தீத்திரள் ஆரமே -15

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒவ்வொரு நாளும் ஐந்து முறை வெவ்வேறு நிறங்களில் மாறுவதால், “பஞ்சவர்ணேஸ்வரர்” என்கிற சிறப்புப் பெயரில் அழைக்கப்படுகிறார்.

அன்று மாலை சசிக்குப் பெண் பார்க்கும் படலம் இருப்பதால் நேரமாகவே கம்பெனியில் இருந்து கிளம்பி விட்டாள் ஆரா.

பெண் வீட்டிற்கு அனைவரும் கிளம்பினர் அங்கு பெண்ணிற்கு ஏற்கனவே ராஜா என்ற அண்ணன் இருக்க,அவனுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்,

பெண் பார்க்கும் படலம் சிறப்பாக அரங்கேறியது, சசிக்கு புகைப்படத்திலையே சஷ்டிகாவை பிடித்திருந்ததால் நேரில் பார்க்க ஆவலாக காத்திருந்தான் சசி,

அவனுக்கு சற்றும் குறையாத ஆவலுடன் சஷ்டிகாவும் காத்திருக்க,சசியின் முகம் ஜன்னல் வழியாகப் தெரிகிறாதா எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.ச
ஷ்டிகாவை காபி கொண்டு வரச்சொல்லி அவள் அம்மா தனம் அழைக்க, அவளும் கையில் காபியோடு வெளியே வந்தாள்

பேச்சுவார்த்தைகள் முடிந்து மாப்பிள்ளை பெண் இருவரிடமும் சம்மதம் கேட்டனர் பெரியவர்கள், இருவரும் ஒரே நேரத்தில் தங்களுக்குப் பிடித்திருப்பதாக கூற அதைக்கேட்டு சபையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

அதன்பிறகு சஷ்டிகாவின் அப்பா குமரேசன் எப்போது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றுக் கேட்டார்..

"உங்க விருப்பம் தான், எங்களுக்கு எப்போனாலும் ஓகே தான்" என்றார் குழந்தைவேலு.

"அப்போ அடுத்த முகூர்த்தத்தில் நிச்சயம் வெச்சிக்கலாம்" என்ற குமரேசனை சுரண்டினார் தனம்.

"ஒரு நிமிஷம் வந்தரேன்" என்று உள்ளே சென்றார் குமரேசன்.

"ஏங்க நம்ப பையனுக்கு அந்தப் பொண்ணு ஆராவை புடிச்சிருக்குனு சொல்றான் .. ஒரே வீட்டுல அண்ணன்,தங்கச்சி ரெண்டு பேரும் இருக்கறது நமக்கு நல்லது தானே, அந்தப் பொண்ணு பார்க்க அமைதியா அழகா இருக்கு, கேட்டுப் பாருங்க" என்றார்.

"ம்ம் நல்லது தான்,ஆனா அவங்க என்ன சொல்லுவாங்கனு தெரியலையே."

"பையனுக்கு விருப்பம்னு சொல்லிக் கேளுங்க, என்ன சொல்ராங்கனு பார்க்கலாம்" என்றார்.

"சரி" என்று வெளியே போனவர் அனைவரிடமும் விஷயத்தை கூறினார்.

"எங்க பையன் ராஜாவுக்கு உங்க பொண்ணைப் புடிச்சிருக்கா, நீங்க உங்க பொண்ணை எங்க பையனுக்கு கொடுத்தீங்கன்னா அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்த மாதிரி இருக்கும்,நமக்கும் பொண்ணை அசல்ல குடுக்கறோம்னு பயம் இருக்காது"என்று பட்டென்று ஆராவை பெண்ண கேட்டு விட்டார் குமரேசன்.

அதைக் கேட்டதும் குழந்தைவேலு குடும்பத்திலிருந்த அனைவருக்குமே அதிர்ச்சி.

"இல்ல அம்மு படிச்சிட்டு இருக்கு,இப்ப கல்யாணம் பண்ற மாதிரி ஐடியா இல்லை" என்றான் சசி.

"அதான் படிப்பு முடிக்க போகுதில்ல, இன்னும் ஒரு ஆறு மாசம் தானே இருக்கு கல்யாணம் பண்ணிட்டு மீதி படிப்பைப் படிக்கட்டுமே" என்றார்.

இவர்கள் இப்படிக் கேட்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை, இது ஆராவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

"அவ சின்ன பொண்ணுங்க, இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் கொஞ்ச நாள் ஆகட்டும்" என்றார் திலகா.

அவர் ஒரு சிவன் பக்தை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான், தன் மருமகனாக வர போகிறவன் ஈஸ்வர் என்ற பெயரிலோ, இல்லை ஈஸ்வரனைப் போன்ற குணம் உடையவனாகவோ இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம், அதற்காக தானே கடவுள் பார்வதியின் பெயரை தன் மகளுக்கு வைத்தார்.

ராஜாவை பார்க்கும் பொழுது அவருக்கு அப்படி ஒரு எண்ணம் எழவேல்லை.இவன் பெயரில் மட்டும் இல்ல குணத்தில் கூட தான் எதிர்பார்ப்பது போல் இல்லை என்று நினைத்துக் கொண்டார்.

"நாங்க யோசிச்சு சொல்றோம்" என்றார் வேலு.

"நீங்க பொண்ணு கொடுத்தா தான் நாங்க பொண்ணு கொடுப்போம்னுலாம் எதுவும் இல்ல,நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம் நீங்க யோசிச்சு சொல்லுங்க உங்களால முடியலைனாக் கூட பரவாயில்லை,அடுத்த முகூர்த்தத்திலேயே எங்க பொண்ணுக்கும் உங்க பையனுக்கும் நிச்சியத்தை வச்சிக்கலாம்" என்றார் குமரேசன்.

"சரி" என்று அங்கிருந்து அனைவரும் கிளம்பி சென்றனர்.

"என்னம்மா இது அண்ணாவுக்கு பொண்ணு பாக்கலாம் வான்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு இப்போ என்னைவே பொண்ணாக்கிட்டிங்க, அந்த ராஜாவோட பார்வையும் அவனும் ஆளே சரில்ல, இவனுக்கு நானா?" என்றாள் ஆரா.

"நாங்க மட்டும் என்ன இது எதிர்பார்த்தா வந்தோம் வந்த இடத்துல கேட்டுட்டாங்க புடிச்சா சரி சொல்லுவோம் இல்லையா, வேண்டாம்னு சொல்லுவோம், பொண்ணுனு இருந்தா கேட்க தான் செய்வாங்க இதுக்கெல்லாம் கவலைப் படக்கூடாது" என்றார் திலகா.

"இப்ப எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமெல்லாம் இல்லை, முதல்ல சசி அண்ணாவுக்கு முடிங்க, அப்புறம் பரணி அண்ணாவுக்கு முடிங்க, ரெண்டு அண்ணியும் வீட்டுக்கு வந்து நான் அவங்க கூட நல்லா பிரண்ட் ஆனதுக்கு அப்புறம் வேணா என்ன பத்தி யோசிக்கலாம்" என்றாள் பெருந்தன்மையாக சொல்லுவது போல்.

"சரி விடு கண்ணு அவங்க கிட்ட சொல்லிக்கலாம்" என்றார் குழந்தை வேலு, அவருக்குமே அந்த வீட்டில் மாப்பிள்ளை எடுப்பதில் விருப்பமில்லை.

வீட்டிற்கு போனதுமே மாநாடு கூட்டப்பட்டு அனைவரும் இதைப் பற்றி ஆலோசித்தனர், அனைவருக்குமே தற்போது ஆராவிற்கு மணம் முடிப்பதில் சிறிதும் விருப்பமில்லை,

அதனால் குமரேசன் வீட்டிற்கு அழைத்து பெண் கொடுக்க விருப்பமில்லை என்பதை தெளிவாக உரைத்து விட்டார் வேலு.

"ஒன்னும் பிரச்சனை இல்லங்க, பொண்ணு பிடிச்சிருந்ததால கேட்டோம் உங்களுக்கு கொடுக்க விருப்பம் இல்லைங்கிறப்போ நாங்க வற்புறுத்த விரும்பல, பேசுனது போல அடுத்த முகூர்த்தத்துல நிச்சயத்தை வச்சுப்போம்" என்றார்.

"ஓகே சம்மந்தி" என்றார் குழந்தைவேலு.

நாட்கள் மாதங்களாக மாறி வேகமாக ஓட, கம்பெனியில் சக்தி இருந்த பக்கமே திரும்பாமல் வேலையைக் கற்றுக்கொண்டு வீட்டிற்கு ஓடி வந்துவிடுவாள் ஆரா..

