பிரிவு : அறத்துப்பால், இயல் : பாயிரவியல், அதிகாரம் : 2. வான் சிறப்பு, குறள் எண்: 15.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள்:- கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பொருள் :- பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 2. வான் சிறப்பு
குறள் எண்: 15.
 

Sasideera

Well-Known Member
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஓரெழுத்து-னி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Gaja puyal etc than... but inga yaarum thirunthira pola kanom...
illa pa.. must be something else... ஏன்னா.. மழை சேதம் is not restricted to bad ones... this has some inner meaning..

"inga yaarum thirunthira pola kanom.." 100% true..
whats happening in chennai is a very good example.. எவ்வளவு தண்ணீ வீணா கடலுக்கு போச்சு?? இப்போ தண்ணீர் பஞ்சம் :(
its a shame... nobody learnt anything from this..
 

Sasideera

Well-Known Member
கெடுப்பதூஉம் - பெய்யாதுநின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பதும்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் - அங்ஙனங் கெட்டார்க்குத் துணையாகப்பெய்து முன்பு கெடுத்தது போன்றே பின்பு அவரைத் தூக்கிவிடுவதும்; எல்லாம் மழை - ஆகிய எல்லாம் செய்வது மழையே. "தனக்குமிஞ்சித் தானம்". ஆதலால், வளமில்லாக் காலத்தில் வள்ளன்மை இல்லாதாரின் பண்பாடு கெடுவதும், விளைபொருளும் கருவிப்பொருளும் இல்லாக்காலத்தில் வணிகர் கைத்தொழிலாளர் ஆகியோரின் தொழில் கெடுவதும், இயல்பாதலாலும்; மழையில்லாப் பஞ்சக்காலம் நெடிதுங் குறிதுமாக இடையிடை நேரினும், பின்பு இறைவனருளால் மீண்டும் மழைபெய்து மக்கட்பண்பாடும் தொழிலும் முன்போல் திருந்துவதனாலும்; கெடுப்பதும் எடுப்பதுமாகிய இரு முரண்பட்ட செயலையும் மழை செய்வதாகக் கூறினார். ஆயினும், காலத்திற்கேற்ப மக்கள் நிலைமை மாறும் என்பதும், இடையிடை நிற்பினும் அறுதியாய் நின்றுவிடாது உலகம் அழியும் வரை மழைபெய்துவரும் என்பதும், மழை பெய்யாமைக்கு ஏதேனும் ஒரு கரணியம் இருத்தல்வேண்டும் என்பதும், குறிப்பாக உணர்த்தப்பெறும் உண்மைகளாகும்.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
குறள்:- கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பொருள் :- பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 2. வான் சிறப்பு
குறள் எண்: 15.
got this from net..
மு.வரதராசன் விளக்கம்:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
 

Sasideera

Well-Known Member
got this from net..
மு.வரதராசன் விளக்கம்:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.


Tat only simple ah potu iruken pa... Deep explanation mela kuduthu iruken paarunga....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top