தேவ மஞ்சரி –12

Advertisement

Gangashok

Member
inaintha kaigal.jpg

ஓர் உடல் ஈர் உயிராகியது

இங்கு வேதாந்த்தின் வீட்டில் அரங்கநாயகியின் கழுகு பார்வையை சமாளிக்க முடியாது திணறிக்கொண்டிருந்தாள் ருத்ரா, எப்பொழுது மாட்டிகொள்வோமோ என்று பயந்து பயந்து வாழ்வது எவ்வளவு கொடுமை. திடீர் திடீர் என்று அரங்கநாயகி எதாவது செய்ய சொல்வதும் அதை சமாளிக்க ருத்ராவின் நண்பர்கள் படும் பாடும் ஒன்றை முடித்து நிமிர்வதற்குள் அடுத்து, இதில் அரங்கநாயகியின் மீதுள்ள கோவத்தில் வீங்குவது என்னவோ நால்வரின் முதுகே.
அன்று கடைசி நாள் யாகம் சுவாமிஜியும் வந்திருந்தார், யாகம் முடியவும் அனைவரும் ஆசீர்வாதம் வாங்க இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத ருத்ராவோ ஒரு ஓரத்தில் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். அனைத்தும் முடிந்து கிளம்புகையில் ருத்ராவின் அருகில் வந்து அவள் முகத்தை ஆழ்ந்து நோக்கினார் " அம்மா "
அவரின் அம்மா என்ற அழைப்பே அனைவர்க்கும் அதிசியமாய் இருந்தது இதுவரை எவரையும் அவர் அப்படி அழைத்து அவரின் சீடர்கள் கூட கண்டதில்லை " தாயே நீ இதுவரை கடந்தது சிறிதே கடக்க வேண்டிய தூரம் இன்னமும் உள்ளது, உன் காதலை காத்துக்கொள், நட்பை விடாதே, எதற்கும் அஞ்சாதே, வெற்றி உனதாக இறைவனினம் பிராத்திக்கிறேன்" சொன்னவர் நிற்காமல் சென்று விட்டார் ருத்ரா தான் குழம்பிப்போனாள்.
சுமிஜியை தொடர்ந்தனர் சீடர்கள், ஒரு கோவிற்குள் சென்று மண்டபத்தில் அமர்ந்தவர் கருவறையையே வெரித்தவாறு அமர்ந்திருந்தார் அவரின் அந் நிலையை கண்ட சீடர்களுள் ஒருவள் " குருவே, என் ஐயம் தீர்க்க வேண்டும் ஐயனே அம்மா என்றும் தாயே என்றும் ஒரு சாதாரண சிறு பெண்ணை தங்கள் அழைத்தது? காரணம் நான் அறியலாமா? "
சுவாமிஜி " பெண் என்பவள் சாதாரணம் இல்லை மைந்தா அவள் ஆதிபராசக்தியின் அம்சம், அதுவும் ருத்ரா தூய்மையான இதயம் கொண்ட பரோபகாரி, அவள் புரிந்துகொண்டிருப்பது நன்மைக்கும் தீமைக்குமான போர் அதில் அவள் வென்றால் உலகம் வாழும் அவள் மாய்ந்தால் உலகம்...." தன வார்த்தையை முடிக்காமல் தியானத்தில் கண்மூடி அமர்ந்துவிட்டார். அவர் சொல்லாமல் விட்ட பொருளை உணர்ந்துகொண்ட சீடர்கள் ருத்ராவின் வெற்றிக்காய் அந்த ஆதிபராசத்தியிடமே சரணைத்தார்கள்.
சுமிஜி அவ்வளவு சொல்லி சென்றிருக்க அரங்கநாயகியின் மனதில் பதிந்தது என்னவோ காதல் எனும் வார்த்தை மட்டுமே, இன்னமும் ருத்ராவின் மேல் வன்மத்தை வளர்த்துக்கொண்டார், அவரின் வன்மம் ருத்ராவை மட்டும் அல்ல தன் மகனையும் சேர்த்தே வதைக்கும் என்பதை உணர தவறிவிட்டார், தாராவும் அவளின் கணக்கில் அடங்க சொத்துகளும் அவரின் கண்களை பணித்திரை போல் மறைத்ததை அறியவில்லை அறியும் பொழுது காலம் கடந்திடுமோ காலத்திற்கே வெளிச்சம்.
கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்கு கிளம்பினாள் ருத்ரா, ஆனால் நிழலை போல் தொடர்ந்த தேவராஜை கண்டு எரிச்சல் வந்தது அவளுக்கு. ஒருவழியாய் அவனுக்கு போக்கு காட்டி வீடுவந்து சேர்ந்த ருத்ராவை கண்ட மஞ்சரியின் முகம் பளீரென மலர்ந்தது.
"என்ன ருத்ரா வேதாந்த்தை பார்த்ததும் என்னை மறந்துவிட்டாயே "பொய்யாய் அலுத்துக்கொண்டாள் மஞ்சரி.
"ஒன்னு போட்டேன்னா தெரியும், நான் படுற பாட்டுக்கு ரொமான்ஸ் ஒண்ணுதான் கொறச்சல், போடி கடுப்பேத்தாம"எரிந்து விழுந்தாள் ருத்ரா.
தன் விளையாட்டை கைவிட்ட மஞ்சரி"என்ன ஆயிற்று ருத்ரா யாகமும் இன்றுடன் முடிந்து இருக்குமே? வேறு என்ன இடுக்கண் நேர்ந்தது" மஞ்சரி வினவியதுதான் தாமதம் மடைதிறந்த வெள்ளம் போல கொட்டிவிட்டாள் ருத்ரா.
"என்ன நடந்துச்சா ஒரு நிமிஷம் நிம்மதியா இருக்க முடியல, எப்போப்பாத்தாலும் என்ன வெறுப்பேத்திட்டே இருக்கு அந்த அம்மா அதுவும் வேதாந்த் முன்னாடி கால புடிங்குறது, ஏதையாது கொட்டிவிட்டு அள்ளுகிறது, எல்லாத்தையும் விட சமைக்க சொல்லுது அதுவும் வத்தக்கொழம்பு வேணுமா.. சுட்ட அப்பளம் வேணுமா.. இவ்வளவு நாள் பரவால்ல பூசாரி பொண்ணு ஹெல்ப் பண்ணுச்சு, அதுலயும் அந்த அம்மா ஆப்பு வச்சுடுச்சு நாளைல இருந்து அத வரக்கூடாதுன்னு சொல்லுச்சு பீப்பா. இவனுகளையும் எனக்கு ஹெல்ப் பெண்ணுறங்கனு வெளி வேளைக்கு தொரத்தி விட்டுடுது.கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமுன்னு இங்க வந்தா அந்த நாதாரி தேவராஜு பின்னாடியே வாரான் வர்ற ஆத்திரத்துக்கு..." பல்லை அவள் நர நர வென கடித்தது மஞ்சரிக்கே கேட்டது.
நிலையில்லாமல் நடப்பதுவும், கைகளை முறுக்கி செயிற்றில் குத்துவதுமாய் இருந்த ருத்ராவை பார்த்த மஞ்சரி ஆழ்ந்த யோசனைக்கு பின் தன் மவ்னத்தை கலைத்தாள்.
"ருத்ரா நான் ஒரு வழி சொல்கிறேன் அது உனக்கு ஏற்புடையதாய் இருந்தால் நீ ஏற்கலாம்"
தலையை நிமிர்த்தி சொல் என்பதை போல் ருத்ரா நோக்க
"ருத்ரா நான் சொல்வதை கவனமாக கேள், நீ எனக்கு அனுமதி அளித்தால் என்னால் உன் உடலுக்குள் பிரவேசிக்க முடியும், இந்த ஓவியத்தை விட்டு உன்னுடன் இருப்பதற்கு இது ஒன்றுதான் வழி என்னை முதலில் உணரமுடிந்த உன்னால் என்னை ஏற்கவும் முடியும்.உன் காதல் கைகூடியவுடன் நான் என் ஓவியத்திற்கு மீண்டுவிடுகிறேன். என் மீது முழு நம்பிக்கை இருக்குமாயின் மட்டுமே இதை ஏற்றுக்கொள் சிறு ஐயம் இருப்பினும் விட்டுவிடலாம்.எனக்கு தோன்றிய வழி இது முடிவு உன் கையில்"