சக்திக்கும் வேற வேலை இருந்ததால் ஆராவைப் பெரிதாகக் கண்டுக் கொள்ளவில்லை.

இதற்கு இடையில் சசிதரண் சஷ்டிக்காவின் நிச்சியதார்த்த விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட அடுத்த மாதத்தில் கல்யாணத்தை வைத்திருந்தனர்.

எப்போதும் போல் கம்பெனிக்கு கிளம்பிய ஆராவின் மனம் என்றும் இல்லாமல் இன்று ஏதோ முரண்டுபிடித்தது.

"என்னாச்சி உனக்கு ஏன் ஒரு மாதிரி கணமாவே இருக்க அமைதியாகு கூல் சில்" என்று எவ்வளவோ சமாதானம் செய்தும் அவள் மனம் சமாதானம் ஆகவில்லை ஒருவித பாரத்துடன் இருந்தது .

அதோடு தான் அன்று கம்பெனிக்கு கிளம்பி சென்றாள் ஆரா.

கம்பெனி பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

"இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷலான டே வா பாலா எல்லோரும் ஒரு மாதிரி ஜாலியா இருக்காங்க" என்று கேட்டாள்.

"அப்படினு எதுவும் இல்ல, இன்னிக்கு சக்தி சாரும் அந்த ஷீலாவும் எங்கையோ வெளிய போயிருக்காங்க அதனால தான் எல்லோரும் சந்தோசமா இருக்காங்க, சக்தி சாரை விட அந்த ஷீலாவோட டார்ச்சர் தான் அதிகம்" என்றான்.

ஷீலா என்ற ஒருத்தி கம்பெனியில் இல்லை என்றதும் அனைவருக்கும் இவ்வளவு சந்தோசம் என்றால் அவளால் இங்கு எல்லோரும் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று புரிந்தது ஆராவிற்கு..

"ஆரா இன்னிக்கு டைல்ஸ் கம்பெனிக்கு போய் நம்ப புது ப்ராஜெக்ட்டு தேவையான டைல்ஸ் செலக்ட் பண்ணனும், நீயும் வரியா?"என்று கேட்டான் பாலா.

"ஓ போலாமே எங்க அண்ணா அங்க தான் ஒர்க் பன்றாங்க " என்று சந்தோசமாக கிளம்பியவள் என்ன வேலையில் இருக்கிறான் என்று பாலாவிடம் சொல்ல மறந்துவிட்டாள், சொல்லிருந்தால் ஒருவேளை அழைத்துச் சென்றிருக்க மாட்டானோ என்னவோ,

ஆரா சந்தோசத்துடன் கிளம்பியவள் வரும்போது அதே சந்தோசத்துடன் வருவாளா?.

பாலாவுடன் காரில் டைல்ஸ் கம்பெனிக்கு முதன்முறையாக வந்தாள்.

விதுர்ணா டைல்ஸ் கம்பெனியில் தான் இன்டென்ஷிப் செய்தாள். இன்று கிருத்திகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேலை இருந்ததால் கம்பெனிக்கு வரவில்லை விதுர்ணா.

"ஆரா இங்க வர டைல்ஸ் எல்லாம் குஜராத், பிகார்ல இருந்து வரது.. எல்லாமே பயங்கர குவாலிட்டியா இருக்கும், குவாலிட்டி இல்லாத ஒன்னை நம்ப சார் வாங்கவும் மாட்டார், விற்கவும் மாட்டார், அதனால தான் ஆடர் எல்லாம் இங்க வந்து குமியுது" என்று சக்தியின் புகழைப் பாடிக்கொண்டு வந்தவனை கவனிக்காமல் அங்கு இருந்த டைல்ஸை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாள் ஆரா.

மேனேஜரைப் பார்க்க வேண்டும் என்று பாலா அங்கிருந்த பெண் ஒருவரிடம் சொல்ல.

"சார் ஒரு மீட்டிங் விசயமா வெளியே போயிருக்காங்க..சார் போகும் போது சொல்லிட்டு தான் போனார் நீங்க வந்தா டைல்ஸ் காட்ட சொல்லி", என்றவள், "புதுசா ஒரு மாடல் வந்துருக்கு இன்னும் அது ஷோரூமுக்கு வரல, வாங்க காட்டரேன்" என்றாள்.

