ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா

#1
**ஸ்ரீராம ஜெயம்**

ஶ்ரீ துளசிதாசரை ஒருமுறை தனது அரசவைக்கு வரவழைத்த மன்னன் அக்பர், “நீர் பெரிய ராம பக்தர் என்று நாடே கூறுகிறது
பல அற்புதங்களையும் செய்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்...
எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்" என்றான் ஏளனமாக.

அதற்கு ஶ்ரீ துளசிதாசர், “நான் மாயாஜாலக்காரன் அல்ல;
ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!" என்று சொல்ல, கோபப்பட்ட அக்பர், “ மன்னன் கூறியதை அவமதித்த முதல் மனிதர் நீர்” என்று அவரை பாதாளச் சிறையில் அடைத்தான்.

‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்
என்னுடன் சீதா சமேத ஶ்ரீ ராமபிரான் ஆஞ்சனேயரோடு இருக்க எனக்கென்ன பயம் “என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு “போற்றி பாடல் - "ஹனுமான் சாலீஸா” இயற்றி வழிபட்டார்.
ஶ்ரீ ஆஞ்சனேயரின் பராக்ரமத்தை பக்தியுடன் கண்ணீர் மல்க நாற்பது பாடல்களை இயற்றி பாடி முடித்ததும், எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து துவம்ஸம் செய்ய ஆரம்பித்தன.

படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் கடிபட்டார்களே தவிர, விரட்ட முடியவில்லை.
அக்பரிடம் சென்ற தளபதி, ‘ஶ்ரீ ராம பக்தரான துளசிதாசரை’ கொடுமைப்படுத்துவதால் ஶ்ரீ ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.

துளசிதாசரை விடுவித்தால்தான் பிரச்னை நீங்கும் என்று தோன்றுவதாக ஆலோசனை அளித்தார்...
உடனே ஶ்ரீ துளசிதாசரை விடுவித்தான் அக்பர்.
மறுகணமே வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.
மீண்டும் கண்ணீர் மல்க வானரங்கள் மறைவதைப் பார்த்துக் கொண்டே
ஶ்ரீ ராமபிரானையும், ஶ்ரீ ஆஞ்சநேயரையும் தரையில் வீழ்ந்து வணங்கினார்...

பிறகு மன்னரிடம் “ஶ்ரீ ராமனை வழிபட்டால் அவர் அற்புதங்களை செய்வார்...
நான் வெறும் பக்தன்தான்” என்று பணிவுடன் கூறி மன்னர் அக்பருக்கு நன்றி தெரிவித்தார்...

பயந்து போன அக்பர் ஶ்ரீ துளசிதாசரை வணங்கி தனது தேரிலேயே அவரை வழியனுப்பி வைத்தான்.

ஶ்ரீ துளசிதாசர் சிறையில் இருந்த போது பாடிய போற்றிப் பாடல்கள்தான் “ஸ்ரீ அனுமன் சாலீஸா”
இதை தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்;
நன்மைகள் தேடி வரும்!
இது உண்மை..

*ஜெய் ஸ்ரீராம்!

 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement