மாயவனின் அணங்கிவள் -27

Advertisement

Priyamehan

Well-Known Member
அருவி அருவியாக தன் கஷ்டங்களை கொட்டி தீர்க்கவும், அவளையேப் பார்த்த உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வேந்தன் சாப்பிட்டாச்சா தட்டிலையே கையை கழுவிவிட்டு மேஜையை இருக் கையாலும் கொட்டி எழுந்தான், அவன் முகத்தில் இருந்து அவன் என்ன நினைக்கிறான் என்று எதையும் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

முகம் பாறைப் போல் இறுகி இருந்ததே தவிர அதில் அருவி பேசியதற்கான வேதனையோ, கோவமோ வருத்தமோ இருந்ததுப் போல் தெரியவில்லை.

'ஒரு நிமிஷம் பேசறதை பேசிட்டியா?" என்று அருவியைப் பார்த்து கேட்டான்.

"ம்ம்"

"நிரு உனக்கு ரித்துவை கல்யாணம் பண்ணிக்கறதுல இதுமாதிரி ஏதாவது வருத்தம் இருந்தா சொல்லிடு," என்று வேந்தன் நிருவைப் பார்த்து கேக்க..

"எனக்கு எதுவும் இல்ல வேந்தா ,நீ உன் தங்கச்சியை தான் கேக்கணும் அவளுக்கு சம்மதம்னா அடுத்த செகண்டே தாலிக் கட்ட நான் ரெடி" என்றான் நிரு...

"ரித்து ..." என்று வேந்தன் ரித்துவைப் பார்க்க

"அண்ணா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாண்ணா ப்ளீஸ்" என்றாள் கெஞ்சளாக

"இப்போ வேண்டாமா? இல்ல நிரு வேண்டாமா?"

"அண்ணா!!!!!"

"நல்லா யோசிச்சி சொல்லு, உனக்கு ஒரு மாசம் டைம் தரேன், நீ சொல்ற முடிவு தான் கடைசி" என்று ரித்துவிடம் சொல்லிவிட்டு, "நிரு உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கறதுன்னா பார்க்கலாம் நோ அப்ஜக்சன், அப்பா வாசுதேவன் குடும்பத்துகிட்ட நான் பேசிக்கரேன்" என்று சொல்லிவிட்டு நிற்காமல் அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

"நீ இப்படி பண்ணுவீன்னு நாங்க எதிர்ப்பார்க்கல அரு.. அண்ணாவைப் பத்தி உனக்கு முழுசா தெரியல உன்னைய நினைச்சதை செய்ய விடலைன்னு மட்டும் குறையா சொல்றியே அதை ஏன் செய்ய விடலன்னு யோசிச்சிருந்தா இந்த அளவுக்கு எல்லோருக்கும் முன்னாடி வெச்சி அவமானப்படுத்திருக்க மாட்ட" என்று இனியன் எழுந்து சென்று விட அங்கிருந்த யாருமே அருவியிடம் பேசவில்லை.

அந்த நொடி கோவத்தில் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் மனதில் தோன்றியதை பேசியவளுக்கு இப்போது வேந்தனின் புறக்கணிப்பும் வீட்டில் உள்ளவர்களின் புறக்கணிப்பும் அருவிக்கு தன் தவறை உணர்த்தியது.

அவளுடைய ஆதங்கமும் மனகுமறல்களும் தப்பில்லை...அதை பேசிய இடமும் வந்து விழுந்த வார்த்தைகளும் தான் தப்பு..

என்னதான் ஒருவர் மீது கோவம் இருந்தாலும் அனைவருக்கும் முன் அவனைப் பார்த்தாலே கம்பளி பூச்சி ஊறுவது போல் இருக்கிறது என்று அதீத வார்த்தைகளை பயப்படுத்தியது தவறு தானே ... அந்த வார்த்தைகள் எதிரில் இருந்தவனை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று உணரவில்லை அருவி...

வந்து விழுந்த வார்த்தைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது வேந்தன் தான்.அதை அருவி உணரும் நேரமும் விரைவில் வரும்...

பத்து நிமிடம் சென்றியிருக்கும் அருவி தான் பேசியது சரியா என்று யோசித்துக் கொண்டிருக்க வேந்தனின் அறையில் இருந்து "ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ" என்று கத்தும் சத்தம் பலமாக கேட்டது..

