தேவ மஞ்சரி –11 part 3

Advertisement

Gangashok

Member
தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தனர் ருத்ராவின் நால்வர் படை ருத்ராவும் கடுப்பில் தான் இருந்தாள்
இவர்களின் முகத்தை மாரி மாரி பார்த்த மஞ்சரி " இப்போழுது என்ன நடந்தது சற்று சமாளிக்க வேண்டிய நிலை அதுதான் அருமையாக சமாளித்து விடீர்களே இன்னும் என்ன கவலை"
ஏழுமலை"அட போ மஞ்சரி உனக்கு புரியல அந்த அம்மா எந்த நேரத்துல எந்த ஏழரைய எழுத்து விட்டிருமோனு உயிரை கைல பிடிச்சுக்கிட்டு ஒரு ஒரு நாளும் போகுது, திடீர்னு பாடுங்குது, ஆடுங்குது,மந்திரம் சொல்லுங்குது நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஸ்டண்ட் ஒண்ணுதான். பத்தாதக்கு இந்த அம்மணி வேற பொய் அந்த அரங்கநாயகி அம்மாள அடுச்சுட்டு வந்தாச்சு அது ஒருஒரு முறை நம்மள பாக்குறப்பவும் அடிவயிறு கலங்குறது எங்களுக்கு தான் தெரியும்"
மஞ்சரி "என்னது அடித்து விட்டாயா ஏன் அவ்வாறு செய்தாய் தோழியே வன்முறை எதற்கும் தீர்வானதே இல்லை பொறுமை அவசியம்"
மலையப்பன் "நல்லா சொல்லு நம்ம சொன்னா நம்மமேலயே பயவேண்டியது"
ருத்ரா" லேசா குமுணத்தோட விட்டேனு சந்தோச படுங்க அந்த பீப்பா பேசுனதுக்கு எங்காவது மலையில இருந்து உருட்டி விடணும் போல இருந்துச்சு"
சுருட்டை"சொல்லுவ நீ ஏன் சொல்ல மாட்ட ஒரொரு தடவையும் நீ மாட்டறப்ப இருமி இருமி என் தொண்டையே போச்சு உருட்டனுமா உருட்டு"
ஏழுமலை " எவ்வளவு தான் கலக்குனாலும் என்னையும் தண்ணியும் சேருமா? நீயும் வேதாந்தும் அப்படித்தான்"
பேசிக்கொண்டிருக்கையிலேயே ருத்ரா முறைத்த முறைப்பில் அடுத்த வார்த்தை வரவில்லை.
மண்ணாங்கட்டி "சும்மா இருடா எண்ணெயும் தண்ணியும் சேந்தா தா மீன்குழம்பு டக்கரா இருக்கும் சேம் டு சேம் இவங்கங்களும் டக்கரா இருப்பாங்க ரைட்டா ருத்ரா"சப்புகொட்டிக்கொண்டே கேட்டான்.
ருத்ரா "செல்லம்டா நீ" மண்ணாங்கட்டியை தாடையை பிடித்து கொஞ்சியவள், "என்ன சொன்ன சேராதா கொஞ்சூண்டு சோப்ப போட்டு கலக்கு சேருதா இல்லையா பாரு நீக்கலாம் அந்த சோப்பு மாறி டா".
சுருட்டை தன் அடி வயிற்றை பிடித்தபடி"சும்மாவே கலக்கிட்டு தான் இருக்கு டெய்லி இதுல இன்னும் கலக்கணுமுன்னா ஒடம்பு தாங்காது ரூடி"விட்டால் அழுதுவிடுபவன் போல் இருந்தான்.
மஞ்சரி "நண்பர்களே இன்னும் இரு நாட்களில் யாகம் முடிந்ததும் என்னையும் அழைத்து செல்லுங்கள் என்னால் ஆன உதவியை நானும் செய்கிறேன், வேள்வியின் வெம்மையை என்னால் தாங்க இயலாது எனவே நான் உங்களுடன் இருப்பது முடியாது".
மண்ணாங்கட்டி "பீல் பண்ணாத மஞ்சரி சீக்கரம் உன்னையும் தூக்கிட்டு போரோம்"
இவர்கள் இங்கு வாக்குவாதத்தில் இருக்க அங்கு தேவராஜ் கோபத்தில் கொதித்து கொண்டிருந்தான் "போன தடவ தான் இவளால அவன் தப்புச்சானு பாத்தா இந்த முறையும் காப்பாத்தி தொலைச்சிட்டா பாவி, நடந்ததில ஒரே நல்ல விஷயம் யாருக்கும் தெரியாம போனது மட்டுந்தான், பாக்குறேன்டா இன்னும் எவளோ நாள் தப்பிப்ப" தேவராஜ் வண்ணமதில் தகித்து கொண்டிருக்க அதை அறியாத அரங்கநாயகி அவனையே ருத்ராவையும் அவள் குடும்பத்தையும் வேவு பார்த்து வர பணித்தார்.
