மாலை சூடும் வேளை-20

Advertisement

laxmidevi

Active Member
மாலை-20

பாடல் வரிகள்.

எந்தன் வளையல் குலுங்கியது கொலுசும் நழுவியது
வெக்கத்தில் கன்னங்கள் கூசியது
மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றது... அன்பே
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா மூச்சு விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா
நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா... அன்பே !!!!!!

விக்ரம் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் முரளிதரன் அடக்க மாட்டாமல் வாய்விட்டு சிரித்தார்.

நாம் என்ன செய்தாலும் மங்கையின் அப்பாவின் மனதை மாற்ற முடியாது விக்ரம். கல்யாணத்தையும் நிறுத்த முடியாது.

ஏன் அப்பா ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

முதலில் மாப்பிள்ளை யார் என்று தெரியுமா உனக்கு ?

இல்லை தெரியாது ப்பா.

மாப்பிள்ளையே நீ தான்டா பிறகு எப்படி நான் திருமணத்தை நிறுத்த முடியும் என்றார் கேலியாக.

என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல .

மங்கையின் அப்பா பார்த்திருக்கும் மாப்பிள்ளையே நீ தான். உனக்கு மங்கைக்கும் தான் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது இப்பொழுதுதாவது புரிகிறதா ஐபிஎஸ் ஆபிசர் என்று வாரினார் முரளிதரன்.

அப்புறம் ஏன் முதல்லே சொல்லல என்றான் விக்ரம் கோபமாக.

சொல்லி இருந்தா மட்டும் நீ சரினு சொல்லி இருப்பியா இப்பவே இந்த குதி குதிக்கிற,முதலில் என்ன நடந்தது என்று தெரியுமா ?மங்கைக்கு வேறொரு வரன் வந்திருந்தது. அவர்கள் மங்கையை பேசி முடிக்கவே எண்ணியிருந்தார்கள். நம்ம கார்த்திக் அதைப் பற்றி என்னிடம் கூறி நீங்கள் முதலில் பேசுங்கள் மாமா இல்லையேல் மங்கையின் வீட்டில் அந்த வரனையே உறுதி செய்துவிடப் போகிறார்கள் என்றார் அந்த வரனும் அப்படி. நம் குடும்பம் போல தான் மறுப்பதற்கு ஏதும் காரணம் இல்லை .அதனால்தான் உன்னிடம் கூட கலந்தாலோசிக்காமல் பேசி முடித்தோம் தாமதித்திருந்தால் இப்போது நான் உன்னிடம் சொன்னதுதான் நடந்திருக்கும்.

அத சரிப்பா கார்த்திக்கு எப்படி தெரியும் ? மேகிட்ட கூட நான் இன்னும் எதுவும் சொல்லல?

கார்த்திக் யார்னு மறந்துட்டியா விக்ரம்? அவருக்கு உன்னுடைய விஷயம் மட்டும் எப்படித் தெரியாமல் போகும்?

சரி சரி உடனே நாங்கள் மாப்பிள்ளை புராணத்தை ஆரம்பிக்காதீங்க.. இல்லப்பா அவனுக்கு எப்படி தெரியும் தான் தெரியல ? பெரிய கேடி ப்பா அவன்

மரியாதை முக்கியம் விக்ரம்.

கார்த்திக் முதலில் என்னுடைய பிரண்ட் அப்புறம் தான் உங்களுக்கு மாப்பிள்ளை ப்பா.

இருக்கலாம் ஆனால் இப்பொழுது நம்முடைய வீட்டு மாப்பிள்ளை.உன் தங்கையின் கணவர் அவருக்குரிய மரியாதையை நீ கொடுத்துதான் ஆகவேண்டும்.

சரி சரி உங்க மாப்பிள்ளைக்கு எப்படி தெரிந்ததாம்?

அதை நீ அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார் முரளிதரன் தோரணையாக.

மங்கைக்கு வந்த வரன் யாருன்னு தெரியுமா உனக்கு என்று அந்த எந்த அந்த வரனை பற்றிய விவரம் கூறினார்.

பாருங்கப்பா இவன எப்ப பார்த்தாலும் என் கூடவே போட்டிக்கு வரான் என்றான் சிறுபிள்ளை போல்.

அதற்கு முரளிதரன் சிரித்தவாறே சரி மங்கைக்கு தெரியுமா நீ தான் மாப்பிள்ளைனு?

தெரியல பா. தெரியாதுனுதான் நினைக்கிறேன்.

சரிதான் போங்க . இப்ப மருமக கிட்ட பேசி அவளை சமாதானப்படுத்து சரியா.
என்கிட்ட விசாரணைய அப்புறம் வெச்சுக்கலாம் .நான் அப்படியே மற்ற கல்யாண வேலைய எல்லாம் பார்க்கணும்.

