கோடை கால காற்றே..!

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
கோடை கால காற்றே...!
இந்த சாங் எத்தனை பேர் கேட்டிருப்பீங்கன்னு தெரியல...ஆனால் பாடினவர் யார்னு தெரிஞ்சா துளி ஆச்சரியம் மிஞ்சும்,,,:love:

ஆம்...மலேசியா வாசுதேவன்...அப்படி ஒரு தேன் சிந்தும் குரல்......மிருதுவாய்.....பூவிதழ் தொட்டுச் செல்லும் காலைப் பனித்துளியாய்.....தாயின் ஸ்பரிசமாய்.....அப்படி ஒரு சுகானுபவம் இப்பாடல்....அவர் வாய்ஸ்னு நம்பவே முடியல.....!!:unsure:

இதை தாண்டி இன்னும் ஒரு ஸ்பெஷல் ரீசன் இப்பாடலில் உண்டு..ஆம்..கோடை கால வெயில்ல....இருந்தாலும்..என்னமோ....நம்மையும் ஊட்டிக்கே அழைத்துச் செல்லும் இப்பாடல்...அந்த குரல்..அந்த இசை....அது அப்படியே அகத்தின் அடியாழம் புகுந்து அப்படியே நம்மை களவாடிச் சென்று குளிர்பனியில் இட்டுச் செல்லும்....:love::love::love:


நிஜமாகவே ஒரு சிறந்த பாடகர்...அவர் ஷார்ப் வாய்ஸீல் பாடி ஹிட் ஆன அத்தனை பாடலினும் ஆகச்சிறந்தது இது....அதுவும் இடையில் வரும் அந்த மவுத் ஆர்கன்...அப்புறம் பாடலின் நடுவே ஒரு சில நொடி வரும் மௌனம் கூட இசையாகும்...ராஜா ஸ் மேஜிக்...
..
இதயம் பறிக்கும் பாடல்......

இசையில் தொடங்கி இசையில் முடியும் இப்பெரும் வாழ்வில் இன்னும் ஒரு அழகியல்....♥♥
:whistle::whistle::whistle::whistle::whistle::whistle:

இதோ லிங்க்...பிடிச்சால் கேளுங்கள்...
3774-190x190.jpg

கோடை கால காற்றே பாடல்..
 

Joher

Well-Known Member
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே.......

வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
திரு நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆளட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே.......

ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பெண் மலையருவி பன்னீர் தூவி
பொன் மழையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top