மாயவனின் அணங்கிவள் -40

Advertisement

Priyamehan

Well-Known Member
அழுது முடித்து ஒய்ந்தவள் அப்போதுதான் அருகில் ரித்து இருப்பதை கவனித்தாள்.

"ரித்து"

"எதுக்கு இப்படி அழற அரு...?
நானும் ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கேன் தேம்பி தேம்பி அழறவ".

"அது.."

"என்ன பெரியண்ணா உன்னைய லவ் பண்றது உனக்கு தெரிஞ்சிடுச்சா...?"

"ரித்து" என்று அருவி அதிர்ச்சியாக கண்களை விரித்தாள்.

"எங்க எல்லோருக்கும் முன்னாடியே தெரியும். உனக்கு தான் அண்ணனோட காதல் புரியல...

அன்னிக்கு எல்லோருக்கும் முன்னாடி என்ன சொன்னாரு தெரியுமா?, எனக்கு அவ தான் அவளுக்கு நான்தான் அதை யாரும் மாத்த முடியாதுன்னு அவ்வளவு உறுதியா சொன்னார், அதுல இருந்தே அண்ணா உன்னைய எந்த அளவுக்கு விருப்பறார்ன்னு எங்க எல்லோருக்கும் புரிஞ்சிடுச்சி இதுமாதிரி யாருடி இருப்பா, நீ அவ்வளவு பேசியும் நீதான் வேணும்னு நிக்கிறார்,சிங்கம் மாதிரி விரிச்சிட்டு சுத்துன மனுஷன் அன்னிக்கு நீ டைன்னிங் டேபிள்ல வெச்சி பேசுனா பேச்சுல எப்படி உடைஞ்சி போய்ட்டாரு தெரியுமா?,சீக்கிரம் அண்ணாக்கிட்ட உன் மனசை சொல்லு அரு உன்னைய உள்ளங்கையில வெச்சி தாங்கிவாரு".

"ம்ம்"

"அண்ணா அவர் ரூமில தான் இருக்கார் போய் பேசு"

"ம்ம் போறேன்"

"என்ன ம்ம்? இப்போவே போ.." என்று ரித்து விரட்ட அருவி எழுந்து முகம் கழுவிக் கொண்டு வேந்தன் அறையை நோக்கி சென்றாள்.

இதுநாள் வரையிலும் வேந்தனை அறையை கடந்து சென்றிருக்கிறாளே தவிர உள்ளே சென்றதில்ல இன்று முதல் முதலாக உள்ளே செல்ல பயமாக இருந்தது.

வெளியே நின்று மெதுவாக கதவை தட்டினாள் .

"வரேன்" என்ற வேந்தன் குரல் எப்போதும் போல் கம்பீரமாக வந்தது...

அந்த குரலில் உடல் நடுங்க நின்றவள் கதவு திறந்ததும் திரும்பி ஓடி விடலாமா என்று கூட யோசித்தாள்.

அதற்குள் வேந்தன் அவளைப் பார்த்துவிட..

"என்ன?" என்றான் புருவத்தை உயர்த்தி..

"பே..ச..ணு..ம்" என்று தட்டு தடுமாறி சொல்லிவிட...

அறைக்கு உள்ளே செல்ல வழி விட்டு நின்றவன் அருவி உள்ளே செல்லவும் யாராவது தங்களைப் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு கதவை மூடினான்.

அருவி வேந்தனின் அறையை சுற்றி சுற்றிப் பார்த்தாள். மற்றவர்கள் அறையை காட்டிலும் வேந்தனின் அறையில் உள் வேலைபாடுகள் அனைத்தும் பிரமாண்டமாக இருந்தது..

அவள் பார்வையிடுவதை கை கட்டி கதவின் மீது சாய்ந்தவாறு வேடிக்கைப் பார்த்த வேந்தன்.

"என்ன அதிசயமா இருக்கு என்னோட ரூமுக்குல்லாம் வந்துருக்க?" என்று யோசனையாக கேட்டான்.

"அது .. உங்ககிட்ட பேசணும்."

"ம்ம் பேசு"

"பாட்டு கேட்டேன்" என்று தலையை குனிந்தவாறே தயங்கி தயங்கி சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்க்க

"ஓ... பாட்டு என்ன சொல்லுது?" என்று கண்களில் ஒட்டு மொத்த காதலையும் காட்டி குறும்பு கண்ணனாக புன்னகையுடன் கேக்கும் வேந்தனை பார்க்கும் போது அருவிக்கு பேச வார்த்தைகளும் வரவில்லை நாவும் எழவில்லை

அவள் என்ன பேசுவாள் என்று எதிர்பார்த்து அவள் முகத்தையே பார்த்திருந்தான்

இதற்கு மேல் முடியாது என்று
அருவி ஓடிச் சென்று வேந்தனின் கழுத்தில் இருக்கைகளையும் போட்டு அணைத்துக் கொண்டாள்.

