AMP-10

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii...frds&siss...AMP 10 epi pottachu.. Then neenga epi konjam longa ketpadhal next epiyil irundhu... Kodukka pogiren.. Padithuvittu comments kodungama...happy reading..:):):):)


அத்தியாயம் - 10

காதலை உனர்ந்துவிட்ட தருணம்...
நான் புதிதாய் பிறந்த தருணம்...

சிவராமும், சீதாவும் அனைவரையும் உள்ளே அழைத்து அமர சொல்ல... ,இருக்கையில் அமரந்த ஆதி.. மனதில் "கடவுளே எப்படியாவது அவ ஓகே.. சொல்லிடனும்.." என்று வேண்டிக்கொண்டு இருக்க.. இளாவோ.. "ம்ம்ம்.. ஒரு வேல நம்மள மாதிரி அவனுக்கும் என்னை பிடித்துதான் வந்துருக்கானோ..." என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.. இவர்களின் எண்ணம் இப்படி இருக்க.. ரேஷ்மி ரோஹித் எங்கே.. என்று தேடிக்கொண்டிருந்தாள்.... அவன் ஆதியின் வீட்டினரை கவனித்துக் கொண்டிருந்தான் ...

சிவராம் "சீதா.. நீ போய் இளாவ வர சொல்லும்மா..." என்று சொல்ல.. "ம்ம்ம்.. சரிங்க.." என்று இளாவின் அறைக்கு சென்றுப் பார்க்க... ஆளுக்கு ஒரு மூளையில் நின்று எதையோ யோசித்துக் கொண்டிருந்தனர்... இளாவும்,ரேஷ்மியும்... "என்னாச்சி ரெண்டு பேருக்கும்.." என்று இளாவின் முதுகில் தட்ட.. அதில் சுயநினைவு பெற்றவள்.. "ம்ம்ம்.. என்னம்மா.." என்று கேட்க.. "என்னடி ரெண்டுப்பேரும் இப்படி நிக்கிறீங்க.. அங்க அப்பா உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க.. ரேஷ்மி இவள கூட்டிட்டு வாடா.. " என்று சொல்லிவிட்டு சென்றார்..

"ஏய்.. ரேஷ் பதட்டமா இருக்குடி..." என்று இளா கண்ணாடியில் முகத்தை பார்த்துக்கொண்டே சொல்ல.. "என்னடி இப்படி சொல்ற... வாழ்நாள் கடைசிவரைக்கும் அவர் கூடவே இருக்கப்போற..இப்படி பயப்படற.. ம்ம்ம்.. ஒருவேல மாப்பிள்ளை போலீஸ்ங்கறதால இப்படி இருக்கோ.. இரு நான் போய் ஆள் எப்படி இருக்கார்னு பார்க்கிறேன்.." என்று பார்க்கப்போனவளின்.. கையைப் பிடித்த இளா.. "ஏய்.. ஆல்ரெடி நீ அவரப் பார்த்து இருக்க.." என்று சொல்ல... "நான் எப்போடி பார்த்தேன்.." என்று ரேஷ்மி கேட்க.. "அதுவா.." அவர் என்று ஆரம்பித்து ஆதியைப் பற்றி சொன்னவுடன்... "அவனா.." என்று ஆச்சர்யமாக கேட்க... "ம்ம்ம்.. ஆமாடி அவர்தான்.. அப்புரம் இன்னோன்னு அவர அவன் இவன்னு சொல்லாத.. ஓகே.." என்று சொன்னவளை வினோதமாக பார்த்த ரேஷ்மி "இளா.. நீ அவர.. லவ் பன்றியா.." என்று கேட்க.. வெட்கப்பட்டுக்கொண்டே "ம்ம்ம் ஆமாடி... சரி சரி வாப்போகலாம்..." என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்...

இங்கே ஆதியின் அருகில் அமர்ந்திருந்த விஷ்வா ஹாலை சுற்றிப்பார்த்துக்கொண்டே வர.. சுவரில் மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்தவன்.. அதிர்ந்து ஆதியின் தோலில் வேகமாக கை வைத்து அழுத்த... "டேய்... என்னாடப் பன்ற.." என்று ஆதி கேட்டதும்... "மச்சி இப்படியே எழுந்துப் போறதுதான் நமக்கு நல்லது.." என்று சொல்ல... அதிர்ந்த ஆதி "என்னடா சொல்ற..." என்று கோவமாக கேட்க.. "அங்க... அந்த போட்டோல இருக்க பொண்ணு யாருன்னு தெரியுதா.. அன்னிக்கு ஷாப்பிங் மால்ல அடிச்சியே அந்த பொண்ணுடா... அவளோட அக்காவதான் நீ பொண்ணு பார்க்க வந்துருக்கன்னு நினைக்கிறேன்.." என்று சொன்னவனை பார்த்து உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்ட ஆதி.. "டேய்... பார்க்க வந்த பொண்ணே இவதாண்டா..." என்று அவன் காதில் சொல்ல... "என்னது.." என்று எழுந்துவிட்டான்.. விஷ்வா...

