மாயவனின் அணங்கிவள் -7

Advertisement

Priyamehan

Well-Known Member
"ஐயோ ஐயோ மழை மழை... வீட்டுல கூரையை பிச்சிட்டு மழை கொட்டுது என்னைய காப்பாத்துங்க " என்று தூக்க கலக்கத்தில் கத்தினாள்.

"ஏய் நான்தாண்டி..." என்றவன் குரல் கம்பீரமாக கேக்க...

"கனவுலையும் இவன் தொல்லை தாங்கல, அப்படி ஓரமா போய் கத்துடா...." என்றவளின் மீது மேலும் இரண்டு டப்பா தண்ணீரை அள்ளி ஊத்தியவன், "கழுதை ஒழுங்கா எந்திரிச்சி தொலை.. யாரடி டா போட்டு பேசற? பல்லை உடைச்சிடுவேன்" என்றான் கோவமாக...

வேந்தனின் சத்தம் காதின் அருகில் கேட்கவும் மெதுவாக ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்துப் பார்த்தவள்..."ஐயோ இது கனவு இல்லையா....!!! நான் வேற கனவுனு நினைச்சி கண்டதையும் பேசிட்டேனே... இவன் வேற ஐயனார் கணக்கா முறைச்சிட்டு நிக்கறான் என்ன பண்ண போற அருவி.." என்று உள்ளுக்குள் பயந்து நடுங்கியவள் முகத்தில் அதைக் காட்டாமல்

"ஹீஹீ நீங்களா மாமா நான் கூட இனி பையன்னு நினைச்சிட்டேன் ...எதுக்கு மாமா தலையில தண்ணியை ஊத்துனீங்க..?"என்றாள் சத்தமே வராத அளவு...

அவளை முறைத்தப்படி நின்றவனைப் பார்க்க ஐயனார் வேட்டைக்கு போவது போல் இருந்தது...

"மணி என்ன தெரியுமா?" என்றான் கர்ஜனையுடன்.

"என்னவா இருந்தா என்ன நான் எழுந்து கலெக்டர் வேலைக்காப் போகப் போறேன் ...? இவனோட இம்சை தாங்கல, எப்போ பாரு ஐஞ்சு மணிக்கு எழு வாக்கிங் போ, நேரத்துக்கு பல்லு தேய், குளிச்சா தான் சாப்பாடுனு ரூல்ஸ் பேசிட்டு திரிவான்.... டைம்க்கு பண்ண நான் என்ன மிலிட்ரிலையா இருக்கேன்" என்று அவன் காதுப்பட முனைவியவள்..

"தூங்கிகிட்டு இருக்கறவளை எழுப்பி மணி என்னனு கேக்கறீங்களே உங்களுக்கு மணி பார்க்க தெரியாதா?" என்றாள் நக்கலாக.

அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளுக்குள் ஹை ஸ்பீட்டில் பிபி எகிறிக் கொண்டிருக்க... "இன்னைக்கு நீ செத்தடி... என்னைய பார்த்தா நக்கலா கிண்டல் பேசற?" என்று கறுவிக் கொண்டவன்..

"முதல எழுந்து முகத்தை கழுவு, பார்க்க பரதேசி மாதிரி இருக்க, இந்த கோலத்துல உன்னைய பார்த்துட்டு வெளிய போனா போனக் காரியம் விலங்கவே விலங்காது .... முகரையை பாரு கோட்டான் மாதிரி.

உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள கிளம்பி கீழே ஹாலுக்கு வர பத்து நிமிசத்துக்கு மேல ஆச்சி... அதுக்கு அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

"இவன் என்ன எனக்கு டைம் குடுக்கறது... இவன் சொன்னா நான் உடனே செய்யணுமா?, இவன் முகரை தான் கோட்டன் மாதிரி இருக்கு இவன் என்னைய சொல்றான், அஞ்சு நிமிஷம் இல்லடா அம்பது நிமிஷம் ஆனாலும் வரமாட்டேன் போடா... " என்று திமிராக சொல்லிக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

ஹாலில் வந்து சோபாவில் அமர்ந்தவனின் கண்கள் அடிக்கடி கையில் இருந்த கடிகாரத்திற்கும் மாடிபடிக்கும் சென்றது.

வேந்தன் சொல்லிய பத்து நிமிடம் தாண்டி மேலும் அரைமணி நேரம் எடுத்துக் கொண்டே கீழே இறங்கி வந்தாள் அருவி..

