சாரு and லஹிரு Clarity

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் friends நிறைய பேர் இலைகையர்களோட பேர் வாயில நுழைய மாட்டேங்குது. அந்த டிஸ் என்ன? என்று கேக்குறீங்க. அதுக்கு முதல்ல இலங்கையை பற்றி ஒரு குட்டி story.

இந்து சமுத்திரத்தின் முத்து இலங்கை. லங்காபுரி. சிலோன். செரண்டிப். இப்படி பலவகையான பேர்களில் அலைப்பட்டாலும் ஸ்ரீ லங்கா தான் கணினியை தட்டினா வரும்.

என்னென்ன வளங்கள் இருக்கு? என்று தேசிய கீதத்துல புட்டுப்புட்டு வச்சிருக்காங்க. தேசியகீதம் சிங்களத்துல மட்டுமல்ல, தமிழ்ல கூட இருக்கு. பாடுறோம். உரிமை கொடுத்திருக்காங்க.

அரசாட்ச்சி வரலாறு பார்த்தீங்கன்னா.... தமிழ் மன்னர்கள் நிறைய பேர் ஆண்டிருக்காங்க. அதுல முக்கியமானவர் சீகிரியாவை ஆண்ட காசியப்பன். மலைக்குன்றையே தன்னோட கோட்டையா வச்சிருந்தார்.


சிங்கள மன்னர்கள் ஆண்டபோது தலைநகரம் கண்டி. அங்கதான் தலதாமலிகாவை எனும் பௌத்தக்கோவில் இருக்கு. அங்கதான் புத்தருடைய பல் பாதுகாப்ப வைக்கப்பட்டுருக்கு.


சித்திரை புத்தாண்டை அவர்களும் புதுவருடமா கொண்டாடுவாங்க. அதுதவிர நல்லநேரம், ஜாதகம் பாக்குறது எல்லாம் இருக்கு.

{வேற உணவு...} உன் கண்ணில் என் விம்பம் கதைல சிங்கள அவுருது என்று நிறைய ஸ்வீட்ஸ் பத்தி சொல்லி இருந்தேன். இந்த கதைல வரும் ரெண்டு உணவு.


download.jpgimages.jpg
LEVARIYAA


download (2).jpgdownload (1).jpg
HELAPA



என் கிட்ட இன்ஸ்டாகிராம்ல ஒரு friend கேட்ட கேள்வி எனக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்தது. இலங்கை முழுவதும் பத்தி எரியுது. போர். எப்படி வாழுறீங்க? சிங்களவர்கள் இனவெறியர்கள் என்றார்.

இலங்கை ஒரு குட்டி நாடு. தமிழ்நாட்ட விட சின்னது. வெளில இருந்து மீடியா நியூசை பாக்குறவங்களுக்கு அப்படித்தான் தெரியும்.

ஏன் வேர்ல்ட் மீடியா முஸ்லீம்களை தீவிரவாதி என்று கூறவில்லையா? நான் என்ன டைலி பத்து பேர சுட்டுகிட்டா இருக்கேன்?

என்னோட பெர்சனல் கருத்து;- எல்லா மதமும் மனித நேர்வழில போகத்தான் வழிகாட்டுது. என்ன பொறுத்தவரைக்கும் உலகத்துல ரெண்டே மதம்தான். ஒன்னு கடவுளை உண்மையா நம்பி அவனை வழிபாடும் கூட்டம். இன்னொன்னு தன்னுடைய சொந்த லாபத்துக்காக கடவுள் பெயரை சொல்லி அப்பாவி மக்களை வழிகேட்டில் கொண்டு செல்லும் கூட்டம்.

புரியலையா? ஏதாவது தப்பு பண்ணும் போது கடவுள் பாத்துகிட்டு இருப்பான் தண்டிப்பான். கேள்வி கேப்பான் என்று ஒரு பயம் வரும் அது இறைநம்பிக்கை. அப்போ நாம அந்த தப்ப செய்ய மாட்டோம். அடுத்தவங்களை கஷ்டப்படுத்த மாட்டோம். அது எந்த மதத்தை பின்பற்றறவராக இருந்தாலும் சரி.

இதுவே தன்னையுடைய சொந்த லாபத்துக்காக என்றால் அவனுடைய கடவுள் பணம் மட்டும்தான். பெயர் வேண்டுமானால் அக்பர், ஆண்டனி, ஆறுமுகமாக இருக்கலாம். எந்த இழிசெயலையும் செய்ய தயங்க மாட்டான்.

சோ மதத்தை கொண்டு மனிதனை குற்றம் சொல்வது தவறு. மதம் அவனுக்கு பெயரை கொடுக்கும். நல்வழியை மட்டும்தான் காட்டும். பின்பற்றுவதும், வழிமாறிப் போவதும் அவன்கையில். அப்பாவி மக்கள் அவன் பேச்சை கேட்டு சூழ்நிலையால் போவதும், மத வெறி பிடித்தவர்களாக மாறுவதும் கொடுமை.