அந்த சத்தத்தில் வீட்டில் இருந்த அனைவரும் ஓடிவர... கீழே இருந்த அருவிக்கு வேந்தனை நினைத்து பயமாக இருந்தது.மேலே அவனது அறைக்குச் சென்று பார்க்கவும் தயக்கமாகவும் சங்கடமாகவும் இருக்க...
"எதுக்கு இவர் இப்படி கத்துறார்.... ஏதாவது பண்ணிப்பாரோ?" என்று பயம் எழ தவிப்புடன் கையை பிசைந்தவாறு நின்றாள்.

வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வேந்தனின் அறையை நோக்கி ஓடினர்.

"வேந்தா கதவை திற....வேந்தா... அண்ணா அண்ணா..மாமா "என்று ஆளுக்கு ஆள் கதவை தட்ட... பத்து நிமிடம் கழித்து கதவை திறந்தவன் அமைதியின் உருவாக நின்றிருந்தான்.

"வேந்தா என்னாச்சி எதுக்கு அப்படி கத்துன...?"என்று கிருபாகரன் தான் முதலில் ஆரம்பித்தார்.

மாலதிக்கு மகனை கம்பீரமாகவே பார்த்து பழகியவருக்கு இதுபோன்ற வேதனையில் உழன்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கவும் கண்களில் கண்ணீர் வர இதற்கெல்லாம் காரணமான அருவியின் மீது கொலைவெறி உண்டாகியது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வேந்தனிடம் கேட்டனர்.

"ஒன்னுமில்ல, எதுக்கு இப்போ எல்லோரும் இங்க மாநாடு கூட்டிட்டு இருக்கீங்க? நான் என்ன செத்தா போய்ட்டேன், போங்க இங்க இருந்து, எனக்கு தோட்டத்துல இருந்து போன் வந்தது நான் அங்கப் போறேன்" என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கத்தியதற்கும் அவனுக்கும் சம்மந்தமில்ல என்பது போல் அனைவரையும் விலக்கிவிட்டு கிளம்பிவிட்டான்.

போகும் அவனை புரிந்துக் கொள்ள முடியாமல் அனைவரும் நிற்க... கீழே வந்தவன் அங்கு ஒரு ஜீவன் நிற்கிறது என்றுகூட ஏரேடுத்துப் பார்க்காமல் சென்று விட அருவி தான் முதன் முறையாக வேந்தனின் பார்வைக்கு ஏங்கி நின்றாள்.காதலால் அல்ல குற்றவுணர்வால்.

மதியம் வரை வீட்டில் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

மாலதிக்கு வேந்தனை நினைத்து கவலையாக இருக்க அமுதாவிடம் புலம்பிக் கொட்டி விட்டார்.

"அக்கா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காத... வேந்தனும் அருவி மனசு கஷ்டப்படற மாதிரி பல தடவை நடந்துருக்கு.. எப்போமே ரெண்டுப் பேரும் எலியும் பூனையுமா தான் இருந்துருக்காங்க, திடீர்னு வேந்தனுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு சொல்லும் போது நமக்கே ஷாக்கா தான் இருக்கு, அருவியைப் பத்தி சொல்லவே வேண்டாம், இவ்வளவு நாள் வேந்தன் மேல இருக்கற கோவத்தை நேரம் பார்த்து கொட்டி தீர்த்துட்டா ...அவளையும் குறை சொல்ல முடியாது... அவள் மேல இருக்கற ஆசையை வேந்தன் கண்ணாலையாவது காட்டியிருந்தா இந்த அளவுக்கு பிரச்சனை வந்துருக்காது,விடுங்க சின்ன புள்ளைங்க மனசுல எதுவும் வெச்சிக்காதுங்க " என்று அமுதா எடுத்துச் சொல்ல

மாலதிக்கு உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அமுதா சொன்னதற்கு தலை அசைத்தார்.

அருவியிடம் யாரும் பேசாமல் தவிர்ப்பதுப் போல் இருக்கவும் மனம் சோர்ந்து போனது..நிரகாரிப்பு பெற்றவரிடமும் உடன் பிறந்தவனிடமும் இருந்து வருவதும் மேலும் வலியைக் கொடுக்க.. மனதை எதன்மீதாவது திசை திருப்ப வேண்டும் என்று
வீட்டு தோட்டத்தில் உள்ள கல்லின் மீது அமர்ந்து இயற்கையை ரசிக்க முயன்றாள்.

