'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!' - 36

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
கட்டிலில் சொதப்புவது நல்லதே....
காதல் பாடத்தை
கச்சிதமாக சொல்லித் தரும் சரண்...
காதலை சரியாக புரிந்து கொண்டு
கணவனின் காதல் கேள்வியில்
காதலுடன் சரியாக சொல்லி
காதல் பரிசு பெறும் கீர்த்தி....

என்ன்னத்தான் கீர்த்தி சரண் கதை என்றாலும்
எழில் அலர் வந்தால் அவர்கள் நியாபகம்..
பீரித்தி வந்தால் விஷ்வா ஞாபகம்
 

Priyaasai

Active Member
வாழ்வு - 36.2

"ஏய் எங்கடி போற இரு..." என்று அவளை பிடித்திழுத்தவன் தன் மடியில் அமர்த்தி , "பேச வந்தது மட்டுமா சொல்லி கொடுத்ததும் தான்டி உனக்கு அடிக்கடி மறந்து போகுது" என்று இதழ்களை மடித்து கொண்டு சிரிக்க


எதற்கு சிரிக்கிறான் என்று புரியாமல் அவனை பார்த்தாள் கீர்த்தி.


"இதோ பார் உன் சொல் பேச்சு கேட்டு நான் நல்ல பிள்ளையா அமைதியா இருக்கேன் இப்போ நீ சொல்ல வந்ததை சொல்லல" என்றவனின் குரலே வேறுபட்டு ஒலிக்க அவன் விழிகளில் விரிந்த கீர்த்தியிடம்,


'என் பேச்சை மட்டும் தான் நீ கேட்கணும் ஓகேவா' என்றவனின் கரம் அவள் மேனியை தழுவி உரைத்த செய்தி அவளை மொழி மறக்க செய்ய அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டவளுக்கு சுத்தமாக பேச வந்தது நினைவில் இல்லை.


'சொல்லு'

'போங்க மாமா மறந்துடுச்சி' என்றவளின் குரலில் சுத்தமாக சுரத்தே இல்லை.


'எனக்கு தெரியாது மூணு வரை எண்ணுவேன் அதுக்குள்ளே சொல்லணும் இல்ல என் சொல் பேச்சு கேட்கணும் டீலா..??' என்றவனின் இதழ்கள் உஷ்ணத்தோடு அவள் செவியில் உரச,

நிமிர்ந்து பார்த்த கீர்த்திக்கு அவன் நெருக்கத்தில் படபடப்பு கூடிப்போக பேச வந்த எதுவுமே நினைவில் இல்லை


'எதுக்கு..?? எதுக்கு டீல்..?? நோ நான் கேட்கமாட்டேன் டீல் எல்லாம் இல்ல போங்க' என்று அவள் மறுக்க,

"நேத்து டெஸ்ட்ல மார்க் ரொம்ப கம்மியா வாங்கி இருந்த நான் போனா போகுதுன்னு உன்னை பார்டர்ல பாஸ் பண்ணி விட்டேன்" என்று நகைக்க,

'என்னது ..??' என்று திகைத்து விழித்த கீர்த்தியிடம்,

"ஏன்டி இப்படியே போனா நீ எப்போ டிஸ்டிங்கஷன்ல பாஸ் பண்றது..?? சோ கம்மி மார்க் வாங்கின உனக்கு பனிஷ்மென்ட் கொடுத்தாதான் இனி தப்பு பண்ணமாட்ட.." என்று மீசை துடிக்க சிரித்திருந்தான்.


'என்னது நான் தப்பு பண்ணினேனா..?? பனிஷ்மென்ட்டா..?? என்று அவனை முறைத்தவள் முடியாது முடியாது போங்க நைட் நான்..' என்று வீராப்பாக தொடங்கியவளுக்கு அப்போது தான் அவன் அவளை திசை திருப்புவது புரிபட,


'ப்ளீஸ் விடுங்க நான் பால் காய்ச்சனும் சமைக்கணும் இன்னும் நிறைய ..' என்று அவள் தொடர


சரணோ அவகாசமளிக்காமல் 'ஒன்னு ' என்று எண்ண தொடங்கிவிட்டான்.


