மாயவனின் அணங்கிவள் -42

Advertisement

Priyamehan

Well-Known Member
வேந்தன் அருவியின் உதட்டை நோக்கி குனிய.. மாடியின் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் வேந்தனை தள்ளி விட்டு வேகமாக வேகமாக ஓடியவள் திரும்பி வந்து வேந்தன் கையை பிடித்து இழுத்து "நீங்களும் வாங்க ஓடி போய் ஒளிஞ்சிக்கலாம்" என்றாள் ரகசியமாக.

"நான் எதுக்கு ஒளியனும்...?"

"யோவ் நேரம் கெட்ட நேரத்துல வேய்க்காணம் பேசாத வா.." என்று மீண்டும் கையை பிடித்து இழுத்தாள்.

"தேவையில்ல, நீயும் எங்கையும் போகாத."

"நீ எப்படியோ போ, உன்னோட என்ன பார்த்தா உன்னைய எதும் சொல்ல மாட்டாங்க, என்னைய தான் பேசுவாங்க" என்று அவன் கையை உதறிவிட்டு ஓடினாள்.

அவள் ஓடுவதையே பார்த்தவன் யார் வருகிறார்கள் என்று எட்டிப் பார்க்க

இனியன் யாருடனோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்தான்.

"ஹா இல்ல ரேணு ஹாஹா... ம்ம் சீக்கிரம் கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தா இந்த வீட்டுல இருக்கற பெரிசும், எங்க குட்டி எருமையும் இன்னும் முறைச்சிட்டு தான் சுத்துதுங்க அவங்க சேர்ந்து நம்ம கல்யாணம் நடந்து விலங்குச்சி" என்று ரேணுகாவிடம் பேசிக்கொண்டு வர... வேந்தன் கைகளை கட்டி மதில் சுவரின் மீது சாய்ந்து நின்று இனியன் பேசும் அனைத்தையும் வார்த்தை மாறாமல் கேட்டான்.

அருவியோ வந்தது இனியன் என்று தெரிந்தும் அவளை வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாமல் அங்கிருந்த தண்ணீர் தொட்டியின் அடியில் புகுந்துக் கொண்டாள்.

இனியன் பேசியவாரே திரும்ப அங்கு வேந்தன் இருக்கவும் "தேவுடா" என்று கத்தியே விட்டான்.

"என்னாச்சி இனி.."

"எல்லாம் போச்சி ரேணு."

"என்ன சொல்றிங்க புரியலையே?"

"எனக்கு புரிய போகுது அப்பறம் பேசறேன் வை" என்று அவசர அவசரமாக அழைப்பை துண்டித்தவன்.

"அண்ணா.. அது... ரேணு..." என்று வார்த்தைக்கு வார்த்தை திக்கி திணறினான்.

"இங்க என்னடா பண்ற?"

"ரேணு கூட போன் பேச வந்தேன்."

"ஏன் உன் ரூம் என்னாச்சி?"

"அங்க தானே கார்த்தியும் இருக்கான் அவனுக்கு முன்னாடி பேச வேண்டாமேன்னு" என்று மென்று முழுங்க..

"ம்ம் மிலுக்கு போலியா..?"

"சாப்பிட வந்தேன்... போகணும்ண்ணா" என்று திரும்பியவன்.. 'ஆமா நான் போன் பேச வந்தேன் இவர் எதுக்கு வந்தாரு?' என்று யோசித்துக் கொண்டே கீழே இறங்கி சென்றுவிட்டான்.

"அவன் போய்ட்டான்"

"ம்ம் ஹப்பா..." என்று வெளியே வந்தவள்.. "இனிமே இப்படிலாம் பார்த்துக்க கூடாது மாமா யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க.. இன்னைக்கே ரெண்டு தடவை மாட்டிட்டேன்..இனி கல்யாணம் ஆகறதுக்குள்ள எத்தனை தடவை மாட்ட போறேனோ" என்று கீழே இறங்க போக..
அவன் முறைத்தபடியே நின்றிந்தான்.

அன்று அதன்பிறகு ... யாரும் யாரையும் தொந்தரவு செய்ய வில்லை.

ஷர்மிளா தான் கண் கொத்தி பாம்பாக அருவி என்ன செய்கிறாள்? எங்கு போகிறாள்? என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அடுத்த நாள் காலை விடிந்ததும் முதல் ஆளாக கிளம்பி நடைப்பயிற்சி செல்ல தயாராகி நின்ன அருவியை குடும்பமே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் பார்த்து வாயை பிளக்க..

அப்போதுதான் கீழே இறங்கி வந்துக் கொண்டிருக்க வேந்தனின் கண்ணும் அதே ஆச்சரியத்தை தான் காட்டியது.

"அது கொஞ்சம் உடம்பு போட்ட மாதிரி இருக்கேன் இந்த ஒரு வாரமும் அம்சு நல்லா கவனிச்சி அனுப்பிருச்சி.. உடம்பை கண்ட்ரோல் பண்ண வாக்கிங் போக போறேன் அதுல என்ன தப்பு மாமாவும் அதை தானே பண்ண சொல்லுவாரு" என்று மத்ததை வேகமாக சொன்னவள் கடைசி வாக்கியத்தை மட்டும் வாய்க்குல்லையே சொன்னாள்.

"சரி வா வா எப்படியும் எங்களுக்கும் நேரம் போகணும்ல லொட லொடன்னு பேசிட்டே இருப்ப அதுல நேரம் போய்டும்" என்ற கார்த்திக் முன்னால் நடக்க அவன் பின்னால் ரித்துவும் அருவியும் செல்ல வரிசையாக ஒவ்வொருத்தராக சென்றவர்கள் வீட்டை விட்டு வெளியே போனதும் பாதையை அடைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.

அருவிக்கு காதல் வந்தபிறகு தூக்கம் வருமா...?தனியாக சந்திக்க இனிமேல் தானே அழைத்தாலும் வேந்தன் வரமாட்டான் என்று தெரியும் அதனால் தான் அவனோடு இருக்கும் நேரத்தை அனுபவிக்க வேண்டும் என்று நடைபயிற்சிக்கு வர முடிவு செய்திருந்தாள்.

இல்லை என்றால் கும்பகரணி போல் குறட்டை விட்டுக் கொண்டு காலை தூக்கத்தை அனுபவித்திருப்பாள்.

இனியனும் கார்த்திக்கும் வேக வேகமாக நடக்க... நிருவும் வேந்தனும் தொழிலைப் பற்றி பேசிக் கொண்டே பின்னால் வந்தனர்.

அருவியும் ரித்துவையும் நடுவில் விட்டு ஆண்கள் நால்வரும் முன்னும் பின்னும் வர.. இதுபோன்ற ஒரு பாதுகாப்பு இவர்களிடம் மட்டும் தான் கிடைக்கும் என்று நினைத்தாள்..

ஆண்கள் நால்வரும் வேக வேகமாக நடக்க... அவர்களுக்கு ஈடுக் கொடுத்து அருவியால் நடக்க முடியவில்லை. இந்த ஒருவாரமும் இவர்களுடன் வந்ததால் ரித்துவிற்கு அவர்களின் வேகம் பழகி இருக்க.. வேகமாக ஓடி இனியன் கார்த்திக்கின் முதுகை அடித்தவள்.

"எருமைங்களா கொஞ்சம் மெதுவா நடந்தா என்ன? கால் ரெண்டு வலிக்குதுல.."

"நீ திங்க தான் லாயிக்கு அரு... வேலையில ஒரு டேசும் இல்ல" என்ற இனியன் கார்த்திக்கிடம் கண்ணைக் காட்ட.. அவன் ஒரு பக்கம் தோள்ப்பட்டையையும் இனியன் ஒரு பக்கம் தோள்ப்பட்டையையும் பிடித்துக் அருவியை அப்படியே அல்லேக்காக தூக்கிக் கொண்டு நடந்தனர்.

"ஏய் விடுங்கடா எருமைங்களா பன்னிங்களா..." என்று கத்தவும் , "நீதான் அரு நடக்க முடியலைன்னு சொன்ன.. உனக்கு ஹெல்ப் பண்ண தான் தூக்குனோம் இப்படி திட்டுறியே நல்லதுக்கு காலமே இல்ல போ" என்று சொன்னார்களே தவிர அவளை இறக்கி விடவில்லை.

வேந்தன் பின்னால் இருந்து இதை பொறாமையாக பார்த்தவன் "ஏய் விடுங்கடா அவளை" என்று அதட்டல் போட்டான்.

"இவ தான் அண்ணா நடக்க முடியலைன்னு சொன்னா..." என்ற இனியன் இன்னும் அருவியை விடாமல் இருக்க..

