ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:):)
1.jpgcharulatha இவங்க இங்க என்ன பண்ணுறாங்க:unsure::unsure:
images (28).jpgimages (24).jpg

அத்தியாம் 8



கனகாம்பாள் சத்யதேவ் மற்றும் தமிழ்செல்வியின் கைகளை பிடித்தவாறே கோவிலுக்குள் செல்ல அவர்களை பின் தொடர்ந்த ரோஜாவுக்கோ என்ன நடக்க போகிறது என்று கொஞ்சமேனும் நினைக்க தோன்றவில்லை. கனகாம்பாள் சத்யதேவின் கையில் தாலியை கொடுத்து கட்ட சொன்னதும் எங்கே சத்யதேவ் மறுத்து விடுவானோ என்று அச்சம் கொண்டவள் தன் அன்னை சொன்னதை நினைத்துப் பார்த்தாள்.



கோமளவள்ளி ரோஜா சின்ன வயத்துல இருந்தே சத்யாவை நீ தான் கட்டிக்கணும் இல்லனா தாமரை கட்டிப்பா, உறவு விட்டு போய்டும். அப்பொறம் தாமரை எல்லா விதத்திலும் உன்ன விட ஒசந்துடுவா அவளுக்குத்தான் எல்லா உரிமையும் கிடைக்கும் அப்பொறம் நீ விருந்தாளி போல வந்துடு போக வேண்டியது தான் என்றும் அப்பா செல்வராஜின் மேல் சித்தி ஆசைபட்டதாகவும் அப்பா தன்னை காதலித்து மணந்ததாகவும் சொல்லி இருக்க பதின் வயதில் அன்னையின் அறிவுரை கேட்டு தாமரையையும் சித்தி மரகதத்தையும் முறைத்த வண்ணமே இருந்தாள்.



தந்தை செல்வராஜ் தாமரையுடன் அன்பாக பழகுவதை பிடிக்காமல் தந்தையுடன் சண்டை பிடிக்க "அவள் உனக்கு தங்கை தானே இதே சித்தப்பா உன்ன கொஞ்சினால் தாமரை முறைக்கிறாளா? அவளுக்கு நீயும் உனக்கு அவளும் தானே இருக்கீங்க. முல்லை, மல்லிகை குழந்தைங்க வேற ரொம்ப சின்னவங்க, தூரத்துல வேற இருக்காங்க. இப்படி தனியா நீ மட்டும் இருந்து என்ன சாதிக்க போற" என்று அறிவுரை செய்ய அது கொஞ்சம் வேலை செய்தது. அன்னையின் அறிவுரையும் தந்தையின் அறிவுரையும் சேர்ந்து தன்னை குழப்ப சுயமாய் சிந்திக்க ஆரம்பித்த போது அன்னை பண்ணுவதெல்லாம் தப்பாய் தோன்ற ஆரம்பித்தது. அதன் பின் அன்னை என்ன சொன்னாலும் தலையை ஆட்டியவாறு செல்பவள். அன்னை இல்லாத போது மரகதவள்ளியிடம் செல்லம் கொஞ்சுவாள்.

எல்லாவற்றையும் பொறுத்தவளுக்கு அன்னை சத்யதேவை திருமணம் செய்ய சொன்ன காரணம் அன்னையை விட்டு தள்ளி வைத்தது. சின்ன வயதில் குடும்பத்தை காரணம் சொன்ன கோமளவள்ளி பெரியவளானதும் பணத்தை காரணம் காட்டினாள். அன்னையின் சுயரூபம் கண்டு ரோஜா அதிர்ச்சியடைந்தாலும் எதுவும் சொல்லாது அமைதியானாள்.



“அன்னையின் ஆசை ஒருகாலமும் நிறைவேத்த மாட்டேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் தாமரையை கட்ட சொல்வேன்” என்றிருக்க, தாமரையின் மனதில் அன்னை சொன்னது போல் எந்த எண்ணமும் இல்லாதது அன்னையின் கேவலமான எண்ணப் போக்கை நன்றாக எடுத்துக் காட்டியது.



தாமரை கண்ட கனவை சொன்னதும் செல்வியின் தோற்றமும், குணமும் மாமா சத்யதேவ்வுக்கு பொருந்தினாலும் தனது அன்னையை சமாளிக்கும் திறமை அவளிடம் இல்லையென்று எண்ணியவள் பாட்டி சொன்னதும் மாமா தமிழ்செல்வியின் கழுத்தில் தாலி கட்டியது என்னவோ தனது அன்னைக்கு விழுந்த முதல் அடியாகவே தோன்றியது.



"ரோஜா, தாமரை போய் ஆரத்தி தட்ட எடுத்துட்டு வாங்க சத்யதேவையும் தமிழ்செல்வியையும் ஒன்றாக வண்டியிலிருந்து இறங்கச்சொன்ன கனகாம்பாள் ரோஜாவுக்கும் தாமரைக்கும் உத்தரவிட சிட்டாக பறந்திருந்தனர் இருவரும்.

அங்கே நடப்பதை ஊர் மக்கள் வேடிக்கை பார்க்க தமிழ்செல்வியின் எண்ணமோ தம்பிகளை சுற்றி இருந்தது. பாட்டி பார்வதியை மெதுவாக அழைத்தவள் அவர் காதில் குசு குசு வென ஏதோ சொல்ல கல்யாணப் பொண்ணு என்றும் பாராமல் தமிழின் தலையில் கொட்டினார் பார்வதி பாட்டி.

அவள் கேட்டது "எப்ப நம்ம வீட்டுக்கு போகப் போறோம் மதியானத்துக்கு சமைக்கணும்" என்பதே பாட்டி தலையில் கொட்ட தமிழ் கத்த சத்யதேவ் பாட்டியை முறைத்தான்.



"அது ஒன்னும் இல்ல பேராண்டி இவ தம்பீங்க ஸ்கூல்ல இருந்து வருவாங்க அதுங்களுக்கு சாப்பிட ஒன்னும் செய்யல. புள்ள அதைத்தான் சொல்லுறா?" பார்வதி பாட்டி உண்மையை சொல்ல

"தம்பீங்களா? எத்தன பேர்?" அவன் இன்னும் கேள்விகேட்க முன் ரோஜாவும், தாமரையும் ஆரத்தியெடுத்து இருவரும் வீட்டினுள்ளே செல்ல கனகாம்பாள் அவர்களை பூஜையறைக்கு சென்று சாமி கும்பிடும் படி சொல்ல முதலில் பூஜையறையினுள் சென்று தமிழ் விளக்கேற்ற இருவரும் கடவுளை வேண்டி நின்றனர்.

"கடவுளே இவ பேர தவிர இவள பத்தி ஒண்ணுமே தெரியல, உன் இஷ்டம் போல இவதான் எனக்குன்னு முடிவு பண்ணி ஏதேதோ நடத்தி முடிச்சிட்ட எங்க வாழ்க்கையும் சந்தோசமா அமைய நீதான் அருள் புரியனும்" சத்யதேவ் வேண்டிக் கொள்ள தமிழ் செல்வியோ

"என்ன சாமி இப்படி பண்ணிட தம்பீங்கள விட்டு நா எப்படி இருக்க போறேன் பேசாம இவர இங்கயே இருக்குறமாதிரி ஏதாவது பண்ணு என தமிழ் கண்ணை சுருக்கி வேண்டிக் கொள்ள அவள் கண்ணை சுருக்கி வேண்டிக் கொள்வதை ரசித்துப் பார்த்தவன்.

"அப்படியென்ன வேண்டிக்கிட்ட" தமிழ்செல்வி பதில் சொல்லாது திருதிருவென முழிக்க

"வேண்டினதெல்லாம் வெளிய சொன்னா நடக்காதாம் மாமா" மொதல்ல வெளிய வாங்க" தாமரை பூஜையறையில் வாயிலில் இருந்து குரல் கொடுக்க வெளியே வந்தவர்களை சோபாவில் அமர்த்தி பாலும் பலமும் சாப்பிட கொடுத்தார் கனகாம்பாள்.

ரோஜாவின் மனத்திலோ "மாமாக்கு கல்யாணம் நடந்தத கேள்விப் பட்டு அம்மா என்ன டான்ஸ் ஆடப் போறாங்களோ!" என்றிருக்க



தாமரை "அது எப்படி பாட்டி கரெக்ட்டா தாலிய கைல வச்சிருந்த? எனக்கென்னமோ தமிழுக்கு மயக்க மருந்த கொடுத்து பஞ்சாயத்தை கூட்டியது உன் வேல தான்னு தோணுது" நெற்றியில் ஆள் காட்டி விரலால் தட்டியவாறே சொல்ல

"எனக்கும் அதே சந்தேகம் இருக்கு பாட்டி" என ரோஜா கண்ணடிக்க அவர்களை முறைத்த கனகாம்பாள்.