சரனை முறைத்து கொண்டே அவனணைப்பில் இருந்து கீர்த்தி வெளிவர முயல அதில் சரணின் அணைப்பு இன்னுமே இறுகி கொண்டே போனது,

அவனுக்கு பதில் சொல்லாமல் விடமாட்டான் என்பது புரிய 'இப்படியே பிடிச்சி வச்சிருந்தா எப்படி ப்ளீஸ் விடுங்க விட்டாதானே நான் யோசிக்க முடியும்'



'இப்படியே இருந்து யோசிடி'


'ரெண்டு' என்றான்

"என்னால யோசிக்க முடியலை ..!!" என்றாள் அலைபாயும் அவன் கரங்களை தடுத்து பிடித்துக்கொண்ட


'மூணு' என்றதுமே

'மா..மா..' என்ற சிணுங்கல் கீர்த்தியிடம்


'மாமாவா..?? முன்ன சரண் சொல்லுவேன்னு சொன்ன' என்று அவன் கேட்கவும

'அது...' என்று ஆரம்பித்தவளுக்கு பேச நினைத்தது நியாபகத்திற்கு வர 'ஹான் நியாபகம் வந்துடுச்சி' என்றவள் அவனிடம்,

'விடுங்க நான் சொல்றேன்' என்றிட,

'எதுக்கு விடனும்..??'

'அதான் எனக்கு நியாபகம் வந்துடுச்சே'

"ஆனா நான் கவுண்ட் முடிச்சிட்டேன் சோ நான் தான் வின்னர்..!! நான் சொல்றதை மட்டும் கேளுடி" என்றவன் அவளை தன் கரங்களில் அள்ளிக்கொண்டு செல்ல,

"இல்ல இல்ல முடியாது மாமா நீங்க என்னை ஏமாத்துறீங்க" என்று அவன் கரங்களில் இருந்து திமிர,

'நீதானே அம்பி சரணை மட்டுமே பார்த்ததா சொன்ன..??' என்று அவனே எடுத்து கொடுக்க,

"ஆமா ஆனா இப்போ அந்நியன் சரணா மாறிடீங்க..!! எப்போ பார்த்தாலும் அடிக்கிறது திட்டறது எனக்கு இந்த அந்நியனை பிடிக்கலை போங்க" என்று இதழை சுழித்து முகத்தை திருப்ப,

அதற்குள் அறையினுள் வந்தவன் அவள் முகத்தை திருப்பி சுழிந்திருந்த இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு, "அதான் சொல்றேன் இனி ரெமோ சரணை மட்டும் பாரு" என்று அவளோடு இழைய அதன் பின் பகலிரவு பேதமின்றி கட்டில் பாடமும், தேர்வுகளும், திருத்தமும், மதிப்பீடும், தண்டனைகளும் தங்குதடை இன்றி அரங்கேறி கொண்டிருந்தது.

நள்ளிரவில் பசி, தாகம் உணர்ந்து இருவரும் சமயலறையில் இருக்க சரணின் கைபேசி ஒலித்தது கதிரின் எண்ணை கண்டு யோசனையுடனே சரண் அழைப்பை ஏற்க..,

மறுபுறம் இருந்த கதிரோ, "மாமா அப்.. அப்பாக்கு ஹார்ட் அட்டாக்" என்று அழுகையினூடே கூற விடியற்காலை சரண் கீர்த்தி இருவருமே ஆரணியில் நாதனை அனுமதித்திருந்த மருத்துவமனையில் இருந்தனர்.


***

சரணை கண்டதுமே ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டார் வளர்மதி.

"அக்கா மாமாக்கு ஒன்னும் ஆகாது நீ பயப்படாத சீக்கிரம் சரி ஆகிடும்" என்று அவரை தேற்றியவன் வளர்மதியின் கண்களில் கண்ணீர் நிற்காமல் போயிருப்பதை கண்டு அவர் கண்களை துடைத்து

"ப்ச் க்கா ஏற்கனவே ஒருமுறை மாமா மீண்டு வரலையா அதேமாதிரி இப்பவும் வந்துடுவார் நீ தைரியமா இரு அழாதக்கா" என்றவன் ஒருவழியாக அவர் அழுகையை நிறுத்தி மருத்துவமனை வளாகத்தின் கோடியில் ஜன்னல் வழியே வெளியே இலக்கின்றி பார்வையை செலுத்தி நின்றிருந்த எழிலிடம் சென்றான்.

