நினைவெல்லாம் நீ(யே)யா? அத்தியாயம் 1_4

Advertisement

அத்தியாயம்_1

கிழக்கில் ஆதவன் தன்வர்ணஜாலங்களை காட்டி உதயமாகிக்கொண்டிருக்க. பட்சியின் ஒசையும், "கொக்கரக்கோ கோ" எனும் சேவலின் ஓசையும் விடியலை பரைச்சாற்ற நாங்களும் தயார் என்ற தோரணையில் மனிதர்கள் ஆடு மாடுகளுடனும், சிலர் கலப்பையுடனும், சிலர் வேப்பங்குச்சியை வாயில் குடைந்த படியும் தங்கள் வேலையை நோக்கி சென்றனர். அவ்வேளையில் விருதாசலம் வீட்டின் முன்பு ஊர்பெரியவர்கள் ஒன்றுகூடி வந்தனர்.

என்னடா வேலு, ஐயா வீட்ல இருக்காரா என பெரியவர் கேட்க.

வாக்க ஐயா, வணக்கம். ஐயா வீட்லதா இருக்காரு, இருங்க நான் நீங்க வந்தத சொல்லிட்டு வர. என வேலு விருதாசலத்திடம் சென்று விவரத்தை கூற. அவர்களுக்கு தோப்பிற்கு வர சொன்னார் விருதாசலம்.

என்னையா, எல்லாரு சேர்ந்து வந்திருக்கிங்க என்ன விஷேஷம். என நெற்றியில் பட்டையும், கழுத்தில் தங்கத்தில் கோர்க்கப்பட்ட கொட்டையும், மேலும் இரண்டு சங்கிலியும், கையில் தங்க காப்பும் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஆண்மைக்கே உரிய தோரணையில் ஒற்றைக் கையில் தன் வெள்ளை மீசையை நீவியபடி கேட்டார்.

வணக்க ஐயா, நம்ப ஊர்ல திருவிழா வருது அதா உங்கள பாத்து ஒரு எட்டு சொல்லிபுட்டுப் போலானு வந்தோம்.

எப்ப மாரி திருவிழா? என மஞ்சள் சிவப்பு வண்ண பட்டு சேலையில் நெற்றியில் குங்குமத்துடன் லட்சுமிகடாட்சமாக அனைவருக்கும் இளநீரை வழங்கும் படி ஏசினார் மீனாட்சி.

ஆடி பதினெட்டு காப்பு கட்டிட்டு இருபது திருவிழா வெக்கலானு பூசாரி சொன்னாரு அம்மா.

அதுகென்ன மாரி இந்தவாடி திருவிழாவ ஜமாய்ச்சிடுவோம்.

ஐயா இந்த முறை உங்க மூத்த பேரனுக்கும் பரிவட்டம் கட்டலாம் இருக்கோம்.

சரி கட்டிடலாம். மீனாட்சி திருவிழாவுக்கான செலவ பாத்து கொடுத்திடு. எனும் பொழுது அங்கு வந்த இளைஞ்சர் பட்டாளம் என்ன பெரியவரே எங்க சிவா அண்ணாவுக்கு மட்டும்தா பரிவட்டமா எங்களுக்கெல்லாம் இல்லையா என்றான் விஷ்ணு.

அது பெரியவங்களா கொடுக்கனும் நாமலா கேட்ககூடாது.என வடிவேலு பானியில் சொல்லிக்காட்டினால் ஹரிணி.

விருதாசலம் - மீனாட்சிக்கு மூன்று ஆண்பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும்.

மூத்தவர் பரஞ்ஜோதி மனைவி உமையாள். மகன் சிவா

நடுவர் சங்கரன் மனைவி பார்வதி .மகள் ருத்ரா

அடுத்தவர் அருண்குமார் மனைவி கவிதா மகன் விஷ்ணு, மகள் ஹரிணி.

மகள் கயல்விழி கணவர் கார்த்திகேயன். மகன் துருவன் மகள் தேன்மொழி.

அங்கு வந்த பார்வதி சண்டையெல்லாம்போதும் சாப்பிட வாங்க.ஐயா வந்தவர்களையும் அழைச்சிட்டு வாங்க.

இல்ல அம்மணி கோவில் வேலை இருக்கு இன்னொரு முறை சாப்பிடுறோம் .வரங்க ஐயா, போய்யிட்டு வரோங்க மா என அனைவரும் சென்றவுடன். வீட்டினர் சாப்பிட சென்றனர்.

சாப்பிட அமர்ந்த ஹரிணி, வாங்க இன்சினியர் சார். ஊர்ல திருவிழா வருதாம் இந்தமுறை உங்களுக்கும் பரிவட்டமாம் என்றாள் விஷ்ணுவை பழிப்புக்காட்டிய படி.

என்ன தாத்தா இது, எனக்கு பரிவட்டம் எல்லாம் வேண்டாம்.அப்படி எல்லா சொல்லாத அவங்க நமக்கு கொடுக்கற மரியாதைய ஏத்துகனும்டா கண்ணு. என்றார் மீனாட்சி சிவாவின் தலையை வருடியபடி.

பாட்டி நானும் பெரியவந்தா பரிவட்டம் எனக்கும் கட்டலாம். என விஷ்ணு கூறிய போது அங்கு வந்த அருண் அதுக்கு முதல்ல பொறுப்பா மில்ல பாத்துக்க பிறகு பரிவட்டம் கட்டலாம். படிச்சிட்டு ஊர் சுத்தரவனுக்கு பரிவட்டம் ஒன்னுதா குறை.

அருணுக்கு பரிமாரிய உமையாள்.விடுங்க கொழுந்தரே குழந்த ஏதோ ஆசையா சொல்லிட்டா விடுவிங்களா.

பொரியம்மா, வெள்ளபன்னி தென்னமரம்மாதிரி வளந்து போய்இருக்கா இவ குழந்தையா?

அடி பூசணி கத்தரிக்கா மாதிரி இருந்துகிட்டு என்ன வெள்ளபன்னினு சொல்லுறியா என தலையில் குட்டினான்.

விஷ்வாவிற்கும் சிவாவிற்கும் இடையிலிருந்த நாற்காலியில் வந்தமர்ந்த ருத்ரா. என்ன சாப்பிடும்போது விளையாட்டு எப்ப மில் பக்கம் போறாமாதிரி இருக்க நான் மால் வோர்க் (மால் வேலை) ஆரமிச்சா என்னால மில் பக்கம் போக முடியாது என்றாள் விஷ்ணுவை பார்த்து.

அக்கா இன்னக்கு சார் காலேசுக்கு வர சொன்னார் அங்க போகலானு இருக்க.

அக்கா சார், இன்னக்கும் மில் பக்க வரமாட்டனு சிம்பாலிக்கா சொல்லுறார்.அப்படிதான விஷ்ணு அண்ணா.

இல்ல கா, சீக்கிரமாவே மில் பக்கம் வர. இருடி பூசணி உனக்கு இருக்கு என்றான் ஹரிணிக்கு மட்டும் கேட்கும் குரலில்.


தாத்தா நாம மால் கட்டபாத்து வெச்சிருக்க இடத்தோட ஓனர் இன்னைக்கு நம்ம ஊருக்கு வராராம் அவர பாத்து இடத்த நமக்காக ரிஜிஸ்டர்பத்தி பேசிட்டு அப்படியே மில்பக்கம் போய் கணக்கு முடிச்சிட்டு மதியசாப்பாட்டுக்குதா வீட்டுக்கு வருவேன். சிவா அண்ணா நீ மாலுக்கான பிளான் டிசைன் பண்ணு இடம் நமக்கு கிடச்சிடும்னு நினைக்கிறேன்.

அங்கிருந்த மீனாட்சி கவலையவிடுடா அந்த இடம்நமக்குதான். ருத்ரா கைவைத்த வேலை முடியாம இருக்குமா என்ன? அதான என்று மாமியாரை ஆமோதித்தார் உமையாள்.

சாப்பிட்டுவிட்டு அனைவரும் எழும்ப ருத்ரா, ஹரிணி நானே உன்ன காலேஜ்ல இறக்கிடுறேன் அந்த வழியாத போகனும் வா.

அக்கா, டயர்ல காத்து செக் பண்ணிக்கோ ஓவர் வெயிட்ல டயர் வெடிச்சிடப் போகுது.

