மாயவனின் அணங்கிவள்-18

Advertisement

Priyamehan

Well-Known Member
ரித்துவும் கல்லூரிக்கு செல்ல வேண்டும், ஆனால் அருவியுடன் செல்ல அருவி அனுமதிக்க மாட்டாள். மற்ற அனைவரும் அவள் காதலிப்பதாக மட்டும் தான் பேசினார்கள்.. ஆனால் ரித்துவோ ஒருப்படி மேலே சென்று அருவி அவளுக்கு துரோகம் செய்ததாக அல்லவா பேசிவிட்டாள், ரித்து பேசிய வார்த்தைகளை ஒரு நாளும் அருவி மன்னிக்க போவதில்லை ... என்று புரிய ரித்துவிற்கு அழுகையாக வந்தது..

எல்லோரும் முன் அழக் கூடாது என்று அறைக்கு ஓடிவிட்டாள் ரித்து...

காரில் ஏறி கார்த்தியின் அருகில் அமர்ந்த அருவி.. "எவ்வளவு பிரச்சனை போய்ட்டு இருந்தது உங்க நொண்ண ஒன்னும் தெரியாத மாதிரியே உக்காந்துருந்தான் பார்த்தியா? சரியான அழுத்தக்காரன் ஒரு வார்த்தை பேசுனானா பாரு கடைசியா வந்து மாப்பிள்ளை போட்டோவை வேண்டாம்னு கிழிச்சிப் போடறான் நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு கூட இவன் தான் முடிவு பண்ணனுமா?இவன் முடிவு பண்ற மாப்பிள்ளைக்கு மட்டும் என்னோட கல்யாணம் நடந்தா கண்டிப்பா தலையில அம்மிக்கல்லை தூக்கிப் போட்டு கொன்னுடுவேன், அவ்வளவு வெறியாகுது" என்று கார்த்திக்கிடம் புலம்ப..

"அரு நீ அம்மிக்கல்லைப் பார்த்துருக்கியா?" என்று கிண்டல் செய்தான் கார்த்திக்.

"என்ன இருந்தாலும் அவன் உனக்கு நொண்ணன்ல அவனுக்கு சப்போர்ட்டா தான் பேசுவ... அவனும் ஆளும் எப்போ பாரு என்கிட்ட மட்டும் உறுன்னு கோட்டான் மாதிரி இருக்கானே அந்த தேவா மாமா மாமான்னு கொஞ்சும் போது பாரு முப்பத்துரண்டு பல்லையும் ஈஈஈஈ .... னு காட்டுவான் திமிறு புடிச்சவன்"என்று கத்த...

கார்த்திக் சத்தமாக சிரித்தவன் "இந்தா தண்ணிக் குடி பாவம் மூச்சு வாங்கி செத்துடப் போற" என்று சிரித்துக்கொண்டே தண்ணீர் பாட்டிலை நீட்ட. அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தவளிடம்

"எனக்கு என்னமோ நீயும் அண்ணாவும் சரியான ஜோடின்னு நினைக்கறேன்.. உனக்கு அண்ணாவும், அண்ணாவுக்கு நீயும் தான் நல்லா செட்டாவீங்க... அண்ணா உன்னைய கல்யாணம் பண்ணிட்டா போதும் வீடே எப்போ பாரு சந்தக்கடை மாதிரி ஒரே சத்தமா இருக்கும்" என்றதும்..

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த அருவிக்கு பொறை ஏறிவிட்டது...

"ஏய் பார்த்து குடி"

"என்னடா சொன்ன நான் அவனை கல்யாணம் பண்ணிக்கணுமா? என்னோட வாழ்க்கை அவன்கிட்ட அடமானம் வெச்சிட்டு எப்போவும் அவனுக்கு அடிமையா இருக்க சொல்றியா? ஒரு பிச்சைக்காரனுக்கு கழுத்தை நீட்டி சிக்கன்ல அவனோட சேர்ந்து பிச்சை எடுத்தாலும் எடுப்பனே தவிர உன் நொண்ணணை மட்டும் கட்டிக்க மாட்டேன்... முதல்ல பெனாயில்ல போட்டு வாயை கழுவு... இதுமாதிரி வீட்டுல ஏதாவது பேச்சு வார்த்தை நடந்த மாதிரி என் காதுக்கு வந்துது நீ என் கையாலையே செத்த மவனே நியாபகம் வெச்சிக்கோ" என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.

"அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன் விட்டுட்டு... வேனும்னா உனக்கு இனியன் ஓகே வானு பார்த்து சொல்லு அவனைப் பேசி முடிச்சிடுவோம்.." என்று தீவிரமாக கார்த்திக் கேக்க

அவனை திரும்பிப் பார்த்தவள் "எவனும் வேண்டாம்... எனக்கு இந்த வீடே வேண்டாம் வெளிய மாப்பிள்ளை பார்க்க சொல்லனும் அதும் ரொம்ப தூரமா பார்க்க சொல்லனும், வெளிநாடா இருந்தாக் கூடப் போதும் கோடிக் கும்புடு போட்டுட்டு கிளம்பிட்டே இருப்பேன்..." என்றாள் அழுத்தம் திருத்தமாக.

அவளைப் போலவே அழுத்தமாக பார்த்தப்படியே காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து திரும்பி அமர்ந்தான்.

"எதுக்குடா இப்போ காரை நிறுத்துன?"

"அந்த அளவுக்கு இந்த வீட்டையும் எங்களையும் வெறுக்கறியா அரு...?நீ இந்த மூனு நாள் பேசாம இருந்தப்பவே எங்களுக்கு வீடு வீடு மாதிரி இருக்கல, யாராவது ஒருத்தர் உன் ரூமை பார்த்துட்டே இருப்போம், எப்போவாது கதவு திறந்து நீ வந்து பேசிட மாட்டியானு...அந்த அளவுக்கு நாங்க எல்லாம் உன்மேல பாசம் வெச்சிருக்கோம் ஆனா நீ எங்களை இந்த அளவுக்கு வெறுக்கறன்னு இப்போதான் புரியுது.."என்றான் ஆதங்கமாக ...

கார்த்திக்கின் குரலில் இருந்த வலியை உணர்ந்தவள்... "இல்ல கார்த்திக் எனக்கு உங்க யார் மேலையும் கோவம் இல்ல.. உங்க அண்ணா வேந்தனை தான் எனக்கு சுத்தமா பிடிக்க மாட்டிங்குது.. அவன் என்கிட்ட மட்டும் தான் ஒரு மாதிரி ரூடா சர்வாதிகாரி மாதிரி நடந்துக்கறான்...நான் ஒன்னு கேக்கறேன் நீ யோசிச்சி பதில் சொல்லு, அவன் சொன்னதையா நீ படிச்ச?"

"இல்லை" என்று கார்த்திக் தலையை ஆட்டவும்

"உனக்கு புடிச்சதை படிச்ச சரியா?, அவன் சொன்ன வேலையையா பார்க்கற?

மீண்டும் "இல்லை" என்று தலையசைத்தான்.

"புடிச்ச வேலையை செய்யற யாரும் உன்னைய கம்பெல் பண்ணல, உன்னைய மட்டும் இல்லை இனியன்,ரித்துனு எல்லோருமே அவங்க அவங்க இஷ்டப்பட்டதை தான் படிச்சீங்க இஷ்டப்பட்டப்படி தான் இருக்கீங்க ஆனா நான் அப்டியா?" என்று கேள்வி அருவி எழுப்ப

அருவியின் கேள்விக் கேட்டப் பிறகு தான் கார்த்திக்கே யோசிக்க ஆரம்பித்தான்.

"எனக்கும் நிருக்கும் அப்படியில்ல எங்களோட ஒவ்வொரு விசயமும் வேந்தன் ஆசைப்படர மாதிரி தான் நடக்குது, அப்படிக் கூட சொல்ல முடியாது அவன் நடத்திக்கிறான்னு தான் சொல்லனும்.எங்ககிட்ட மட்டும் ஏன் இப்படி நடக்கணும்?

அப்போ எங்களோட ஆசையை நாங்க யார் மூலமா நிறைவேத்திக்க முடியும் சொல்லு..? இப்போக் கூட நான் ஒரு மாப்பிள்ளை போட்டோவை எடுத்துக் குடுத்தா அதை வேண்டாம்னு கிழிச்சிப் போடறான் அந்த அளவுக்கு அவனுக்கு உரிமை இருக்கு, அதே அவனுக்கு பார்த்த பொண்ணை நான் வேண்டாம்னு சொல்ல முடியுமா?...என்னைய விடு நிரு நினைக்கற ஒன்னுக் கூட செய்ய முடிஞ்சதில்ல ... அவன் வேந்தன் பின்னால சுத்தறதால நிரு இழந்தது என்னனு அவனுக்கு தெரியல...