என்னதான் அப்பா பேசி சமாளித்து விடுவார் என்றாலும் ஒருவேளை மங்கையின் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்ற பயம் மனதின் ஒரு ஓரத்தில் அரித்துக்கொண்டே இருந்தது விக்ரமிற்கு.இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அடுத்து இவளை வேறு சமாளிக்கனுமா நான் தான் மாப்பிள்ளைனு தெரிஞ்சுதான் என்கிட்டே கல்யாணத்தை நிறுத்த சொன்னாளா இல்ல யார் மாப்பிள்ளை என தெரியாமல் சொன்னாளா . ஹப்பா.. ஒருத்தியை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிடுது. சி.எம் கிட்ட பேசறதுக்கு கூட நான் இவ்வளவு யோசித்தில்லை. சரி சமாளிப்போம் நம்ம பார்க்காத பிரச்சனையா என்று எண்ணியவாறு மங்கைக்கு கால் செய்யதான்.

விக்ரமிடமிருந்து கால் வரவும் மங்கை பதறினாள் .அச்சச்சோ இவரு வேற போன் பண்றாரு இப்ப என்ன பதில் சொல்றது .பேசாம இருந்திருக்கலாம் யாரு மாப்பிள்ளைனு தெரியாமலேயே போன் பண்ணி கல்யாணத்தை நிறுத்துங்கனு சொல்லியாச்சு. ஒருவேளை கல்யாணத்தை நிறுத்திட்டேன் என்று சொல்ல தான் போன் பண்ணி இருப்பாரோ. என்ன பண்றது என்று இவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கால் கட் ஆகியது. நல்லவேளை கட்டாயிடுச்சு என்று எண்ணினாள் மங்கை.

மறுபடியும் கால் வரவே எடுத்து பேசினாள் .

மங்கை என்று அழைத்தான் விக்ரம்.

சொல்லுங்க சார் என்றாள் பெண்ணவள்.

இன்னமும் சாரா ....

கமல் படத்தில் சொல்லியது போல காற்றுதான் வந்தது அவளுக்கு பேச்சே வரவில்லை .

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் விக்ரம்.

மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?

தெரியும் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சுந்தர் மாமா சொன்னாங்க.

பிடிச்சிருக்கா என்றான் விக்ரம் .

அவனின் ஆழ்ந்த குரலும் தாபமான வார்த்தையையும் கேட்டவளின் முகம் அந்திவானத்தின் செம்மை நிறம் கொண்டது.

பிடிச்சிருக்கு என்று வெட்கத்துடன் கூறியவள் அம்மா கூப்பிடுறாங்க என்று போனை வைத்து விட்டாள்.

பெண்ணவள் கூறிய அந்த பிடிச்சிருக்கு என்னும் ஒரு வார்த்தை இந்த உலகையே வென்ற கர்வத்தை கொடுத்தது அந்த ஆடவனிற்கு.

பின்னே உலகத்தை கூட வென்றுவிடலாம் முயற்சி இருந்தால். ஆனால் பெண்ணின் மனதை வெல்வது மிகக் கடினம் அல்லவா?

தன் வேலையை முழுவதும் ஒதுக்கி வைத்துவிட்டு தன் நண்பர்களுடன் புட்பால் விளையாடினான் விக்ரம். அது அவனுக்கு பிடித்த விளையாட்டு. விளையாட்டு முழுவதும் பந்து அவன் வசம்தான் இருந்தது .அவன் மனம் அவ்வளவு தெளிவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது தான் அதற்கு காரணம் .

என்ன அசிஸ்டண்ட் கமிஷனர் சார் நல்லா ஃபார்ம்ல இருக்கீங்க போல என்ன விஷயம் என்று கலாய்த்த அவனுடைய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு புன்னகையை பதிலாக தந்து விட்டு வீடு வந்து சேர்ந்தான் விக்ரம்.

கார்த்திக் முரளிதரனிடம் மாமா கல்யாணத்துக்கு நிறைய பேரை கூப்பிட வேணாம் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கும் .ஒரு அம்பது பேருக்குள்ளே மட்டும் கூப்பிட்டால் போதும் .சிம்பிளா கல்யாணத்த வச்சிக்கலாம் .கோயம்புத்தூர்ல போய் ரிசப்ஷன்க்கு எல்லோரையும் கூப்பிடலாம்.நம்ம இடம்னா பிரச்சனை இருக்காது. நீங்கதான் கொஞ்சம் புரியிற மாதிரி அவங்க வீட்ல பேசணுமாம்.

சரிங்க மாப்பிள்ளை. அப்படியே நான் பேசிறேன்..

கார்த்திக் மணிமேகலையின் மணாளன். கார்த்திகைச்செல்வன் ஐபிஎஸ் .சிபிஐ ஆபீசராக பணியாற்றியவன். தற்போது சொந்தத் தொழிலை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் அந்த வேலையை விட்டுவிட்டு தன் குடும்ப தொழிலாகளை பார்த்துக் கொண்டிருக்கிறான். வேலையை மட்டும்தான் விட்டுவிட்டான் இன்னும் அந்த போலிஸ் மூளை மட்டும் அப்படியே அவனிடம் இருக்கிறது. விக்ரமை சுற்றி ஏதோ ஒன்று தவறாக நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் கார்த்திக்குக்கு தெரியும். அது விக்ரமுக்கும் தெரியும் அதனால் தான் கல்யாணத்தை தள்ளி போட முயன்றான்.

