யார் கடவுள்?

Advertisement

Rajesh Lingadurai

Active Member
கடவுள் என்ற வார்த்தை ஆன்மீகம் சார்ந்தது. ஆனால் யார் கடவுள்? என்ற கேள்வி எழும்போது அந்த ஆன்மீகத்துக்குள் அறிவியல் நுழைந்து விடுகிறது. அறிவியல் சிந்தனை வளர்கிறதென்றால் அங்கு ஆனமீகத்தின் தேவை குறைகிறது என்று அர்த்தம். ஆன்மீகம் கட்டிக்காத்த பல சூட்சும முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு அறிவியல் தேவைப்படுகிறது. ஆன்மீகத்தின் கடைசி முடிச்சு கடவுள்தான். அந்த கடைசி முடிச்சையும் அவிழ்க்கும் முயற்சிதான் இந்த கட்டுரை. விமர்சனங்களை வரவேற்கிறேன்.

https://wp.me/p9pLvW-4d
 
Rajesh Lingadurai

Active Member
இரவு x பகல், நல்லது x கெட்டது, புனிதம் x கேவலம் போன்ற மாய இரட்டைகளைக் கடந்து உள்நோக்கும்போது அந்த ஒருமைத்தன்மை நமக்கு புலப்படும். அந்த ஒருமைத்தன்மைக்கு இரவு, பகல், நல்லது, கெட்டது, புனிதம், கேவலம் எல்லாமே ஒன்றுதான். இது ஆன்மீகமல்ல, அறிவியல். அறிவியலின் உச்சம் தன்னை உணர்தல், தன்னை உணர்தலின் உச்சம் கடவுளை அறிதல்.

கடவுள் இதுதான் என்ற தெளிவு பிறந்தால், கடவுள் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா? அநியாயத்தைத் தட்டிக் கேட்க தூண்களைப் பிளந்து கொண்டு வருவாரா? நமது வேண்டுதல், விரதங்கள் எல்லாம் அவர் காதுக்கு எட்டுமா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். உங்களுக்கு தெளிவு பிறந்தாலும், குழப்பமே மிஞ்சினாலும் இரண்டுமே தேடலின் துவக்கம்தான். கடவுளைப் பற்றிய தேடலை உங்களுக்குள் விதைக்குமானால் அதுவே இந்தக் கட்டுரையின் வெற்றி என்று கருதுகிறேன்.
 
Last edited:

Sainandhu

Well-Known Member
கடவுளை பற்றிய தேடல், என்னிடம் கிடையாது....
பரிபூரணமாக நம்பும் ஆத்மாக்களில் நானும் ஒருத்தி....

நீங்கள் எல்லாவற்றிற்கும் அறிவியல் பூர்வமாக விடை கொடுக்கலாம்...

என்னுடைய ஓரே சந்தேகம்......
மனிதனின் உடக்கூறு ,அது அமைந்துள்ள விதம்,
அவற்றின் செயல்பாடுகள்......
இப்படி என்று அறிவியல் கண்டுபிடித்ததே தவிர,
அவற்றை, உதாரணத்துக்கு மூளை உடலின் மேல் பாகத்தில் தான் இருக்கவேண்டும்...
அதை பாதுகாக்க கபாலம் என்னும் மண்டையோடு,அதை மறைக்க
தலைமுடி ....அதன் செயல்பாடு மனிதனின் உணர்வுகளின்
வெளிப்பாடு என்பதை அறிவியல் தான் தீர்மானித்ததா....!!!???

அப்படி தீர்மானித்து இருந்தால், குளோனிங். முறையில்
உருவாக்கப்படும் உயிரினங்களில்...
தோற்ற வேறுபாட்டை கொண்டுவரலாமே....?????

அதை ஏன் அறிவியல் விஞ்ஞானிகள்
கொண்டு வரவில்லை...?????

இது என்னுடைய நீண்ட நாள் கேள்வி....
ஒவ்வொரு முறையும் கடவுள் உண்டா ,இல்லையா
என்ற விவாதங்களை படிக்கும் பொழுது தோன்றுவது....

இந்த உலகை ஒரு ஒழுங்கு நிலையில் இயக்குவது
ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி ...
அதை நான் கடவுள் என்று நம்புகிறேன்...
அவரை தேடி அலைவதில்லை....

இவை என் தனிப்கபட்ட கருத்துகள் மட்டுமே...
விவாதத்திற்காக சொல்லவில்லை....
நன்றி.....
 
சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செல் உயிரினத்தால் இந்த பூமியின் சூழ்நிலைக்கேற்ப தன்னை தற்காத்துக் கொள்ள முடியவில்லை. தற்செயலாக ஒரு மைட்டோகாண்ட்ரியா என்ற மற்றொரு ஒரு செல் உயிரினம் அந்த ஒரு செல் உயிரினத்தோடு கலந்தது. அன்று முதல் இந்த பூமியின் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளத் துவங்கியது. அந்த பரிணாம வளர்ச்சிதான் பல்வேறு உயிரினங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது.

2012 ம் ஆண்டுதான் மனிதன் ஒரு கூட்டுயிர் என்ற உண்மையைக் கண்டறிந்தார்கள். மைட்டோகாண்ட்ரியா நமது உடலில் இணைந்தபிறகுதான் நம்மால் உயிர் வாழ முடிந்தது என்று அப்போதுதான் கண்டறிந்தார்கள். அதற்கு முன்பு வரை, மைட்டோகாண்ட்ரியா நமது செல்லில் எப்போதும் இருக்கிறதென்று விஞ்ஞானிகள் நம்பிக்கொண்டிருந்தார்கள். என்னைப் பொருத்தவரை இது பரிணாம வளர்ச்சி. இயற்கையின் ஒரு பரிமாணம். அவ்வளவுதான். இது என்னுடைய புரிதல்.

கடவுளைப் பற்றிய கருத்தியலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். இதில் என்னுடைய புரிதல்தான் சரியென்று அடித்துச் சொல்லுமளவுக்கு நாம் இன்னும் அறிவியல் வளர்ச்சியை எட்டவில்லை. இமயமலை உச்சியில் வாழ்கிறார் என்று சொன்ன கடவுள், நாம் இமயமலையை எட்டிப் பார்த்தபோது மறைந்து விட்டார். முற்காலத்தில் அவ்வப்போது வானத்தில் தோன்றி மறைந்ததாக சொல்லப்பட்ட கடவுள் செயற்கைக் கோள்கள் வந்ததும் வருவதில்லை.

அறிவியலின் உச்சத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கலாம். ஒருவேளை அந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காணும் முன்பு நாம் மறைந்து விடலாம். ஆகையால் தற்போதைய நிலவரப்படி அவரவர் புரிதலுக்கு சற்று மெருகூட்டலாமே தவிர ஆணித்தரமான உண்மை என்று எதுவும் இல்லை என்பதே நிதர்சனம். உங்கள் புரிதலும் சரியாக இருக்கலாம், என்னுடைய புரிதலும் சரியாக இருக்கலாம். இருவர் புரிதலும் பொய்யாகக் கூட இருக்கலாம். சரி, கமல்ஹாசன் போல புரியாமல் நிறைய பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
 
“க.ஹா போல் புரியாமல் நிறைய பேசுகிறேன் போல....”
ஹா...ஹா....I like it......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top