பிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 98. பெருமை, குறள் எண்: 974 & 980.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 974:
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

பொருள் :- தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.
 

Sasideera

Well-Known Member
குறள் 980:
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

பொருள் :-பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
எண்ணமற்ற வெறுமையுடன் இருப்பதே மனிதனுக்கு பெருமை. உயிர்களிடத்தில் இருக்கும் வேறுபட்ட செயல்பாடுகளே பெருமை. மேலாக செயல்பட வாய்ப்பு இருந்தும் அப்படி இல்லாதவர் கீழானவரே. தன்னை தானே கேட்டு நடப்பவரே கற்புடை பெண் போன்றவர், தேவையற்றதை மறைத்து ஆற்றக்கூடியதை ஆற்றி பெருமிதம் இல்லாமல் பணிவுடன் இருப்பதே பெருமை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top