மனம் அதில் செல்லாமல் வேந்தனை பேசிய வார்த்தைகளையிலையே உழன்றுக் கொண்டிருந்தது.

அவள் அருகில் யாரோ அமரும் சத்தம் கேக்கவும் திரும்பி பார்த்த அருவி "தேவா" என்று ஆச்சரியமாக சொல்ல...

அருவியின் வியப்பைக் கண்டு "என்ன அரு நான் வந்துருக்கேன்னு ஷாக்கா இருக்கா?" என்றாள் தேவா...

"அதலாம் இல்ல தேவா சொல்லு..."

"நீ வேந்தன் மாமாவை பேசியது தப்பு தான், ஆனா நான் அதைப் பத்தி பேச வரல... உங்கிட்ட மன்னிப்பு கேக்க தான் வந்தேன் என்னைய மன்னிச்சுடு அரு..." என்றாள் காரணம் எதுவும் சொல்லாமல்.

"நீ என்ன பண்ண...? எதுக்கு மன்னிப்புனு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு இருக்க?"என்று புரியாமல் அருவி கேட்டாள்.

"இரண்டு வருசத்துக்கு முன்னாடி நம்ப மூனுப் பேரும் எவ்வளவு சந்தோசமா ஒன்னா இருந்தோம்... நான் வர தேதியை உன்கிட்டையும், ரித்துக் கிட்டையும் தான் முதல சொல்லுவேன் இப்போ என்கிட்ட நிறைய சேஞ்ஜஸ் இருக்கு ... ஏன் இப்படி மாறுனேன்னு ஒரு நாளாவது நீ யோசிச்சியா?" என்று தேவா அருவியின் முகம் பார்க்க..

"விடு தேவா அதுலாம் முடிஞ்சி போச்சி இப்போ அது எதுக்கு?" என்றவளின் மனமோ 'எனக்கே ஆயிரத்தி எட்டு பிரச்சனை கிடக்கு இதுல நீ ஏன் மாறுனன்னு யோசிக்கற அளவுக்கு எனக்கு எங்க நேரம்' என்று சொல்ல...இன்னொரு மனமோ 'அப்போ யாரைப் பத்தி யோசிச்சிட்டு இருந்த?' என்று கேள்வி எழுப்பியது..மனதை அதட்டி அடக்கி வைத்தாள்.

"இல்ல அரு அது முடிஞ்சிப் போன விசியமில்ல.. இப்போ வரைக்கும் கன்டினுயூ ஆகற விஷயம் தான். நான் ஏன் ரெண்டு வருஷம் இங்க வரலைன்னு உனக்கு தெரியுமா?"

'இவ என்ன கேள்வியா கேட்டு கொல்றா?' என்று உள்ளுக்குள் புலம்பினாலும் வெளியே இல்லை என்று தலையாட்டினாள்.

"இந்த ரெண்டு வருசத்துல அங்க நிறைய விஷயம் நடந்துருச்சி அரு... எங்க அப்பாவோட பிஸ்னஸ்ல பயங்கர லாஸ்...ஷேர்ஸ் எல்லாத்தையும் வித்துக் கூட நிறைய கடன் , அம்மா அதிகமா செலவு பண்ணி பழகுனவீங்க அவங்களால செலவை கண்ட்ரோல் பண்ணவே முடியல. கடனை வாங்கியாவது செலவு பண்ணனும்னு நினைச்சி நிறைய கடன் வாங்கிட்டாங்க, கடன் கொடுத்தவன் சும்மா இருப்பானா? கேக்க ஆரம்பிச்சான் அம்மா அப்பாவால வாங்குன பணத்தை ரிட்டர்ன் பண்ண முடியல .... அதனால கடன் கொடுத்தவன் அம்மா அப்பா மேல கோர்ட்ல கேஸ் போட்டுட்டான்...

இப்போ அவங்க மேல கேஸ் இருக்கறதால தான் இங்க வர முடியல கேஸ் நம்ப பக்கம் தீர்ப்பு ஆகணும்னா ரெண்டு கோடி பணம் கட்டணும்.. அம்மா அங்க இங்க தேடிப் பார்த்துட்டு கடைசியா வந்த இடம் மாமா வீடு.

