பிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 99.சான்றாண்மை, குறள் எண்: 983 & 985.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 983:- அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.

பொருள் :- மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.
 
Sasideera

Well-Known Member
குறள் 985:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

பொருள் :-ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

அவசியம் செய்ய வேண்டியதை கட்டாயம் செய்வதே சான்றாண்மை. குண நலமுடன் அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என ஐந்துடன் இருப்பதும், நல்லனவற்றை அழிக்காமல் அதை வளர்ப்பதும், தகுதி அற்றவர் இடத்திலும் தோல்வியை ஏற்பதும், துன்பம் தந்தவற்கும் இனியவை செய்வதும், சான்றாண்மையாகும். இப்படியானவர் ஊழி கடந்து போற்றப்படுவர். இவர்கள் சான்றாண்மை குறைந்தால் அகம் புறம் என இரு நிலையும் ஏற்காது.
 
fathima.ar

Well-Known Member
துன்பம் தந்தவர்க்கு துன்பம் தராம ஒதுங்கி போற அளவுக்கு தான்னா ஓகே..
நல்லது செய்யுறதுலாம் ரொம்ப கஷ்டம்
 
Manimegalai

Well-Known Member
அதிகார விளக்கம் :-

அவசியம் செய்ய வேண்டியதை கட்டாயம் செய்வதே சான்றாண்மை. குண நலமுடன் அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என ஐந்துடன் இருப்பதும், நல்லனவற்றை அழிக்காமல் அதை வளர்ப்பதும், தகுதி அற்றவர் இடத்திலும் தோல்வியை ஏற்பதும், துன்பம் தந்தவற்கும் இனியவை செய்வதும், சான்றாண்மையாகும். இப்படியானவர் ஊழி கடந்து போற்றப்படுவர். இவர்கள் சான்றாண்மை குறைந்தால் அகம் புறம் என இரு நிலையும் ஏற்காது.
மிகச்சிறப்பு.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top