நீ இருக்கும் நெஞ்சம் இது …15

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
நாட்கள் வேகமாக செல்ல, கிருஷ்ணாவும், கண்மணியும் ஆவலோடு எதிர்பார்த்த, திருமண நாளும் அழகாக விடிந்தது. ஐயர் மந்திரம் ஓத, கிருஷ்ணா பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக மணமேடையில் அமர்ந்திருந்தான்.

கண்மணி குங்கும நிற பட்டு சேலையில், அழகே உருவாக தயாராகி, தன் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு மணமேடையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். கண்மணியை பார்த்த கிருஷ்ணா மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

ஐயர் கிருஷ்ணாவிடம், தம்பி மந்திரத்தை ஒழுங்கா சொல்லுங்கோ, நான் ஒன்னு சொன்னா, நீங்க ஒன்னும் சொல்றீங்க. என்று சொல்லவும், அதற்குள், கண்மணி, கிருஷ்ணாவை பக்கத்தில் அமர்ந்துகொண்டாள். இதை காதில் வாங்கிய சந்தோஷ், மனதிற்குள் எல்லா பசங்களும், இப்படித்தான் போல, ‘”நம்பலே கொஞ்சம் ஓவர், இவன் நமக்கு மேல இருக்கானே”… கிருஷ்ணாவிடம் குனிந்து டேய் மந்திரத்தை ஒழுங்கா சொல்லுடா, சந்தோஷ் வாசுகியை தேடிக்கொண்டிருந்தான், இவ எங்க போனா? வாசுகி, நிஷாவிடம் பேசிக்கொண்டிருந்ததை தூரத்திலிருந்து பார்த்த சந்தோஷ் இவங்க

“கிருஷ்ணா கூட வொர்க் பண்ற கொல்லிக் ஆச்சே”

வசு இங்க என்ன பண்ற? உனக்கு மணமேடையில், எவ்வளவு வேலை இருக்கு, சீக்கிரம் வா ஐயர் கூப்பிடுறாரு, என்று சொல்லிவிட்டு கையோடு அவளை அழைத்துச் சென்றான். கெட்டி மேளம் முழங்க, கிருஷ்ணா, கண்மணியின் கழுத்தில் தாலியை கட்ட, வாசுகி நாத்தனார் முடிச்சு போட்டுவிட்டு, மீண்டும் மன மேடையை விட்டு இறங்கி நின்றுகொண்டாள்.

கிருஷ்ணாவும், கண்மணியும்,தாத்தா பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, கிருஷ்ணாவின், அம்மா, அப்பா, கண்மணியின் அம்மா, அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, சந்தோஷ், வாசுகியிடம் ஆசீர்வாதம் வாங்க குனிய சந்தோஷ் அவனை கட்டிக்கொண்டு “விஷ் யூ ஹாப்பி மேரேஜ் லைஃப்” என்று வாழ்த்து சொல்ல, வாசுகியும் வாழ்த்தினாள். “கடைசியா உனக்கு அக்கா கண்ணுக்கு தெரிஞ்சிட்டேன் போல இருக்கு” என்று கேட்கவும், திடுக்கிட்ட கிருஷ்ணா அக்கா என்று சொல்ல.

அதற்குள், சந்தோஷ் வசு என்று குரல் கொடுத்தான், சும்மா இருங்க, என் தம்பிகிட்ட நான் விளையாட கூடாதா? என்று சொல்லவும் அவர் குரலின் வேறுபாட்டில், சந்தேகம் கொண்ட சந்தோஷ், இப்போ, இத பத்தி பேசுறதுக்கு நேரமில்லை என்று முடிவு செய்தவன், மேற்கொண்டு இதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை.

கிருஷ்ணாவும் சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தான். கண்மணி முகமும் வாடியது, இதை தூரத்திலிருந்து பார்த்த யசோதா, சூழ்நிலை ஏதோ சரி இல்லை, என்று முடிவுசெய்து ,அவர்களை நெருங்கி வந்து என்ன ஆச்சு? என்று பதற்றத்தோடு கேட்டார். ஒன்னும் இல்லமா, ஒன்னுமில்ல கா, என்று ஒன்று போல் சொல்ல.

வாசுகி மனதிற்குள் “ஓஹோ ஒருத்தி வந்தவுடனே என்னோட முக்கியத்துவம் இந்த வீட்டில குறைஞ்சு போச்சு” என்று மனதிற்குள் நினைத்தவள், வெளியே ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றுகொண்டாள். அதற்குள், கண்மணியின் பெற்றோரும் என்னாச்சு? என்று கேட்க, ஒன்னுமில்ல சும்மா பேசிட்டு இருந்தோம், என்று சொல்லி யசோதா சமாளித்தார், வாங்க நாம மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்ப்போம் என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றார்.

கிருஷ்ணா, சந்தோஷம் முகத்தையும், அக்காவின் முகத்தையும், மாறி, மாறி பார்க்க. அதற்கு பதிலளித்த சந்தோஷ் இன்னைக்கு, நீ எதைப் பத்தியும் யோசிக்கக்கூடாது, இது உங்களுடைய நாள், என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

வாசுகியிடம், இதை நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல என்று சொல்லிவிட்டு, அவர்கள் பின்னோடு சென்றுவிட்டான். என்ன சொல்லிட்டேன்னு? ஆளாளுக்கு இப்படி பேசுறீங்க, போங்க எல்லாரும் போங்க, யாரும் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அங்கு இருக்கும் ரூமில் சென்று அடைத்துக்கொண்டால்.
 

banumathi jayaraman

Well-Known Member
வாசுகி முகம் திருப்புவாள்ன்னு தெரியும்
அதுக்குன்னு தம்பியின் கல்யாணத்தன்னிக்கேவா?
இதிலே நிஷாவுடன் வேற பேச்சு வார்த்தை
வெளங்குனாப்புலதான்
 

Pragathi Ganesh

Well-Known Member
வாசுகி முகம் திருப்புவாள்ன்னு தெரியும்
அதுக்குன்னு தம்பியின் கல்யாணத்தன்னிக்கேவா?
இதிலே நிஷாவுடன் வேற பேச்சு வார்த்தை
வெளங்குனாப்புலதான்
:(:(. Ava mugatha ennala thirupa mudiala Banu ma:mad:
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு
வாசுகி எதுக்கு இப்படி செய்றா
 

banumathi jayaraman

Well-Known Member
:(:(. Ava mugatha ennala thirupa mudiala Banu ma:mad:
ஹா ஹா ஹா
உங்களாலே முடியாட்டி எப்படி இல்லை எப்படின்னு கேட்கிறேன், கிருஷ்ணா டியர்?
உங்களால் முடியாட்டி கட்டிங் பிளேயர் வைச்சு திருப்புங்கப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top