அப்படி ஒண்ணும் குண்டில்ல என் மருமகள் என கூறியபடி உள்ளே நுழைந்தார் கயல்விழியும் துருவனும்.

அத்தையின் செல்ல மருமகளைப் பற்றிஇதற்கு மேல் பேச முடியாது என அறிந்த விஷ்ணு. அட வா மாப்ள என துருவனை அணைத்துக்கொண்டு எஸ் ஆகிவிட்டான்.

வா கயலு, என்ன விஷயம் இவ்வளவு காலையில வந்திருக்க என மீனாட்சி கேட்க.

அது வந்து அம்மா நம்ம துருவனுக்கு போலிஸ் வேலை கிடச்சிருக்கு.நம்ப கோயம்பத்தூர்ல DSP யா சார்ஜ் எடுக்குறான். அத சொல்லிட்டு என் மருமகளுக்கு புடிச்ச குலாப்ஜாமுன் பண்ணிண அத குடுத்துட்டு போலானு வந்தே என்றவாறு ஹரிணியிடன் தூக்குவாலியைக் கொடுத்தார்.

அத்தைக்கு முத்தத்தை கொடுத்துவிட்டு.அனைவரிடமும் சொல்லிவிட்டு பையுடன் வெளியே வந்தாள். ருத்ரா யாருடனே பேசிக்கொண்டுருக்க காரின் அருகில் நின்றிருந்தாள்.அப்பொழுது உள்ளே நுழைந்த துருவனின் கண்ணில் ஹரிணி பட அவள் முன் சென்று புன்னகைத்தான்.

என்ன காலேசுக்கா?

ஆமா, வாழ்த்துக்கள் டிஎஸ்பி சார்.

அங்கு வந்த ருத்ரா, டிஎஸ்பி ஆயிட்ட எப்ப லவ் சொல்லுற ஐடியா.

படிச்சிட்டு இருக்கா இன்னும் கொஞ்சநாள்ள படிப்பு முடிஞ்சிடும்.அப்றம் சொல்லலானு.

ஒகே, நாங்க கிளம்புறோம். பாய் என இருவரும் காரில் சென்றனர்.

ஹரிணியை விட்டுவிட்டு மால் கட்டும் இடத்தின் முதலாளியை பார்க்க அவர் அழைத்த மில்லுக்கு சென்றாள் அவள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தை அறியாமல்.

மில்லில் முதலாளியை பார்த்து அதிர்ந்து நின்றாள். பின்பு யாரை பார்க்கவே கூடாது என்று இருந்தாளோ அவன் முன்போ அவளை நிற்க வைத்தது விதி.

படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே.

நீ(யே)யா.......?
 
Last edited:
அத்தியாயம்_2

மில்லுக்குள் சென்ற ருத்ரா முதலாளி அறைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த ஆதவை. பார்த்து அதிர்ந்து நின்றாள்.பிறகு சுதாரித்துக்கொண்டு
மார்கெட் பக்கத்தில இருக்கிற இடம் விஷயமா பேச யார பார்கனும் என்றாள் ஆதவனை பார்த்து.
எதிரே இருந்த நாற்காலியில் இருக்கும்படி சைகை செய்து, அந்த இடம் என்னுடையதுதான்.எதுக்காக நீங்க ரிஜுஸ்டிரேசன் பத்தி பேசுறிங்கனு தெரிஞ்சிக்களாமா.என்றான் வலக்கையின் சுட்டுவிரலால் புருவத்தை நீவியப்படி.

ஆறடியில் உடற்பயிற்சியினால் முறுக்கேறிய உடலும் , வெள்ளை நிறசட்டையை முழங்கை வரை மடித்துவிட்டு ஆண்மைக்கே உரிய ஆளுமையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

அந்த இடத்துல ஒரு மால் கட்டலானு இருக்கோம். அதுக்கு உங்க 20 ஏக்கர் இடம் வசதியா இருக்கும். உங்களுக்கு ஓகேனா, நாளைக்கே ரிஜிஷ்டேஷன் வைச்சிக்களாம் என்றாள் ருத்ரா.

உங்களுக்கு அந்த இடம் ரொம்ப முக்கியம்னு தெரியுது.ஆனா நா அத விற்க தயாராயில்ல.உங்களுக்கு சம்மதம்னா நீங்களும் நானும் பாட்னர்சா இருந்து மால்ல(mall) தொடங்களாம். எனும் பொழுது அங்கு வந்து சேர்ந்தான் சிவா

டேய் மச்சான், என்னாடா தீடிர்னு போன் போட்டு நாளைக்கு ஊருக்கு வரனு சொன்னியே என்ன விஷயம் என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அப்பொழுது அங்கிருந்த ருத்ராவைப் பார்த்து , என்ன ருத்ரா இங்க வந்திருக்க.

மால் இடம் விஷயமா அந்த ஓனரை பார்கனம்னு சொன்னனே அதா அண்ணா. நீ எங்க இங்க?

அதுவா, மச்சா என்னோட உயிர் நண்பன் ஆதவ். இரண்டு வருஷம் கழிச்சி இப்பதா ஊர்பக்கம் வரனு போன் பண்ணாரு அதா சார பாத்துட்டு நல்லா கவனிச்சிட்டு போலானு வந்தேன் என்றான் தன் கையை குத்துவது போல் முறுக்கிக்கொண்டு.
ஆதவ் தன் அண்ணணின் நண்பன் என அறிந்ததும் மிரண்டு பின் சமநிலைக்கு வந்தவள் பின் ஆதவை பார்த்தாள்.

மிஸ். ருத்ரா பார்ட்னர்சிப்பக்கு ஓகேனா மேற்கொண்டு பேசலாம்.

என்ன ருத்ரா , என்ன பார்ட்னர்சிப்?

அண்ணா, இடத்த விற்கராமாதிரி இல்லையா பார்ட்னர்சிப்ல மால் கட்டலாமானு கேட்கிறார்.

நீ என்ன பண்ணலானு இருக்க?

தாத்தா கிட்ட பேசிட்டு சொல்லலானு இருக்க அண்ணா. சார் நா உங்களுக்கு இரண்டு நாள்ள என்னுடைய முடிவை சொல்றேன். என அவ்விடத்தைவிட்டு புறப்பட்டாள்.

ஆதவிற்கு அர்சணையை முடித்த சிவா,
என்ன விஷயமா ஊர்பக்கம் வந்திருக்க?என்றான்.

இனி அப்பாகூட சேர்ந்துதா தொழில் பாக்கபோறேன்.உண்மைய சொல்லனும்னா கல்யாணம் பண்ணிக்கலானு என்றான்.

என்னடா குண்ட தூக்கிபோடுற. பொண்ணு யாரு இந்திகாரியா. டெல்லிக்கு போய் நல்லா பாலிஹூட் ஹிரோ மாதிரி ஆயிட்ட.

சச்ச.. பொண்ணு ஆரா.

டேய் போதும் டா , இதுக்கு மேல என் நெஞ்சி தாங்காது. நீ அப்படி பேசினதுக்கு பிறகு அந்த பெண்ணு உன்ன எப்படி கல்யாணம் பண்ணிக்கோ? நீ பேசினபேச்சிக்கு அந்த பொண்ணு உன்ன அடிக்காம விட்டதே அதிகம்.போடா போய் வேலையப்பார்.

இப்ப செருப்பால அடிச்சாலும் வாங்கிப்ப.எனக்கு அவ வேணுண்டா .plz help me.

அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருந்தா என்ன பண்ணுவ?

கல்யாணம் ஆகல.

அப்ப ஒரு முடிவோடதா வந்திருக்க.சரி பொண்ணு கையால அடிவாங்கணும்னு உன் தலையில எழுதியிருக்கு போல யாரால மாத்த முடியும்.என பேசிக்கொண்டே இருவரும் ஊரை சுற்ற கிளம்பிவிட்டனர்.

கல்லூரிக்கு சென்ற விஷ்ணு, கல்லூரி முதல்வரிடம் பேசிவிட்டு பேராசிரியராக பணிநியமன ஆணையுடன் வீட்டிற்கு சென்றான்.

மில்லுக்கு சென்ற ருத்ராவால் வேலையில் ஈடுப்பட முடியாமல் மேசையில் கையை குத்தியபடி தலையைப்பிடித்து அமர்ந்திருந்தாள்.
யாரை தன் வாழ்வில் மீண்டும் பார்க்ககூடாது என நினைத்தாளோ அவன் முன்பே சென்று வேலை விஷயமாகப்பேசியதால் எழுந்த கோபத்தில், வேலைகளை அப்படியே விட்டு வீட்டிற்கு சென்றாள்.

வீட்டிற்குள் நுழைந்த ருத்ராவை பார்த்த கவிதா. என்னம்மா மதியதா வீட்டுக்கு வருவனு சொல்லிட்டு இப்பவே வந்துட்ட.

சித்தி , தல வலி அதா , என்றாள் மெல்லிய குரலில்.

சரிமா, சத்த நேர போய் படு அப்பதா தலவலி போகும் கணக்கெல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம். என்றார் தலையை வருடியப்படி வாஞ்சையோடு.

மாலையில் அனைவரும் வீட்டில் இருக்க , தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்த தன் அப்பாக்கள் முன்பிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் ருத்ரா.

ருத்ராவின் தலையை வருடிய பரஞ்சோதி இப்ப தலவலி எப்படி இருக்கு என்றார்.

ம்.. இப்ப பரவாயில்ல பா . உங்க எல்லார்கிட்டயும் ஒண்ணு சொல்லனும்.

என்ன கண்ணு எதுக்கு தயங்கற என்றார் விருதாசலம்.

அது வந்து தாத்தா , நாம மால் கட்டபோற இடத்தோட ஓனர்கிட்ட பேசின அவரு நா இடத்த விக்கறாமாதிரிஇல்ல. உங்ஙளுக்கு வேணும்னா இரண்டு பேரும் சேர்ந்து தொழில் தொடங்களாம்னு சொல்லுறார். அதா என்ன பண்ணலாம் தாத்தா.

அப்பா, அந்த ஆளு சொல்லுறா மாதிரி சேர்ந்தே தொழில் தொடங்குவோம். நமக்கு வர வருமாணத்துல மால்கட்டினாலும் இலாபம் எடுக்கர வரைக்கும் தொழில்ல இன்னொருத்தரோட பங்கு இருந்தா அதிகமா கஷ்டம் இருக்காது நா என்ன சொல்லவரனு புரியும்னு நினைக்குறேன் அப்பா என்றார் சங்கரன்.

நீ சொல்லுறதும் சரிதா சங்கரா. ருத்ரா நீ அவர்கிட்ட சேர்ந்தே தொழில் தொடங்களாம்னு சொல்லிடுமா.

இல்ல தாத்தா, நாம தனியாவே வேற இடம்பாத்து மால் கட்ட தொடங்களாம்.

அருண், ருத்ரா புதுசா ஆரம்பிக்கர தொழில தனியா தொடங்குறத விட கூட ஒருத்தர்துணையோட தொடங்குனா பல நஷ்டங்கள தவிர்களாம். எடுத்த உடனே ஆழத்துல கால விடமுடியாது. பள்ளம் மேட பாத்துதா நடக்கனும் என கூற .

ருத்ரா அந்த ஓனர்கிட்ட பேசி தொழிலுக்கான ஒப்பந்தத்த தயார் செய்திடு. ஒரு நல்ல நாள்ள பூமிபூஜை போட்டு தொழில் தொடங்கிடலாம் என்றார் விருதாசலம்.

அனைவரையும் ஆமோதிப்பதாக சரி எனும் தலையசைப்புடன் சோர்வாக தன் அறையை நோக்கி நடந்தாள்.

இனி ருத்ரா ஆதவின் வாழ்க்கை எனும்
அணை,விதி எனும் வெள்ளத்தால் இணைய போகிறது. நாமும் இவர்களுடன் சேர்ந்து பயணிப்போம் வாருங்கள்.


நீ(யே)யா....?
 
Last edited:

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Font size konjam perusu pannalama author ji engalukkaka.
Katha romba interesting ah than poguthu,regular epi kodutheengana viruvirupa maridum.consider panreengala?
Ippo anna partner ah alla Ruthra partner ah?
Partnership ku yosikkathu serinu solliteengale avalav nalla vangalada neega ellarum hmmmm.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top