'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - முன்னோட்டம்

Advertisement

Rudraprarthana

Well-Known Member
11167

விஷ்வா - ப்ரீத்தி டீசர் :

பின்னிருந்து ப்ரீத்தியை இறுக அணைத்து அவள் கூந்தலில் முகம் புதைத்து வாசத்தை தன்னுள் நிரப்பி கொண்டிருந்தவன், மெல்ல கூந்தலை விலக்கி தகிக்கும் அதரங்களை அவள் செவியோடு உறவாடவிட்டு மயக்கும் குரலில்..,

"எங்கு துவங்கி எங்கு முடிக்க


எதனை விடுத்து எதனை எடுக்க

என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

மெல்ல நமது கால் விரல்

ஒன்றை ஒன்று தீண்டிட

காது நுனியின் ஒரமாய்

கொஞ்சம் கொஞ்சம் கூசி"

பாடி கொண்டிருந்தவனின் கரங்கள் அவளிடையில் தாரளமாக தவழ ப்ரீத்தியோ உடல் விறைக்க கண்களை மூடி நின்றிருந்தவள் அடுத்த சில நொடிகளில் இடையில் தவழ்ந்த அவன் கரங்களை விலக்கி விஷ்வா புறம் திரும்பியவள் சிவந்த விழிகளுடன் அவனை உறுத்து பார்த்தாள். விஷ்வதேவோ அவள் பார்வையை அலட்சியம் செய்து அவள் முகத்தை கையில் ஏந்தி இதழ்கள் நான்கும் உரசியவாறு மீண்டும் பாட தொடங்கினான்.

"உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட

கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட

வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட

உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட

காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட

விரல் தீண்ட... தீ தீண்ட

தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன

பார்வை பார்த்து கலந்ததென்ன

தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன

பார்வை பார்த்து கலந்ததென்ன"

என்று பாடலை முடித்தவன் உரசி தீப்பற்ற வைத்து கொண்டிருந்த அவளிதழ்களில் அழுத்தமாக புதைந்து முத்தமிட தொடங்கினான்.

'லீவ் மீ' என்று அவனிதழினுள் முணுமுணுத்த பரீத்தியோ அவன் அசையாமல் மேலும் ஆழமாக முத்தமிடுவதை உணர்ந்து பலம் கொண்ட மட்டும் அவனை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியவள்,

'யூ ஸ்கவுண்ட்ரல்' என்றவாறு மறுநொடியே தாமதிக்காமல் தன் கரத்தை அவன் கன்னத்தில் இடியென இறக்கி இருந்தாள்.

விஷ்வா இறுகிய முகத்துடன் அவளை பார்க்க அவளோ அவன் முன் சுட்டு விரலை நீட்டி,

'Limit your tongue Mister Vishwadev !! நான் பொறுமையா இருக்கனும்ன்னு நினைக்கிறேன் ஆனா இன்னொருமுறை இப்படி அசிங்கமா பாடினாலோ இல்ல இந்த மாதிரி என்னை நெருங்க பார்த்தாலோ ஒரே அறையோட நிறுத்த மாட்டேன் நடக்குறதே வேற' என்று சீறி இருந்தாள்.

"இத்தனை நடந்த பிறகு உன்னை மாதிரி ஒரு ரோக், பெர்வெர்ட் கூட வாழுவேன்னு கனவு கூட காணாத..!! எப்படி எப்படி நீயெல்லாம்..." என்று வெறுப்புடன் அவனை பார்த்தவள்..,

" ச்சை எப்படி என் அத்தைக்கு இப்படி ஒரு மோசமானவன் பிள்ளையா இருக்க முடியும்ன்னு என்னால இப்பவும் நம்ப முடியலை" என்று தலையை குலுக்கி அவனை பார்த்தவள் அவன் விழிகள் எங்கோ நிலைத்திருப்பதை கண்டு,

'And you listen carefully' என்று சொடக்கிட்டு அவனை அழைத்தவள் 'You can never ever be my man..!!' என்று உறுதியாக கூறியவள் 'அத்தை முகத்துக்காக தான் உன்னை இத்தோட விடறேன் சோ better stay away from me' என்று கூற விஷ்வா கண்களை எட்டாத புன்னகையுடன் அமைதியாக அவளை பார்த்திருந்தான்.

அடுத்து Prefinal and final episodes தான்... சோ இதுவரை படிக்காதவங்க படிக்க தொடங்கிடுங்க கதை முடிந்த இரண்டு நாட்களில் திரி அகற்றிவிடுவேன்.


நன்றிகள்...

ருத்ரபிரார்த்தனா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top