பேசமுடியாத வார்த்தைகளை அந்த ஒன்றை அணைப்பு வேந்தனுக்கு உணர்த்திவிட... அருவி அணைப்பாள் என்று எதிர்பார்க்காதவன் ஸ்தம்பித்து நின்று விட்டான்

"சாரி அதி... உங்க மனசு புரியாம தப்பு தப்பா பேசிட்டேன் நான் அப்படி பேசியிருக்க கூடாது" வேந்தனின் வலது தோளில் முகம் புதைத்து அழுதாள்.

சுயநினைவுக்கு வந்தவனுக்கு அருவி அணைத்திருப்பது இப்போதும் அதிர்ச்சியாக தான் இருந்தது. பாடலை கேட்டு தன் காதலை புரிந்துக் கொள்வாள் என்று தான் நினைத்தான், பதிலுக்கு அவளும் காதல் சொல்வாள் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியில் "நீயும்.." என்று முதன் முறையாக வார்த்தை வராமல் தவித்தான்.

அவன் என்ன கேக்க வருகிறான் என்பதை புரிந்துக் கொண்டவள் அழுதவாறே "ஆமா" என்று தலையசைக்கவும்..

"தேன்னு..."என்று அவளை தூக்கி முகம் பார்க்க

"மாமா...." என்றாள் கண்ணீர் சிந்தும் கண்களுடன்

அந்த "மாமா" என்ற அழைப்பில் அருவியின் எலும்புகள் அனைத்தும் நொறுங்கும் அளவிற்கு அவளை அள்ளி அணைத்திருந்தான் வேந்தன்.

எவ்வளவு நாள் காத்திருப்பு எத்தனை மனக்கசப்பு அனைத்தையும் தாண்டி இன்று இருவரும் தங்கள் காதலை சொல்லிருக்கும் போது யாருக்கு தான் சந்தோசமாக இருக்காது. இவ்வளவு நாள் காத்திருப்பே பல ஜென்மம் போல் தோன்ற இனியும் அது முடியாது உடனே திருமணம் செய்து தன்னவளை தனதாக்கி கொள்ள வேண்டும் என்று இந்த ஒரு நிமிடத்திற்குள் ஆயிரம் யோசனைகள் தோன்றியது

இருவருக்குமே காதலை சொல்லிவிட்ட நிம்மதியில் மனம் காற்றாக பறக்க வேந்தனின் அணைப்பு மேலும் மேலும் இறுகியதே தவிர இலகவில்லை

"சாரி அதி...அன்னிக்கு அப்படி பேசியிருக்க கூடாது" என்று மீண்டும் மீண்டும் அருவி சொன்னதையே சொல்ல..

"ஹேய் விடுடி . நீதானே பேசுன... நான் எப்போமே என்னையும் உன்னையும் பிரிச்சி பார்த்ததில்லை.. என்னய்ய நானே திட்டிகிட்டா கோவப்படுவனா என்ன?" என்றான் சாதாரணமாக.

அருவி பேசியப் போது வேந்தனுக்கு கோவம் வந்தது தான் ஆனால் அது அனைத்து அவள் அருகாமையில் காணாமல் போய்விடுகிறது என்பது தான் உண்மை.

"அதி.." என்று மீண்டும் அருவி மன்னிப்பு கேக்கும் படலத்தை ஆரம்பிக்க

அவள் வாயை கையால் மூடியவன்."இந்த அதிங்கற வார்த்தையை நேத்தே கேட்டுட்டேன்.. இல்லைனு பொய் சொன்ன.. அப்போவே எனக்கு லைட்டா டவுட் வந்துடுச்சு" என்று அருவியை விலக்கி அவள் முகம் பார்த்து புருவத்தை உயர்த்தி கேக்க..
அருவி முகம் அந்தி வானமாக சிவக்க வெக்க சிரிப்பொன்றை சிந்தினாள்.கண்கொண்டு வேந்தனை அவளால் பார்க்கவே முடியவில்லை அந்த அளவிற்கு வெக்கமும் சந்தோசமும் போட்டிப் போட்டு அவளை இம்சை செய்தது.

"என்னைய பாருடி.."என்று அருவியின் தாடையை பிடித்து நிமிர்த்தியவன் அவள் கண்களில் இதழ் பதித்து "ஐ லவ் யூ டி பொண்டாட்டி.. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?" என்றான் தங்கு தடையின்றி.. அதைக் கேக்கும் போது வார்த்தைக்கு வலிக்குமோ என்பது போல் கேட்டான்.

இது போன்ற வேந்தன் அருவிக்கு முற்றிலும் புதிது.. அதட்டி அதிகாரம் செய்தே பார்த்து பழகியவளுக்கு அனைத்துமே ஒரு மாதிரி சந்தோசத்தைக் கொடுத்தது.

கண்களில் கண்ணீர் வழிய "சீக்கிரம் பண்ணிக்கலாம்" என்று அழுகையுடன் கூடிய சிரிப்புடன்.

"உன்னைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் போல ஹனி."

"இல்ல நான் தான் உங்களை கஷ்டப்படுத்திட்டேன்"

"சரி ரெண்டுப் பேருமே தான் கஷ்டப்படுத்திகிட்டோம் போதுமா என்றவனுக்கு அவனை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அவன் மனம் என்னோட தேனுக்கு நான் இப்படி இருந்தா தான் பிடிக்கும் இது அவளுக்கு மட்டுமானது என்று சொல்ல

அருவியின் உதட்டை இரு விரலால் வருடியவன் அடுத்த நொடி அருவியின் மென்மையான இதழோடு தன் அழுத்தமான தடித்த இதழை சேர்த்திருந்தான்.

வேந்தனின் இந்த திடீர் செயலில் அருவின் கண்கள் இரண்டும் முட்டை அளவிற்கு விரிய, அடிவயிற்றில் இருந்து ஜிவென்று ஒரு சிலிர்ப்பு எழுந்து அருவியை இம்சை செய்ததும் அது தந்த உணர்வை தாங்க முடியாமல் வேந்தனிடம் இருந்து விடப்பட போராடினாள்.

அவன் பிடியோ இரும்பு பிடியாக இருந்ததில் அவளால் அசைக்கக் கூட முடியவில்லை. ஒரு முத்தத்தில் தன் ஒட்டு மொத்த காதலையும் இறக்கி வைக்க முடியுமா? என வேந்தன் முயற்சி செய்துகொண்டிருக்க.. இதற்கு மேல் போராட முடியாது என்று தெரியவும் பின் அவனுக்கு ஒத்துழைப்பை தர துவங்கினாள்.

நேரம் செல்ல செல்ல வேந்தனின் வேகம் கூடியது மூச்சுக் காற்றுக்காக அருவி சிரமப்படவும் வேந்தனின் மார்பில் கைவைத்து தள்ளிய பிறகே அவளை விடுவித்தான்..

வேந்தன் விட்டதும் நிற்க முடியாமல் கால்கள் தளர மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கியவாறே ஆதரவுக்கு பிடிக்க ஏதாவது கிடைக்குமா என்று கண்கள் தேடவும் அதை உணர்ந்த வேந்தன் அருவியை இழுத்து தன் மார்பின் மீது போட்டுக் கொண்டான்.

அருவின் உதடு நெருப்பாக எரிந்ததில் பக்கத்தில் இருந்த கண்ணாடி தன்னைப் பார்த்தாள். உதடு வீங்கி சிறு காயமாகி ரத்ததுளிகள் வெளியே எட்டிப்பார்க்கவும்

"அ...தி.." என்றாள் வேகமாக.

"ம்ம்.."

"என்ன இது...?என்று மூச்சு வாங்கியவாறே கேக்க

"தெரியலைன்னா ஒன்ஸ் மோர் போவமா?" என்று மீண்டும் அருவியின் இதழை நோக்கி செல்லவும் தன் பலம் முழுவதையும் திரட்டி வேகமாக அவனை தள்ளியவள்.. "இதுலாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான் கிட்ட வந்திங்க கொன்னுடுவேன், என் உதட்டை என்ன பண்ணி வெச்சிருக்கீங்க பாருங்க பார்க்கவிங்களுக்கு என்ன பதில் சொல்றது நான். இனி கிட்ட வந்திங்க அவ்வளவு தான் அதி" என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்ட.

அவள் விரலை பிடித்தவன்.. இந்த வேந்தனையே மிரட்டறீயா? என்று சிரிப்புடன் கேட்டவன் அவள் உதட்டை மெதுவாக வருடினான்.. ரொம்ப ஹார்சா நடந்துட்டனோ.. நீ ஏண்டி இவ்வளவு சாப்ட்டா இருக்க?

நான் சாப்ட்டா இருக்கறது தான் பிரச்சனையா.

பின்ன இல்லையா... இத்துலுண்டு முத்ததுக்கே ரத்தம் வந்தா அப்புறம் என்று அருவியின் காதில் வீணையாக இசைக்க

அவனை தள்ளி விட்டவள் நீங்க ரொம்ப மோசம் அதி.. இப்டிலாம் பேசுறீங்க என்று முகம் சிவந்து ரத்தமாக மாற..
கதவை நோக்கி ஓடினாள்.

"ஹாஹாஹா பேசக் கூட தடவா ,ஹேய் பார்த்து போடி.. "

"அதுலாம் எனக்கு தெரியும்" என்று கதவின் அருகில் சென்று அவனை திரும்பி பார்க்க வேந்தன் என்றும் இல்லாமல் இன்று முகம் முழுவதும் மலர்ந்த புன்னகையுடன் மயக்கும் மாயவனாக நின்றிருந்தான்.

அவன் புன்னகையில் அருவி விழுந்துவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். மீசை துடிக்க சிரிப்பை சிந்தியவனின் மார்பில் தஞ்சம் புகுந்துகொள்ள மனம் துடித்தது. இதற்கு மேல் இருவரும் ஒரு அறையில் இருப்பது சரியல்ல என்று வெளியே செல்ல கதவை திறந்தவள் வெளியே நின்றவரை கண்டு அதிர்ச்சியானாள்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top