"என்னண்ணா ஆச்சு திடீர்ன்னு மாமாக்கு எப்படி அட்டாக்..?? டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்க எழிலிடம் ஒரு நாள் முன்பு அங்கு வந்த போது இருந்த மகிழ்ச்சி, துள்ளல் அனைத்தும் துடைக்கப்பட்டு என்றும் இல்லாத இறுக்கம் பரவி கிடப்பதை கண்டான். அதே சமயம் அவன் கேள்வி எதற்கும் பதில் கூறும் மனநிலையில் அவன் இல்லை என்பது சரணுக்கு புரிந்தாலும் அதற்கான காரணம் தான் தெரியவில்லை..!!

உடனே கதிரை அழைத்து கேட்க அவனோ "எனக்கும் தெரியலை மாமா அவிகூட ரூம்ல இருந்தேன் திடீர்னு சத்தம் கேட்கவும் வெளியே வந்து கீழ எட்டி பார்த்தேன் அப்போ அப்பா கிட்ட மாமா ஏதோ கோபமா பேசிட்டு வெளியே கிளம்பிட்டாங்க அக்கா அழுதுட்டு இருந்தாங்க நான் கீழ போறதுக்குள்ள மாமா திரும்பி வந்திருந்தார் அப்பதான் அப்பா நெஞ்சை பிடிச்சிட்டு விழுந்துட்டார் உடனே கூட்டிட்டு வந்துட்டு உங்களுக்கு கால் பண்ணேன்" என்று முடிக்கவும் சரண் முகம் யோசனையில் ஆழ்ந்தது.

ஏற்கனவே இவர்கள் பிரச்சனையில் எழிலுக்கும் நாதனுக்கும் பல நேரம் மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போவதை சரணுமே அறிவான் அதேசமயம் நாதனின் முன்கோபத்தை அவசர குணத்தை அறிந்தவனுக்கு அவரே எதையோ இழுத்து விட்டிருக்கிறார் என்பது வரை புரிந்தது.


மருத்துவர் அழைத்ததன் பேரில் சரண் அவர் அறைக்கு சென்று திரும்ப அவனை நெருங்கி, "நீ பார்த்துக்கடா நான் கிளம்புறேன்" என்று இறுகிய குரலில் கூறி எழில் அங்கிருந்து செல்லவும் அழுது சிவந்த விழிகளுடன் மன்னிப்பை விழிகளை தேக்கி எழிலை தடுக்காமல் அவனை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் அலர்விழி. எழிலுக்கு இந்த நேரம் தனிமை எத்தனை அவசியமானது என்பது அவளை தவிர வேறு யார் அறிவர்..!!


ஆனால் இது போன்ற இக்கட்டான நிலையில் அம்போவென விட்டு செல்லும் ஆள் இல்லை எழில் என்பதை நன்கு உணர்ந்திருந்த சரணோ எழிலின் விட்டேர்த்தியான நடவடிக்கையில் அதிர்ந்து போய் பார்த்திருந்தான்.


அலர் அருகே சென்று அமர்ந்த கீர்த்தி ' பெரிப்பாக்கு சரியாகிடும் அமுலு' அவளை தேற்ற முற்பட அவளோ எந்த பதிலும் சொல்லாமல் கீர்த்தியின் மடி சாய்ந்து மெளனமாக உடல் குலுங்க அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.

தீபிகா, வசுமதி, வெற்றி, ராஜன், வைதேகி என்று மொத்த உறவுகளும் மருத்துவமனையில் குவிந்து விட்டிருந்தது.


இருநாட்கள் கழித்து ப்ரீத்தி சிவசங்கரன் மற்றும் வித்யாவுடன் மருத்துவமனையில் நுழைந்திருந்தாள்.

அதை கண்ட கீர்த்தி ஒரு நொடி அதிர்ந்தவள் உடனே அவசரமாக சரணை பார்க்க அவனோ செவிலியரிடம் வெளியில் வாங்கி வர வேண்டிய மருந்துகள் குறித்து பேசிக்கொண்டு இருந்தான்.