கார்த்திக்கோ "சரி இன்னிக்கு ஒரு முடிவு தெரிஞ்சிடும்ன்னு நினைக்கறேன்" என்று இனியனிடம் மெதுவாக சொன்னான்.

அண்ணனுக்கு மனைவியாக வர போறவளை அவள் இவள் என்று மரியாதை இல்லாமல் பேசும் போது வேந்தனுக்கு வெறியாகியது.. ஆனால் அதை சொன்னால் 'உனக்கு மட்டுமா அத்தை பொண்ணு எனக்கும் தான் அத்தை பொண்ணு, கல்யாணமாகட்டும் பேசிக்கலாம் என்று சொல்வான்கள் அவன்ங்கள் சொல்லவில்லை என்றாலும் அருவியே எடுத்துக் கொடுப்பாள் சொல்ல சொல்லி'. என்று பற்களை கடித்தவன்..

"இங்க வாக்கிங் வந்திங்களா? அவளை தூக்க வந்திங்களா.? ஒழுங்கா அவளை இறக்கி விடுங்க" என்று வார்த்தை கண்டிப்புடன் வரவும் இனியன் இதற்கு மேல் விளையாண்டால் வைத்து செய்துவிடுவார் என அருவியை விட்டு விட்டான்.

அவன் விட்டதும் கார்த்திக்கும் விட்டு விட.. இவர்கள் அடிக்கும் கூத்தில் எதுவும் பேசமுடியாமல் வேடிக்கைப் பார்த்தது நிருவும் ரித்துவும் தான்...

வேந்தன் சொன்ன ஒரேக் காரணத்திற்காக ரித்துவைப் பற்றி எதையும் யோசிக்காமல் கல்யாணம் செய்துக் கொள்வதாக ஒப்புக்கொண்டான். ஆனால் அவன் மனதில் ரித்து சரவணனின் காதலி என்ற எண்ணம் மட்டும் தான் தற்போது வரைக்கும் இருக்கிறது.

"போதும் எல்லோரும் வீட்டுக்கு போங்க" என்றான் வேந்தன்.

"நானும் இனியும் டென்னிஸ் விளையாட போறோம்" என்று கார்த்திக் சொல்ல. அருவிக்கும் அவர்களுடன் விளையாட செல்ல வேண்டும் என்ற ஆசை தான்.. ஆனால் அதை சொல்லி யார் வாங்கி கட்டிக் கொள்வது என்று அமைதியாக இருக்க..

அவள் கண்களைப் பார்த்தே அதை புரிந்துக் கொண்டவன் "சரி வாங்க போலாம்" என்றான்.

"நீங்களும் வரிங்களா?"

"ம்ம்"

"நானும் வரேன்டா" என்று இனியனின் காதை அருவி கடிக்க ..

அவளையும் வேந்தனையும் மாறி மாறி பார்த்தவன். "என்னமோ நடக்குது ..என்னைக்கும் வாக்கிங் வராதவ இன்னிக்கு வர, டென்னிஸ் விளையாட வரேன்னு அண்ணா சொன்னதும் நீயும் வரேன்னு சொல்ற என்ன விழுந்துட்டியா...?அன்னிக்கு அந்த வாய் பேசுன" என்று எடக்காக பேச..

உண்மையை சொன்னால் கிண்டல் செய்வானோ என்று நினைத்தவள்

"அதுலாம் ஒரு வெங்காயமும் இல்ல உன் வேலையை பாரு" என்று முறுக்கிக் கொண்டவள்.. "நான் வரல நீங்களே போங்க" என்று வீட்டைப் பார்த்து நடக்க..

"அரு இரு நானும் வரேன் வேந்தா நீங்க விளையாடிட்டு வாங்க நான் அவளோட போறேன்" என்று நிருவும் அவளுடன் சென்று சேர்ந்துக் கொண்டான்.

இதற்கு மேல் வேந்தனுக்கு விளையாட விருப்பம் இருக்குமா...? வருகிறேன் என்று சொல்லிவிட்ட ஒரேக் காரணத்திற்காக அவர்களுடன் சென்றான்.

வீட்டிற்கு வரும் போது காலைப்பொழுது அழகாக விடிந்திருந்தது.

வந்ததும் ரித்து அருவிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல

"என்னடி தனியா பேச என்ன இருக்கு..?"

"நீதான் அரு ஹெல்ப் பண்ணனும்"

"முதல விசியம் என்னனு சொல்லுடி?"