இந்த ஊர்லையே தாத்தாவுக்கு அப்புறம் அதிக செல்வாக்கோட இருக்கறது வேந்தன் மாமா தான் ...அவரை மருமகனாக்கிக்கிட்டா அத்தைக்கு செய்ய மாட்டேன்னு சொல்லுவாரா அவரு...

வேந்தன் மாமாவுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வெச்சிட்டா எப்படியும் பாதி சொத்து எங்களுக்கு வந்துடும் அதும் இல்லாம அம்மாவோட பங்கும் இங்க இருக்கு...எல்லாத்தையும் சேர்த்தி கடன அடைச்சிட்டு இங்கையே வந்து செட்டில் ஆகிடலாம்னு அம்மா தினம் தினம் சொல்லுவாங்க" என்று நிறுத்த

"ஓ" என்றாள் ஒற்றை எழுத்தில்

"அதுக்கு நான் வேந்தன் மாமாவை லவ் பண்ணனும் இல்லையா அவரை லவ் பண்ண வைக்கணும்...அதுக்காக தான் என்னைய மட்டும் இங்க அனுப்பி வெச்சாங்க...எனக்கும் மாமாவுக்கு இங்க கிடைக்கற மரியாதை மதிப்பெல்லாம் எனக்கும் கிடைக்கனும்னு ஆசைப்பட்டேன் அதுக்காக மாமாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு எண்ணம் இருந்தது..

இங்க வரதுக்கு முன்னாடி உன்னைய அவர்கிட்ட இருந்து தள்ளி நிறுத்த சொல்லி அம்மா சொன்னாங்க, எங்க நீயும் அவரும் லவ் பண்ணிடுவீங்களோன்னு அம்மா ரொம்ப பயப்படறாங்க ...

உனக்கு எதிரா என்னைய திருப்பி விட உன்னைய பத்தி தப்பு தப்பா என்கிட்ட சொன்னாங்க...அம்மா சொன்னதை எடுத்துகிட்டு உன்மேல் வெறுப்பை வளர்த்துகிட்டேன்...
எனக்கு அப்போ எதும் புரியல இன்னிக்கு நீ எல்லோருக்கும் முன்னாடி மாமாவை அப்படி பேசுனதும் தான் உனக்கு அவர் மேல எந்த மாதிரி அபிப்ராயம் இருக்குனு எனக்கு புரிஞ்சிது ...அப்போல இருந்து இப்போ வரைக்கும் உக்கார்ந்து மண்டையை குடைஞ்சி யோசிச்சிப் பார்த்ததும் தான் எல்லாமே எனக்கு புரிய ஆரம்பிச்சது..." என்றவள் சிறிது இடைவெளி விட்டு... " நான் ஒன்னு சொல்லட்டுமா? உனக்கு தான் மாமாவை பிடிக்காது ஆனா மாமாவுக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும் அவருக்கு வெளியே பொண்ணு எடுக்க பிடிக்கலைன்னா அந்த இடத்துல நானும் தானே இருந்தேன் அவருக்கு ஏன் என்னோட பேரை சொல்லனும்னு தோணல..உன்னை மட்டும் எப்படி சொன்னார் நானும் அவருக்கு அத்தை பொண்ணு தானே..." என்று நிறுத்தியவளை வினோதமாக பார்த்தாள் அருவி..

"அவருக்கு என்னைய பிடிக்குமா? காமெடி பண்ணாத நீயாவது உங்க அம்மா சொன்னதுல தான் என்மேல வெறுப்பை வளர்த்துக்கிட்ட, ஆனா அவர் நாங்க இங்க வந்தது பிடிக்காமல் அப்போல இருந்தே என்மேல வெறுப்பை வளர்த்துக்கிட்டார், எப்ப என்னைய பார்த்தாலும் ஏதாவது குறை சொல்லாமா போனதில்ல...இன்னைக்கு என்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது எதனாலைன்னு தெரியுமா? நிரு ரித்துவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்னா அதுக்கு தடையா இருக்கறது நிருவோட தங்கச்சி நான் தான்... என்னைய கல்யாணம் பண்ணிட்டா ரித்துவ நிரு கல்யாணம் பண்ணிப்பான்ல அந்த பிளான்ல தான் இன்னைக்கு அப்படி சொன்னது...என்னைய போய் புடிக்குமா பெருசா சொல்ல வந்துட்டா நீயா ஏதாவது நினைச்சிக்காத"

"இல்ல அரு... நான் உண்மையை தான் சொல்றேன், அவருக்கு உன்னைய தான் பிடிச்சிருக்கு, நீ வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் கூட அவர் என்னைய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லலைல..."

"அப்போதைக்கு என்னைய காயப்படுத்தறதுல குறியா இருந்துருப்பார் அதுல உன்னைய கண்ணுக்கு தெரிஞ்சிருக்காது"

"இல்ல அரு நீ வீம்புக்கு பேசற... கேரளா போனப்பக் கூட உன்னைய அவர் பக்கத்துல வெச்சிக்கனும்னு தான் காரை மாத்த சொன்னார்... உன் கூட தனியா ட்ராவல் பண்ணனும்னு தான் எங்களைய அந்த காருக்கு போக சொன்னார்... ரைடுக்கு போகும் போதுக் கூட அவர் எங்கக் கூட இருந்தாலும் பார்வை உன்னைய சுத்தி தான் இருந்தது.. நான் இங்க வந்து ரெண்டு மாசம் ஆகப்போகுது... இப்போ வரைக்கும் வந்தா சாப்பிட்டியா தேவா? அம்மாகிட்ட பேசுனியா? உனக்கு இங்க ஒன்னும் குறை யில்லையே? இந்த வார்த்தையை தவிர வேற எதுவும் அவர்கிட்ட இருந்து வந்ததில்ல... இங்க வந்ததுல இருந்து நான் எத்தனை பிரச்சனையை கூட்டிருப்பேன் எப்டிலாம் எடுத்து எறிஞ்சி பேசிருப்பேன் என்னைய திட்டி பார்த்துருக்கியா...?"

"இல்ல" என்று அருவியின் தலை வேகமாக ஆட...அவள் மனமோ 'அதுதானே என்னோட ஆதங்கமே' என்று சொன்னது.

"உன்னைய மட்டும் திட்டுறாரு, உன்கிட்ட மட்டும் தான் கோவத்தைக் காட்டுறார்னா அவருக்கு நீ ஸ்பெஷல் தானே... உரிமை இருக்கற இடத்துல தான் கோவத்தையும் பாசத்தையும் காட்ட முடியும்..அதைதான் அவர் உங்கிட்ட காட்டுறார்" என்று தேவா அருவின் மனதில் குழப்பத்தை உருவாக்க...அருவி தேவா சொன்னது போல் இருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

இருவரும் அமர்ந்திருப்பதைப் பார்த்து கார்த்திக் அவர்களிடம் வந்தவன் "தேவாவிடம் சாப்பிட்டியா?" என்றான் தேவாவிடம் மட்டும்

"இன்னும் இல்லை மாமா இனிதான் சாப்பிடணும்..."

"சரி நீ போய் சாப்பிடு நான் மில்லு வரைக்கும் போய்ட்டு வரேன்" என்று அங்கிருந்து நகர போனவனை... "கார்த்திக்" என்று அருவியின் அழைப்பு நிறுத்தியது

"ம்ம்.."

"என்மேல கோவமா?"

"உன்மேல கோவப்பட நாங்க யாரு...? உன்னைய தான் நாங்க எல்லோரும் கொடுமை படுத்திருக்கோம்ல...அப்பா இல்லாத பொண்ணுன்னு ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டோம்...எங்க அப்பா ரெண்டு பேரும் எங்களை பார்த்ததைவிட... உன்னைய பார்த்தது தான் அதிகம் எப்படி இப்படி எதையும் யோசிக்காம பேசுவ... உன் மனசுல எங்க மேல இந்த அளவுக்கு வன்மம் இருக்கணும்னு நினைச்சிக் கூடப் பார்க்கல.." என்றவனை

கலங்கிய கண்களுடன் "இல்ல கார்த்திக் நான் உங்களை யாரையும் சொல்லல வேந்தனை தான் சொன்னேன் அவர் என்கிட்ட அப்படி தானே நடந்துகிட்டார்..."என்று தன் பக்கம் நியாயத்தை புரியவைக்க அருவி பாடுபட

"என்ன நடந்துகிட்டார்..? அன்னிக்கு நீ கார்ல வெச்சி சொல்லும் போதே நான் புரிஞ்சிக்கிட்டேன் அண்ணா உன்னைய எந்த அளவுக்கு லவ் பண்றார்னு, உன்னால ஏன் புரிஞ்சிக்க முடியல...?அவர் உன்னோட ஒவ்வொரு விசியத்திலும் உரிமை எடுத்து முன்ன நின்னு எல்லாத்தையும் செஞ்சி குடுத்துருக்கார்..

வேற படிப்பு படின்னு சொன்னாரே தவிர உன்னைய இந்த படிப்புக்கு சேர்த்து விட்டது நிரு தானே... சிவில் படிக்கிறேன்னு சொன்ன அதில எவ்வளவு பிரச்சனை வரும்னு உனக்கு தெரியுமா? நாளைக்கு ஒரு கன்ஸ்டரக்சன் கம்பெனி நடத்தனும்னா சும்மா பண்ணிட முடியாது எல்லாப் பக்கம் இருந்து பிரஷர் குடுப்பாங்க அதை எல்லாத்தையும் தாண்டி வந்து தான் நீ தொழில் பண்ணனும்... அவ்வளவு எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்னு தான் வேற படிக்க சொல்லிருப்பார் அண்ணா மனசு எனக்கு புரியுது உனக்கு ஏன் புரியல...?ஏன் புரியலைன்னு சொல்லவா... அண்ணா என்ன செஞ்சாலும் அது உனக்கு எதிரா தான் செய்யறார்ன்னு நீயே ஒன்னை நினைச்சிட்டு உன்னைய சுத்தி மாயவலையை பின்னி வெச்சிருக்க அதை விட்டு எப்போ வெளிய வரியோ அப்போதான் அண்ணாவோட காதலும் புரியும் இப்போ அண்ணா படற வலியும் புரியும், அவருக்கு என்ன தேவைன்னு யார்கிட்டயும் சொன்னதில்ல, முதல் தடவையா எல்லோருக்கும் முன்னாடி நான் இவளை கட்டிக்கறேன்னு சொல்லும் போதே தெரிய வேண்டாம் அவருக்கு நீ எந்த அளவுக்கு முக்கியம்ன்னு... இதையெல்லாம் தாண்டி அவரைப் பார்த்தாலே உடம்புல கம்பளி புழு ஊறுதா...இந்த வார்த்தை அவரை எந்த அளவுக்கு காயப்படுத்திருக்கும்னு யோசிச்சியா...?நீ எங்க அவரைப் பத்தியோ எங்களை பத்தியோ யோசிக்கப் போற...? உனக்கு உன்னைய பத்தி மட்டும் தான் யோசிக்க நேரமிருக்கும் அந்த அளவுக்கு சுயநலவாதி தானே நீ... இந்த லீவுக்கு நீ வரும் போது நானே அண்ணாவை பத்தி யோசிச்சி வெச்சதை உங்கிட்ட சொல்லணும்னு இருந்தேன் அதுக்குள்ள எல்லாமே முடிஞ்சிப் போச்சு... போ என்கூட பேசாத" என்று அங்கிருந்து நகர்ந்தவனின் கையைப் பிடித்த அருவி..

"சாரிடா நான் இதை யெல்லாம் யோசிச்சு பேசல... அப்போதைக்கு மனசுல இருந்த ஆதங்கத்தை கொட்டிட்டேன்" என்று கண் கலங்க சொன்னாள்.

"என்கிட்ட சாரிக் கேட்டு என்ன பண்ணப் போற...? என்னயாவா பேசுன...? அண்ணாகிட்ட போய் பேசு... அவர் உன்னைய மன்னிச்சிட்டா நாங்களும் உன்னைய மன்னிக்கறோம்" என்றவன் "ஏய் தேவா... இவகிட்ட என்ன பேச்சி ஒழுங்கா போய் சாப்பிடு" என்று அவளை மிரட்டிவிட்டு சென்று விட்டான்.

"அவன் கிடக்கறான் விடு அரு..." என்று அருவியை சமாதானம் செய்தவள் "ஆனால் அவன் பேசியதுல தப்பில்லன்னு தான் நினைக்கரேன் நீ வேந்தன் மாமாகிட்ட பேசிப் பாரு" என்று சென்று உள்ளே சென்று விட்டாள்.

தேவா போனதும் அருவி அங்கையே அமர்ந்து விட்டாள்.

காலையில் வேந்தன் நிருவை கல்யாணம் செய்துக் கொள்ள சொன்னதும் ரித்துவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது... சரவணனை காதலிக்கிறேன் என்று அனைவருக்கும் முன் சொல்ல முடியவில்லையே என்று வேதனையில் ரித்து அவளது அறையைவிட்டு வெளிவரவே இல்லை.

சரவணனுக்கும் இதுவரை இருபது முறை அழைத்துப் பார்த்துவிட்டாள். ஒரு அழைப்புக் கூட ஏற்கப் படவில்லை என்ன செய்வது என்று புரியாமல் அறையில் இருந்த பொருட்களை உடைத்து நொறுக்கினாள்.

இரவு வேந்தன் வீட்டிற்கு வந்ததும் அவனிடம் பேசியதற்கு மன்னிப்பு கேக்க வேண்டும் என்று அருவி வேந்தனுக்காக வீட்டின் வெளியேவே காத்திருக்க...

நிர்மலா இருமுறை வந்து அவளைப் பார்த்துவிட்டு சென்றார்.. ஆனால் உள்ளே வருமாறு அழைக்கவில்லை..

மகள் பேசிய வார்த்தைகளால் அண்ணன் அண்ணிகளின் முகத்தில் முழிக்கவே தர்மசங்கடமா இருந்தது.இதில் மகளை போய் சமாதானம் செய்யும் அளவிற்கு அவருக்கு மனம் வரவில்லை..

அன்று இரவு ஒன்பது மணியாகியும் வேந்தன் வீட்டிற்கு வராததால் எழுந்து மெதுவாக தோட்டத்தைப் பார்த்து நடக்க ஆரம்பித்தாள்.

வேந்தன் எண்ணிற்கு அழைத்திருக்கலாம் ஆனால் அவன் எடுப்பானா என்ற சந்தேகம் இருந்ததால் அருவி அவனுக்கு அழைக்கவில்லை.

பலவற்றையும் நினைத்தவாரு தோட்டத்திற்கு வந்தவளை மாறன் அவனது தோட்டவீட்டில் இருந்து பார்த்துவிட..வேகமாக அருவியின் அருகில் வந்தவன்

"அம்மிணி இங்க இந்த நேரத்துல என்ன பண்றீங்க...? ஐயாவுக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாக தயவு செஞ்சி வூட்டுக்கு போங்க..."

"வேந்தன் மாமா இங்கையா இருக்கார் நான் அவரைப் பார்க்க தான் வந்தேன்"

"ஆமா ஐயா குச்சி காட்டுக்கு தண்ணி பாயுதுனு கிணத்து மேட்டுல இருக்காங்க... அங்கலாம் போக வேண்டாம் அம்மிணி இருட்டுன நேரத்துல ஏதாவது பூச்சி புழு இருக்கும்" என்று அருவியை செல்லவிடாமல் தடுக்க..

"நான் ஒன்னும் பட்டணத்துல பொறந்து வளரல மாறாண்ணா... இந்த இருட்டு என்னைய ஒன்னும் பண்ணாது... பயப்படாம இருங்க இல்லையா எனக்கு தொணையா கிணத்து மேடு வரைக்கும் வாங்க" என்று அவனை தாண்டி நடக்க

மாறன் அவளின் முன்னாள் ஓடி வந்து நடக்க ஆரம்பித்தான்

"சொன்னா கேக்க மாட்டிக்கிறீங்க வேந்தன் ஐயா என்ன தான் பேசுவாரு .."

"பேசுனா மொத்தமும் நீங்களே வெச்சிக்காம எனக்கு கொஞ்சம் குடுத்து விடுங்க அண்ணா" என்று கிண்டல் செய்ய..