அப்போது நடைப்பயிற்சி சென்ற பெரியவர்கள் வர ஆரம்பித்தனர். அவர்களையும் அவளையும் திரும்பி திரும்பிப் பார்த்தவன் வீட்டு பெண்கள் அனைவரிடமும்

"இன்னைக்கு இவ தான் கிச்சன் வேலை எல்லாத்தையும் பார்க்கப் போறா... இவளுக்கு ஹெல்ப் பண்றேன்னு யாராவது போனா...அவங்களும் இவளோட சேர்ந்து நைட் முழுக்க வெளிய தான் நிற்கணும் நான் சொன்னதையும் மீறி செஞ்சிங்கனா
அப்புறம் வேந்தன் வேற மாதிரி இருப்பான்" . என்று எழுந்து நின்றவன் சமையலுக்கு உதவி செய்யும் கனகாவை அழைத்தான்.

"ஐயா" என்று வந்து நின்றாள்.

"இது உனக்கும் சேர்த்தி தான் , இவளுக்கு யாருமே ஹெல்ப் பண்ணக்கூடாது..." என்று கனகாவிடம் கத்திவிட்டு,

"போய் எல்லோருக்கும் காபிப் போட்டு எடுத்துட்டு வா" என்றான் அருவியிடம் அதிகாரமாக.

வேந்தனின் சொல்லை தட்ட சேதுபதியே நினைத்ததில்லை மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள்.

அவன் ஒருவன் இருப்பதால் தான் வீடு,மில்,கடை என்று அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கிறது சொல்லப்போனால் முன்னாடி இருந்த மதிப்பும் மரியாதையையும் விட இப்போ இன்னும் அதிகம் இருக்கிறது..

இல்லை என்றால் இந்நேரம் பெரிய வீடு என்ற பெயர் இல்லாமல் போயிருக்கும் அந்த அளவிற்கு தான் கிருபாகரனும் தினகரனும் தொழிலை வைத்திருந்தனர். என்ற எண்ணம் எப்போதும் சேதுபதிக்கு இருந்தது அதனால் அவரும் அமைதியாக இருந்தார்.

எல்லோரையும் திரும்பிப் பார்த்த அருவி அவர்கள் எதுவும் பேச முடியாத நிலையில் இருப்பதைப் பார்த்ததும் உள்ளுக்குள் பொசு பொசு என்று கோவம் எழுந்தது.

எங்க அப்பா இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வருமா என்று தோன்றாமல் இல்லை... தாயைக் கூட பேசவிடாமல் செய்வது இவர்களிடம் அன்டி பிழைப்பதால் தானே என்ற கோவம் தலைக்கு ஏற, வேகமாக சமையலறைக்குச் சென்று அனைவருக்கும் காபிப் போட்டாள்..

காபி போட்டாள் என்பதை விட பாத்திரங்களை தூக்கிப் போட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்...காபியில் அனைவருக்கும் சக்கரைக்கு பதில் உப்பைப் போட்டுக் கொண்டு வந்துக் கொடுக்க அவளைப் பாவமாக பார்த்தவாறு பெண்கள் எடுத்துக் கொண்டனர்.

ஆண்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை மகனையும் எதிர்த்து பேச முடியாது.. அருவியையும் அப்படியே விட முடியாது என்று நினைத்து காபியை எடுக்க கடைசியாக வேந்தன் எடுத்துக் கொண்டான்.

குடித்ததும் துப்பிய வேந்தன் "ஏய் இது என்ன காபியா? எதுக்குடி உப்பை போட்ட..."

"மாமா எனக்கு உப்புக்கும் சக்கரைக்கும் வித்தியாசம் தெரியல, ரெண்டுமே வெள்ளையா இருந்ததா அதான் மாமா கன்பியூசன் ஆயிட்டேன்.. அடுத்து சமைக்கப் போற உப்புமாவுக்கு சரியா உப்பு போட்டுடுவேன் மாமா" என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு..

அவள் வேண்டும் என்று தான் போட்டாள் என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும்... இருந்தாலும் எதுவும் சொல்லவில்லை. ரெண்டுமே ஜாடிக்கு ஏத்த மூடிங்க தான் என்று நினைத்துக்கொண்டனர்.