"சரண் வீட்டுல அவங்க அப்பா எங்க லவ்வை அக்சப்ட் பண்ணிக்கல..."

"இது தெரிஞ்ச விசியம் தானே யாரு அப்பா தான் காதலுக்கு சம்மதம் சொல்லுவாங்க, அதும் நம்ப வீட்டோட விரோதத்துல இருக்கவீங்க எப்படி ஒத்துப்பாங்கன்னு எதிர்பார்த்த?"

"அதான்டி நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு இருக்கோம்"

"என்னது ரிஜிஸ்டர் மேர்ஜா..? என்னடி இப்படி குண்டை தூக்கிபோடற..வீட்டுக்கு தெரிஞ்சா உன்னைய கொன்னு புதைச்சிடுவாங்க.. நான் வேணா மாமாக்கிட்ட பக்குவமா சொல்லிப் பார்க்கறேன் சரவணன் வீட்டுல பேச சொல்லி."

"அதுக்குலாம் வாய்ப்பே இல்ல அரு...சரண் வீட்டுல அவங்க அப்பா எப்படியும் ஒத்துக்க மாட்டாங்க... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ"

"அதுதான் பேசலாம்ன்னு சொல்றேன்ல, பெரிய மாமாக்கிட்ட சொன்னா அவர் பார்த்துப்பார், வேந்தன் தான் ஏதாவது சொல்லுவார் பெரிய மாமா எதுவும் சொல்ல மாட்டார் எனக்கு நம்பிக்கை இருக்கு"

"வேண்டா அரு சொன்னா கேளு இவங்க எதுவும் சொல்லாம அங்க போய் பேச போனாலும் சரண் அப்பா அவமானப்படுத்தி தான் அனுப்பி வைப்பாரு..." என்றவள் சட்டென்று அருவியின் கையை எடுத்து தன் தலைமேல் வைத்து..

"என்மேல் சத்தியமா மேர்ஜ்க்கு நீதான் வரணும்... இதைப் பத்தி யார்கிட்டையும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு"

"முடியாது ரித்து... நீ என்ன லூசா? ஏற்கனவே பல பிரச்சனை போய்ட்டு இருக்கு... இப்போதான் இனியனுக்கும் பொண்ணு செட்டாகியிருக்கு, நீ ஓடி போய் கல்யாணம் பண்ணிட்டேன்னு தெரிஞ்சா பொண்ணு வீட்டுல ஒத்துபாங்களா?, அடுத்து கார்த்திக் நிலைமையை யோசி.. உன்னால அவங்க ரெண்டு பேர் எதுக்கு கஷ்டப்படனும்.. நீ உன்னோட வாழ்க்கைன்னு சுயநலமா யோசிக்காத ரித்து."

"அரு புரிஞ்சிக்கோ சரணை விட்டா நிரு மாமாவை கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்க... உனக்கு அதுதான் ஆசையா? அவங்க ரெண்டுப் பேருக்கும் இப்போ இல்லைனாலும் அப்புறம் பொண்ணு குடுப்பாங்க, ஆனா எனக்கு அப்டியா...?நீ மட்டும் என் அண்ணாவோட சந்தோசமா இருக்கனும், நான் மட்டும் உன் அண்ணாவோட கஷ்டப்படணுமா...?"

"ஏய் லூசு மாதிரி பேசாதடி நான் எப்படி அப்படி சொன்னேன்..?நீ சரவணனையே கல்யாணம் பண்ணிக்கோ ஆனா அதை ரெண்டு வீட்டு சம்மதத்தோட பண்ணிக்கோன்னு தானே சொல்றேன்".

"இப்போதைக்கு இல்ல இந்த ஜென்மத்துல சரண் அப்பா சம்மதிக்க மாட்டார். அப்புறம் வேந்தன் அண்ணா வேற என்னோட டைம் முடிஞ்சிது எப்போ முடிவு சொல்றேன்னு பார்க்கும் போதெல்லாம் கேட்டுட்டே இருக்காங்க... இப்போ எல்லாருக்கும் கஷ்டமா தான் இருக்கும் கல்யாணமாகிட்டா சரியாகிடும்" என்று இன்னும் அருவி கையை விடாது அவள் தலை மீதே வைத்திருந்தவள்.. பலவற்றையும் பேசி அருவிவிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள்.

அப்போதில் இருந்தே அருவியின் மனம் பாறாங்கால்லாய் கனக்க ஆரம்பித்தது.

