தூரம் போகாதே என் மழை மேகமே !! - 80

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



அர்ஜூனும் ஈரமுற்றிருந்த jerkin- யும், phant -ஐயும் கழற்றிவிட்டு பட்டு வேஷ்டியை மாற்றிக்கொண்டு ஆதிரையின் அருகில் அவளை ஒட்டிய வண்ணம் அமர்ந்து அவள் கைகளுக்கும் கால்களுக்கும் சுரனை வரும் வரை சூடு பரப்பி தேய்த்துவிட்டான். அவனது செயல்களையும் தொடுகையையும் உணர்ந்த போதும் எதுவும் செய்ய இயலாமல் அசையாமலிருந்தாள் ஆதிரை. சில நிமிடங்களில் கைகால்கள் அசைக்க முடிவதை உணர்ந்த ஆதிரை , அர்ஜூனிலிருந்து விலகி எழுந்து அமர்ந்து எதிரே இருந்த தணலில் தானே கைகளை காட்டிய வண்ணம் அமர்ந்தாள்.


அவள் விலகியதிலிருந்து இயல்புக்கு வந்திருப்பதை உணர்ந்து அவனும் சற்று விலகி கைகளை தணல் அருகில் நீட்டி குளிர் காய்ந்தான்.


கைகளை சூடு காட்டி தன் கன்னத்தில் வைத்த வண்ணமே அந்த குகையை நோட்டமிட்ட ஆதிரை, “அ.. அர்ஜூன் இது என்ன இடம். இது நம் வீடு போல இல்லையே. மீண்டும் ஏதேனும் தீவுக்கோ அல்லது குகைக்கோ வந்துவிட்டோமா. அந்த மழை மேகம் நம்மை இங்கு கொணர்ந்ததா?” என்று அமைதியை உடைத்து கேட்டாள் ஆதிரை.


அவளது குரலில் முகம் திருப்பிய அர்ஜுன் அவளை ஊடுருவும் பார்வை பார்த்தான். அவனது பார்வையின் வேகம் தாங்க முடியாமல் முகம் தாழ்த்தினாள் ஆதிரை. பிறகு முகம் திருப்பி, “ இது எங்களது பூர்வீக தங்கங்கள் கிடக்கும் குகை. சுருக்கமாக புதையல் இருக்குமிடம் என்று சொல்லலாம். இது போல இன்னும் 3 இடங்கள் இந்திரபிரதேஷை சுற்றி உள்ள காட்டில் இருக்கிறது. அதற்கான குறிப்புகள் நம் வீட்டில் பாட்டியிடம் ஓலை சுவடியில் இருக்கிறது. இந்த குகையில் இருந்த நகைகளெல்லாம் ஏலத்தில் விட்டுதான் காஞ்சிபுரத்தில் இடம் வாங்கியானது. மற்ற மூன்று இடங்களை இன்னும் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கவில்லை. அதனோடு அந்த நகைகளை வெளியில் எடுக்க வேண்டிய அவசியமில்லாததால் அப்படியே இருக்கிறது. இந்து குகையில் நகைகளை அகற்றிய பின் மீதி இருப்பது சில பலங்கால அரச பரம்பரை ஆடைகள் மட்டுமே. அவை அனைத்தும் தூய பட்டினாலும் , தங்கம் மற்றும் வெள்ளியினாலும் நெய்யபட்டவை. இவற்றினை பயன்படுத்தும் அவசியமில்லாததாலும் ஏலம் விட மனமில்லாததாலும் அப்படியே கிடக்கிறது.


நீ குளிரில் உறைய கண்டு அவசரமாக அருகிலிருந்த இந்த இடத்துக்கு உன்னை அழைத்து வந்துவிட்டேன். இது கல்ருவியின் அடியில் இருக்கும் குகை. அதனோடு இங்கு இந்த ஆடைகள் இருப்பது நினைவிருந்தது. இரண்டு கிலோ மீட்டர் இந்த குளிரில் உன்னை தூக்கிக் கொண்டு வீடு சேர்வது நிகழக் கூடிய காரியமில்லை. அதனால் இங்கு உன்னை தூக்கி வந்தேன்" என்று ஒளிவு மறைவின்றி விளக்கம் கொடுத்தான்.