"இன்னைக்கு தேவா வீட்டு வரா... அவளை பிக் பண்ணிட்டு வரதுக்குள்ள இட்லி பொங்கல் வடைனு செஞ்சு வைக்கற, உப்புமானு எதைவாது கிண்டி வெச்சிருந்த உன் தலையில்லையே கொட்டிடுவேன்" என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் போனதும் சோபாவில் உக்கார்ந்தவள்.. "இனி வீட்டுக்கே வரக்கூடாதுனு தானே உங்க பையன் இப்படிலாம் பண்றான். ஹாஸ்டலக் கூட என்னைய இந்த அளவுக்கு இம்சை பண்ண மாட்டாங்க... பாருங்க அடுத்த லீவுக்கு எல்லாம் ஊருப்பக்கமே வரமாட்டேன்" என்று சிணுங்கினாள்.

"விடுடாம்மா அரு, அவனைப் பத்தி தான் தெரியும்ல நேரமா எழுந்து வாக்கிங் வந்துட்டா இவ்வளவு பிரச்சனை வருமா?" என்று சேதுபதி பேரனையும் விட்டுக் கொடுக்காமல் பேச..

அவரை முறைத்தவள் "உங்களுக்குலாம் எவ்வளவு உப்பு போட்டாலும் சுரணையே வராது.. இன்னைக்கு பொங்கல் உப்பு பொங்கலா பண்றேன் அதை தின்னாவது உங்களுக்கு சுரணை வருதானு பார்க்கலாம்," என்றவள் எழுந்து சென்றுவிட்டாள்.

சிறியவர்கள் அனைவரும் அதன்பின் தான் உள்ளே வந்தனர்.

நிரூபன் எப்போதும் வேந்தன் பக்கம் தான் .. அவன் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் வேந்தனை காதலித்து திருமணம் செய்திருப்பான்.அந்த அளவிற்கு வேந்தனின் மீது பிரியம் கொண்டவன்....

"என்னமா ஒரே சத்தமா இருக்கும்" என்று நிரூபன் நிர்மலாவிடம் கேக்க....

அவர் நடந்ததை சொன்னார்.

"சரி அம்மா நான் கடையில சாப்பிட்டுக்கரேன் இன்னைக்கு" என்று தாயிடம் மட்டும் ரகசியமாக சொல்லிவிட்டு தங்கையைப் பார்க்காமல் சென்றுவிட்டான்.

ஏற்கனவே கொதிநிலையின் உச்சத்தில் இருப்பவள் நிரூபனைப் பார்த்துவிட்டால் பொங்கிவிடுவாள் என்ற பயத்தில் தான் நிரூபன் தங்கையை பார்க்காமல் போனது.

அருவியோ சமையல் அறையில் உள்ள பாத்திரங்களை தூக்கிப்போட்டு பதம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அரும்மா நகரு நான் சமைச்சி தரேன்..."என்று மாலதியும் அமுதாவும் வந்து நிற்க..

"இங்க இருந்து போய்டுங்க இருக்கற கோவத்துல கொதிக்கற எண்ணெய்யை எடுத்து உங்க மேல அபிஷேகம் பண்ணிடுவேன்" என்றாள் கோவமாக.

"நாங்க என்னடி பண்ணுனோம்? அவனைப் பத்தி தான் உனக்கு தெரியும்ல நேரமா எழுந்து வாக்கிங் போய்ட்டு வந்து தூங்குனா தான் என்ன?
அதுக்கு அப்புறம் அவன் வேலையைப் பார்க்கவே அவனுக்கு நேரமிருக்காது இதுல உன்னைய எங்க கவனிக்கப் போறான்" என்ற மாலதியை

"அத்தை உங்க பையனுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் இந்த அருவியை கஷ்டப்படத்துனும்னா இருக்கிற வேலை எல்லாத்தையும் தூக்கி தூரப் போட்டுட்டு வந்துடுவார் இம்சை... அத்தை மக பாரின்ல இருந்து வாரானு முத ஆளா அடிச்சிப் புடிச்சி ஏர்போர்ட் போனாரே , நேத்து நாங்க ரெண்டுப் பேரும் காலேஜ்ல இருந்து வரோம்னு சொன்னதும் காரை அனுப்பி விட்டுட்டு வேடிக்கைப் பார்க்கறார், இதுல இருந்தே தெரியல உங்க மகன் லட்சணம் பேசாம போங்க கடுப்பை கிளப்பாம" என்றாள்.

"ஆமால அமுதா இதை கவனிக்காம போய்ட்டேன் பாரு"

"எதை அக்கா சொல்லற?"