ருத்ரா சிந்தனையில் ஆழ்ந்தாள்,"என்னால இதுக்கு மேல நடிக முடியுமுன்னு தோணல, பசங்களும் பாவம் என்னால ரொம்ப பட்டுட்டானுக, அதுக்காக வேதாந்த்த விட்டுகுடுக்குறதும் என்னால முடியாது, எல்லாத்துக்கும் மேல மஞ்சரி பாவம் எத்தனையோ வருஷம் இந்த ஓவியத்திலேயே அடைஞ்சு இருந்துட்டா என்னால அவளை கொஞ்சம் நாள் வெளியுலகுக்கு கூட்டிட்டு போகமுடியுமுன்னா ஏன் செய்ய கூடாது?"
கண்மூடி அமர்ந்திருந்தவள் ஒரு முடிவுடன் எழுந்து நின்றாள் "என் உடம்பு மீது உனக்கு முழு உரிமை கொடுக்கிறேன் மஞ்சரி என் காதல் எனக்கு வேணும் எனக்கு உதவு மஞ்சரி" கையேந்தி நின்ற ருத்ராவின் கைகளுடன் ஓவியத்தில் இருந்து நீண்ட மஞ்சரியின் கைகள் இணைந்தது, மஞ்சரி ருத்ராவின் உடலில் இணைந்து போனாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top