மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 5

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
அபிநந்தனின் பிடியில் இருந்து வெளிவந்தவள் தன்னை மறந்தே அங்கு நீண்ட நேரம்‌ நின்று கொண்டு இருந்தாள். ஸ்ரீநிதா உள்ளே வந்து அவளை பிடித்து உலுக்கும் வரை அவளுக்கு நிலை திரும்பவில்லை. நித்தியின் பேச்சில் நினைவிற்கு வந்தவள்., 'என்ன ஸ்ரீ...' என்றாள்.

'மது... நீங்க இன்னும் குளிக்கலைல..
உங்க ட்ர்ஸ எடுத்துட்டு இந்த ரூம்ல குளிச்சுக்கங்க... அப்புறம் சாப்பிட வருவீங்களாம்... அம்மா கூப்பிட்டாங்க...' என்று சிரித்துவிட்டு நகரத்தொடங்கினாள்.

'ஸ்ரீ ஒரு நிமிஷம்...' என அவளை நிறுத்தினாள் மதுமித்ரா..

'உனக்கு அண்ணா உண்டா...'

'ஆமா... சாப்பிடும் போது இன்ட்ரட்யூஸ் பண்ணுறேன்.. சப்பாத்தி பிடிக்குமா...' என்றாள் வினாவோடு..

'இல்ல... நான் எங்க வீட்டுக்கு கிளம்பவா... ப்ளீஸ்... ' என கண்களில் கெஞ்சலோடு கேட்டாள் மதுமித்ரா...

'என்ன மது நீங்க... எதனால உங்கள இங்க கூட்டிட்டு வந்தேன்னு தெரியும் உங்களுக்கு... அங்க உங்களுக்கு நிச்சயமா சேஃப்டி இல்ல... அட்லீஸ்ட் உங்க இஷ்டப்படி ஒரு நல்ல ஹாஸ்டல்லாவது கிடைக்கட்டும்... அதுவரைக்கும் இங்க இருங்க... ப்ளீஸ்...'

'உனக்கு புரியுதா ஸ்ரீ... உனக்கு அண்ணா இருக்காங்க.. நான் இங்க இருந்தா வெளிய இருக்கவங்க உங்க ஃபேமிலிய தப்பா பேசுவாங்க... என்னால உங்களுக்கு தான் சிரமம்...' என்றவளின் கண்கள் கலங்கி இருந்தன..

சட்டென்று தாவி அவளது கையைப் பிடித்துக் கொண்டவளாய், நித்தி அவளிடம்., 'மது... ரிலாக்ஸ்... அம்மா அப்படியெல்லாம்‌ நினைக்குற டைப் கிடையாது... ரொம்ப சந்தோஷமாதான் உங்கள வர சொல்லி இருக்காங்க... அண்ணாவுமே ரொம்ப நல்லவன்‌ தான்... நீங்க குழப்பிக்காதீங்க...' என திடப்படுத்த முயன்றாள்.

இன்னும்‌ அவளது முகம்‌ தெளியாமல் இருக்கவே., 'நீங்க சாப்பிட வரும் போது அம்மாட்ட பேசுங்க... உங்களுக்கே புரியும்..' என அவளது கண்ணத்தை கிள்ளிவிட்டு சென்றுவிட்டாள்.

என்ன இந்தப் பெண் நான் கூறுவதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தன் இஷ்டத்திற்கு செய்கிறாளே என தோன்றிய தன் மூளையை ஓங்கி ஒரு கொட்டு கொட்டிக் கொண்டாள். இன்றளவில் தன்னைப் பற்றி அக்கரைப் படும் ஒரே ஜீவன் அவள் மட்டும் தான் என்பது அவளுக்கு உணர மானசீகமாக நித்தியிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.. ஒரே ஜீவன்... மனம் மெல்ல கணத்தது... இதுநாள் வரை அப்படி ஒன்று இருந்ததா என்றே தெரியாத கண்ணீர் இன்று கண்களில் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. அதைவிடவும் வைராக்கியம் முக்கியம் என அம்மா அடிக்கடி கூறுவாள். 'அழாத மித்ரா... அழக்கூடாதுடீ... எதுக்கும்.. என்னைக்கும்... அழுதா இருக்குற தைரியம்‌ எல்லாம் போயிடும்... அழுகைய அடக்கு.. தானா உனக்கு தைரியம் வரும்... ' என்பாள்... தாயின் குரலே செவிக்குள் ஒலித்துக் கொண்டு இருந்தது.. விருவிருவென்று குளிக்க சென்றுவிட்டாள்.

சமையல் அறைக்குள் நுழைந்த அபிநந்தன் பார்வதியிடம்., 'அம்மா... காலைல என்ன...' என்றான்...

அவன் எழுந்து வந்ததையே கவனிக்காத பார்வதி., 'நீ எப்போ டா எழுந்த... தூங்க வேண்டியது தான... நாலு மணிக்கு தான படுத்த... ' என்றாள் மகனின் தலையை வாஞ்சையுடன் தடவியவாறே..

'ஆமா... நீ தான் வெளிய படுக்கப் போட்டுட்டியே... ஒரே சத்தம் போ... அதான் தூங்க முடியல... ' என்று அபிநந்தன் கூறிக்கொண்டு இருக்க சரியாக நித்தியும்‌ அங்கே வந்தாள்..

'ஏ பிசாசு... அந்தப் பொண்ணு உன் ஃப்ரண்டா...' என்றான் அவளிடம் திரும்பி...

'ஆமா... உனக்கென்ன...'

'உனக்கு எப்படி டீ ஃப்ரண்ட்... அந்தப் பொண்ணு உனக்கு சீனியர்ல...' என கூறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டான்.

'உனக்கெப்படி தெரியும்.. ' எனக் கேட்டாலும்., 'அவங்க சீனியர் தான்னா... ஆனா ஃப்ரண்ட்... போன வாரம்‌ தான் அவங்க அம்மா அப்பா ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டாங்க... அவங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ்... ஒரு ஃபார்மாலிட்டிக்காக சொந்தக்காரங்க எல்லாம் வந்துட்டு அப்படியே போய்ட்டாங்க‌.. ரொம்ப தைரியமான பொண்ணு தெரியுமா... ஆனா அவங்க வீட்டுல இருந்தா சேஃபா இருக்க முடியல... தனியா இருக்காங்கனு நிறையா பேர் டிஸ்டர்ப் பண்ணுறாங்க... அவங்க ஹவுஸ் ஓனர்கூட வித்தியாசமா பேசுராறாம்... அதனால தான் வேற நல்ல ஹாஸ்டலா தேடணும்னு சொன்னாங்க... அதுவரைக்கும் அதே வீட்டுல எப்படி இருப்பாங்க... வரமாட்டேன்னு தான் சொன்னாங்க... நான் தான் கம்ப்பெள் பண்ணி கூட்டிட்டு வந்தேன்... உனக்கு‌ சிரமமா இருக்காண்ணா...' என்றாள்.

அபிநந்தனோ சட்டென்று தன்‌ தங்கை பெரிய பெண் ஆகிவிட்டதைப் போன்று உணர்ந்தாள். சேட்டை செய்யும் தங்கையை மட்டுமே அவன் அறிவான் இதுநாள் வரையிலும்... ஆனால் இன்று... எவ்வளவு தெளிவாய் முடிவு எடுத்திருக்கிறாள். இதை அவளிடம் கூறினால் அதற்கு வேறு சீன் போடுவாள் என நினைத்தவன் மனதிற்குள்ளேயே நித்தியை மெச்சிக் கொண்டு இருந்தான்.

குளித்து விட்டு வெளியே வந்தாள் மதுமித்ரா... அவளைக் கண்டதும் பார்வதி., 'வாம்மா... உன் பேரு என்ன...' என்றாள்.