"என்னைக்கு ரித்து மேர்ஜ்?"

"திருவிழா முடிஞ்ச அடுத்த நாள்".

"ரித்து எதுக்கும் பல தடவை யோசிச்சிக்கோ."

"ம்ம் நீ யார்கிட்டையும் சொல்லி மாட்டிவிடாம இருந்தா போதும் முக்கியமா அண்ணாக்கிட்ட மூச்சை விட்டுறாத" என்று சொல்ல.அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது அதற்குள் ரித்துவின் மனதை பேசி பேசியே மாற்ற முடியும் என்று விட்டுவிட்டாள் அரு...

ஷர்மிளாவிற்கு ஏதாவது செய்து அருவியையும் வேந்தனையும் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது... அவர் அமைதியாக இருக்க ஒரேக் காரணம் வேந்தன் யோசிச்சி சொல்றேன் என்று சொன்ன ஒரு வார்த்தை தான். அவன் மட்டும் முடியாது என்று சொல்லிவிட்டால் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று பக்காவாக திட்டம் போட்டு தான் வைத்திருந்தார்..

அன்று கோவிலில் கொடி ஏற்றம் நடக்க இருப்பதால் இனியன் கார்த்திக்கை தவிர மற்ற ஆண்கள் கோவிலுக்கு சென்று விட்டனர்.

அருவிக்கு ரித்துவின் விசயத்தை வேந்தனிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் ஆனால் ரித்து சத்தியம் வாங்கிவிட்டதால் சொல்ல முடியாமல் தவித்தாள்.

அந்த வாரக் கடைசியில், மாவிளக்கு,பொங்கல், முளைப்பாரி என்று திருவிழா சிறப்பாக நடைப்பெற இருந்ததால் வேந்தன் கோவிலுக்கும் வீட்டுக்கும் அலைந்துக் கொண்டிருந்ததால் அருவியை சரியாக கவனிக்க முடியாமல் போய்விட...

அருவியும் வேந்தனின் நிலையை புரிந்துக் கொண்டு அவனை தொந்தரவு செய்யாமல் சுமதியுடன் சேர்ந்து கடைக்கு செல்வது அவளுக்கு வேண்டிய உடைகளை வாங்குவது என்று நேரத்தை போக்கினாள்.

இதனால் ஷர்மிளாவிற்கு இவர்களை பற்றிய கவலை இல்லாமல் இருந்தது.

நாட்கள் வேகமாக செல்ல... திருவிழா நாளும் வந்தது..

மாவிளக்கு எடுக்க வேண்டும்...

இவ்வளவு நாள் மாலதி தான் வீட்டின் மூத்த மருமகளாக மாவிளக்கு எடுக்க.. இனி அருவியை எடுக்க சொல்லாம் என்று வேந்தன் அவளுக்கு அழைத்தான்.

"ஹலோ"

"ம்ம் சொல்லுங்க மாமா மூனு நாளா ஆளையே பார்க்க முடியல, இன்னைக்கு தான் போன் போடறீங்க?" என்று சாதாரணமாக கேட்டாலும் தன்னை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் அதில் இருப்பதை புரிந்துக் கொண்டவன் மெலிதாக புன்னகைத்துக் கொண்டே

"மாவிளக்கு நீ எடுடி" என்றான் நேரடியாக

"என்னது நானா...!!!! மாமா விளையாடறீங்களா? அத்த தானே வருஷம் வருஷம் எடுப்பாங்க, இப்போ நான் போய் கேட்டா என்ன சொல்லுவாங்க இதுலாம் வேணா?"

"இந்த வருஷம் நீதான் எடுக்கற..?"

"வேணா..."

"சொன்னதை செய்.."

"ஏன் எதுக்குன்னு கேள்வி வரும் மாமா ப்ளீஸ்" என்று சிணுங்கினாள்.

"வந்தா சொல்லு.."

"என்ன சொல்ல சொல்றிங்க?"

"ஏன் என்ன சொல்லணும்னு உனக்கு தெரியாதா?"

"மாமா..."

"என்னைய கல்யாணம் பண்ணிக்கனும்னு எண்ணம் இருக்கா? இல்ல இப்படியே இருந்துடலாம்னு இருக்கியா?" என்றவனின் குரல் கர்ஜனையாக வந்தது.

.....

"என்னடி பேச மாட்டிங்கிற? அப்போ அப்படி தான் எண்ணமா?"