“சாரி அர்ஜூன் உங்களுக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டேன். இந்த ஆடை மிகவும் அழகாகவும் குளிருக்கு இதமாகவும் இருக்கிறது. “ என்று தான் அணிந்திருந்த ஆடையை தடவி பார்த்தாள்.


“சிரமமாகிவிட கூடாதே என்று அந்த மழையில் நனைவதற்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும். “ என்று குரலில் கொஞ்சம் கடுமை தோன்ற கேட்டுவிட்டு தொடர்ந்து, “ என்ன ஆதிரை இது. இருக்கும் இடம் தெரிய வேண்டாம். இது என்ன சென்னையா? மழையில் நனைந்தால் எதுவும் ஆகாமல் இருக்க. ஜன்னி வந்து இறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? இந்திரபிரதேஷில் அப்படி இல்லை என்ற போதும், அக்கம் பக்கம் இருக்கும் ஊர்களில் எத்தனை பேர் மீட்க முடியாமல் இறந்திருக்கிறார்கள் தெரியுமா? “ என்று கண்டிப்புடன் கேட்டான் அர்ஜூன்.


"சாரி அர்ஜூன் " என்று மிண்டும் ஒரு மன்னிப்பினை வேண்டி, "எ.. எனக்கு கட்டுபடுத்த முடியவில்லை அர்ஜூன். மழை மேகத்தை பார்த்ததும் , நினைவுக்கு எதுவுமே வரவில்லை. நான் ஏன் உங்களை விட்டு இரண்டாவது ஜன்மத்தில் விட்டு சென்றேன் என்று அறிந்திட தோன்றியது.. அதனால்.. அதனால்..” என்று தன்னிலை விளக்க சொல்ல முயன்றாள் ஆதிரை.


“நான்தான் எதை பற்றியும் எனக்கு கவலையில்லை என்றேனே. எனக்கு நீ என் மனைவியென்பதே போதும். முன் பிறவிகள் பற்றி எனக்கு கவலையில்ல.. இப்படி உன்னையே வருத்தியேனும் அதை அறிந்தாக வேண்டிய அவசியம்தான் என்ன.. ஒரு நிமிடம் நான் தாமதமாக வந்திருந்தாலும் ஜன்னி வருவதற்குமுன் பாம்பு தீண்டியே இறந்திருப்பாய். “ என்று பொறிந்து கொட்டினான்.


ஆதிரையும் எரிச்சலுற, " எனக்கு அவசியம்தான். என் உயிரைவிடவும் எனக்கு உண்மை அறிவது அவசியம்தான். போன ஜன்மத்தில் என்ன நடந்தது. ஏன் உங்களை விட்டு போனேன் என்று காரணம் அறியாமல் எனக்கு நான்தான் குற்றம் செய்தது போல குற்ற உணர்ச்சி வேறு. எல்லாம் தெரிந்து உண்மை அறிந்திட துடித்த வெறி என்றே வைத்துக் கொள்ளுங்கள். என்னை தேடி உங்களை யார் வர சொன்னார்கள். மழை நின்றதும் நானே எழுந்து வந்திருக்க போகிறேன். பாம்பு இருந்தாலும் , என் மழை மேகம் என்னை அதனிடமிருந்து காப்பாற்றியிருக்கும்" என்று விட்டேற்றியாக பதில் சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்தாள்.


அவளது பதிலில் அவளை வெறித்து பார்த்த அர்ஜூன் சில நொடி பேசாமலே இருந்தான். அவனது அமைதியும் ஆதிரைக்கு வேதனையாகதான் இருந்தது. ஆனால் ஆதிரைக்கும் கோவம்தான். அதுவும் கனவின் மூலம் உண்மை அறிந்தபின் தான் காணாமல் போனதும் ஓடி போனவள் என்று முடிவு கட்டிவிட்டு அதே நினைவை இந்த ஜன்மம் வரையிலும் கொணர்ந்திருக்கிறானே. அந்த ஜன்மத்தில் விஸ்வா ராகவிக்கும் திகேந்தருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்று சொன்னதையும் கூட அந்த ஆதிரை நம்பாமல் அர்ஜூன் மீது எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தாள். ஆனால் அந்த இந்தர் ஓடி போனவள் என்று இந்த ஜன்மதிலும் என் மீது கோபம் கொண்டுவிட்டானே. ‘ என்று கல்லாகி முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.