"அது என்னோட தாலி தாத்தா இறந்ததிலிருந்து பத்திரமா வச்சிருந்தேன் சத்யாக்கு கல்யாணம் தள்ளிப் போகுதேன்னு ஜோசியர் கிட்ட கேட்டா என் தாலி தான் காரணம் அத குலதெய்வ கோவில்ல பூஜா செஞ்சி உண்டியல்ல போட்டுடுங்க என்றாரு. அதான் கையோட எடுத்துக்கிட்டு வந்தேன்” கனகாம்பாள் சாதாரணமாக சொல்ல

"உண்டியல்ல போட சொன்னது தமிழ் கழுத்துல ஏறி இருக்கே ஏதாச்சும் அபசகுனமா நடக்குமா" பார்வதி பாட்டி யோசனையை கேக்க கனகாம்பாள் அம்மாவும் யோசிக்க

"ஏன் அத்த நீங்க தாலிய கைல வச்சிருந்ததால தானே மாமா என் கழுத்துல கட்டிட்டாரு. எல்லாம் நல்லதாகவே நடக்கும்" தமிழ்செல்வி அவர்களின் கலங்கிய முகம் பார்த்து சொல்ல அவளின் "மாமா" என்ற அழைப்பில் அவளை மெய்மறந்து பார்த்தான் சத்யதேவ்.

"பாட்டி இன்னைக்கு ஊருக்கு போகணும்னு சொன்னீங்க, போறோமா?" தாமரை கேக்க சத்யதேவை யோசனையாய் பார்த்தார் கனகாம்பாள்.

சத்யதேவ் ஏதும் சொல்லும் முன் முந்திக் கொண்ட தமிழ்செல்வி "நீங்க எல்லாரும் போறதுனா போங்க நா வரல" அவளை அதிர்ச்சியாக அனைவரும் பார்க்க பார்வதி பாட்டி அவளின் காதை திருகி

"பொம்பள புள்ள அடக்க ஒடுக்கமா இருக்காம அதென்ன பெரியவங்க பேசும் போது முந்திகிட்டு பேசுற? யாராச்சும் உன்ன கேட்டாங்களா? காதை விடாமல் பார்வதி பாட்டி சொல்ல

தங்களது பாட்டி அடங்குவார் மிஞ்சினால் ஒரு கொட்டு விழும் இப்போ தான் கல்யாணம் ஆச்சு என்று கூட பாராமல் பார்வதி பாட்டி செல்வியின் காதை திருக ரோஜா தாமரை இருவரும் கனகாம்பாளை பார்த்தனர்.

கடுப்பான சத்யதேவ் அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டவன் "பாட்டி இப்போ அவ என் மனைவி இந்த அடிக்கிற வேலையெல்லாம் வச்சிக்க காதீங்க" கறாராய் சொல்ல அவனை தன்னை காக்க வந்த தெய்வமாய் ஆசையாக பார்த்தாள் செல்வி.

"இதோடா இப்போவே சப்போர்டு, மாமா அக்கா பொண்ணுங்க நாங்க ரெண்டு பேர் இங்க தான் இருக்கோம்" ரோஜா கிண்டலடிக்க

"சாப்பாடு ரெடி" என்றவாறு வந்தான் மணி.

எல்லாரும் சாப்பிட எழுந்து செல்லவே தமிழ் மாத்திரம் அமர்ந்திருந்தாள்.



"என்ன செல்வி உன்ன தூக்கிட்டு போகணும்னு உக்காந்து இருக்கியா?" சத்யதேவ் புன்னகை முகமாக கேக்க



இல்லையென்று தலையசைத்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய "தம்பிங்க இல்லாம நா சாப்பிட மாட்டேன்" அப்பொழுது தான் சத்யதேவுக்கு உரைத்தது வந்ததிலிருந்து தம்பீங்கள பத்தி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறாள் என்று அவன் உடனே ஊருக்கு செல்ல வேண்டும் நிறைய வேலை இருக்கு, அவளை இங்கே விட்டுச் செல்லவும் முடியாது. என்ன செய்வதென்று புரியாமல் அசையாது அமர்ந்திருந்தான் சத்யதேவ்.

செல்வராஜுக்கு போன் மூலம் சத்யதேவ் ஊரில் நடந்ததை சொல்ல "ஹாஹாஹா மாப்புள காதல் கல்யாணம், ஊற விட்டு ஓடி போறது என்னென்னமோ இருக்கே! உன் கல்யாணம் இப்படி நடந்திருக்கு. சரி தான் உன் பசங்களுக்கு சொல்ல நல்ல கத கிடைச்சிருக்கு, என்ன உன் அக்காவ சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டம் ரோஜாவ உனக்கு கட்டி வைக்கணும்னு அவ ஆச மட்டுமில்ல என் ஆசையும் தான்" செல்வராஜின் குரல் ஒருநொடி கவலைக்கு கொண்டு மீண்டது.

"எதுனாலும் சரி நா பாத்துக்கிறேன் உனக்கு கல்யாணம் ஆச்சு என்பதே ரொம்ப சந்தோசமான விஷயம் மாப்புள. நீ எப்போ வர" செல்வராஜின் கேள்விக்கு என்ன பதில் சொல்ல அவனின் மனையாள் முகத்தை தூக்கி வைத்திருக்கும் லட்சணத்தை எப்படி சொல்ல.

"நாளைக்கு வரேன் மாமா" தமிழ்செல்வியை பார்த்தவாறே சொல்ல அவ்வளவு நேரமும் அவன் போனில் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தவள். அவன் நாளை என்று சொன்னதும் முகம் மலர்ந்தாள்.

பாடசாலை சென்று வந்த தமிழ்செல்வியின் தம்பிகளை அழைத்து வந்திருந்தான் மணி. அவர்களுக்கு செல்வி சாப்பாடு ஊட்டி விடுவதை கண்டு பார்வதி பாட்டி

"இனிமே அக்கா அவ புருஷன் கூட இருக்க போறா இப்பயாச்சும் கையாள சாப்பிடுங்க" என மிரட்டிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த சத்யா அவர்களை கண்டு புருவம் சுருக்கினான்.



"நா எதுக்கு அவங்க கூட போகணும் அவங்க வேணும்னா இங்க நம்ம கூட இருக்கட்டும்" செல்வி பாட்டிக்கு பதில் சொல்ல பாட்டி அவளை அடிக்க கையோங்க தொண்டையை செருமி சத்தம் காட்டினான் சத்யா.



அவனின் சத்தத்தில் அனைவரும் அவனை திரும்பிப் பார்க்க அவனை முறைத்தான் தமிழ்வாணன். ஸ்கூல் சென்று வரும் போது அக்காவுக்கு கல்யாணம் ஆச்சு அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழ்வேந்தன் சினேகமாக புன்னகைத்து "நீங்க தான் எங்க மாமாவா?" என்று கேக்க செல்வி அமர்ந்திருந்த இடத்தில் அவளை ஒட்டியவாறே வந்தமர்ந்தவன். அவனிடம் பேச்சுக்கு கொடுத்து அவர்களின் படிப்பை பற்றி விசாரித்து அவனை தன் பக்கம் சாய்த்திருந்தான். வாணன் முறைத்துக் கொண்டிருக்க அவனை பற்றியும் வேந்தனிடமே கேட்டுக்கொண்டவன் நாளைக்கு ஊருக்கு செல்லும் போது செல்வி வரமுடியாது என்ற காரணம் நன்றாகவே புரிந்தது. என்ன செய்யலாம் என்று அவன் இருக்க சத்யா வந்தமர்ந்ததிலிருந்து ஒரு வித பதட்டத்தில் இருந்தவள் தட்டில் உள்ள உணவு முடிந்ததும் உடனே எழுந்து

"செம்பருத்தி எங்கன்னு தெரியல நா அவள கூட்டிட்டு வாறன்" என்று ஓடிவிட

“அக்கா எங்களையே விட்டுட்டு போக மாட்டா இதுல அவ வளக்குற செம்பருத்தியிலிருந்து செங்கோட்டுவேரி வர விட்டுட்டு வர மாட்டா தமிழ்வாணன் சத்யாவை பார்த்தவாறே சொல்ல பார்வதி பாட்டி யோசனைக்குள்ளாக

"இத எப்படி மறந்தேன்" என்று மானசீகமாக தலையில் கைவைத்தான் சத்யதேவ். இதைவிட பெரிய பிரச்சினையாக கோமளவள்ளி காத்திருப்பதை அறியாமல்.





மறக்காம like பண்ணுங்க:love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top