அப்போது பார்த்து ஒருவன் வந்து அந்த பெண்ணிற்கு வேறுவேலைக் கொடுக்க

"சாரி சார், எனக்கு ஒர்க் வந்துடுச்சி உங்களோட அனுப்ப இங்க யாரும் பிரீயா இல்லை, நீங்க ரெகுலரா வர இடம் தானே உங்களுக்கு எது எது தேவைன்னு நீங்களே பேஸ்மன்ட்க்கு போய் பாருங்க, அங்க ஒர்க்கஸ் இருப்பாங்க"என்றாள்.

"சரி"என்ற பாலா ஆராவை அழைத்துக் கொண்டு தரைத் தளத்திற்குச் சென்றான்.
தரைத்தளம் குடோனாக இருந்தது அதில் நுழைந்ததும் பாதி இடம் காலியாக இருக்க அதற்கு பின் தான் டைல்ஸ் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

"வாவ் பாலா இவ்வளவு வெரைட்டி டைல்ஸ் இருக்கா..? இன்னிக்கு தான் பார்க்கறேன்" என்றாள் ஆச்சரியத்துடன்.

"இதுலாம் மேலே ஷோரூம்லையே ஒவ்வொரு பீஸ் சேம்பிள்க்கு வெச்சிருப்பாங்க கஸ்டமர் யாரையும் இங்க விடமாட்டாங்க. இது நம்ப கம்பெனிக்கு தேவையானதுனு தான் நம்பலையே இங்க விட்டுருக்காங்க, அதும் இல்லாம புதுரக வால் டைல்ஸ் இன்னிக்கு தான் வந்துருக்கு அதை இன்னும் ஷோரூம்க்கு கொண்டுப் போகல போல அதனால அதைப் பார்க்கவும் தான் வந்துருக்கோம்" என்றான்.

அங்கு டைல்ஸ் ரக ரகமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் இருந்த ரகத்தைப் பாலா பார்த்துக் கொண்டிருக்க.

"பாலா நான் உள்ளேப் போய் பார்க்கறேன்"என்றாள் ஆவலாக.

"அங்கலாம் வேணாம் ஆரா.. உள்ளேப் போனா போயிட்டே இருக்கும் கூப்பிட்டாக் கூட காதுக் கேக்காது, நம்ப சீக்கிரம் கம்பெனிக்கு போகணும் அதனால இங்கையே இரு"என்றான்.

"அண்ணா மீட்டிங் முடிச்சி வந்ததும் பார்த்துட்டுப் போலாமே" என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்ததைப் பார்த்துக்கொண்டு குடோனின் கடைசிக்கு சென்றுவிட்டாள்.

பாலா பத்து நிமிடத்தில் அவனுக்கு தேவையானதை குறித்துக் கொண்டவன், ஆராவை போனில் அழைத்தான் அவள் உள்ளே எதையோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

போனை எடுத்த ஆராவிடம்

"ஆரா போலாமா?"

"இன்னும் என்ன வேலை இருக்கு பாலா?"

"இதைக் கொண்டு போய் குடுத்துட்டு மேனேஜர் வந்ததும் சொல்லிட்டு கிளம்ப வேண்டியது தான்".

"அப்போ இதைக் கொண்டுப் போய் நீங்க குடுத்துட்டு வாங்க,அதுக்குள்ள நான் மீதியையும் பார்த்துடறேன், அண்ணா வந்ததும் கேண்டீன் போய் அவருக்கு செலவு வெச்சிட்டு நம்ப கம்பெனிக்கு போலாம்" என்றவள் இப்போதும் அவள் அண்ணன் தான் கம்பெனி மேலாளர் என்று பாலாவிடம் சொல்லவில்லை.

ஆரா அவளது அண்ணனைப் பார்த்துவிட்டு தான் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதை புரிந்துக் கொண்ட பாலா,

"உங்க அண்ணாவுக்கு போன் பண்ணி நம்ம வந்துருக்கோம்னு சொல்லு அவரைப் பார்த்துட்டு கிளம்பலாம்" என்றான்.

"அவர் வேலையா வெளியே போயிருக்கார்,வந்ததும் பார்த்துட்டு போலாம்" என்றாள்.

"சரி நீ பாரு,நான் குடுத்துட்டு வந்துடரேன்" என்று போனை வைத்தவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top