பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 120. தனிப்படர்மிகுதி, குறள் எண்: 1198 & 1200.

Sasideera

Well-Known Member
#1
குறள் 1198:
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பொருள் :- தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.
 
Sasideera

Well-Known Member
#2
குறள் 1200:
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

பொருள் :- நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.
 
Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

ஒரு செயல்நோக்கம் கருதித் தலைவன் பிரிந்தபின் உண்டான தனிமையில் தலைவிக்கு வந்த துன்பமிகுதியைக் கூறும் அதிகாரம். தான் பிரிவுத்துயர் தாங்காது வருந்துவதுபோல் தலைவனும் வருந்துவார் என்று தலைவி எண்ணுகிறாள். அதுசமயம் உலகத்துக் கணவன்-மனைவி உறவு பற்றி நினைக்கிறாள். மனம் ஒத்தவர்கள், ஒருதலையாய்க் காதல் கொண்டவர்கள் என்னும் இவர்கள் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகள் மனத்தில் எழுகின்றன..

தானும் வீழ்ந்து தலைபட்டவரையும் விழச் செய்பவரே காமத்தின் கனி உண்டவர். வானம் போல் கொடுத்து வாழ்த்துவது காதலில் விழுந்தவருக்கு தானும் வீழ்ந்து உதவுவது போன்றது. வீழ்ந்தவர் வீழ்த்தப்பட்டவர் வாழ்கிறோம் என்ற செருக்கு அடைகின்றார்கள். வீழாதவர் காதலுக்கு உகந்தவர் இல்லை. காதலருக்கு காதல் செய்வதே உதவி மாற்று இல்லை. காவடி போல் இருபக்கமும் இருப்பதே காதல். இயற்கை மாற்றம் தரும் காமன் ஒருவர் மேல் செயல்படுகிறான். அருகே நாடி வரவில்லை என்றாலும் அவரது வார்த்தைகள் இசை போன்றது. காதலின் இசை கேட்காதவர் வறுமையான வாழ்வு வாழ்ந்தவர். நெஞ்சே உன்னை வாழ்த்துகிறேன் உறவை நாடாத அவருக்கு சொல் கடலை தூர்க்க முயலும் செயல் என்று.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes