பிரம்மனின் தூரிகை - final

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
#1
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை இறுதிப்பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

அடுத்து புதிய கதையில் சந்திப்போம் நட்புக்களே...

"உயிர் உணரும் வ(லி)ழியோ காதல்..". இதான் தலைப்பு... நல்லாருக்கா...

பிரம்மனின் தூரிகை - 27 final

பிரம்மனின் தூரிகை - 27 final

என்றும் நட்புடன்,
லதா பைஜு inbound6587804204359304291.jpg
 
Last edited:
#2
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ரொம்ப ரொம்ப அருமையான நாவல் லதா டியர்
எப்பவோ ரயிலில் பார்த்த பெண்ணின் அம்மாவை இழந்த சோகத்தை நீக்க ஓவியம் வரைந்து கொடுத்து அவளையே இன்ஸ்பிரஷேனா வைத்து வாழ்க்கையில் முன்னேறி ஊரும் நாடும் போற்றும் பெரிய ஓவியனாகி தான் விரும்பிய ஓவியாவையே தேவ் கிருஷ்ணா கைபிடிப்பது ரொம்பவே அருமை

ஓவியாவும் சளைத்தவளில்லை
என்னதான் சிறந்த டான்ஸராக இருந்தாலும் தாயின் இழப்பிலிருந்து தன்னை மீட்டவனை மறக்காமல் கரம் பிடிப்பதும் அருமைதான்

ஓவியாவின் தந்தை சிவநேசன் வெகு அருமையான மனிதர்
மனைவி இறந்ததும் வேறு துணை தேடாமல் பெண்ணை அருமை பெருமையாக வளர்த்து அவள் ஆசைப்படி நடனப்பள்ளியும் வைத்து கொடுத்து டான்ஸ் கத்துக்க வந்த ஒரு சின்னப் பெண்ணை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றி மனதில் நிறைந்து விட்டார்

பையனின் ஓவிய ஆசையை முதலில் மதிக்காவிட்டாலும் அவன் பிரிவுக்கு வருந்தி பின்னாடி பிரம்மாவை சேர்த்து கொள்கிறார் அப்பா ராம் கிருஷ்ணா
பிரம்மாவின் பி ஏ ராகவ் அமிர்தா கமலாம்மா ராதிகா ஓவியாவின் குரு என பிற கதாபாத்திரங்களும் அருமை

உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் புதிய கதையுடன் சீக்கிரமா வாங்க லதா டியர்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#3
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.ஓவியா விரும்பியபடி பிரம்மா சானலில் இண்டர்வியூ முடித்து விட்டு ஊருக்கு கிளம்பிட்டாங்க:giggle::giggle::giggle:.அமிர்தா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்க ராகவ்,அமிர்தா திருமணத்துக்கு இனி எந்த தடையும் இல்லை(y)(y).

ஓவியா நடனப்பள்ளியை நடத்த முடியாது என அவள் குருவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டாலும்,திருமணத்துக்கு பின்பும் நாட்டியத்தை விடக்கூடாது என தேவ் சொல்லிட்டான்:):).
ஆருத்ராவும் சரஸ்வதி தேவி ஆசிர்வாதம் உள்ளவங்களுக்கு மட்டுமே கலைகள் வசப்படும், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறமையை விட்டுக் கொடுக்காமல் முன்னேற வேண்டும் என்பதே தன் ஆசை என கூறுவது அருமை(y)(y).

சகோதரர்கள் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது:giggle::giggle::giggle:.அவரோட கார்ல வரட்டுமான்னு அமிர்தா கேட்டதுக்கே ராகவுக்கு பல்பு எரியுதே:p:p:p.ரிசப்ஷனுக்கு பத்திரிகை உலகின் ஜாம்பவான்கள் வருகை தருவதும்,அவர்கள் பிரம்மாவின் திறமை பற்றி புகழ்ந்து பேசுவதும்,பிரம்மா எங்க வீட்டுப்பிள்ளை என்று சொல்வதை கேட்ட பிரம்மாவின் பெற்றோர்க்கு பெருமையும்,குற்றவுணர்ச்சியும்:cautious::cautious:ஏற்பட தந்தைக்கு ஆறுதலாக இருப்பது அருமை:giggle::giggle::giggle:.

அமிர்தா,ராகவ் திருமணத்தை பிரம்மா பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி வைக்க,பிரம்மாவுக்கு நன்றி சொல்பவர் தனக்கு பின் பிஸ்னஸை பார்த்துக் கொள்ள ராகவை தன்னுடன் வைத்துக் கொள்ள கேட்பதும்,பிரம்மா,ராகவுக்கு ஓர் குடும்பம் அமைந்த மகிழ்ச்சியுடன் சம்மதிப்பது அருமை(y)(y)(y)

பிரம்மாவின் இண்டர்வியூவில் கேள்விகளும்,பிரம்மாவின் பதில்களும் அருமை(y)(y).மகுடம் வைத்தது போல கண்ணைமூடி ஓவியம் வரைவதும்,அதிலும் ஓவியாவின் உருவம் வரைவதும், பிரம்மாவின் மனதில் ஓவியா நீங்காத இடத்தில் இருப்பதும்,ஓவியா மேல் கொண்ட அளவில்லா காதலையும் காட்டுது:love::love::love:.

சிறுவயதில் ஓவியம் வரைய வீட்டில் தடை செய்ய,வீட்டை விட்டு வரும் தேவ்,இரயில் பயணத்தில் அம்மாவை இழந்து கலங்கி இருக்கும் சிறுமி தன் ஓவியத்தை கண்டு பிரமிப்பது,மகிழ்ச்சியடைவது கண்டு வெறியுடன் முன்னேற,பயணத்தில் ஆறுதலாக இருந்த தேவ் சொன்ன வார்த்தைகளை கொண்டு நாட்டிய தாரகையாக இருக்கும் அம்மு இருவரும் சந்தித்தார்களா, அடையாளம் தெரிந்து கொண்டார்களா என கதை சென்ற விதம் அருமை:giggle::giggle::giggle:.

சிவநேசன் மரணம்,ரம்யாவுக்கு நடக்க இருந்த ஆபத்தில் இருந்து தப்புவது எதிர்பாராத திருப்பம்...
அருமையான கதை.எளிமையான நடை.நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் லதா பைஜூ:love::love::love:(y)
 
Last edited:
#6
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை இறுதிப்பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

அடுத்து புதிய கதையில் சந்திப்போம் நட்புக்களே...

"உயிர் உணரும் வ(லி)ழியோ காதல்..". இதான் தலைப்பு... நல்லாருக்கா...

பிரம்மனின் தூரிகை - 27 final

பிரம்மனின் தூரிகை - 27 final

என்றும் நட்புடன்,
லதா பைஜு View attachment 8591
சூப்பர்ப் தலைப்புப்பா

:D :p :D
உங்களுடைய "உயிர் உணரும்
வ(லி)ழியோ காதல்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes