நினைவெல்லாம் நீ(யே)யா_6

Advertisement

காலையில் வீட்டில் உள்ள அனைவரும்.பூஜைக்காக காரில் செல்ல விஷ்ணுவுடன் பைக்கில் சென்றாள் ருத்ரா.

என்னடா நேத்து காலேஜ் எப்படி போச்சு? என பிரண்ட் மிரரில் விஷ்ணுவை பார்த்தபடி கேட்டாள் ருத்ரா.

ம்ம் .. செமயா போச்சு அக்கா. முதனாலே எல்லா ஸ்டுடண்டும் நல்லா பேசினதால நல்லாவே போச்சி.என்றபடி வண்டியை செலுத்தினான்.

அக்கா நா ஒண்ணு கேட்டா உண்மைய சொல்லுவியா? என குரலை தாழ்த்தி கேட்டான்.

என்னடா பெரியமனுஷா என்ன கேக்கனும். சொல்லு

அது அக்கா, என குழைந்தபடி, நீ யாரயாவது லவ் பண்ணுரியா? என்றான்

விஷ்ணு கேட்டதில் அதிர்ந்து வெளிரிய முகத்துடன் இருந்த ருத்ராவை மிரர் வழியாக பார்த்த விஷ்ணு. என்ன ஆச்சு அக்கா என்றபடி வண்டியை மரத்தடியில் நிறுத்தினான்.

வண்டி நின்றதாலும் விஷ்ணுவின் குரலாலும் சுயநினைவடைந்த ருத்ரா.
ஏன்டா அப்படி கேட்கிற? என்றாள்.


இல்ல அக்கா நேத்து காலேஜ்விட்டு வரும் போது சிவில் சீனியர் ஆதவ் அண்ணாவ பாத்த அவங்க கூட பேசலானு போனப்ப
அவர் நம்ப சிவா அண்ணாகூட பேசினத நான் கேட்டுட்டு அமைதியா வந்திட்டேன் எனறார். ருத்ராவின் முகத்தை பார்த்து.


அப்படி என்ன பேசினாங்க இரண்டு பேரும்?

நீங்களும் ஆதவ் சினியரும் லவ் பண்ணிங்களாம். ஆனா அவரு விஐய்யா பழிவாங்க உங்கள யூஸ் பண்ணிகிட்டாராம். உங்கள அவர் உண்மையா லவ் பண்ணத டெல்லிக்கு போன இரண்டு வருஷத்துல புரிஞ்சிகிட்டாராம். இப்ப உங்ககிட்ட மன்னிப்பு கேட்டு கல்யாணம் பண்ணிக்கதா ஊருக்கு வந்திருக்காருனு சொன்ன உடனே, சிவா அண்ணா அவர் கன்னத்தில இரண்டு அறவிட்டுட்டு எழுந்து போயிடுச்சி, நானும் அமைதியா வந்துட்ட. என நடந்ததை சுருக்கமாக கூறி கைகளை கட்டிக்கொண்டு ஒருகாலை மடக்கியும் மற்றொரு காலை நிலத்தில் ஊணியபடி பைக்கில் அமர்ந்தான்.

துருவன் தனது ஜீப்பில் பூஜைக்கு சென்று கொண்டிருந்த போது, சாலையின் ஓரம் இருந்த மரத்தடியில் விஷ்ணுவும் ருத்ராவும் நின்று கொண்டு இருந்ததை பார்த்து ஜீப்பை அவர்களுக்கு பின் நிறுத்திசென்று அவர்களிடம் சென்ற போது, ருத்ரா அமைதியாக நிலத்தை பார்த்தபடி இருக்க, விஷ்ணு கூறியதை கேட்டு அதிர்ந்து ருத்ராவிடம் சென்றான்.

என்ன ருத்ரா இது இவ சொல்லுரதெல்லாம் உண்மையா? என்றபடி ருத்ராவின் தோளில் கைவைத்தான்.

பிறந்ததிலிருந்தே ருத்ராவும் துருவனும் தோழமையுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள மனபான்மையுடையவர்களாக இருந்ததால். ருத்ராவிற்கு முதல் தோழன் எப்பொழுதும் துருவன் தான். இப்படிபட்ட விஷயத்தை துருவனிடம் சொல்லாதது அவருக்கு மேலும் கோபமூட்ட.

என்ன ருத்ரா நா கேட்டுக்கிட்டு இருக்க நீ அமைதியா இருந்தா என்ன அர்தம்? என ஆள்நடமாட்டம் இல்ல சாலை என்பதால் கோபமாக கத்தினான்.

அவன் கத்தியத்தில் அரண்ட ருத்ரா, பின் தன் கல்லூரியில் தனக்கும் ஆதவிற்கும் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறி அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.

ருத்ராவின் தலையை வருடியபடி, சரி இப்பபவும் நீ அவன லவ் பண்ணுரியா?

அந்த தப்ப ஏன் செஞ்சேனு இப்பவரைக்கும் எனக்கு தோணிக்கிட்டு இருக்கு. என்றாள் சாய்ந்த படியே.

உன் லைப்ல ,ஆதவ் இஸ் எ பாஸிங் கிளவுட் (passing cloud) அந்த கிளவுட் போயிடுச்சி திரும்ப அதபத்தி நினைக்காத. அப்பறம் அந்த வேஸ்ட் ஆதவ்காக இன்னொரு முறை அழாத.

அவனுக்காக நா அழல, அவன் சொன்ன வார்த்தைக்காகதா அழற, அந்த அளவுக்கா நா கேவலமானவ துருவ்.
என ஏக்கமாக, முகத்தை தூக்கி துருவனின் முகத்தை பார்த்தாள்.


அவன் சொன்னா நீ அந்த மாதிரி ஆகிடுவியா என்ன? "கண்டவ பேசுறத காது கொடுத்து கேட்ககூடாது."
இத எனக்கு சொன்னவளே நீதா. நீயே இப்படி அழலாமா? என்றபடி அவள் தலையை வருடினான்.


அப்பொழுது விஷ்ணு மொபைல் ஒலிக்க அனைவரும் நிகழ்விற்கு வந்து பூஜை நடக்கும் இடத்திற்கு செல்ல தொடங்கினர்.

ருத்ரா துருவனின் மேல் சாய்ந்தபடி பேசிக்கொண்டிருந்ததை தன் காரின் ஜன்னல் வழியாக கண்ட ஆதவ்.
நரம்புகள் புடைக்க கோபத்துடனே வண்டியை விரைவாக பூஜை நடக்கும் இடத்திற்கு செலுத்தினான் ..


நீ (யே) யா .......?
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Interesting ah irruku. Ella visaranayum road la ya nadakkuthu yen da veetuku poi pesa kudatha?
Aathav possessive ah?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top