ஆசையா ஒரு வீடு கட்டணும்னு நினைச்சாக் கூட அதுக்கு இந்த வேந்தன் சரின்னு சொல்லணும் அப்போதான் நிரு செய்வான் அந்த அளவுக்கு அவனை பப்பட்டா மாத்தி வெச்சிருக்கான், எப்போ வேந்தன்கிட்ட இருந்து பிரிஞ்சி தனியா வரானோ அப்போதான் நிரு இழந்தது எவ்வளவுனு அவனுக்கே புரியும்,

இதுக்கு எல்லாம் காரணம் எங்களுக்கு அப்பா இல்லாதது தான் ... கேள்வி கேக்க வேண்டிய அம்மாவும் பாசப் பயிறு வாடிடும்னு பயந்துட்டு கேக்கறதில்ல, நிருவைப் பத்தி சொல்லவே வேண்டாம் அவனுக்கு வேந்தன் சொல்றது தான் வேதவாக்கு.... எனக்கு யார் தான் கேப்பா? எங்க அப்பா இருந்திருந்தா என்னைய இப்படி விட்டுருக்க மாட்டார்ல சாப்பாட்டுக்கு வழி இருக்கோ இல்லையோ அவரோட இளவரசியா நாங்க எங்க வீட்டுலயே இருந்துருப்போம்ல,எல்லோரும் எங்களை மதித்திருப்பாங்க

அப்பா இருந்த வரைக்கும் என்னைய அப்படி பார்த்துப்பார்,

நடந்தா கால் வலிக்கும்னு தலைமேல தூக்கி வெச்சிட்டு போவாங்க, அப்படிலாம் வாழ்ந்ததுக்கு தான் இப்போ இப்படிலாம் அனுபவிக்கறோனோ என்னவோ....எனக்கு வாய்க்கரவனும் வேந்தன் மாதிரியே இருந்துட்டா சன்னியாசம் வாங்கிட்டு கைலாயா போய்டுவேன்" என்று மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டாள்... கண்ணீர் கன்னம் தொட்டு அருவியின் வேதனை கார்த்திக்கிற்கு உணர்த்தியது.

தானும் சிரித்து பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவளின் மனதில் இவ்வளவு வேதனைகளையும் காயங்களும் இருக்கும் என்று நினைக்கவில்லை கார்த்திக்

"அழாத அரு...ப்ளீஸ்" என்று அவளின் தோளை ஆறுதலாக தட்டிக் குடுக்க...

தன்னுடைய மாதவிலக்கு நாளைக்கூட தெரிந்து வைத்திருக்கிறான் என்பது தான் அருவியை அதிகம் வேதனையடைய செய்த ஒன்று. இதை எப்படி கார்த்திக்கிடம் சொல்வது என்று தான் அதை மறைத்திருந்தாள்...அந்த வீட்டில் தன்னுடைய ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது என்றால் 'அந்தளவிற்கு சுதந்திரமில்லாமல் நடமாடிக் கொண்டியிருக்கிறானா..' என்ற கேள்வி தான் அருவியின் முன் பூதாகரமாக எழுந்து நின்றது... மூச்சு முட்டும் இந்த சூழ்நிலையில் இருந்து எங்காவது ஓடிவிட வேண்டும் போல் இருக்க கண்ணீர் வடித்து வேதனையை தீர்த்துக் கொள்வது தவிர வேறு வழித் தெரியவில்லை.

அருவியை கல்லூரியில் விட்டுவிட்டு கார்த்திக் கிளம்பிவிட வரும் வழியெங்கும் அருவி சொன்னதை தான் நினைத்துக் கொண்டு வந்தான் .

"எப்படி இவ்வளவு நாள் கவனிக்காம விட்டேன்.. அரு சொல்ற மாதிரி அப்பா இல்லாததுலாம் ஒருக் காரணம் இல்லை.அண்ணா மனசுல வேற ஏதோ இருக்கு அது என்னவா இருக்கும்...?தம்பி தங்கச்சிங்க மேலக் கூட இந்த அளவுக்கு உரிமை எடுத்து அண்ணா எதுமே பண்ணதில்லை, நாங்களே வழியேப் போய் தான் எதுனாலும் கேப்போம்,அப்படி இருக்கும் போது அரு மேல மட்டும் இவ்வளவு உரிமை எடுத்துக்கிறார்.கண்டிப்பா இதுல ஏதோ இருக்கு" என்று புலம்பியேப் படியே வீடு வந்து சேர்ந்தான்.

அருவி வந்த பின்னால் ரித்து சேர்ந்தாள் ...

இருவரும் ஒரேக் கல்லூரியில் படித்தாலும் ஒரே விடுதியில் தங்கியிருந்தாலும் பேசிக் கொள்ளவேயில்லை.

ரித்து அருவியிடம் மன்னிப்பு கேக்க வேண்டும் என அருவியின் முன் சென்று நிற்க ரித்துவைக் கண்டுக் கொள்ளாமல் சென்று விடுவாள் அருவி.

இவர்கள் இருவரும் விடுதி வந்து இரண்டு நாட்களுக்கு பின் கல்லூரி வந்து சேர்ந்தான் சரவணன்.... அருவியும் ரித்துவும் படிக்கும் கல்லூரியில் முதுகலை அறிவியல் முடித்து விட்டு மேல் படிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறான்.