'மதுமித்ராங்க...' என அவள் உரைக்க

'மதுமித்ரா...‌ நல்ல அழகான பேர் தான்...' என்றாள் பார்வதி

பேர் மட்டுமா... அவளுமே தான்... இமைக்காமல்‌ அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு திடீரென்று ஒன்று தோன்றியது. மதுமித்ரா தன் வீட்டில் இருந்து இங்கு வந்திருப்பதற்கான காரணமே அது தானே.. சரியான பாதுகாப்பு இல்லையென்று.. தானும் இங்கே அதையே செய்தால் அந்தப் பெண் என்ன செய்வாள் பாவம்.. அவளை இனி கண்டுகொள்ளக்‌ கூடாது.. முடிந்தவரை அவள் இருக்கும்‌ பக்கமே போகக் கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் கூடிய சீக்கிரம் அது இருவராலும் முடியாது என தெரியாமலேயே...

'சாப்பிட ஆரம்பிக்கலாமா... அபி... நீ ஒரு ப்ளேட் எடு... நித்தி குருமா சட்டிய கொண்டு வா...' என கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே வந்தவள் புதியவள் தனியாய் உணரக்‌கூடாது என்பதற்காக

'மித்ரா... நீ தண்ணி மட்டும் கொண்டு வா மா...' என்றாள்.

சட்டென்று மித்ரா தன் ஒரு வார அழுகையையும் உடைத்துவிட்டாள்.. பதறிப்போன பார்வதி., 'அச்சோ... என்னாச்சு மா... சாதாரணமாதான் உன்ன எடுத்துட்டு வர சொன்னேன்... நீ எதுவும் நெனச்சுக்காத... சாரிமா...' என்றாள்.

'அப்படி இல்லைங்க... என் அம்மாவும் அப்பாவும் மட்டும் தான் இப்படி கூப்பிடுவாங்க... மித்ரானு... அதான்... நான் உங்கள அம்மானு கூப்பிடட்டுமா... ' என்றாள்.

'தாராளமா கூப்பிடும்மா... இதென்ன கேள்வி...' என கூறியவள்., பேச்சை இலகாக்கும் பொருட்டு.. 'அப்போ நித்தி உன் தங்கச்சியா...' என்றாள்..

அபிநந்தனுக்கு தூக்கிவாறிப் போட்டது... 'நித்தி தங்கை என்றால் நான்...' என்ற கேள்வி அதற்குள் அவன் மனதினுள் நூறு முறை எழுந்து விட்டது... ஆனால் மறுப்பாய் தலையசைத்த மதுமித்ரா., 'இல்லை அம்மா... அவள் எப்பவுமே எனக்கு அன்பான தோழி தான்...' என நித்தியை கட்டிக் கொண்டாள்.

அதன் பின்னே அபிநந்தனுக்கு மூச்சுவிட முடிந்தது. அதற்குள் அவனுக்கு பசிக்கவும் ஆரம்பித்துவிட., 'அம்மா... பசிக்குதுமா...' என்றான்.
அவனை நோக்கி கேள்வியாய் ஒரு பார்வையை வீசிவிட்டு தனக்கென்று கொடுத்த தட்டை கையில் எடுத்தாள் மதுமித்ரா...

'நல்ல சுவையான உணவும்மா... ' என மனது விட்டு பாராட்டவும் செய்தாள்...

'எங்க அம்மா சமையல அடிச்சுக்க இந்தப் பக்கம்‌ யாரும் கிடையாது... அம்மா சொல்லி இருக்காங்க... பாட்டியும் ஆச்சியும் நல்லா சமைப்பாங்களாம்‌... ' என்றாள் நித்தி..


'அச்சோ... என்ன ஒரு கஷ்டம்.. ' என்றான் அபிநந்தன்.. மூன்று பெண்களும் கேள்வியாய் அவனை நோக்க., 'பின்ன... அம்மா... இவ உன் குடும்ப மானத்தையே வாங்கப் போறா‌ பாரு...... எல்லாரும் நல்லா சமைக்கிறவங்க... உன் மகளுக்குதான் சுடுதண்ணி வைக்கவே தெரியலையே... தண்ணி சுட வச்சுத்தானு கேட்டா அடுப்பு பத்த வைக்க நான்‌ வரணுமாம்... சுட்ட பிறகு இறக்கி வைக்க நான் வரணுமாம்.. ஆனா கேட்டா நான் தான் சுடுதண்ணி வச்சேன்னு பில்ட்-அப் வேற...' என்றான்..

அவன் கூறியவிதத்தில் சிரிப்பு பீறிட மதுமித்ராவும் பார்வதியும் விழுந்து விழுந்து சிரித்தனர். என்னதான்‌ கூட சேர்ந்து சிரித்துக் கொண்டாலும்., 'பார்ப்போம்னா... உனக்கு வரப்போறவ எப்படி சமைக்கிறான்னு...' என்றாள் நித்தி‌.. சட்டென்று அபிநந்தனின் சிரிப்பு நின்றுவிட்டது. அவன் அறியாமலேயே அவனது கண்கள் ஒரு ஏக்கத்தோடு மதுமித்ராவிடம் பட்டு திரும்பின... ஒரே விநாடி.. யாரும் பார்க்கவில்லை என்று தான்‌ நினைத்திருந்தான். ஆனால்‌ தாயறியா சூழ் ஏது... பார்வதி அதனை கவனித்திருந்தாள்.

சாப்பிட்டு முடித்தவுடன் மதுமித்ரா பார்வதியிடம் சென்று., 'ரொம்ப நன்றிம்மா... கூடிய சீக்கிரம்‌ உங்களுக்கு தொந்தரவு தராம நான் ஒரு ஹாஸ்டல் தேடிக்கிறேன்... ' என்றாள்.
'என்னம்மா நீ... அம்மானு சொல்லிட்டு நன்றி வேர... நீ நிதானமா பாரு... கிடைக்கலயா... இருக்கட்டும் விட்டுடு... இங்கேயே இருக்கலாம்... ' என்றாள்.

மதுமித்ராவுக்கும் இப்போது யாருடைய ஆதரவாவது தேவைப் படுவதைப் போல் இருந்தது. ஆனால் ஹாஸ்டல் தேடுவதை விரைவில் முடிக்க வேண்டும் என எண்ணினாள். விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தானே.. பிரியமானவர்கள்‌ தான். அந்தப் பிரியம் கெடுவதற்கு முன்னர் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்...

கல்லூரிக்கு செல்வதற்கு இருவரும் கிளம்ப ஆரம்பித்தனர். அந்த நேரம்‌ பார்த்து நித்தியின் வகுப்புத் தோழி ஒருத்தி அழைத்து‌, கல்லூரிக்கு அருகில் வண்டியில் சென்றால் ஓட்டுனர் உரிமம் கேட்பதாகவும் இல்லாதவர்களை அங்கேயே நிற்க வைத்திருப்பதாகவும் கூறினாள்.

நித்தியிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை‌. மதுமித்ராவிடம் ஓடிச் சென்று விவரத்தைக் கூறினாள். தன் கைப்பையுனுள் தேடிப்பார்த்த மதுமித்ராவிடமும் அது இல்லை... அது அவர்களது வீட்டில் இருந்தது. என்ன செய்வதென்று இருவரும் யோசித்து வேறு வழியின்றி போகவே பார்வதியிடம் சென்று நின்றனர்...

பார்வதி தன் மகனிடம் திரும்பி., 'தம்பி.. உனக்கு லீவ் தான.. ரெண்டு பேரையும் காலேஜ்ல போய் விட்டுட்டு வர்றியா...' என்றாள். அவனும்., 'அவங்க ரெண்டு பேருக்கும் சரிதானானு கேட்டுக்கம்மா...' என்று விட்டான்..பார்வதி சென்று இருவரிடமும் கூற சரியென்று நித்தி கிளம்ப ஆரம்பித்து விட்டாள்.

மதுமித்ரா தான் திகைத்து நின்றாள்... இவனோடு பைக்கிலா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top