மழைச் சாரல்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"மயக்கும் மாலை நேரம்
வானம் எங்கும் மேகக்கூட்டம்
சிறு நடை அது கடற்கரையோரம்"


"சட சடவென சாரல் அடித்திட
மனம் அது மழையின் புறம் சாய்ந்திட
கவலைகள் மறந்திட
கரைந்தேன் நான் மழைச்சாரலில் மகிழ்வுடன்"


"தூரலாய் வந்த மழைச்சாரலில்
துடுக்குத்தனமும் தான் தலைதூக்கியது
துள்ளி ஓடும் மானைப்போல்
தொலைதூரம் செல்வதற்கு"


"மழைச்சாரல் அது மனிதநேயம் கற்றுதந்தது
மதம் பார்க்காமல்
மண்ணில் மக்களின் மேல் வந்து விழும்போது"


"குற்றாலச்சாரல் அது
குதுகலத்தையும் தந்து விட்டு சென்றது
என் வீட்டின் முற்றத்தில் குற்றாலச்சாரலில்
குடும்பத்துடன் குளித்தபோது"


"காணாத கருமேகங்களை
கவலையுடன் தேடுகிறேன்
தென்படுமா தென்றல் தரும்
மழைச்சாரல் எங்காவதென"


"மழைச்சாரலில் மனதை தொலைத்துவிட்டு
துயில் இன்றி தொலைக்கிறேன் என் இரவுகளை"


"மழைச்சாரலை மண்ணில் கண்டால் அதனிடம் சொல்லுங்கள்
மன்னன் உன் வரவுக்காக
மங்கை இவள் விழியது காத்திருக்கிறது என"


"மழைச்சாரலே மண்குளிர்ந்திட
மக்கள் மனம் மகிழ்ந்திட
வையகம் அதில் வந்துசேர்ந்திடு"


"உன் வரவினை எதிர்நோக்கி
உன்னில் நனைய
உன் மேல் காதல் கொண்ட
மழைக்காதலி
நான்"
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top