இங்கு நிறைய சிங்களவர்கள் தமிழர்களையும், முஸ்லீம்களையும் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார்கள். காதலுக்கு எப்பொழுதும் ஜாதி, மாதம் கிடையாது.

இந்த கதையில் இலங்கை தமிழ் எதிர்பார்த்திருப்பீங்க. இலங்கைல பிரதானமான யாழ்பாணத்து தமிழ், மட்டக்களப்பு தமிழ் தான் வித்தியாசப்படும். மலைவாழ் மக்களின் தமிழ் வித்தியாசப்படாது.

ஏனினில் அவர்கள் ஆங்கிலேயர்களின் காலத்தில் தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களின் பரம்பரையினர். இதுதான் எனக்கு தெரிந்த உண்மை. இன்னும் தகவல் வேண்டுமாயின் தேடலாம்....

வளவ்வா என்றால் ஜமீன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வீடுகள் மரத்திலான வேலைப்பாடுகளோடு கலைநயம் மிக்கவையாக இருக்கும். தளபாடங்கள் முதற்கொண்டு சின்ன சின்ன கைவினை பொருட்கள்வரை கலைநயம் மிக்கது. {போட்டோஸ் கிடைத்தால் பகிர்ந்துகொள்வேன்}

download (4).jpg
 
Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஶ்ரீலங்கா போக ரொம்ப நாள் ஆசை. இன்னும் நேரம் வரல. அந்த நாட்டையும் மக்களின் வாழ்க்கை முறை யும் உங்க கதை மூலமாக பார்க்கும் போது சந்தோஷம் மிலா. நன்றி❤️
 

Srichitra

Well-Known Member
இலங்கை போக முடியாமல் உள்ளவர்களுக்கு உங்களுடைய கதைகள் மூலம் தான் பல விஷயங்கள் தெரிய வருகிறது. நான் ஏற்கனவே நிதனி பிரபு, உஷாந்தி மற்றும் அழகி போன்றவர்களின் கதைகளை படிப்பவள். புதிய தாக தெரி ந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி.
 

amuthasakthi

Well-Known Member
இலங்கை மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி தெரியாததால கதையை சட்டுனு என்னால கிரகிக்க முடியல..பெயர்களும் அப்படியே...இதுக்கு முன்ன ஒன்னு ரெண்டு மட்டுமே இப்படி இலங்கையைக் கொண்ட கதைகளை படித்திருக்கிறேன்...போகப்போக கதையோட்டத்தில் புரிந்து படிச்சிருவேன்...இதுல மதம் போர் பத்திலாம் நினைக்கவே இல்ல:)
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஶ்ரீலங்கா போக ரொம்ப நாள் ஆசை. இன்னும் நேரம் வரல. அந்த நாட்டையும் மக்களின் வாழ்க்கை முறை யும் உங்க கதை மூலமாக பார்க்கும் போது சந்தோஷம் மிலா. நன்றி❤️
கண்டிப்பா வாங்க நீலா sis. பார்க்க அழகான கடற்கரைகள் நிறைய இருக்கு. அதுக்கே பீச் ட்ரிப்ன்னு தனியா வரலாம்.:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
இலங்கை போக முடியாமல் உள்ளவர்களுக்கு உங்களுடைய கதைகள் மூலம் தான் பல விஷயங்கள் தெரிய வருகிறது. நான் ஏற்கனவே நிதனி பிரபு, உஷாந்தி மற்றும் அழகி போன்றவர்களின் கதைகளை படிப்பவள். புதிய தாக தெரி ந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி.
சந்தோசம். நிறைய தகவல்கள் கதையின் மூலம் கூற முயற்சி செய்கிறேன்.:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
இலங்கை மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி தெரியாததால கதையை சட்டுனு என்னால கிரகிக்க முடியல..பெயர்களும் அப்படியே...இதுக்கு முன்ன ஒன்னு ரெண்டு மட்டுமே இப்படி இலங்கையைக் கொண்ட கதைகளை படித்திருக்கிறேன்...போகப்போக கதையோட்டத்தில் புரிந்து படிச்சிருவேன்...இதுல மதம் போர் பத்திலாம் நினைக்கவே இல்ல:)
ரொம்ப வித்தியாசம் கிடையாது. கேரளா, தமிழ்நாடு mix என்று வச்சிக்கலாம். நான் பேசுற தமிழ்ல ஒருசில மலையாள வார்த்தைகள் {எனக்கே இப்போதான் தெரியும்} கலந்திருக்கு. சிங்கள மொழியில ஹிந்தி வார்த்தைகள் கலந்திருக்கு. போர் 2005ல கேப்டன் பிரபாகரனை கொன்றதோட முடிவுக்கு வந்திருச்சு. ஆனாலும் முப்பது வருடங்களில் மக்கள் யுத்தத்தால் இழந்ததை இன்னும் அரசாங்கத்தால் ஈடு செய்ய முடியவில்லை. மதம், போர் பத்தி நிறைய பேர் என் கிட்ட பேசி இருக்காங்க. அதுல இந்த கேள்வி இன்னும் மைண்ட்ல இருந்தது. அதான் எழுதிட்டேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top