பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 12. நடுவுநிலைமை, குறள் எண்: 116 & 119.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 116:-கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.

பொருள் :- தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், `நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
 
Sasideera

Well-Known Member
குறள் 119:- சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்.

பொருள் :- உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லினும் கோணுதல் இல்லா திருத்தல் நடுவுநிலைமையாம்.

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-
எப்பகுதியினரிடத்தும் ஒப்ப நடத்தல் நடுவுநிலையாகும். எல்லாத் துறையிலும் எல்லார்க்கும் வேண்டப்படும் பண்பு இது. கருத்து வேறுபாடுகளில் செல்வம் ஈட்டுவதில், அறம் கூறுதலில், என அனைத்து நிலைகளிலும் அன்றாட செயல்பாடுகளில் நடுவுநிலையைப் போற்றி நடத்தல் வேண்டும். வலியவன், எளியவன், வறியன். செல்வன், தாழ்ந்த நிலையிலுள்ளவன், உயர்ந்த நிலையிலுள்ளவன் நண்பன், பகைவன் என்றெல்லாம் பாகுபாடு கருதாது அனைவரிடத்தும் நடுநிலை பிறழாமல் ஒழுகுதல் வேண்டும். செய்ந்நன்றி அன்பு காரணமாகவும் நடுவு நிலை தவறக்கூடாது. தனிமனிதப் பண்பான நடுநிற்றல் சமுதாய வளன் என்ற பரப்பில் விரிவாக்கம் பெற்று அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பது வள்ளுவரின் எண்ணம்..
 
Manimegalai

Well-Known Member
குறள் 116:-கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.

பொருள் :- தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், `நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
அதிகம்
பொதுவெளியில் பார்க்காத குறள்..
 
Manimegalai

Well-Known Member
அதிகார விளக்கம் :-
எப்பகுதியினரிடத்தும் ஒப்ப நடத்தல் நடுவுநிலையாகும். எல்லாத் துறையிலும் எல்லார்க்கும் வேண்டப்படும் பண்பு இது. கருத்து வேறுபாடுகளில் செல்வம் ஈட்டுவதில், அறம் கூறுதலில், என அனைத்து நிலைகளிலும் அன்றாட செயல்பாடுகளில் நடுவுநிலையைப் போற்றி நடத்தல் வேண்டும். வலியவன், எளியவன், வறியன். செல்வன், தாழ்ந்த நிலையிலுள்ளவன், உயர்ந்த நிலையிலுள்ளவன் நண்பன், பகைவன் என்றெல்லாம் பாகுபாடு கருதாது அனைவரிடத்தும் நடுநிலை பிறழாமல் ஒழுகுதல் வேண்டும். செய்ந்நன்றி அன்பு காரணமாகவும் நடுவு நிலை தவறக்கூடாது. தனிமனிதப் பண்பான நடுநிற்றல் சமுதாய வளன் என்ற பரப்பில் விரிவாக்கம் பெற்று அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பது வள்ளுவரின் எண்ணம்..
மிகச் சிறப்பு..
1330 குறள்
படித்தா மட்டும் போதாது
5 குறளாவது பின்பற்றுங்கள்னு
கவிஞர் சொன்னாங்க..
முயறச்சிக்கனும்.:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top