பிடுவது இது எல்லாம் சும்மா ஒரு கண்துடைப்புக்குகேட்டது,அதை சுந்தரி புரிந்துகொண்டபடியால்தான் மறுத்திருக்கின்றார்,என்னவோ முழுதப்பும் கண்ணனுடையது,எந்த முடிவென்றாலும் இனி சுந்தரிதான் எடுக்கவேண்டும்,பிரிந்ததிலிருந்து இன்றுவரை தனியாக எங்கேயும் போகாமல் எல்லாவற்றையும் தாங்கி சாமாளித்தபெண்,இனிமேல்எந்தவருத்தமும்அடையக்கூடாது,
என்னுடைய 2 கேள்விகள் இதுதான்
1-சுந்தரி தாய்மை அடைந்தது தெரிந்தும் அதன் பின்பும் ஏன் விவாகரத்து கோரினார்.
2-தான் ஒரு குழந்தைக்கு தந்தையென்று தெரிந்திருந்தும் அப்பிள்ளை பற்றி ஏன் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.

நன்றி
Aravin22


On court only he comes to know abt her father's death and felt guilty of it ..
Malli also states that if sundari was there in his home means the prob would not be this much bigger..
its mere reaction of immatured guy..
As the days pass by gaining his maturity..
Need to wait till how he handles it and recovers his liFe..
How he will convince sundari...
 

murugesanlaxmi

Well-Known Member
நதி வளையும் வழி தெரிவதுண்டு
விதி வளையும் வழி தெரிவதில்லை
தெரிந்துகொண்டால் அது ருஷியுமில்லை
இனிமேல் என்ன கதையோ
பால் குடத்தில் ஒரு எறும்பு விழ
பல்லிஎன்று அதை வெறுப்பதென்ன
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன
பிழையோ என்ன பிழையோ
கண்ணீர் என்னை தண்டிக்குமா
காலங்கள் நம்மை மன்னிக்குமா

இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை


Movie song...
அருமை சகோதரி
 

arunavijayan

Well-Known Member
இல்லை..
சுந்தரி சாதாரணமானவள் இல்லை...
சாதாரண பெண்ணாயிருந்தால் அவன் விவாகரத்துக்கு கலங்கி இருப்பாள்..

அவன் திரும்ப அழைக்கும்போது கிராமத்து வாய்க்கு பயந்து உடன் சென்றிருப்பாள்....

மகனுக்காக தந்தை வேண்டும் என நினைத்திருப்பாள்...

அவள் அசாதாரணமானவள்....
:)
 

arunavijayan

Well-Known Member
அவன் போற்றியிருந்தால்...
மாமியார் வீட்டில் கொண்டாடியிருந்தால்...
தந்தையையும் இழந்ததும்..
சுற்றிலும் யாருமில்லை..
பெண்ணின் உள்ளே இருந்த ..பலம்..
தைரியம்.....சாதிக்கணும் என்ற வெறியை தந்தது..
:):cool:
 

arunavijayan

Well-Known Member
நான் சொன்னதை புரிஞ்சுக்கல..
அப்பா சொன்னதை கேட்டவள் தானே..
இவங்க வீட்டிலும்..விமலா முடிவுக்கு கட்டுப்பட்டவ தானே..
தன்னை சீண்டிய அன்னை, மகனை...தூக்கி தூர வைத்ததால்...
இப்ப உள்ளவள் பிறந்தாள்
:):)
 

arunavijayan

Well-Known Member
யாரும் மோசமானவர்கள் இல்லை...
கண்ணன், சுந்தரி, விமலா, பாட்டி அனைவருமே...

சூழ்நிலை, சமய சந்தர்ப்பம், பக்குவமின்மை, பேசும் பாங்கு, சொற்களின் தேர்வு இவையே துன்பம் விளைவித்தவை....
நிஜ வில்லன்கள்...
Very true
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top