திருமணத்தை கோவிலில் எளிமையாக நடத்துவதற்கு மங்கை வீட்டில் தயங்கினாலும் பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதை ஏற்றுக் கொண்டனர்.

விக்ரம் மங்கையின் சம்மதத்தை அறிவதற்காக அவளிடம் போனில் பேசியதோடு சரி அதற்கு அப்புறம் அவளிடம் பேசவில்லை. அவன் வேலை ஓர் காரணம் என்றால் எங்கே பேசினால் திருமணம் வேண்டாம் படிப்பு முடிந்து வைத்துக் கொள்ளலாம் என்று ஏதேனும் சொல்லி விடுவாளோ என்று அவனும், ஏன் கல்யாணத்தை நிறுத்த சொன்னாய் என்று கேட்டு விடுவாரோ என்று அவளும் இருவருமே பேச முயற்சிக்கவில்லை .

ஒருவேளை பேசியிருக்கலாம். பேசி இருந்தால் பின்னால் வரும் பல்வேறு பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம்.

நாம் கூட அப்படித்தான் ஒருவரின் மீதான பிடித்தமின்மையை எளிதில் வெளிப்படுத்தும் நாம் ,பிடித்தத்தை அவ்வளவு எளிதில் காண்பித்துக் கொள்வதில்லை.

விக்ரம் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவரும் மதுரை திண்டுக்கல் போகும் வழியில் உள்ள ராகவனது பூர்வீக வீட்டில் தங்கியிருந்தனர். அங்கிருந்து திருமண ஏற்பாடுகளில் கலந்துகொள்வதாக இருந்தனர். நிச்சயம் பெண் வீட்டிலும், திருமணம் மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வைத்துக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் நிச்சயம் என்பாதாய் பேசி இருந்தனர்.

ஒருவாறாக மாப்பிள்ளை வீட்டினர் நிச்சயத்திற்காக பெண் வீடு வந்திருந்தனர்.எல்லோரும் நிச்சயதார்த்த விழாவில் பிஸி.

அங்கே கோவையில் ...

அண்ணா அந்த விக்ரமிற்கு ஏதோ சந்தேகம் வந்து விட்டது போல. இப்பல்லாம் நம்ம ஏரியால அடிக்கடி போலிஸ் வந்து செக்போஸ்ட் வச்சு எல்லா வண்டியையும் செக் பண்ணி அனுப்புறாங்க அது சைக்கிளா இருந்தால்கூட. அந்த விக்ரம கூட அங்க ஒரு முறை பார்த்தேன் .

அந்த விக்ரம் இல்ல எந்த கொம்பனாலையும் நம்ம என்ன பண்ணுறோம்னு கண்டுபிடிக்க முடியாதுடா என்றான் அலட்சியமாக அண்ணா என்று அழைக்கப்பட்டவன்.

விக்ரமை ரொம்ப குறைவா எடை போடாதீங்க . இதுவரைக்கும் அவன் எடுத்த கேஸ்ல ஒன்னுல கூட தோத்தது இல்லை.என்ன கொஞ்ச நாளாகும். ஆனால் கண்டுபிடித்து விடுவான். அதனாலதான் சொல்றேன் அவனை ஏதாவது பண்ணனும். கோயம்புத்தூர்ல செல்வாக்கான குடும்பம்
அவங்களோடது அதோட டைரக்டா சிஎம் கிட்டயே பேசுற அளவுக்கு அரசியல் செல்வாக்கும் இருக்கு.அதனால பணம், அதிகாரம் வைச்சு அவன பயமுறுத்த முடியாது.நம்ம நேரடியா மோதுனாலும் நமக்கு தான் பிரச்சினை அதனால நமக்கு மேல் இருக்கவங்க கிட்ட சொல்லி ஏதாவது பண்ணுங்க.

சரிடா நீயே அவனை கொஞ்ச நாளைக்கு எங்க போறான்,என்ன செய்யறான் கவனி. நான் நமக்கு மேல இருக்கிறவங்க கிட்ட பேசி என்ன செய்யலாம்னு பார்க்கிறேன்.

விக்ரம் மங்கை திருமணம் நல்லபடியாக நடைபெறுமா?

பார்ப்போம்...

மாலை தொடுக்கப்படும்
Hi friends,
Please share your thoughts..
Thanks for your comments.
Regards
Laxmidevi
 
Nasreen

Well-Known Member

So nice
Three pairs , one marriage confirm
But everywhere secret irrukku
Vikram case
Kani flashbacks
Identity of magi s lover
Atleast one secret open pannunga
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top