"என்னாச்சி ப்ரோ..." என்று ரோஹித் கேட்க.. "ஒன்னும் இல்ல,ப்ரோ.." என்று அமர்ந்துவிட்டான்...

இளா வர.. ஆதி அவளையே பாரத்துக்கொண்டிருக்க.. காஃபி நீட்டியவளின் கண்கள் அவனின் கண்களை பார்க்க அதில் தெரிந்த ஆர்வத்தை கண்டு முகம் சிவந்து கண்களை கீழே தாழ்த்திக்கொண்டாள்.. தனத்திடம் நீட்ட... "மகாலட்சுமி மாதிரி இருக்கடா.. இப்படி உட்காரும்மா.." என்று பக்கத்து இருக்கையில் அமரத்திக்கொண்டார்.. தனம்... நந்தினி "நீங்க தான் என் அண்ணின்னு பிக்சே பண்ணிட்டேன்.." என்று சொன்னவளை பிடித்துவிட்டது இளாவுக்கு... இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளி வராத நண்பனைக் கண்டு "பாவம் புள்ள இதுக்கே இப்படி ரியக்ட் பன்றானே.. நான் அவள லவ் பன்றத சொன்னா... ம்ம்ம்.. சொல்லிடுவோம்..." என்று நினைத்து அவன் தோளில் தட்ட.. சுயநினைவு பெற்ற விஷ்வா ஆதியை முறைக்க.. "சாரிடா.." என்று எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்..

"ம்ம்ம்.. ஏதோ.. இப்போவாவது சொல்ல தோணுச்சே.. ரொம்ப சந்தோஷம்டா..." என்று இவர்கள் இருவரும் பேச... அங்கே தனத்திடமும்,நந்தினியிடமும் பேசிக்கொண்டிருந்த இளா ஓரக்கண்ணால் ஆதியை சைட் அடித்துக்கொண்டிருந்தாள்... ரோஹித் ஆதியிடம் சென்று பேசப்போக.. அவனின் முன்னால் வந்து நின்றாள் ரேஷ்மி... அவளை சுற்றிக்கொண்டு சென்றுவிட்டான்... கண்களில் கண்ணீர் வந்துவிடுமோ என்று ரூமிற்க்கு சென்றுவிட்டாள்...

எல்லாவற்றையும் பேசிமுடித்த பெரியவர்கள்... இளாவிடம் ,ஆதியிடமும் "பிடித்திருக்கிறதா..." என்று கேட்க.. இருவரும் பார்த்துக்கொண்டே இருக்க.. பெரியவர்களுக்கு புரிந்துவிட .. சிரித்துக்கொண்டனர்... "டேய்.. போதும்டா.. கல்யாணத்துக்கு அப்புறம் சிஸ்டர் முகத்த தானடா... பார்க்கப்போற..." என்று சொல்ல.. அவனை பொய்யாக முறைத்தான்.. ஆதி...

சிவராம் "சம்மந்தி.. இப்போதைக்கு மோதிரம் மாத்திக்கலாம்.. கல்யாணம் அடுத்த மாசம் வச்சிக்கலாம்..." என்று சொல்ல.. "ம்ம்ம்.. செஞ்சிடலாம்.. அண்ணா.. எங்க சைட்ல சொந்தம்னு சொல்லிக்க யாரும் கிடையாது... நீங்க தான்.. முன்னாடி நின்னு செய்யனும்.. அண்ணா..." என்று தனம் சொல்ல... "இதுக்கென்ன தங்கச்சி.. செஞ்சிடலாம்.." என்று சிரித்துக்கொண்டே சொன்னார்...

மோதிரம் இருவரும் மாத்திக்கொள்ளபோக... ஆதி அவளின் கையைப் பிடித்து போட... அவளின் நடுக்கத்தை ரசித்தவன்... "ஏய்... லாலீபாப்.. எதுக்கு இப்படி நடுங்கற.." என்று ஹஸ்கி வாய்சில் கேட்க... அவனை நிமிர்ந்து பார்க்க.. கண்ணடித்துவிட்டான் ஆதி.. மறுபடியும் கீழே குனிந்து உதட்டை கடித்துக்கொண்டாள்... அவளின் செய்கையை கண்டவனின் மனம் தறிக்கெட்டு ஓட.. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்...

விருந்து முடிந்து அனைவரும் செல்ல... இளாவின் முகத்தை கண்ட ஆதி கண்களாளேயே விடைபெற.. அவளும் விடைகொடுத்தாள்...

ரேஷ்மி"ஓகே ஆன்டி.. டைம் ஆயிடுச்சி.. நானும் கிளம்புறேன்.." என்று சொன்னவளை நிறுத்திய சீதா "ரோஹித்... ரேஷ்மிய கொஞ்சம் ரயில்வே ஸ்டேஷன்ல.. விட்டுட்டு வந்துர்றியா..." என்று கேட்க.. அவன் பதில் சொல்வதற்கு முன்னாடியே... "இல்ல வேண்டாம்.. ஆன்டி.. நான் ஆல்ரெடி கேப் புக் பன்னிட்டேன்.. கீழதான் நிக்குது... நான் போயிட்டு வரேன்..." என்று எல்லோரிடமும் சொன்னவள்.. ரோஹித்தை பார்த்தவளின் கண்கள்.. கண்ணீரை சுரக்க... துடைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்....

வண்டியில் சென்றுக் கொண்டிருந்த ஆதி மகிழ்ச்சயின் உச்சத்தில் இருக்க.. அவனை கண்ட நந்து "என்ன.. அண்ணா.. கனவுல மிதக்குற போலருக்கு.." என்று கேட்க.. "ம்கும்.. அவன் கனவுலோகத்துக்குப் போய் ரொம்ப நாள் ஆகுது.." என்று கவுண்டர் கொடுத்துக்கொண்டிருந்தான்... விஷ்வா... ஆதியின் மொபைல் ஒலிக்க எடுத்துப்பேசியவன்.. "ம்ம்ம்.. ஓகே.. அங்கேயே கொஞ்சநேரம் வெயிட் பன்னுங்க... வந்தர்றேன்.." என்று போனை வைத்தான்...

அம்மாவையும்,தங்கையையும் அப்பார்ட்மெண்ட் வாசலில் இறக்கிவிட்டவன்... விஷ்வாவுடன் போனில் பேசியவனை சந்திக்க சென்றான்...

அழுதுகொண்டே சென்ற தன்னவளை நினைத்துக்கொண்டிருந்த ரோஹித்.. "ம்ச்ச்... என் டாலிய ரொம்ப கஷ்ட்டப்படுத்துறனோ... போன் பண்ணி சொல்லிடலாமா..." என்று யோசித்தவன்... அவளுக்கு கால் செய்ய... ரிங் போய்கொண்டே இருக்க பாதியில் ஸ்விட்ச் ஆப் என்று வரவும் கடுப்பானவன்... டாலி உன்ன நாளைக்கு வந்து பார்த்துக்கிறேன்... என்று நினைத்துக்கொண்டான்...
தனது பெர்த்தில் அமரந்திருந்த ரேஷ்மி, ரோஹித்தின் நம்பரிலிருந்து கால் வரவும் கோவத்தில் ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துவிட்டு... கண்களை மூடிக்கொண்டாள்...

இளா தனது அறையில் படுத்திருந்தவள்... ஆதியின் செய்கையை நினைத்து வெட்கத்தில் சிரித்துக்கொண்டிருந்தாள்... அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தவள்... போய் திறக்க.. சீதா நின்றிருந்தார்... "என்னம்மா.." என்று கேட்க.. "இந்தா... இந்த புடவை மாப்பிள்ள உனக்காக எடுத்தாராம்.. சம்பந்தி கொடுத்தாங்க..." என்று சொல்ல... "அது எப்படிமா.. மாப்பிள எப்படினே தெரியாம.. பொண்ணு பார்க்க வந்தன்னைக்கே மோதிரம் மாத்த சொல்லிட்டிங்க.." என்று விளையாட்டாக கேட்க... "ம்ம்ம் எந்த தைரியத்துல நீ அவர் மோதிரம் போடும்போது கை நீட்னியோ.. அது மாதிரிதாண்டா.. எங்களோட நம்பிக்கையும்.." என்று சீதா விளக்கம் கொடுக்க...

"ம்ம்ம்... போதும்மா... நான் சும்மாதான் கேட்டேன்.." என்று இளா சொல்ல.. "சரிசரி இந்தா.. இதப்புடி... இவ்னிங் கோயம்புத்தூர் போகனும்.. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோடி... பாவம் என் மருமக இன்னைக்கு அவ முகமே சரியில்ல... எல்லாம் இந்த ரோஹித்தால வந்தது.." என்று புலம்பிக்கொண்டே சென்றார்...


புடவையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்ற இளா.. "ஓஓ.. சாரு நமக்காகதான் நேத்து புடவ எடுத்திருக்கார்... இது தெரியாம ஓவரா திட்டிட்டோமே..." என்று போனை எடுத்து ஆதியின் புகைப்படத்தை பார்த்து "சாரி..." என்று முத்த மழைபொழிய ஆரம்பித்துவிட்டாள்...