ப்ரீத்தியும் அவர்களை இங்கே எதிர்பார்த்தே வந்திருந்தாள். பின்னே அவள் இன்று சேர்ந்த உறவு ஆனால் சரண் நாதனின் உறவு அப்படி இல்லையே அதனால் நிச்சயம் அவர்கள் இருப்பார்கள் என்று தெரியும் அதனாலேயே விஷயம் தெரிந்ததும் முதலில் செல்வதா வேண்டாமா என்ற பெரும் தயக்கம் இருந்தது அவளுக்குள்...,

ஆனால் தன்னையும் தன் தவறுகளையும் மன்னித்து பெறாத மகளாக ஏற்று கொண்ட ஜீவனை பார்க்காமல் தவிர்க்க அவளால் முடியவில்லை அதனாலேயே ஓடி வந்திருந்தாள்.

அதிலும் கீர்த்தியை பார்த்து முகம் திருப்ப முடியவில்லை அதே நேரம் உடனே சென்று பேச முடியவில்லை. கீர்த்தி அறியாமல் இருமுறை அவள் முகத்தை பார்த்தவளுக்கு எதையும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.. பின்னே அங்கிருந்த அனைவரின் முகத்திலும் நாதனுக்கான வருத்தமும், வேண்டுதலும் மட்டுமே இருக்க எப்படி கீர்த்தியின் முகத்தில் மட்டும் அவள் மகிழ்ச்சியை அவள் கண்டுபிடிக்க..??

கீர்த்தியிடம் பேச வேண்டும் என்ற ஆசை எழுந்தாலும் எங்கே அவள் தன்னை பார்த்து... வேண்டாம் எக்காரணம் கொண்டும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தவள் உடனே சிவசங்கரனுடன் மருத்துவரின் அறையை நோக்கி சென்றாள்.

ஆனால் உடன் வந்திருந்த வித்யாவோ உள்ளே நுழைந்ததில் இருந்தே இரட்டையர்கள் இருவரின் உணர்வுகளை தான் படித்து கொண்டிருந்தார்.. அவர்கள் மட்டுமின்றி தீபிகா வசுமதி என்று பலரையும் தன் விழிவட்டத்தில் கொண்டு வந்திருந்தார். சொல்லபோனால் சிவசங்கரன் தான் மட்டுமே ப்ரீத்தி அழைத்து செல்கிறேன் என்ற போது பிடிவாதமாக உடன் வந்ததே மகன் இங்கு வரவேண்டாம் என்று சொல்லி மூடி மறைத்த ஆரணியின் மர்மங்களை தெரிந்து கொள்ளத்தான்..!!

ஒவ்வொருவரும் நாதனுடனான பிணைப்பில் ஒவ்வொரு உணர்வின் பிடியில் இருக்க யாருக்குமே பெரிதாக பேசக்கூடிய சந்தர்ப்பம் இல்லை. எழில் வழக்கம் போல அலுவலகம் முடிந்து மருத்துவமனைக்கு வந்தவன் மருத்துவருடன் கலந்தாலோசித்து அவர் அறையில் இருந்து திரும்பிய ப்ரீத்தியை எதிர்பாராமல் ஒரு நொடி நிதானித்தவன் அன்று அவள் அழுதது நினைவில் எழ பின் அவளிடம் சென்று,

'எப்படி இருக்க ப்ரீத்தி..??' என்றவன் அருகே இருந்த வித்யா மற்றும் சிவசங்கரனிடமும் பேச தொடங்கியவன் பின் அவர்களை வழி அனுப்பி வைத்து மீண்டும் மருத்துவமனைக்குள் வந்திருந்தான்.

அடுத்த சில நாட்களில் நாதன் அறுவை சிகிச்சை முடித்து நல்லபடியாக சாதாரண வார்ட் திரும்பவும் சரணும் கீர்த்தியையும் அதற்கு மேல் இருக்க வேண்டாம் என்று கூறி வளர்மதி அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

ஹாய் செல்லகுட்டீஸ்...



இதோ "வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் அடுத்து prefinal தான் அதன் பின் final எபி போட்டுவிடுவேன் படிக்காதவர்கள் படிக்க தொடங்குங்கள் இறுதி அத்தியாயம் பதித்த இரு நாட்களில் திரி அகற்றப்படும்.


நன்றிகள்


ருத்ரபிரார்த்தனா.
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top