நீ இருக்கும் நெஞ்சம் இது …19.2

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
வாசுகியை பார்த்தவள் அதிர்ந்து போனாள்! என்ன இவங்க? எங்கேயோ வெறிச்சு பாக்குறாங்க. பின்பு ரூமை பார்த்தாள், அண்ணா என்னம்மா நீங்க வசு அண்ணிய கூட்டிட்டு போய் சாப்பிட வையுங்க.
நான் “ரூமை கிளீன் பண்ணிட்டு கூப்பிடுறேன்” என்று சொல்லவும், பதறிய சந்தோஷ் அதெல்லாம் ஒன்னும் வேணாம். இன்னும் கொஞ்ச நேரத்துல, வேலை செய்றவங்க வந்துருவாங்க, என்று சொல்லவும், அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா, அவங்கதான் வந்து இதைப் பார்க்கக்கூடாது, இன்னொரு வீட்டுக்கு போகும்போது விஷயம் வெளியே போகும். நான் “இது நம்ம வீடு நினைக்கிறேன்”…
‘ நீங்க அப்படி நினைக்கலையோ? என்று சொல்லவும். ஒன்றும் சொல்லாமல் வாசுகி இடம் சென்றவன் பாட்டி உன்னை கூப்பிடுறாங்க, கொஞ்சம் வெளியே வா. எதுக்கு? மறுபடியும் என்னை கேள்வி கேட்க வா? என்று சொன்னாலும் அவனோடு சென்றாள்.
கிருஷ்ணாவும், அவளுக்கு உதவ வேலை சீக்கிரம் முடிந்தது . கிருஷ்ணாவிடம், கண்மணி நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே? இது சாதாரண கோபம் மாதிரி தெரியல, அவங்களுக்கு, ஏதோ மன அழுத்தம் இருக்கு.
நீங்க தப்பா நினைக்க வேண்டாம் “என் பிரென்ட் சுபா, உடைய மாமா ஃப்ரெண்ட் “சைக்காலஜிஸ்ட்” இருக்காங்க. நம்ப ஃப்ரெண்ட்லியா ஒருவாட்டி கன்சல்ட் பண்ணலாம். என்ன விஷயம் வெளிய போகாது என்று சொல்ல யோசனையாக கிருஷ்ணா பார்த்தான். சந்தோஷ் அண்ணா கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.
வாசுகி சாப்பிட்டுக் கொண்டிருக்க, வெளியே சென்றவள் பாட்டியிடம்,நாங்க கிளம்புறோம் பாட்டி, என்று சொல்ல.”பாட்டி இருமா முதல்முறையாக, வந்திருக்க சாப்பிடாம எல்லாம் போக கூடாது”. அதுக்கு என்ன இது நம்ம வீடு தானே, வாசுகி அண்ணி சந்தோஷமா, என்னைக்கு என்கிட்ட பேசுறாங்கலோ, அன்னைக்கு நாங்க சாப்பிடுறோம். என்று சொல்லவும், பாட்டியால் உன் கொள்ள முடியாமல் போனது.
அவர்களை வழியனுப்ப, பின்னோடு வந்த சந்தோஷ் இடம், கண்மணி சொன்ன விஷயத்தை கிருஷ்ணா சொல்லவும், எனக்கும் “அந்த டவுட் இருந்தது” சரி டாக்டர பார்த்திடலாம். சரின்னா நான் சுபா கிட்ட பேசிட்டு உங்களுக்கு போன் பண்றேன். என்று சொல்லவும், இவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே யசோதா விடம், அனைத்தையும் சொல்லவும், கண்மணி சொல்லியதை கேட்ட யசோதா டாக்டரை பார்க்க சம்மதிக்கவில்லை.இதைக் கேட்ட பிரபாகர், கண்மணி சொல்றது தான் கரெக்ட் , என்று சொல்லவும் இல்லங்க என்று ஆரம்பிக்கும் போதே வேண்டாம் யசோதா.
நான் இதுவரைக்கும், நீ சொன்னதுக்கு எதுக்குமே, குறுக்க வந்ததில்லை. ஆனா, இனி இப்படியே விட முடியாது என்று சொல்லிவிட்டு உள்ளே செல்லவும், அவர் பின்னோடு சென்ற யசோதா நான் எதுக்காக சொல்றேன் நீங்க கூட புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே, “வாசுகி பத்தின விஷயம் வெளியே வந்து விடுமோ” பயப்படுறியா? இந்த விஷயம் கிருஷ்ணா, வாசுகி அவர் தவிர சந்தோஷ் முதற்கொண்டு எல்லாருக்கும் தெரியும்.
அப்புறம் என்ன? “ஓ” வெளியே இருந்து வந்த கண்மணிக்கு, தெரியக்கூடாதுன்னு பயப்படுறியா. அவ “நம்ம வீட்டு பொண்ணு” ஏன் பிரிச்சு பாக்குறியா யசோதா? சராசரி மாமியார் மாதிரி நீயும் யோசிக்க ஆரம்பிச்சுட்டியா? உன்னோட அதிகப்படியான அன்புதான், வாசுகிக்கு இந்த நிலைமைக்கு காரணம், என்று சொல்லவும் அதிர்ந்த யசோதா! என்ன பார்த்தா அப்படி கேக்கறீங்க?...
கண்மணியே பார்த்த அன்னைக்கே அவதான் நம்ம கிருஷ்ணாவுக்கு என்று முடிவு பண்ணினவ. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டா, பொண்ணு பாக்குறதுக்கு முன்னாடியே, நம்ம கிருஷ்ணா, எங்கேயோ கண்மணியே பார்த்திருக்கான். அவன நேரடியாக சொல்லல நாளும், நான் அவன் அம்மாங்க.
உங்ககிட்ட ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன், என் மகளுக்கு மட்டும் விஷயம் தெரியவந்தது, அதுக்கப்புறம் என்ன உயிரோட பார்க்க முடியாது, என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
 

banumathi jayaraman

Well-Known Member
வாசுகியுடன் அவ அம்மா யசோதாவையும் சேர்த்து மெண்ட்டல் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்கப்பா
 

Janavi

Well-Known Member
வாசுகி சொந்த பெண் இல்லையோ ,அதான் இங்கு போட்டி போட வருதோ....:unsure::unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top