கோவை ஸ்பெஷல் தக்காளி குருமா

Indira75

Active Member
#1
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய். - கால் மூடி
பொட்டு கடலை. - 2டேபிள்ஸ்பூன்
தக்காளி. - 3சிறியது
பெரிய வெங்காயம் - 1 பெரியது
பட்டை. - 1சிறியதுண்டு
சோம்பு. - 1 டீஸ்பூன்
கிராம்பு. - 3
ப.மிளகாய் - 2
கருவேப்பிலை - 1 கொத்து
மல்லி இலை. - சிறிது
வரமிளகாய்தூள். - 11/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு. -தே. அளவு
எண்ணெய்.- 2 ஸ்பூன்
கடுகு. - தாளிக்க

செய்முறை

அரைக்க
தேங்காய்
பொட்டு கடலை
சோம்பு
பட்டை
கிராம்பு
தக்காளி
அனைத்தையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும்,
கடுகு தாளித்து, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து பச்சை வாசம் போக
நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் மல்லி தழை சேர்த்து இறக்கவும். இட்லி க்கு சூப்பர் ஆன சைட் டிஷ். செஞ்சு சாப்பிட்டு பார்த்து கமெண்ட்ஸ் சொல்லுங்க friends.
 
#3
சூப்பர் ரெசிப்பி, இந்திரா டியர்
எப்போப் பாரு சட்னிதானான்னு பையன் திட்டிக்கிட்டே இருக்கான்ப்பா
நாளைக்கே இதை செஞ்சுடணும்
 
#5
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய். - கால் மூடி
பொட்டு கடலை. - 2டேபிள்ஸ்பூன்
தக்காளி. - 3சிறியது
பெரிய வெங்காயம் - 1 பெரியது
பட்டை. - 1சிறியதுண்டு
சோம்பு. - 1 டீஸ்பூன்
கிராம்பு. - 3
ப.மிளகாய் - 2
கருவேப்பிலை - 1 கொத்து
மல்லி இலை. - சிறிது
வரமிளகாய்தூள். - 11/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு. -தே. அளவு
எண்ணெய்.- 2 ஸ்பூன்
கடுகு. - தாளிக்க

செய்முறை

அரைக்க
தேங்காய்
பொட்டு கடலை
சோம்பு
பட்டை
கிராம்பு
தக்காளி
அனைத்தையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும்,
கடுகு தாளித்து, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து பச்சை வாசம் போக
நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் மல்லி தழை சேர்த்து இறக்கவும். இட்லி க்கு சூப்பர் ஆன சைட் டிஷ். செஞ்சு சாப்பிட்டு பார்த்து கமெண்ட்ஸ் சொல்லுங்க friends.
தக்காளியை நறுக்கி வெங்காயத்துடன் வதக்கியும் செய்யலாம் இதிலேயே இரண்டு மூன்று வகை இருக்கு
 
Janavi

Well-Known Member
#6
இது நான் செய்துருக்கேன்..super ah இருக்கும்.... தக்காளி மட்டும் அரைக்காம,வதக்கி போடலாம்...try செய்து பாருங்க சிஸ்...
 
Venigovind

Well-Known Member
#7
ஆமாம் டியர் நானும் அடிக்கடி செய்வேன்.இட்லிக்கு தோசைக்கு
நல்லாயிருக்கும்..
கொஞ்சம் வெஜிடபிள்ஸ் சேர்த்து செஞ்சம்னா சப்பாத்திக்கும் குருமா
ரெடி.ஈசியான வேலை டைம் ரொம்ப எடுக்காது.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement