ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்...
படம்:உறவாடும் நெஞ்சம் ஆண்டு:1976
மஞ்சளின் மஹராணி குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலை கண்டேனே
உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
உன்னிடம் நான் கண்ட
பெருமைகள் பல உண்டு
கோபம் வேகம் மாறாதோ
மாறும் நன் நாள் எந்நாள் காண்பேனோ
புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
மங்கல நாண் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வில் தீபம் நானாக
காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவை பாத்திருப்போம்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்