மாயவனின் அணங்கிவள்-35

Advertisement

Priyamehan

Well-Known Member
அடுத்தநாள் காலையில் வயலுக்கு வேலைக்கு வந்த சுமதியிடம்

"உன் பேர் தானே சுமதி.." என்று கேட்டான் வேந்தன் இதற்கு முன்பு இரண்டு முறை பேர் சொல்லி கூப்பிட்டுருக்கிறான் இருந்தும் சந்தேகத்தில் கேக்க..

"ஆமாங்கய்யா" என்றாள் பணிவாக

"இனி நீ நிருவோட பண்ணையில வேலை செய்ய போ, இங்க வர வேண்டாம்"

"ஏங்கையா நான் வேலை சரியா செய்யலையா?"

"அதலாமில்ல.. உங்க அருவி அம்மிணி தான் உன்னைய அங்க அனுப்ப சொன்னா..." என்று சத்தமாக சொன்னவன் "மேலிடத்து உத்தரவை மீற முடியுமா?" என்று தனக்கு மட்டும் கேக்கும் படி சொல்லிக் கொண்டான்.

அருவி பேசியதில் கோவமிருந்தாலும் ஒன்று செய் என்று அவனிடம் அவளாக முன் வந்து கேக்கும் போது முடியாது என்று சொல்ல மனம் வரவில்லை.சொல்லவும் மாட்டான்... அவள் எள் என்றால் இவன் தான் எண்ணெய்யாக மாறி நிற்கிறானே...

"அருவியா... சரி போறேன்ங்கையா..." என்றாள் தன்மையாக.

"நாளைக்கு போ... போக வர பஸ் காசு குடுக்க சொல்லிடறேன் "

"சரிங்கய்யா" என்று வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

"மாப்பிள்ளை செட் ஆகற வரைக்கும் வீட்டுலயே இருக்கலாம்ல பாவம் இந்த வேகாத வெளியில வந்து எதுக்கு இப்படி கஷ்டப்படனும்" என்று எண்ணம் தோன்றாமல் இல்லை..

வேலைக்கு வருவது அவரவர் குடும்ப சூழ்நிலையை பொறுத்து அதை கேக்க வேந்தனுக்கு உரிமையில்லை என்று விட்டுவிட்டான்.

வேந்தன் போனதும் சுமதி அருவிக்கு அழைத்து வேந்தன் சொன்னதை சொல்லியவள் "எதுக்கு அரு இதுலாம்...? நெவுல்ல இருந்தா மட்டும் கலர் ஆகிடுவனா? சட்டில இருந்தா தானே அகப்பையில வரும்ன்னு பழமொழியே இருக்கு, இங்கன என்ன கலர் இருக்குனு இப்படி வேலையை மாத்திவிடற?" என்று சுமதி கேள்வி கேக்க...

"கலர் ஆகிட மாட்ட தான் ஆனா கருப்பும் ஆக மாட்ட. சும்மா எதையாவது சொல்லிட்டே இருக்காதா சுமி.. அங்க போ அம்மா உன்னைய நல்லா பார்த்துப்பாங்க பயப்படாம வேலை செய்யலாம்.உன் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு போதுமா

"ம்ம் இதை நீ சொல்லனுமா .. ஏதோ கூட ஒருவாரம் வேலை செஞ்சதுக்காக இப்ப வரைக்கும் எனக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யற..உன்னைய நம்பாம இருப்பனா?"

"சரி உடனே புராணத்தை ஆரம்பிக்காத...ஊருக்கு வந்ததும் நம்ப ரெண்டுபேரும் சேர்ந்து ஜவுளிக்கடைக்கு போகவோம்"

"எதுக்கு..?"

"உனக்கு கொஞ்சம் டிரஸ் வாங்கணும்.. அன்னிக்கு நீ போட்டுருந்த தாவணில எதுக்கு ஒட்டுப் போட்டுருந்த... வேலைக்கு வரவா இப்படிதான் வருவியா? பார்க்கவன் கண்ணு எல்லாம் உன் மேல தான் இருக்கும் அவன் பாவப்பட்டு பார்க்கறானா இல்லை ஓட்டையில ஏதாவது தெரிஞ்சிடாதான்னு பார்க்கறானான்னு யாருக்கு தெரியும் சொல்லு...?"

"கிழிஞ்சிடுச்சி புது தாவணி தான் கம்பி மாட்டி கிழிஞ்சிடுச்சி"

"சரி விடு வரும்போது உனக்கு சொல்றேன்"

"ம்ம் வெச்சிடட்டுமா?"