"அதலாம் ஒன்னுமில்ல..வீட்டுல சொன்னா எல்லோரும் கேலியா பார்ப்பாங்க, அதை நினைச்சா தான் ஒரு மாதிரி இருக்கு.."

"எதுக்கு கேலியா பார்க்க போறாங்க..?"

"அன்னிக்கு அப்படி பேசிட்டு இன்னிக்கு வந்து கட்டி வைங்கனு சொன்னா கேலியா பார்க்க மாட்டாங்களா?"

"ஓ"

"கொஞ்ச நாள் ஆகட்டும் அதி... சித்தி ஊருக்கு போகட்டும் கண்டிப்பா நானே சொல்றேன்"

"ம்"

"அப்போ அடுத்த வருஷம் எடுத்துக்கவா...?"

"ம்"

"என்ன எல்லாத்துக்கும் ம் சொல்றிங்க கோவமா?"

"ஒன்னுமில்ல சேலையாவது கட்டிட்டு வருவியா?"என்று கேள்வி தொக்கி நின்றது.

"ம்ம் அது ஆல்ரெடி செலக்ட் பண்ணிட்டேன் நான் ரெட் கலர்ல பட்டு உங்ககிட்ட அந்த கலர் இருந்தா போட்டுட்டு வாங்க."

"எதுக்கு?"

"என்ன எதுக்குன்னு கேக்கறீங்க ?, நீங்களும் நானும் ஒரே மாதிரி போட வேண்டாமா?"

"ஓ என்கிட்ட இல்ல" என்று போனை வைத்துவிட்டான்.

அவன் பதிலில் அருவியின் முகம் சற்று கறுத்தாலும்... அவனுக்காக பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.

நேர்த்தியாக சிவப்பு நிறத்தில் பொட்டு போட்ட புடவையை அணிந்து தலை முடியை தளர்வாக பின்னி கூந்தலில் மல்லிகை பூவை சூடிவள். கண்ணாடியின் முன் நின்று தன்னைப் பார்த்து திருப்தி பட்டுக் கொண்டவள். இந்த புடவைக்கு நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்தால் எப்படி இருக்கும் என்று வைத்துப்பார்த்தாள்.

"வாவ் அருவி நீ கூட அழகா தான் இருக்கடி" என்று தன்னை ஒரு செல்பி எடுத்தவள் ..அதை வேந்தனுக்கு "தாலி மட்டும் தான் கட்டணும்" என்று அனுப்பி வைத்துவிட்டு மறக்காமல் குங்குமத்தை அழிச்சிவிட்டாள்.

இவ்வளவு நாளில் இன்று தான் அவனுக்கு புகைப்படம் அனுப்பி வைத்திருக்கிறாள்.

அதைப் பார்க்கும் அளவிற்கு வேந்தனிற்கு நேரமில்லாமல் போக... வீட்டிற்கு வந்த உடனே குளிக்க சென்று விட்டான்.

"ரித்து போலாமா..?"

"நான் ரெடி போலாம்" என்று வந்த ரித்துவை

"என்னடி இப்படி வந்துருக்க... சேலை கட்டலையா?"

"அதான் கல்யாணத்துக்கு கட்டப் போறேன்ல அப்போ பார்த்துக்கலாம்...நீ ரொம்ப அழகா இருக்க அரு.."

"ம்ம்... இன்னும் நீ மனசு மாத்திக்கலையா ரித்து.?"

"ப்ளீஸ் அரு வேற ஏதாவது பேசு."

"உங்கிட்ட பேசவே முடியாது" என்று இருவரும் கீழே போக அங்கு மொத்த குடும்பமும் நின்றிருந்தது.

தேவா அவள் அம்மாவோடு நின்றுக் கொண்டு அருவியைப் பார்த்து சூப்பர் என்று கைக் காட்ட அதைப் பார்த்து புன்னகைத்தாள் அருவி.

வேந்தன் குளித்து விட்டு வேக வேகமாக இறங்கி வந்தவனை பார்த்து இன்பமாக அதிரந்தாள் அருவி.
 
MAR

Active Member
Paavam Aruvi.Selfish Rithu and Sharmila.Hope Vendhan don't misunderstand Aruvi.
 
Saroja

Well-Known Member
சிகப்பு கலர் சட்டையா
அருவி ரித்துவிசயத்தில்
வேந்தன் கிட்ட
மாட்ட போறா
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top