"நெஞ்சமெல்லாம் அலரே !!" - 2

Advertisement

Priyaasai

Active Member
View attachment 10832

அலர் - 2.1

தாமரைச்செல்வியின் கேள்விகளை புறம் தள்ளிய அலர் அவளிடம்,

" நீ ஏன்டி இப்படி வாசல்ல இருந்து என்னை ஏலம் போடுற..? உள்ளே வரவேண்டியதுதானே..??" எனவும்

"எங்கே நான் உன்னை தேடி வரும்போது எல்லாம் நீ தான் உங்க அப்பா கூட கிளம்பி கடைக்கு போயிடுற அதான் நீ இங்க இல்லனா நேரா அங்கே வந்து உன்னை பிடிச்சிடலாம்னு தான்" என்றாள் தாமரை.

அதை கேட்ட அலர்விழி சலிப்புற்ற குரலில், "எங்க டி என்னை எங்கம்மா இங்க இருக்கவிட்டா தானே ஸ்கூல் முடிச்சதுல இருந்து உயிரை எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒருவழியா தப்பிச்சி காலேஜ் போய் சேர்ந்துட்டோம்னு சந்தோஷப்பட முடியலை லீவ்க்கு வரும்போது எல்லாம் பாத்திரம் கழுவு, வீடு துடை, முக்கியமா சமைக்க கத்துக்கோன்னு டார்ச்சர் பன்றாங்கடி அதான் எங்கப்பா கிட்ட கெஞ்சி கூத்தாடி இங்க இருந்து தப்பிச்சி கடைக்கு ஓடிருவேன் நீ அப்போ வந்திருக்க போல.." என்றவாறே அவளோடு உள்ளே சென்றாள்.

இருவரும் சமைலறைக்கு செல்லவும் வளர்மதி அவர்களை பிடித்து கொண்டார், வா.. வா.. தாமரை என்று தாமரையை வரவேற்றவர் அவளிடம்,

"நீ நொண்டி குதிரையா..? இல்ல நல்ல குதிரையா..?" என்று வினவவும் ஒன்றும் புரியாமல் அலரை பார்த்தாள் தாமரை, அவளும் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதாய் உதட்டை பிதுக்கினாள்.

பின் வளர்மதியிடம் தாமரை "புரியல அத்தை" எனவும் அதில் அலர்விழியை ஒரு நொடி முறைத்தவர் தாமரையிடம் சற்று முன் அரங்கேறிய அலரின் அலப்பறைகளை விவரித்தவள்,

"நொண்டி குதிரைக்கு நான் ரவையை எப்படி வறுக்கணும்னு சொல்லாததுதான் சாக்கு அதான் நீயும் இப்படி நொண்டி சாக்கு சொல்லிக்கிட்டு திரியிரியா..? இல்ல ஏதாவது உருப்பட்டு இருக்கியான்னு கேட்டேன்" என்றார் வளர்மதி.

உடனே தாமரை, "அய்யய்யோ அத்தை, இவ கூட சுத்துறதால நானும் அப்படித்தான்னு முடிவு பண்ணிடாதீங்க" என்றவள்..

'நான் எல்லாம் அப்படி இல்லை அத்தை, எங்க அம்மா பத்தாம் கிளாஸ் லீவுலயே என்னை ட்ரில் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால நான் இப்போ ஓரளவுக்கு நல்லாவே சமைப்பேன். அதுமட்டும் இல்லை காலேஜ் முடிஞ்சி வந்து பாத்திரம் துலக்குறதுல இருந்து.. வீடு கூட்டறது இவ்ளோ ஏன்..? எங்க வீட்டில் நைட் சமையலே நான் தான்' என்று இல்லாத காலரை உயர்த்தவும் வளர்மதி கண்களால் அலரை எரிக்கவும் சரியாய் இருந்தது.

வளர் தாமரையிடம், "பொம்பள புள்ளைன்னா இப்படி தான் இருக்கனும். "எப்போப்பாரு படிக்கிறேன்.. படிக்கிறேன்னு புக்கை எடுத்து வச்சிக்க வேண்டியது, இல்லையா..? அப்பா பின்னாடியே ஓட்டம் பிடிக்க வேண்டியது. படிச்சா மட்டும் போதுமா..? நாளைக்கு கட்டிக்கிட்டு போற வீட்ல இவ படிப்பு வயிறு நிறைக்குமா..? இல்லை இவ ஆக்கிப்போட்டு நிறையுமா..? நீயே சொல்லு தாமரை" என்று அவளையும் கூட்டு சேர்த்து கொண்டார்.

"ஆமா அத்தை நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சரி, அதனால தான் நானே இப்போ எல்லாம் எங்க அம்மா சொல்லாட்டியும் எல்லாத்தையும் கேட்டு கேட்டு கத்துக்குறேன், போற இடத்துல நம்மள பேசிடக்கூடாது பாருங்க" என்றாள் கெத்தாக.

அவ்வளவுதான் அலரின் ரத்தஅழுத்தம் எக்கச்சக்கமாய் கூடிவிட்டது பற்களை நற நறத்தவள் , "இப்போ நீ இங்க வந்தது என்கிட்ட பேசவா..? இல்ல எங்கம்மா கிட்டயா..? அவங்க கிட்ட தான்னா நான் கிளம்புறேன்" என்று திரும்பவும்,

"நினைச்சேன்" என்ற வளர்மதி,

'நீ எங்க வேண்டுமானாலும் கிளம்பு அதுக்கு முன்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாய் எல்லாம் நறுக்கி குடுத்துட்டு கிளம்பு' எனவும்

'மாஆஆ..' என்று சிணுங்கி திரும்பியவள்..

'இப்போ திருப்தியாடி' என்ற பார்வையை தாமரை மீது செலுத்தவும்..

தாமரையோ வளர்மதியிடம் 'கத்தி குடுங்க அத்தை' என்றவாறே வெங்காயத்தை எடுத்து உரிக்க ஆரம்பித்தாள்.

அதை கண்ட அலரோ, "அடியேய் நீ ஏற்கனவே போட்ட பிட்டுக்கே வளர் என்னை கொறஞ்சது இன்னும் மூணு மாசத்துக்கு வெச்சி செய்யுமே" என்று தோழியை உள்ளுக்குள் அர்ச்சித்தவள் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி நல்ல புள்ளையா கேட்டதை செஞ்சி குடுத்துட்டு ஓடுறதுதான் என்று முடிவெடுத்து தாமரையிடம் இருந்து வெங்காயத்தை பிடுங்கி அரிய ஆரம்பித்தாள்.

தாமரை தோள்களை குலுக்கியவாறு வளர்மதிக்கு வேண்டிய உதவிகளை செய்ய, அவர் போண்டா போட ஆரம்பித்தார். அலர்விழியை அழைத்தவர் அவளிடம் நீயும் போடு என்று கூறவும், சிறிது நேரம் அவரை மேலும் கீழும் பார்த்தவள் அவரிடம்,

" ஆனாலும் அது எப்படி மா திருவிழா அப்போ தீக்காயத்தோட வரவங்களை வரவேற்க தயாரா இருக்க... செம்ம தில்லானா ஆளு தான் மா நீ..!" எனவும் சில நொடிகள் பிடித்தது வளர்மதிக்கு அவள் கூறியதை புரிந்து கொண்டு அவள் காதை பிடித்து திருகியவாறே சமைக்கத்தான் தெரியாது சாப்பிட தெரியும் இல்ல.. அதையாவது உருப்படியா பண்ணிட்டுப்போ..! இல்லாட்டி உங்க அப்பா வந்து வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு, எனக்கு இது தேவையா..? என்றார்.

பின் இருவரையும் சமையலறையின் உள்ளே இருந்த சிறு மேஜையில் அமர வைத்து
கேசரி போண்டா பரிமாறி காபி பருக வைத்தே கிளம்ப அனுமதி அளித்தார்.

இருவரும் வளர்மதியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி வெளியில் வந்ததும் தாமரையின் தலையில் குட்டிய அலர்விழி அவளிடம் "ஏன்டி எங்கம்மா என்னை தாளிக்க கிள்ளி போடவா இங்க வந்த நீ..?" என்று மீண்டும் குட்டினாள். என்னடி இப்படி சொல்லிட்ட, நான் உன் நண்பிடி..! இப்படி ஒரு வார்த்தை உன்கிட்ட இருந்த வந்த பின்னும் நான் உயிரோட இருக்கேனே..? எப்படி இது சாத்தியம் என்றவளாய் வராத கண்ணீரை துடைத்தாள்.

"உப்ஸ்.. போதும்.. போதும் "ஆஸ்கார் ஆன் தி வே" என்ற அலர்விழி தாமரையை இழுத்துக்கொண்டு கேட்டை திறக்கவும் அவர்களை எதிர்கொண்டார் நீலவேணி. மஞ்சள் பூசிய மங்களகரமான முகத்தில் குங்கும பொட்டு வைத்து தலை நிறைய மல்லிகை சூடி புன்னகை தவழ இரு கரங்களிலும் பைகளை ஏந்தி நுழைந்தவரை கண்ட அலர்விழி அத்தை என்று கூக்குரலிட்டவாறு அணைத்து கொண்டாள்.

அவளின் சத்தத்தில் வெளியில் வந்த வளர்மதி நாத்தனாரிடம் "வாங்கம்மா, நேற்றே வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்" என்றவாறு அவரிடம் இருந்து பைகளை வாங்கி வைத்து அவரை அமர வைத்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

தாமரை அவரிடம் நலம் விசாரித்தவள் அலரோடு வெளியில் வந்து அலரிடம்,

"ஹ்ம்ம் உங்க அத்தை வந்தப்புறம் நானெல்லாம் உன் கண்ணுக்கு தெரிய மாட்டேன்.. சரி எப்போடி கிளம்புவ..? "எனவும் திங்கள் கிழமை காலேஜ் அட்டென்ட் பண்ணனும் அதனால் அப்பா ஞாயிற்று கிழமை கூட்டிட்டு போவாருடி என்றாள் அலர்.

"என்னடி இது திருவிழா முடிஞ்சதும் உடனே கிளம்புற..??"

"இன்னும் கொஞ்ச நாள்ல எக்ஸாம் இருக்கு தாமரை .. கண்டிப்பா போய் ஆகனும்"

"சரி நாளைக்கு வீட்டுக்கு வா பேசலாம்" என்று தாமரை கிளம்பவும் உள்ளே நுழைந்த அலர் வளர்மதியோடு பேசிக்கொண்டிருந்த நீலவேணியிடம் சென்று 'அத்தை எப்படி இருக்கீங்க..?' என்று கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினாள்.

'நான் நல்லா இருக்கேன் டா தங்கம், நீ எப்படி இருக்க..?' என்று அவளை உச்சி முகர்ந்தார் நீலவேணி.

நீலவேணி நாதனின் அக்கா வீட்டிற்கு மூத்தவர் இவருக்கும் நாதனுக்கும் பதின்மூன்று வருட இடைவெளி தாயாய் நாதன், சரஸ்வதி மற்றும் பிரகாசத்தை வளர்த்தவர். அதனால் நாதனுக்கு எப்போதும் அக்கா மீது தனி பாசம் தான்.

அதே அளவு பாசம் தம்பி மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் கிடைப்பதை கண்டு என்றும் பெருமிதம் கொள்வார் நீலவேணி. இவருக்கு இரண்டுமே ஆண் பிள்ளைகள்தான். அவர்களுக்கும் திருமணம் முடித்து வேலை காரணமாய் பிள்ளைகள் இருவரும் இருவேறு திசைகளில் இருக்கின்றனர். அதனால் சுடர்கொடி மற்றும் அனைத்து தம்பி மகள்களின் மீதுமே பிரியம் அதிகம் அதிலும் அலர் மீது சற்று அதிகமே.

அவளை அழைத்துக்கொண்டு நீண்ட முன்னறைக்கு சென்றவர் அங்கிருந்த தன் பையை திறந்து அலருக்கு பிடித்த கொழுக்கட்டை, போளி மற்றும் பால்கோவாவை எடுத்து அவள் கையில் கொடுத்து உனக்காக நானே செய்து எடுத்துட்டு வந்தேன் டா சாப்பிடு... என்றவாறே ஒரு கொழுக்கட்டையை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டார். அதை சுவைத்தவாறே போங்க அத்தை நான் உங்கமேல கோவமா இருக்கேன் இபிகோ செக்ஷன் 420 படி உங்கமேல சீட்டிங்(Cheating) கேஸ் போட போறேன் என்றாள் அலர்.

அப்புடியா..? என்று சிரித்தவர், ஏன்..? என் செல்லத்துக்கு என் மேல என்ன கோவம் கேஸ் போடுற அளவுக்கு என்றார்.. கன்னத்தில் கை வைத்தவாறு. பின்ன என்ன அத்தை போன வருஷ திருவிழாவுக்கு வந்தது நீங்க, நான் காலேஜ் சேர்ந்தப்ப எத்தனை முறை உங்களுக்கு போன் பண்ணி கூப்பிட்டேன்.. நீங்க வந்தீங்களா..? என்னை ஏமாத்தினத்துக்கு தான் என்று சிணுங்கினாள்.

அவள் மூக்கை பிடித்து ஆட்டியவாறே, "இதுதானா..? நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்" என்றார் கண்களில் சிரிப்போடு.

நான் தான் நாதனுக்கு அப்போவே சொன்னேனே, "அப்போ அறுவடை காலம்.. போட்டது போட்டபடி விட்டுட்டு வரமுடியாதுனு" அவன் உங்கிட்ட சொல்லலையா..? எனவும் முகத்தை சுருக்கியவாறே "ஹ்ம்ம் அதெல்லாம் உங்க தம்பி ரொம்ப பர்பெக்ட்,,! உடனே சொல்லிட்டார்" ஆனாலும் உங்களுக்கு நான் முக்கியமில்லையா..? என்றாள் அன்றைய ஆசை நிறைவேறா ஏக்கத்தோடு. தம்பி மகளுக்கு தன் மீது உள்ள அன்பை சிலாகித்தவர்.. அப்படி எல்லாம் இல்லடா செல்லம் மாமாவால தனியா எல்லாத்தையும் சமாளிக்க முடியாது. நான் இல்லாட்டி வேலை செய்றவங்களுக்கு யார் சாப்பாடு போடுவாங்க..? நீயே சொல்லு, அதான்டா வரமுடியலை என்றதும் சமாதானம் ஆனாள்.

தன் முன் காபியை நீட்டிய வளர்மதியிடம் "எங்க வளர் நாதனும் கதிரும் ஆளை காணோம்" என்றார்.

"அவர் திருவிழாவுக்காக மளிகை வாங்க போய் இருக்காரு மா.. கதிர் இன்னும் ஸ்கூல்ல இருந்து வரலை" என்ற வளர்மதி என்றும் போல நன்றி உணர்வோடு அவரை நோக்கினார்.

பின் இருக்காதா..!! தனக்காக பேசும் ஒரே ஜீவன் என்ற மரியாதை கலந்த பாசம் என்றுமே நீலா மீது உண்டு. அதோடு தன் வாழ்வில் மறக்கவே முடியாத நிகழ்வால் மனஅழுத்தம் அதிகரித்து பித்து பிடித்த நிலையில் இருந்த வளரை மீட்டெடுத்தவர் நீலாவே. அவர் இல்லையென்றால் இன்று அலரும் கதிரும் தாயற்ற பிள்ளைகளாய் இருந்திருப்பர்.
Nice
 
Super
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top