"இன்னைக்கு என்னனு தெரியலம்மா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஐயா முகம் ரொம்ப சோர்ந்து போயிருந்தது... வீட்டுக்கு கூட நேரம் காலமா போறவரு இன்னைக்கு இவ்வளவு நேரமாகியும் தண்ணியை நான் கட்டறேன் நீ போன்னு சொல்லிட்டாரு... "என்று பேசிக் கொண்டே வர தூரத்தில் வேந்தன் ஒரு கயிற்று கட்டிலில் படுத்து பாட்டுக் கேக்கும் சத்தம் கேக்கவும்,

"இதுக்கு மேல நானே போயிக்குவேன் அண்ணா நீங்க போங்க..."என்றாள் மாறனிடம்.

"இல்ல அம்மிணி ஐயா" என்று இழுக்க

"உங்க ஐயா எதுவும் சொல்ல மாட்டாரு நான் பார்த்துக்கறேன் நீங்க போங்க... இல்லனா இங்கையே நில்லுங்க நான் பேசிட்டு வந்தரேன்" என்றாள்

அவன் வருவதை விரும்பவில்லை என்பதை புரிந்துக் கொண்டவன் "சரியம்மணி நீங்க போங்க நான் இப்பிடியே கல்லு மேல உக்கார்ந்துருக்கேன்" என்று சொல்லவும் அருவி வேந்தனை நோக்கிச் சென்றாள்.

அருகே செல்ல செல்ல பாட்டு சத்தம் வேகமாக கேக்க..பாடலை கேட்டு அருவி அப்படியே நின்றுவிட்டாள்.

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி

என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாழாதே
உன்ன அணைச்சாலும் நினைச்சாலும்
சுகதானம்மா

பாடல் வரிகளை கேட்டதும் வேந்தனின் மனம் அப்படியே உரைப்பதுப் போல் இருந்தது.

அங்கே ஒடி வரும் என் குரலே
நெஞ்சே கூறி விடும் உன்னிடமே
என் கையே என் உடம்பை காயம் செய்தாய்
எங்கே கூறிடுவேன் என் உயிரே

நீ எந்தன் பாதி இது தானே மீ
நீதி
உனை விட்டு போக முடியாதம்மா
மறைந்தாலும் நான் மறு ஜென்மமே
என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மனி
அதை தள்ளி விட நியாயம் என்ன கண்மனி

இந்த வரிகள் மட்டும் திரும்ப திரும்ப ஒலிக்க...அருவியின் மனதில் பாரம் ஏறியது..

வேந்தன் அருகில் சென்றவள்... "மாமா" என்று அழைக்க

சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் பாட்டை நிறுத்திவிட்டு எழுந்து அமர்ந்தான்.. அவன் பார்வை நிலத்தை நோக்கி இருக்க "சொல்லுங்க இந்த நேரத்துல இங்க எதுக்கு வந்தீங்க?" என்றான்.

வேந்தன் மரியாதையாக அழைப்பதைக் கேட்டதும் அருவிக்கு எதுவோ போல் ஆகிவிட்டது ..

"நான் பேசுனது தப்பு தான் அதுக்காக எதுக்கு இப்படி வாங்க போங்கன்னு மரியாதையா கூப்பிடறீங்க..?" .என்று ஆதங்கமாக கேட்டாள்.

அவளை பார்க்காமலே..."இன்னொருத்தருக்கு மனைவி ஆக போறவீங்கள மரியாதை இல்லாமல் கூப்பிடறது என்னோட பழக்கமில்ல..." என்று பட்டென்று சொல்லிவிட்டான்.

இதற்கு என்ன சொல்வது என்று அருவிக்கு தெரியவில்லை. ஆனால் அவள் மனம் வேந்தனின் வாடி போடி என்ற உரிமையான அழைப்பிற்கு ஏங்கியது.
 
Chithra K

Active Member
வேந்தனுக்கு கோபப்பட என்ன இருக்கு.....எப்பவும் அருவி திட்டிக்கொண்டு தானே இருந்தான்...
உரிமை உள்ள இடத்தில் தான் கோபப்பட முடியும் என்று சொன்னால்..... அவன் எப்பொழுது உரிமையை காட்டினான்.....
அடப்போங்கப்பா... உங்க அன்பு.... காதல்... உரிமை.. கோவம்..... எங்களுக்குதான் பைத்தியம் பிடிக்குது
 
Akila

Hi
Nice update.
Showing the extreme situation at both sides.
Waiting for further interesting update
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top