பின் இப்படி அமைதியாகவே இருந்தால் உண்மையை அறிய முடியாது என்பதை உணர்ந்து ஆதிரை மனதில் தோன்றியதை , “அர்ஜூன்.. நான் இரண்டாவது ஜன்மத்தில் ஓடி போனதாக சொன்னீர்கள். ஆனால் எனக்கு ஏதேனும் ஆபத்தாகியிருக்குமென்று தோன்றாமல் எப்படி ஓடியே போய்விட்டதாக முடிவெடுத்துவிட்டீகள். அதன் பிறகு என்னை தேடி வந்து பார்க்க வேண்டுமென்று தோன்றவில்லையா. " என்று ஆத்திரம் குறையாமல் அவனை பார்த்து முறைத்த வண்ணம் கேட்டாள்.


அவ்வளவு நேரமிருந்த இறுக்கம் மறைந்து ஆதிரையின் கோபத்தால் விரிந்த கண்களையும் குவிந்த உதடுகளையும் பார்க்க அர்ஜூனுக்கு புன்னகையே அரும்பியது.


அவனது புன்னகை ஆதிரையின் கோபத்துக்கு தீ மூட்ட, “என்ன சிரிப்பு .. என்ன நடந்தது என்று தீர விசாரிக்காமல் , தேடி வராமலும் என் மீது எவ்வளவு பெரிய பழி சுமத்தியிருக்கிறீர்கள். எனக்கு விளக்கம் வேண்டும். உங்கள் புன்னகையை ரசிக்க எனக்கு இப்போது மனமில்லை" என்று முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்தாள் ஆதிரை. அதற்கும் அர்ஜூனுக்கு சிரிப்பே வந்தது.


இருந்தும் பதில் சொல்லாமல் அவள் கோபம் குறைய வாய்ப்பில்லையென்பதை உணர்ந்து ,” நீ நினைப்பது போல் நீ காணமல் போனதுமே உன்னை தவறாக நினைக்கவில்லை ஆதிரை . சந்தர்ப சூழ்னிலை உனக்கு சாதகமாகவும் இருக்கவில்லை. அதனால் அப்படி நினைப்பதை தவிர விளக்கம் சொல்லக் கூடிய யாரும் இருக்கவுமில்லை.” என்றான் அர்ஜுன்.


“என்ன சூழல்?” என்று நேரிடையாக கேட்டாள்.


“ஆதிரை.. " என்று விழித்து இரண்டாவது ஜன்மத்தில் நடந்தவைகளை அர்ஜூனும் ஒருமுறை சொல்லிவிட்டு ஆதிரை காணாமல் போனது வரை சொல்லி முடித்தான்.


“இதுவரை எனக்கும் என் மழை மேகம் சொல்லிற்று. அடுத்துதான் என்ன நடந்தது என்று சொல்லுங்க?” என்று அவனை அவசரபடுத்தினாள்.


அவளை பார்த்து புன்னகைத்து, “ராகவி என்னிடம் நீங்க இருவரும் விலை மதிப்பில்லாத சிலையை திருடுவதற்காகவே சதி திட்டம் தீட்டி பார்வதியின் சிலையும் தனிமையும் கிடைத்ததும் படகில் ஏறி கிளம்பிவிட்டதாக சொன்னாள். நீங்க இருவரும் பேசிக் கொண்டிருந்ததை நீங்கள் அறியாமல் கேட்டுவிட்டு , நீங்கள் இருவரும் படகில் ஏறி போவதை பார்த்துவிட்டு, அவசர அவசரமாக நாங்க இருந்த குகைக்கு ஓடி வந்த ராகவி, எங்கோ கீழே விழுந்து அவளது காலில் வேறு அடி பட்டுக் கொண்டு வந்து நின்றாள்.


அவள் சொன்னதை முதலில் யாரும் நம்ப முடியாமல் தவித்தோம். அப்போதும் உதயா ராகவி சொல்வதை தடுத்துதான் பேசினாள். ஆனால் அதற்கு ராகவி விளக்கம் வைத்திருந்தாள். உதயாவைதான் பனையம் போல வைத்து ஆதிரையும் விஸ்வனாதனும் காய் நகர்த்தி இருக்கிறார்கள். என்று சில நம்பும்படியான காரணங்களை சொல்லிய பின் உதயா எதுவும் பேசாமல் போனாள்.


