பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 94. சூது, குறள் எண்: 934 & 939.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 934:- சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

பொருள் :- ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
 
Sasideera

Well-Known Member
குறள் 939:- உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

பொருள் :- சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
தூண்டில் தங்கம் என்றாலும் மீனுக்கு அது ஆபத்தானது அப்படியே சூது. அது ஒருமுறை வெற்றிகாட்டி பலமுறை தோல்வி தந்து வறுமைக்கு உரிமையாக்கி உள்ளத்தை நிறைவற்றாக்கி விடும். பண்புடன், உடை செல்வம் உணவு சுய அறிவு கற்ற கல்வி ஐந்தையும் நம்மைவிட்டு விலகச் செய்யும். இத்தனை இழப்புக்கும் பின்னும் காதலிக்கப்படும் சூது போல் உயிரானது துன்பத்தை காதலிக்காது.
 
Devi29

Well-Known Member
அருமையான விளக்கம் best example ,சூதால் பாண்டவர் தம் புகழ் ,நாடு இழந்தனர் குருஷேத்ர போரேநடந்ததே
 
fathima.ar

Well-Known Member
அதிகார விளக்கம் :-
தூண்டில் தங்கம் என்றாலும் மீனுக்கு அது ஆபத்தானது அப்படியே சூது. அது ஒருமுறை வெற்றிகாட்டி பலமுறை தோல்வி தந்து வறுமைக்கு உரிமையாக்கி உள்ளத்தை நிறைவற்றாக்கி விடும். பண்புடன், உடை செல்வம் உணவு சுய அறிவு கற்ற கல்வி ஐந்தையும் நம்மைவிட்டு விலகச் செய்யும். இத்தனை இழப்புக்கும் பின்னும் காதலிக்கப்படும் சூது போல் உயிரானது துன்பத்தை காதலிக்காது.

True
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top