ஆதியும் ,விஷ்வாவும் காஃபி ஷாப் ஒன்றில் உள்ளே சென்று பார்க்க அங்கே அமர்ந்திருந்த ஒருவன் இவர்களை நோக்கி கையை ஆட்ட.. அவனின் அருகில் சென்று அமர்ந்தனர் இருவரும்... "ஹலோ சார்... அம் கணேஷ் ட்ரெஸ் டிசைனர்.. நீங்க வாட்சப்ல சென்ட் பண்ண அந்த பட்டன் பிக்சர்... கண்டிப்பா ஜெர்கின் டைப் ஷர்ட்ல வைக்கிறது.." என்று அவன் சொல்ல... "ரொம்ப தேங்ஸ் மிஸ்டர் கணேஷ்... ஆனா அந்த பட்டன்ல இருக்க அந்த சிம்பிள் நீங்க நோட் பண்ணீங்களா..." என்று கேட்க... "ம்ம்ம் பண்ணேன் சார்... இந்த சிம்பிள் வச்ச பட்டன் மேக் பண்ற கம்பெணீஸ் ஊட்டில 3 இருக்கு சார்.." என்று சொல்ல.. "ஓகே... கணேஷ் நீங்க அந்த கம்பெணீஸ்சோட அட்ரஸ் எனக்கு சென்ட் பண்ணிடுங்க..." என்று சொல்லிவிட்டு சென்றான்...

வண்டி ஓட்டிக்கொண்டிறிந்த ஆதியிடம் "டேய்... எப்படிடா ஒரு சின்ன பட்டன வச்சி கண்டுபிடிக்க முடியும்..." என்று விஷ்வா கேட்க.. சிரித்த ஆதி "அந்த பட்டன ஃபாரன்சிக்கிட்ட கொடுத்து செக் பண்ணப்போ.. பட்டன் மேக் பண்ணி 5மன்த்ஸ் ஆர் 4 மன்த்ஸ் இருக்கும்னு சொன்னாங்க... சோ அந்த கல்பிரிட் ஜெர்கின் வாங்கி மேக்சிமம் 3 மன்த்ஸ் இருக்கும்.. நம்ப ஊட்டிக்குப் போய் அங்க மேக் பண்ற ஜெர்கின்ஸ் சென்னைல எங்கல்லாம் டிஸ்ட்ரிபியூட் ஆகிருக்குன்ற டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணி... அங்கெல்லாம் போய் சிசிடிவில செக் பண்ணா... கல்பிரிட்க்கு செக்தாண்டா..." என்று சொன்னவனை கண்டு எப்போதும் படும் "இவன் என் நண்பன்" என்கின்ற பிரம்மிப்பு,கர்வம்... ஏனென்றால் விஷ்வாவின் ரோல்மாடல் ஆதிதான்...

"விஷ்வா நீ என்ன பண்ற... தற்கொலை நடந்த எல்லா அப்பார்ட்மெண்ட்ல இருக்கறவங்களோட டீடெய்ல்ஸ் வித் போட்டோஸ் கலெக்ட் பண்ணிடு..." என்று ஆதி சொல்ல.. "ம்ம்ம்.. ஓகே..." என்றான் விஷ்வா..

அப்பார்ட்மெண்ட்டை அடைந்தவர்கள்... காரை பார்க் பண்ணப் போக.. எதுவோ வண்டியில் மோதுவதுப்போல் சத்தம் கேட்க.. கீழே இறங்கினர்.. ஆதியும், விஷ்வாவும்... காரின் பின்னாடி சென்று பார்க்க... அங்கே பைக்கோடு ஒருவன் கீழே விழுந்திருக்க... அவனுக்கு கைக்கொடுத்து தூக்கிவிட்ட ஆதி "சாரி.. மிஸ்டர்..." என்று சொல்ல.. "சார் மிஸ்டேக் என் மேலதான்.. நான்தான் பார்க்காம வந்துட்டேன்.. சாரி சார்.." என்று அவனும் சொல்ல.. இவர்களின் சாரிகளை கேட்ட விஷ்வா பைக்கை தூக்கி நிறுத்திவிட்டு.. "ஏய்.. இங்க என்ன சாரி சாரி கேட்கறப் போட்டியா நடக்குது.." என்று கேட்க... இருவரும் சிரித்துக்கொண்டே... "வெல்.. அம் ஆதி ,இவன் விஷ்வா.." என்று ஆதி அறிமுகம் செய்து கொள்ள.. "அம் தாஸ்.." என்று அவன் சொல்ல... "ஓகே.. தாஸ் சியூ லேட்டர்..." என்று தங்கள் ப்ளாட்டிற்கு சென்றனர்... இருவரும்...

அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த தாஸ்... ஒரு இகழ்ச்சியான புன்னகையை புரிந்துவிட்டு சென்றான்...

-தொடரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top