பிறகு ராகவி சொல்வதை கேட்டுக்கொண்டு அப்படியே இருக்க மனம் வராமல் , உன்னை தேடி அனைவரும் கடலை நோக்கி வந்தால் உங்கள் படகு இருக்கும் இடம் தெரியவில்லை. என்ன நடந்தது என்று அறிந்திட உன்னை தேடி உடனே கிளம்ப நினைத்தோம். ஆனால் அதற்குள் பார்வதியை இழந்த அந்த தீவு அன்றே நீருக்குள் மூழ்கி போனது.


எங்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. முன் ஜன்மம் போல நீரில் குதித்து கடல் மேல் வருவது பட்டறிவுள்ளவன் செய்ய கூடிய செயலல்ல என்பதை உணர்ந்ததால் பௌர்ணமி தினம் வர நாங்க காத்திருக்க வேண்டியிருந்தது. அதற்கும் நீ காதலனுடன் ஓடி போனதாலே ஏற்பட்ட தெய்வ குற்றமாக ராகவி சொன்னாள். அந்த 10 நாட்கள் இடைவெளியில் உதயா நடந்தவையெல்லாவற்றையும் அந்த தீவின் குகைக்கு வருவதற்கு இருந்த பாதையில் கல்வெட்டாக பதித்தாள். மீண்டும் தீவு மேலே வந்ததும் ராகவிதான் நீங்க இருக்கும் ஊரை சித்து வேலை மூலமாக தியானித்து சொன்னாள்.


அவள் சொன்னது போல் உன்னை தேடி நாங்க அந்த ஊர் வருவதற்குள் நீயும் இறந்து போயிருந்தாய். உன் அருகில் விஸ்வாவும் இறந்திருந்தான். மட்டுமில்லாமல் நீ இருந்த குகைக்கு அருகில் சில கூடாராங்களிலும் சிலர் இறந்து போயிருந்தனர். இதற்கும் தெய்வ குற்றமே காரணமென்று ராகவி சொன்னாள். “ என்று பெருமூச்சுவிட்டான்.


“ராகவி சொன்னாள் ராகவி சொன்னாள் ராகவி சொன்னாள். அவள் யார். அவள் என்னை பற்றி எது சொன்னாலும் நீங்க அப்படியே நம்புவீர்களா? விஸ்வா கூட என்னிடம் நீங்களும் ராகவியும் ஏற்கனவே திருமணமானவர்கள் என்று சொன்னான். நான் நம்பினேனா? இல்லையே. என் இந்தர் அப்படி செய்ய கூடியவர் இல்லை என்று எவ்வளவு நம்பிக்கையிருந்தால் தனியாக மாட்டியிருந்த போதும் , உங்களை பற்றி தவறாக சொன்னால் என்ன செய்வேனென்று தெரியவில்லை என்று அந்த விஸ்வாவிடம் சண்டையிட்டிருப்பேன். உண்மையில் அந்த விஸ்வா என்னை மயக்கமுற செய்து கடத்திக் கொண்டு வந்திருந்தான். ஆனால் உங்களுக்கு என் மீது துளியும் நம்பிக்கையில்லை. நான்தான் இறந்து அந்த மழை மேகத்தை உருவாக்கினேன். அந்த குகைக்குள் நீங்களல்லாமல் வேறு யார்வந்தாலும் மின்னலாலும் இடியாலும் இறக்க செய்யும்படி கட்டளையிட்டிருந்தேன். அதனாலே உங்களை தவிர மற்ற எல்லோரும் இறந்தார்கள். நீங்களும், உங்கள் அருமருந்த ராகவியும் நினைப்பது போல தெய்வ குற்றமுமல்ல , ஒரு மண்ணுமல்ல" என்று அவளையும் அறியாமல் கண்ணில் நீர் வழிய அர்ஜூனை நோக்கி சொன்னாள்.


அவளது கண்ணீர் அர்ஜூனை உலுக்கியது என்றால் அவள் சொன்னதன் உண்மை வேறுவிதமாக உலுக்கியது. ஆதிரையை ஆருதல் படுத்தும் எண்ணத்தடன் அவளது தோள் மீது கை வைத்தவனின் கையை விளக்கிவிட்டு லேசான தேம்பலுடன் முகம் திருப்பிக் கொண்டாள்.


