பிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 100. பண்புடைமை, குறள் எண்: 992 & 995.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 992:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள் :-எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

பொருள் :- விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

எளிமையாக எண்களைப் போன்ற வார்த்தைகளால் உறவாடுபவரே பண்பாளர். அவர் ஆன்ற குடியில் பிறந்து அன்போடு இருப்பார். உறுப்புகள் மட்டும் மனிதனாக மாற்றுவது இல்லை வெறுக்க தகுந்ததை செய்யாதவரே மனிதர். கத்தி போல் கூரிய அறிவு இருந்தும் மனித பண்பு இல்லாதவர் மரம் போன்றவர். பண்பாளர்கள் செயல்களே உலக இயக்கத்திற்கு காரணம். பண்பற்றவர் சேர்த்த பெருஞ்செல்வம் பாழே.
 

Manimegalai

Well-Known Member
குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

பொருள் :- விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.
மிக நன்று.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top