தேவராஜுக்கு பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த கதைதான் "இது போதுமே எனக்கு, எப்படி உன்ன தொரத்துறேன்னு மாட்டும் பாரு"
நான்காம் நாள் யாகமும் தொடர்ந்தது எதோ யோசையிலேயே அலைந்து கொண்டிருந்த ருத்ராவை கண்ட மலையப்பன் "என்னாச்சு ருத்ரா அந்த அம்மா சும்மாவே என்ன கொர கண்டு பிடிக்கலாமுன்னு அலையுது இதுல நீ இப்படி அலைஞ்சுட்டு இருந்தைனு வை சும்மா இருந்த வாயிக்கு அவள் கிடைச்ச மாதிரி மென்னு துப்பிரும் கவனமா இறுமா எங்க உசுரும் உன் கைல தான் இருக்கு" பரிதாபமாய் அவன் சொன்னதை கிடப்பில் போட்டவள் "நேத்து மஞ்சரி பேசுனத கவனிச்சியா நீ தனியா பில் பண்ணுறான்னு நினக்கிற்றேன்"
மலையப்பன்"அதுக்கு?"
ருத்ரா" இல்லடா இந்த யாகம் நடக்கறதால அவள கொண்டுவரவும் முடியல, நீ என்ன பண்ணற... "
மலையப்பன்" நா ஒன்…னும் பண்ணல, எப்பப்பாரு உனக்கு இதே வேலையா போச்சு என்ன மாட்டிவிடறது அந்த மூணு தடி தாண்டவராயனுக உன் கண்ணனுக்கு தெரியவே மாடங்களா?".
ருத்ரா"டேய் அவனுக முழுச்செ மாட்டிவிட்டுடுவாங்கடா,நீ நடிகன்டா எப்படினாலும் சமாளிச்சிடுவ" ஐஸ் மலையை தலையில் வைத்தாள்.
மலையப்பன்"ஹிம்.. நீ சொல்றதும் சரிதான் அவனுகளுக்கு என்னளவு விவரம் பத்தாது தான், போய்ட்டு வரேன்"
கர்வததோடு சிவாஜி நடை நடந்து அவன் செல்ல ருத்ரா தலையிலேயே அடித்துக்கொண்டாள்.
இவர்களில் உரையாடலை தற்செயலாய் கேட்க நேர்ந்த தேவராஜ் "யாருடா அது மஞ்சரி கூட்டிட்டு வருவேன்னு சொல்லாம தூக்கிட்டு வருவேன்னு சொல்ராங்க மர்மமா இருக்கே? கண்டுபிடிக்கணுமே? எதாவது கிடைச்சாலும் கிடைக்கும் பாக்கலாம்" தேவராஜின் குறுக்கு மூளை பலமாய் வேலை செய்தது.
தன்னை மறைந்து மறைந்து பின் தொடர்ந்து வந்தவனை கண்டுகொண்ட மலையப்பன் வீட்டிற்கு செல்லாமல் அருகில் இருக்கும் கோவிலுக்குள் சென்று மறைந்தான். அலைந்து திரிந்து தேடிய தேவராஜ் களைத்து வீடு திரும்புகையில் இருட்டிவிட்டிருந்தது, சலிப்போடு தன கைகளை உதறியபடி நடந்துவந்தவன் அப்பொழுதுதான் தன் மோதிரத்தில் எழும் சிறு ஒளியை கவனித்தான்.
இதனை நாள் இது நடக்காது என்று நிராசையில் இருந்தவன் கண்களில் மீண்டும் பேராசை தீ ஒளிர்ந்தது ஒவொரு வீட்டின் அருகிலும் சென்று பார்த்தபடி நடந்தான், அந்த வழி வந்த காவலரின் விழிகளில் இது விழ "ஏய் யாரது ? யார்டா நீ ஒரு ஒரு வீடு முன்னாடியும் பொய் என்ன செஞ்சிட்டு இருக்க" காவலரை பார்த்ததும் தன மோதிரத்தை மறைத்த தேவராஜ் "ஒன்னும் இல்ல சார் ஒரு வீட்டு அட்ரஸ் தொலைஞ்சிடுச்சு இந்த ஏரியா தான் தெரியும் அதான் கிட்ட பொய் யாரவது தெரிஞ்சவங்க இருக்காங்களான்னு பாக்குறேன்"
தேவராஜின் முழியும் அவன் உடல் மொழியும் சரியாக படாததால் "இருட்டுன நேரத்தில அப்பிடியெல்லாம் வீடு வீடா பாக்க முடியாது வேணுமுன்னா சரியான அட்ரசை எடுத்துட்டு வந்து நாளாகி பகல்ல பாரு" தேவராஜை விரட்டியர் "மோச புடிக்கிற நய மூஞ்ச பாத்தா தெரியாது அட்ரஸ் தேடுறானாம்" முனகிக்கொண்டே தன் இரவு ரோந்து பணியை தொடர்ந்தார்.
முதலில் ஏமாற்றம் அடைத்தாலும் "எங்க போய்டுவ இந்த இடத்தையே தலைகீழா பெரட்டினாலும் உன்ன பிடுச்சுடுவேன்". தன் மோதிரத்துக்கு அழுந்த முத்தமிட்டவன் வேதாந்தின் வீடு நோக்கி நடந்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top