"ஆ.. ஆதிரை, வருந்தாதே.. இப்போது புரிகிறது. ராகவியும் விஸ்வாவும் இணைந்துதான் இந்த திட்டம் தீட்டியிருக்க வேண்டும். ராகவிக்கு லேசான வசியமும் தெரியும். வசியமென்றால் அவள் சொல்வதை நம்ப வைக்கும் அளவுக்கு அவளது சொல்லும் தொடுகையும் இருக்கும். அதனாலே உதயாவும் , நானுமே அவளது வார்த்தைகளில் அப்படியே நம்பி நடந்துக் கொண்டோம். உன்னை போல நாங்களும் ஏமாற்ற பட்டோம் என்பதே உண்மை. இதனை நீ உணர்ந்துக் கொள்ள வேண்டும். விஸ்வாவின் மனம் பற்றி நாம் இருவரும் தவம் முடிந்ததும் பேசிக் கொண்டோமே. ஆனால் ராகவின் எண்ணம் நம்மால் அறிய முடியவில்லை .. அதிலிருந்தே தெரிகிறதா? அவளுக்கு இந்த தவத்தின் வலிமை தெரிந்து அவளது சித்து வேலை மூலம் அவளது எண்ண போக்கை மறைத்திருக்கிறாள்" என்று விளக்கம் சொன்னான்.


அவனது பதிலில் நிமிர்ந்த ஆதிரை, யோசித்து பார்த்ததும் அர்ஜூன் சொல்வது உண்மையே என்பது போல் தோன்றியது. அவனை பார்த்த வண்ணமே, “ அப்படியும் இருக்குமோ!” என்று சட்டென நின்றுவிட்ட அழுகையில் ஈரம் காயாத கண்ணீருடன் விழி விரித்து அவனிடம் கேட்டாள்.


அவளது முகவாயை பிடித்து, “யோசித்து பார்த்தாள். அப்படிதான் இருக்க வேண்டும். நாங்க நீயிருந்த குகைக்கு வந்த பிறகு நடந்ததை சொல்கிறேன் கேள். அப்போதுதான் உனக்கு தெரியும். " என்று மேலும் சொல்ல ஆரம்பித்தான்.


"நான் பார்த்த போது நீ உருவாக்கிய மழை மேகம் பார்வதியின் சிலையை யாரும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கேனும் விஸ்வாவுடனே என்றாலும் நீ உயிருடன் இருந்திருந்தால் பரவாயில்லையென்று தோன்றிய எனக்கு நீ இறந்திருந்தது பேரதிர்ச்சி.


நான் இப்படி இருக்க ராகவி வேறு சொன்னாள். இனி உன்னை நினைத்து நான் கவலை கொள்ளாமல் வேறு திருமணம் செய்துக் கொள்வது நல்லது என்றாள். அப்போது கூட நான் அவளை தவறாக நினைக்கவில்லை. தோன்றவில்லை. அல்லது அவள் சொன்னது காதிலே விழவில்லை. என் எண்ணெமெல்லாம் உன்னை சுற்றியே இருந்தது. நீ என்னை விட்டு ஓடி வந்தது கூட பெரியதாக தெரியவில்லை. மாறாக உயிருடன் இல்லையென்பதே தவிப்பாய் இருக்க அந்த குகையிலே சில வாரங்கள் இருந்தேன். சில வாரங்கள் கழித்து அங்கு வந்த ராகவி பின் அவளை திருமணம் செய்துக் கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டாள். ஆனால் என்னால் உன்னை தவிர வேறு யாரையும் நினைக்க முடியவில்லை.


அவளிடம் மறுத்து இனி இங்கு வர வேண்டாமென்று அவளை அனுப்பிவிட்டேன். அதன் பிறகு அவள் வரவில்லை. மீண்டும் ஒரு முழு வருடம் அந்த குகையில் பார்வதியை நோக்கி தவமிருந்தேன். அந்த கால இடைவெளியில் மழை மேகம் அமைதி அடைந்து இல்லாமல் போயிருந்தது. பார்வதியின் அருளால் எதிர்காலம் யூகிக்கும் அருள் கிடைத்தது. அப்படியான தவ வலிமையாலே ரேவதி மற்றும் கந்தர்வன் பற்றி அறிந்துக் கொண்டேன். அவர்களை நோக்கி பயணித்தேன். அதன் பிறகு நடந்தது நம் தாத்தா மூலம் நீ அறிந்ததுதான்.” என்று முழு விளக்கம் கொடுத்தான் அர்ஜூன்.