"அதான் அரு சொன்ன மாதிரி தேவா வரானதும் வேந்தன் அவனே கிளம்பி அவங்களை அழைச்சிட்டு வர ஏர்ப்போட் போயிருக்கறதை தான் சொல்றேன்.'

"அதுக்கு என்னக்கா? ரெண்டு வருசமா வராதவ வரான்னு தம்பி போயிருக்கும்.."

"எனக்கு என்னமோ தேவா மேல வேந்தனுக்கு ஒரு விருப்பம் இருக்குமோனு தோணுது அமுதா" என்று மாலதி சொல்லிக் கொண்டிருக்க அடுப்பில் மேல் இருந்த பால் குண்டாவை எடுத்து தூக்கி எறிந்தாள் அருவி..

"என்னடி...?" என்றனர் இருவரும் ஒரு சேர..

"இங்க இருந்து போறிங்களா? இல்லையா...?"

"அதுக்கு எதுக்குடி குண்டாவை தூக்கிப் போடற.?".

"ஹா... உங்களை தூக்கி வீச முடியாத கோவத்தை அதுமேல காட்டறேன், தயவு செஞ்சி வெளியப்போங்க" என்று காட்டு கத்து கத்தினாள்.

அதற்கு மேல் இருந்தால் சொன்னதை செய்துவிடுவாளோ என்று இருவரும் வெளியே வந்துவிட... அடுப்பின் அருகில் நின்றவளுக்கு ஏன் என்று தெரியாமல் மனம் வலிக்க ஆரம்பித்தது.

"என்ன இப்போ உனக்கு...?" என்று அதையும் அதட்ட.. மனமோ 'நான் ஒன்னு சொல்றேன் கேளு. ஒருவாரமோ. ஒரு மாசமோ கழிச்சி ஹாஸ்டல இருந்து வர உன்னையே தாங்கு தாங்குனு தாங்கர அத்தைங்க, தேவா இரண்டு வருஷம் கழிச்சி வரா அவளை எந்த அளவுக்கு தாங்குவாங்க... யோசிச்சு பாரு, எனக்கு என்னமோ நீ இந்த வீட்டுக்கு இனி வேண்டாதவளா தான் இருக்க போறேன்னு தோணுது" என்று குழப்பிவிட்டது.

ஏற்கனவே அந்த எண்ணம் அவ்வவ்வப்போது வந்து போய்க் கொண்டு தான் இருக்கிறது இதில் அவளை குழப்பவே கண்ட எண்ணங்கள் தோன்ற என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள்.

ஆனாலும் அவள் கை வேலையை செய்துகொண்டு தான் இருந்தது.

உப்புமாவில் உப்பு அதிகம் போட்டு செய்வேன் என்று சொல்லிவிட்டு வந்தாலும் அதை செய்யாமல் இட்லி ஊற்றி தொட்டுக் கொள்ள காரசட்னி, சாம்பார், தேங்காய் சட்னி செய்து தேவாவிற்கு பிடிக்கும் என்று வெங்காய தோசையையும் செய்து ஹாட்பாக்ஸில் அடுக்கி வைத்து முடித்தவள் நிமிர்ந்து பார்க்கும் போது வியர்வையால் குளித்திருந்தாள் .

இருவருக்கும் செய்ய வேண்டும் என்றால் பெரிய வேலை எதுவும் இல்லாம சுலபமாக செய்துவிடலாம்.ஆனால் அந்த வீட்டில் தான் 20 பேருக்கும் மேல் இருக்கின்றனரே அத்தனை பேருக்கு செய்து முடிப்பதற்குள் தனியாளாக அருவிக்கு நாக்கு தள்ளிவிட்டது.

"ச்சை இதுக்கு நான் வாக்கிங்கே போய் தொலைஞ்சிருப்பேன் அரைமணி நேரம் எக்ஸ்ட்ராவா தூங்க ஆசைப்பட்டு இப்போ எல்லாம் வேலையும் நானே செய்ய வேண்டியிருக்கு" என்று புலம்பியப்படியே அவளது அறைக்கு செல்லப் போக..

அந்த சமயம் வாசலில் கார் சத்தம் கேட்டது

"வந்துட்டாங்க போல" என்று ஒரு ஆர்வத்தில் தான் இருந்த கோலத்தை மறந்து வெளியே சென்றாள் அருவி.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top