"சரி" என்று சுமதியின் அழைப்பை துண்டித்துவிட்டு வேந்தனுக்கு அழைத்தாள் அருவி..

அவள் அழைப்பாள் என்று வேந்தன் எதிர்பார்க்கவில்லை. 'நேத்
து ஏதோ நிரு போனை எடுக்காததால என்கிட்ட சொன்னா, இப்போ எதுக்கு கூப்பிடறா..?அப்படிலாம் கூப்பிடற ஆள் இல்லையே இவ' என்று யோசனையில்லையே அழைப்பை ஏற்றவன்
"ம்ம்" என்றான்.

"தேங்க்ஸ் சொன்னதும் செஞ்சதுக்கு, நிருக்கிட்ட சொன்னாக் கூட இப்போ இடம் காலி இல்லைன்னு ஏதாவது காரணம் சொல்லி சமாளிப்பான்... " என்று சிரித்த வண்ணம் சொன்னாள்.

"ம்ம்"

"நான் சொன்ன உடனே செஞ்சிட்டீங்க" என்றவளின் குரலில் மிதமிஞ்சிய சந்தோசம் இருக்க.. அந்த சந்தோஷத்திற்காகவே எது வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று தோன்றியது வேந்தனுக்கு...
"வேற" என்றான்.

"வேற எதுமில்ல... இத சொல்ல தான் கூப்பிட்டேன்"

"ம்ம்"

"வெச்சிடட்டுமா?" என்று ஏக்கமாக கேட்டவளை இப்போதே பார்க்க வேண்டும் போல் துடித்த மனதை அடக்கிக் கொண்டவன் "வேலை இருக்கு" என்று வைத்து விட்டான்.

இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு அதீத காதல் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் தவித்தனர்.

வீட்டிற்கு சென்ற வேந்தன் அருவி நட்டு வைத்துச் சென்ற சிவப்பு நிற ரோஜா செடியைப் பார்த்தான், அது பல ரோஜாக்களுடன் பூத்து குலுங்கியது.

"என்னங்கய்யா அந்த ரோஸ் செடியையே பார்க்கறீங்க.. நேத்து தான் மண்புழு உரம் வெச்சேன்" என்று முருகன் பயத்துடன் வந்து நிற்க..

"அதில்ல" என்று தலையை மறுப்பாக அசைத்தவன்..
இதழ் விரிந்தும் விரியாமலும் இருந்த ஒரு ரோஜாவையே பார்த்துக் கொண்டிருக்க.

"அருவி அம்மிணி நட்ட செடி தான் ஐயா ரொம்ப நல்லா வருது எப்போமே பூ இருந்துட்டே இருக்கு... செடிக்கு என்ன என்ன பண்ணனும்னு எனக்கு போன் பண்ணி அப்போ அப்போ கேக்கும்..." என்றதும்..

"என்னைய தவிர எல்லோருக்கும் போன் பேசுடி" என்று உள்ளுக்குள் பொறும்பியவன் ..

"நீ போய் வேலையை பாரு" என்று முருகனை அனுப்பிவிட்டு ரோஜா செடியின் அருகில் சென்றான்.

செடியின் முன் முழங்காலில் மண்டியிட்டு
"உன்னைய மாதிரி அழகா இருக்குடி..உன்னைய பார்க்க முடியாதப்பலாம் இதை தான் பார்க்கறேன்" என்று யாரும் பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தவன் யாரும் இல்லை என்றதும்
அந்த விரிந்தும் விரியாமலும் இருந்த ரோஜாவில் தன் இதழ் பதித்தான்.

அதில் இருந்த நீர் துளிகள் வேந்தனின் மனதை குளிர்விக்க அருவியின் இதழிலையே இதழ் பதித்தது போல் உணர்வை கொடுத்து உடலை சிலிர்க்க வைத்தது.

அந்த ரோஜாவை கொய்ய மனம் வராமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.

அருவி மனதில் தான் இல்லை என்றதும் விலகிக் கொள்ள தான் நினைக்கிறான்.ஆனால் அவனால் அருவியை விட்டு இம்மி கூட விலக முடியவில்லை. அவள் வார்த்தைகளால் காயப்படுத்தினாலும் மனது திரும்ப திரும்ப அவளிடம் சென்று நிற்பதை அவனாலும் தடுக்க முடியவில்லை.

அந்த ரோஜாவை பார்த்துவிட்டு அங்கிருந்து அறைக்குச் சென்றான்.

இதுநாள் வரையிலும் அருவியும் வேந்தனும் ஒரே வீட்டில் இருந்தாலும் அருவி வேந்தனின் அறைக்குச் சென்றதில்லை.. வேந்தன் கூட அருவியின் அறைக்கு ஓரிரு முறை சென்றிருக்கிறான்.

வேந்தன் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்தவனுக்கு அருவியின் நினைவாகவே இருந்தது.

அருகில் இருக்கும் போது தன்னை விட்டு போக மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தப்போது மிதப்பமாக இருந்த மனது ... இப்போ அருவியின் மனதில் தான் இல்லை என்றதும் எப்போதும் அவளே நினைத்துக் கொண்டிருந்தது..

இப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைத்தவன் குளியலறைக்குச் சென்று சவரின் கீழ் நின்றான்..

வெகுநேரம் கழித்து வெளியே வந்தவன்... உடை மாற்றிக் கொண்டு கீழே செல்ல.. அங்கு அவனைப் பார்க்க வாசுதேவனும் அவரின் தோழன் என்ற முறையில் சுந்தரமும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் வரவேற்றவன்.. அவர்களுக்கு அருகில் அமர்ந்தான்.

"என்ன சாப்பிடறீங்க?"

"வரும் போது தான் சாப்பிட்டு வந்தோம் எதும் வேண்டாம்" என்று மறுத்தார் சுந்தரம்.

"எப்படி எதும் சாப்பிடாம அனுப்ப முடியும்..அம்மா ரெண்டு டம்ளார் மோர் கொண்டு வாங்க" என்று சத்தம் போட..

"மாலதி அப்போ கேட்டுட்டு போச்சி நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்றான் வாசு..

"சொல்லுங்க... என்ன விசயமா வந்துருக்கீங்க.?"

"தம்பி அன்னிக்கே அப்பாகிட்ட இந்த விஷயமா பேசுனேன் அதுக்கு அப்புறம் எனக்கு போர் வண்டியில் கொஞ்சம் பிரச்சனையாகிடுச்சினு வெளிய போய்ட்டேன்..இப்போதான் வர நேரம் கெடச்சிது.."

"பரவலா மாமா ..அப்பா சொன்னாங்க.. நீங்க எங்க குடும்பத்துல பொண் எடுக்கணும்னு நினைச்சா கண்டிப்பா நான் தம்பிகிட்ட பேசறேன், ஆனால் எனக்கு தான் பொண்ணு கொடுக்கணுன்னு நினைச்சா அது முடியாது". என்று வேந்தன் தெளிவாக சொல்ல..

"வேந்தனா சுத்து வட்டாரத்துல நல்ல பேர் இருக்கு, மரியாதை இருக்கு என் பொண்ணுக்கும் உங்களை கல்யாணம் பண்ணிட்டா கவுரவமா இருக்கும்" என்று வாசுதேவன் தயங்க..

"சாரிங்க மாமா என் மனசுல இப்போதைக்கு கல்யாணத்தைப் பத்தின எண்ணம் இல்ல.. என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும்... அதுமில்லாம வெளிய எனக்கு பொண் எடுக்கறதுல விருப்பமில்லை. என் தம்பிங்க ரெண்டு பேரும் எந்த விதத்துலையும் குறைஞ்சவீங்க இல்லை.. நானாவது வேல வெட்டி இல்லாம விவசாயம்னு பார்த்துட்டு சுத்திட்டு இருக்கேன்... வேலை இல்லைனு பஞ்சாயத்துக்கு கூப்பிடறப்ப போறேன் அதனால தெரியுது.. ஆனால் என் தம்பிங்க பொறுப்பா மில்லு வெச்சி பார்த்துக்கிறாங்க நாளைக்கு அவங்களுக்கு தான் அந்த மில்லுலாம்.. எனக்கு அதுல எந்த சம்மந்தமும் இல்லை.." என்று வேந்தன் பேசிக் கொண்டே போக.

"ஐயோ சொத்து பத்துக்கு பார்க்கல..." என்று வாசு வேகமாக மறுத்து சொன்னார்.

"நான் என்னோட விருப்பத்தை தெளிவா சொல்லிட்டேன்.. இனியன் கார்த்திக் கிட்ட பேசி பார்க்கறேன், அவங்க ரெண்டுபேருல உங்க பொண்ணு ஜாதகத்துக்கு யாருக்கு செட் ஆகுதோ

அவங்களுக்கு விருப்பம் இருந்து உங்க பொண்ணுக்கும் விருப்பம் இருந்தா மேற்கொண்டு பேசலாம் ... என்னைய மனசுல வெச்சிட்டு பேசறதா இருந்தா இந்த பேச்சை இத்தோட விட்டுடுங்க.." என்றான்.

சிறிது நேரம் யோசித்தவர் "சரி வேந்தா.. எனக்கு உங்க குடும்பத்துல குடுக்க எந்த ஆட்சபனையும் இல்ல... அவங்க ரெண்டுபேரு ஜாதகத்தையும் குடுங்க.. பார்த்துக்குடுவோம்.." என்றார்.

"சரிங்க மாமா" என்று சொல்லும் போதே மாலதி இரண்டு சொம்பு வழியாக இஞ்சி,கருவேப்பிலை, கொத்தமல்லி, எலுமிச்சை தட்டிப் போட்ட மோரைக் கொண்டு வந்தார்.

அதை குடுத்தவர்களுக்கு தொண்டையில் இதமாக இறங்கியது.

"நான் நைட் இதைப் பத்தி ரெண்டுப் பேருகிட்டையும் பேசிட்டு சொல்றேன்" என்று பேச்சை முடித்துக் கொண்டான் வேந்தன்..

போகும் போது அலைபேசி எண்ணை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

அன்று இரவு அனைவரும் ஒன்றாக சாப்பிட அமரும் போது... இதை பற்றி பேச ஆரம்பித்தான் வேந்தன்.

"வாசு மாமா இனி, கார்த்திக் ரெண்டு பேரோட ஜாதகத்தையும் கேக்கறாங்க.. உங்ககிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன் என்ன பண்ணலாம்?" என்று அனைவரிடமும் கேக்க..

"அண்ணா ரித்துவும் நீங்களும் இருக்கும் போது எங்களுக்கு என்ன அண்ணா அவசரம்?".என்று இடைமறித்து இனியன் சொல்ல..

"ரித்துவோட முடிவையும் இன்னிக்கு கேட்டுடுவோம் இனி.. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்.. எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்து உங்க எதிர்காலத்தை தொலைச்சிக்காதீங்க.."

"அதுக்குன்னு அண்ணா இருக்கும் போது தம்பிக்கு எப்படி கல்யாணம் பண்றது.... எனக்கு இதுல விருப்பமில்ல.?"

"சரி இப்போதைக்கு ஜாதகத்தை கொடுப்போம் யாரு ஜாதகம் ஒத்து வருதுன்னு பார்த்துட்டு கொஞ்ச நாள் வெயிட் பண்ண சொல்லுவோம் அவங்களுக்கு சம்மதம்னா வெயிட் பண்ணட்டும் இல்லனா வேற இடம் பார்த்துகிடட்டும் என்ன உங்களுக்கு எல்லோருக்கு ஓகே வா?" என்று குடும்பத்தினரைப் பார்த்துக் கேக்க..

"ஜாதகம் தானே பார்க்கறேன்னு சொல்றாங்க.. உன்னோட ஜாதகத்தையும் சேர்த்து குடுக்கலாம்ல" என்று மாலதி கேக்க..

"ஜாதகம் ஒத்து போய்டுச்சுன்னா அப்புறம் வேண்டான்னு காரணம் சொல்லிட்டு இருப்பிங்களா.?ஒன்னு புரிஞ்சிக்கோங்க எனக்கு அவ தான் அவளுக்கு நான் தான்.. அவ மனசு மாற வரைக்கும் அவளுக்காக நான் இருப்பேன். வேற யாரோடவும் சேர்த்து வெச்சிடலாம்னு கனவு கண்டுட்டு யாரு மனசுலயும் ஆசைய வளர்த்து வெச்சிடாதீங்க சொல்லிட்டேன். அவ மனசு மாற வரைக்கும் நான் காத்துட்டு இருக்கலாம் நீங்க இருக்கனும் அவசியம் இல்ல.ரித்துக்கு நிரு இருக்கான்.. இந்த திருவிழா முடிஞ்சதும் கல்யாண வேலையை ஆரம்பிங்க" என்று எழுந்தவன்.

"ரித்து உனக்கு ஒரு மாசம் டைம் கொடுத்தேன் அதுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு... மனசுல வெச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

இனியனும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டவர்கள்.

"அப்பா ஜாதகத்தை குடுங்க.. செட் ஆனதுனா பார்த்துக்கலாம்" என்று இனியன் சொல்லிவிட்டு சென்று விட்டான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top