அவன் சொல்வதை எந்தவித குறுகிடலும் செய்யாமல் அமைதியாக கேட்டிருந்த ஆதிரை., “இப்போது புரிகிறது. அந்த ராகவி மற்றும் விஸ்வாவால் நம் வாழ்வு போன ஜன்மத்திலே இணையாமல் மீண்டும் பிறந்து வந்து இந்த ஜன்மத்தில் இணையும்படி ஆனது.” என்று சலிப்பும் கோபமுமாக சொன்னாள்.


“இந்த ஜன்மத்தில் இணைந்து இருக்கிறோமென்று யார் சொன்னது?” என்று நக்கலாக கேட்டான்.


“ஏன் இல்லை.. நமக்கு திருமணம் நடந்துவிட்டதே. அடுத்த மாதத்திற்குள் சிவனையும் பார்வதியையும் இணைத்துவிட்டால் நம் கடமையும் முடிந்துவிடும்" என்று பெருமூச்சுவிட்டாள்.


“திருமணம் நடந்துவிட்டதா? அப்போது நீ என் மனைவி எங்கிறாய்? பிறகு மற்றதில் என்ன தயக்கம்?” என்று நேரிடையாக அர்ஜூன் கேட்டதும் ஆதிரைக்கு குப்பென்று வியர்தது.


"அ.. அது.. அர்ஜூன் வந்து" என்று இழுத்தவள், மறுமணமென்று பேசிவிட்டு இப்படி கேட்டாள் என்ன பதில் சொல்வது அவனிடம் இது குறித்து வெளிப்படையாக பேசவும் கூச்சமுற்று, “அது குறித்து நம் கடமை முடிந்ததும் பேசலாமே" என்று கெஞ்சலாக கேட்டாள்.


அவளது பதிலில் அர்ஜூனுக்கு லேசான கோபமே வந்தது. இருந்தும் வெளிக்காட்டாமல், “கிளம்பலாம்.இப்போதே இருண்டுவிட்டிருக்கும். நான் உன் உடன் இருப்பதால் வீட்டில் தேட மாட்டார்கள்தான். இருந்தாலும் இங்கு அதிக நேரம் இருப்பது நல்லதும் அல்ல" என்றான்.


அர்ஜூன் திடீரென்று கிளம்பலாமென்றதும் பேந்த பேந்த விழித்த ஆதிரை, உடனே சுதாரித்து, “கிளம்பலாம்" என்றாள்.


பதிலாக எதுவும் பேசவில்லையென்ற போதும் அந்த மூங்கில் பாயை எடுத்து முன்பிருந்த இடத்தில் வைத்தான் அர்ஜூன். அருகில் சலசலத்துக் கொண்டிருந்த அருவி நீரை அங்கிருந்த மூங்கில் குடுவையில் அள்ளிக் கொண்டு வந்து அந்த குகையில் எரிந்துக் கொண்டிருந்த தணல் மற்றும் தீப்பங்களில் தெளித்து அணைத்துவிட்டு ஒரு திப்பந்தத்தை மட்டும் கையோடு எடுத்துக் கொண்டு அவளை கை பற்றி அந்த குகையிலிருந்து வெளியே அழைத்து வந்தான். ஆதிரையும் எதுவும் பேசாமல் அவனுடன் நடந்தாள். சூரியன் முழுதும் மறைந்து வெகு நேரம் ஆனது போல சந்திரனின் கதிர்கள் உச்சி வானிற்கு வந்திருந்தது.


இரவென்ற போதும் பௌர்ணமி நெருங்கிவிட்டதால் உண்டான சந்திரனின் அதீத வெளிச்சத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நட்சத்திரங்களே இருந்தது. அர்ஜூனிடம் வரும் போது பேசியது போல இயல்பாக பேச நினைத்த போதும், அவனது இறுகிய முகம் அவனிடம் மேலும் பேசுவதை தடுக்க அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தனர். அவர்களின் ஆடை முறைகளை பார்த்த வீட்டினரிடம் அருவியில் நனைந்துவிட்டதால் கல்குகைக்கு சென்றொம் என்று சொல்லி அர்ஜுன் சமாளிக்க ஆதிரையும் அதனைய் ஒத்து பாட அதிகம் பேச வாய்ப்பில்லாமல் இரவு உணவுக்கு பின் இருவரும் அறை சென்று அடைந்துக் கொண்டனர்.