கல்லூரி வந்ததும் முதல் வேலையாக அருவியைப் பார்க்க தான் வந்தான், அவன் முகம் வாடி சோர்ந்திருக்கவும்

"என்னடாச்சி ஏன் ஒருமாதிரி இருக்க...?"

"எங்கப்பன்கிட்ட சொல்லிட்டேன் அரு..."

"என்ன சம்மதிக்க மாட்டேன்னு அந்தக் கால வில்லனை மாதிரி கத்துனாரா..?"

"ம்ம்"

"இது ஏற்கனவே தெரிஞ்சது தானேடா அதுக்கு எதுக்கு பீல் பண்ற...?"

"என்னால அவ இல்லாம இருக்க முடியாது அரு"

"அது தான் எனக்கு தெரியுமே... ஒன்னுப் பண்ணு.".

"என்ன?"

"முதல உன்னோட லவ்வை அவகிட்ட சொல்லு... அவளை விட்டு வீட்டுல பேச சொல்லு... வீட்டுல இருக்கவிங்க போய் பேசுனா உங்கப்பா சம்மதிப்பார் தானே..."

"அப்பவும் சம்மதிக்க மாட்டார் அரு.."

"ஏன்?"

"அவர் வேந்தன் மேல கொலை வெறியில இருக்கார், வேந்தன் பஞ்சாயத்துல எல்லோரோடவும் சேர்ந்து மடையை மொத்தமா யூஸ் பண்ணக் கூடாதுனு சொன்னதுல இந்த வருஷம் நெல்லுக்கு மட்டும் 10 லட்சம் நஷ்டம்... அந்த கோவத்துல இருக்கார்,வேந்தனை ஏதாவது செய்யணும்னு வெறியோட இருக்கார்.." என்று இழுக்க..

"வேந்தன் மாமா எப்போமே தப்பான தீர்ப்பு சொல்ல மாட்டார் சரவணனா.. அவர் மேல எனக்கு எவ்வளவு கோவம் வேணாலும் இருக்கலாம் என் விசயத்துல தான் அவர் அப்படி இருப்பாரே தவிர ஊர் விசியத்துலைலாம் சரியா இருப்பார்.மொத்த மடைத் தண்ணியும் நீங்க மட்டுமே யூஸ் பண்ணனும்னா எப்படி முடியும்?.ஊருக்குள்ள மத்த யாரும் விவசாயம் பார்க்கலையா?அவங்கெல்லாம் என்ன பண்ணுவாங்க" என்றாள்

"எனக்கு புரியுது அரு எங்க அப்பாவுக்கு புரியலையே...அவர்கிட்ட யார் சொல்லிப் புரிய வைக்கறது 10 வருசமா மடத்தண்ணி முழுக்க எங்க காட்டுக்கு தான் பாஞ்சிட்டு இருந்தது.. திடீர்னு அதை வேந்தன் தடுத்து நிறுத்தவும் அப்பாவுக்கு வேந்தனை எப்படியாவது வேந்தனை பழிவாங்கிடனும்னு நினைக்கிறார்... நீதான் இதுக்கு ஏதாவது ஐடியா குடுக்கணும் ப்ளீஸ்...எங்கப்பா மனசு மாறி இந்த கல்யாணத்துக்கு சமந்தம் சொன்னா போதும்..." என்றான்.

"சாரி சரவணா..நீ இந்தளவுக்கு சுயநலமா யோசிப்பன்னு நினைக்கல, ஒரு பிரண்ட்டா உனக்கு பண்ண வேண்டிய ஹெல்ப்பை நான் பண்ணிட்டேன்... உங்கப்பா எங்க குடும்பத்தை அவமானப்படுத்த நினைப்பாரு... அதை தடுக்க என்கிட்டையே ஐடியா கேப்பியா...வேந்தன் மாமா எப்போமே தப்பு பண்ண மாட்டார் உங்கப்பாவுக்கு தான் பேராசை எல்லாமே எனக்கு தான் வேணும்னு... முதல இதுலாம் தப்புன்னு சொல்லி புரிய வைக்கப்பாரு அதை விட்டு இங்க வந்து ஐடியா கேக்காத. உங்கப்பாவால வேந்தன் மாமாவுக்கு ஏதாவது ஆச்சு அப்புறம் என்னைய மனுஷியாவே பார்க்க மாட்ட..." என்று ஆங்காரமாக கத்திவிட்டு எழுந்துச் சென்று விட்டாள்.
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா ரெண்டு பேரும்
ஒருத்தர் மேல ஒருத்தர்
அன்பு இருக்கு

ஆனா அது புரியலயா இல்லை
புரியாத மாதிரி இருக்காங்களா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top