சிவசக்தி பாட்டியிடம் குழந்தைகளை பற்றி சொன்னதன் விளைவாக குழந்தைகள் ஆதிரையின் அறையிலிருந்து அவர்களின் வழக்கமான அறைக்கு மாற்றபட்டிருந்தனர். அர்ஜூனும் ஆதிரையும் தனியே இருந்த போதும் இருவரும் ஒருவருக்கு மற்றொருவர் எதுவும் பேசும் எண்ணமில்லாமல் அந்த பெரிய கட்டிலில் ஆளுக்கொரு முனையில் படுத்து உறங்கியும் போயினர். மறுனாள் காலை சென்னைக்கு கிளம்பிய போது , அந்த ஊரில் ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி வந்துவிட ஆதிரை உதவிக்காக இந்திரபிரதேசிலே இருக்கும்படி சூழல் ஆகிவிட்டது.


மனமே இல்லாமல் ஆதிரை அர்ஜுனுக்கு வழி அனுப்பி வைத்தாள். ஆனால் அர்ஜூனுக்கு அப்படியில்லை போலும் , மிகவும் மகிழ்ச்சியாகவே ஆதிரையை விட்டுவிட்டு கிளம்பினான். அர்ஜூன் கிளம்பி சென்ற மறுநாள். அவனிடமிருந்து phone வரும் என phone அருகிலே அமர்ந்திருந்தாள். ஆனால் கடைசி வரை அர்ஜூன் phone செய்யவே இல்லை. பௌர்ணமியன்று அந்த தீவிற்கு போவதாக சொன்னானே , இன்றுதான் பௌர்ணமி, இரவாகி போனதே .. இன்னமும் phone செய்யவில்லையே! “ என்று மொட்டு மொட்டு என்று இரவு தூங்கும் நேரம் கடந்தும் இருக்கும் இடத்திலேயே அமர்ந்திருந்த ஆதிரையின் அருகில் வந்த சிவசக்தி பாட்டி, “ நீ போய் தூங்குமா. அர்ஜூன் விரைவிலே phone செய்வான். பௌர்ணமி நாளை காலை 3 மணி வரை இருக்கிறது. எப்படியும் அழைத்து சொல்வான்.” என்று ஆருதலாக சொன்னார்.


ஆனால் அவள் அசையாமல் இருப்பதை பார்த்து ரிதிகாவிடம் சொல்லிவிட்டு சிவசக்தி உறங்க சென்றுவிட்டாள். ரிதிகா அவளை அழைத்து சென்று உடன் படுத்துக் கொண்டு அவளை தூங்க வைத்தாள். ரிதிகாவின் முன் தூங்குவது போல பாசாங்கு செய்த போதும், உறக்கம் பிடிக்காமல் எழுந்து சென்று அர்ஜுனின் mobile phone -க்கு phone செய்தாள். ஆனால் யாரும் எடுக்காததும் , இனி பொறுக்க முடியாது என்று ஒரு கடித்ததை எழுதி வைத்து விட்டு ஆமை போல் ஊர்ந்து குதிரைகள் இருக்கும் குதிரைலாயத்திற்கு சென்றாள்.


அங்கு உறங்கிக் கொண்டிருந்த முன்பு பார்த்த தாத்தாவை எழுப்பி விளக்கம் சொல்லி குதிரையில் சென்று சிம்லாவில் தன்னைவிட்டு விட்டு வருமாறு கேட்டாள். அவர் மறுக்க கூடுமென்று எண்ணியிருந்த ஆதிரை , அதற்கான காரணம் சொல்ல சில பதில்களை தயார் நிலையில் வைத்திருந்தாள். ஆனால் அதற்கு அவசியமில்லாமல், ஆதிரையை குதிரையில் ஏற்றிக் கொண்டு அவர் சிம்லாவை நோக்கி புறப்பட்டார்.

 

periyauma

Well-Known Member
Ragavi behaviour and y thikandira and adhi not able to find out was explained well . Having my fingers crossed till adi reach safely with arjun .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top