கற்பூர முல்லை Episode 20

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 20
அடுத்த நாள் தன் அப்பா அம்மாவிடம் சம்மதம் பெற்ற மகிழ்ச்சியில் அகிலன் தமிழின் ஆபீஸிற்கு வந்தான் . அவனுக்கு இது எப்பொழுது அவளிடம் நேரில் சொல்லலாம் என்று ஆவலாக இருந்தது ஆனால் காலையில் வேலை காரணமாக வர முடியவில்லை. அதனால் அலுவலகம் முடிந்ததும் அவளை பார்க்க வந்தான்.
அப்பொழுது அலுவலகத்தில் யாரும் எடுக்கவில்லை அவள் மட்டும் தனியாக
இருந்தாள்...

அறை கதவை திறந்தவன் அவளிடம் அனுமதி பெறாமலேயே எதிர் இருக்கையில் அமர்ந்தான்.. நேற்று நீ சொன்னதை அம்மா அப்பாவிடம் சொன்னேன் அவர்களுக்கும் இதில் முழு சம்மதம் இனி நமது திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது. நீ தைரியமாக என்னை நம்பலாம் என்று கூறினான்...
தமிழ் முகத்தில் எந்த சலனமும் காட்டாது இருந்தாள்..

அவன் இப்போது, இதற்கு என்ன பதில் சொல்லுகிறாய் என்று கேட்டான்...
அதற்கு அவள், அவர்கள் வேண்டுமானால் சரி என்று சொல்லலாம் ஆனால் இதில் எனக்கு என்று ஒரு மனசாட்சி இருக்கிறது அல்லவா... நான் எப்படி உங்களை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று திரும்பவும் அதையே கூறினாள்...

அதற்காக காலம் பூராவும் இப்படியே திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க போகிறாயா....தமிழ் என்று சற்று கோபமாக கேட்டான்....
அது என் விருப்பம் அதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை என்று கூறினாள்.

இப்பொழுது அவனுக்கு சரியான கோபம் வந்துவிட்டது... தமிழ் உனக்கு என் மேல் விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால் கூட நான் கண்டிப்பாக உன்னை வற்புறுத்தி இருக்க மாட்டேன். ஆனால் உனக்கும் என் மேல் விருப்பம் இருக்கிறது. என்று தெரிந்தும் என்னால் உன்னை விட்டு விலக முடியவில்லை இருந்தும் இவ்வளவு தூரம் கேட்டேன். நீ மறுக்கிறாய் என்றால் பிறகு எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பேன் என்று தெரியவில்லை.
நீயாக எப்போது அதை உணர்ந்து என்னிடம் உன் காதலை கூறுகிறாயோ அதுவரை உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்.. கண்டிப்பாக உனக்காக நான் காத்திருப்பேன் என்று கூறி சென்றான். அவன் கூறிய அந்த கடைசி வார்த்தையில் அவன் கண்களில் நீர் நிறைந்து இருந்தது...

அவன் சென்றவுடன் தன் மேல் இவ்வளவு காதல் கொண்டவனை தான் இவ்வளவு தூரம் கஷ்டப்படுத்துகிறோம் என்று தமிழுக்கு வேதனையாக இருந்தது. இருந்தும் திருமணம் செய்து கொண்டால் அவன் கஷ்டப்படுவானே என்று நினைத்து அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தன் மனதை கல்லாக்கி கொண்டிருந்தாள்....
அந்த நிமிடம் அவளின் கண்களிலும் நீர் நிறைந்தது...

அங்கே அகிலன் மனமும் வேதனையாக இருந்தது தன்னை பற்றி இவ்வளவு தூரம் தெரிந்தும் தன்னை மறுக்கிறாளே என்று வேதனையில் இருந்தான்... அதன் காரணமாக குமாரிடம் சொல்லிவிட்டு இரண்டு நாட்கள் விடுப்பில் இருந்தான்...
இருந்தும் தமிழின் நினைப்பு அதிகமானதே தவிர சற்றும் குறையவில்லை..

அதேபோல ராசாத்தி அக்கா தம்பி தங்கைகள் என்று எல்லோரும் என்ன பிரச்சினை என கேட்க இது எனக்கும் அவளுக்கும் நடக்கும் தனிப்பட்ட பிரச்சனை இதில் நீங்கள் யாரும் இது தலையிட வேண்டாம்... அவள் இங்கு வரமாட்டாள் ஒருவேளை அவள் வந்தாலும் கூட இதைப்பற்றி யாரும் அவளிடம் எதுவும் கேட்க வேண்டாம் இதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினான்.

தமிழ் அன்று வழக்கம் போல ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு திரும்பினாள். அங்கே சமையல் அம்மா கண்ணீருடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்..பின் என்ன ஏது என்று விவரம் கேட்டாள்.
அவள் அழுதவாறு விவரம் சொல்லலானாள்... தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும் அவன் மனைவியின் பேச்சைக் கேட்டு தன்னையும் தன் கணவனையும் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பான் என்றும் கூறினாள் .தற்போது இவர்கள் இருந்த வீடு முன்பு தன் கணவன் பெயரில் இருந்ததாகவும் அதை ஏமாற்றி அவன் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் கூறினாள்.. இப்பொழுது அந்த வீட்டை விட்டு எங்கள் இதுவரையும் அவன் துரத்தி விட்டான் இப்போது எங்கு செல்வது என்றே தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினாள்...

அதற்கு அவள் இப்பொழுது எல்லாம் மனைவியின் பேச்சைக் கேட்டு தன் பெற்றோரை கஷ்டப்படுத்தும் மகன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறினாள்...

சரி போகட்டும் இனி நீங்கள் இருவரும் இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு என்ன வேலை இருக்கிறதோ அதை கலந்து செய்து கொள்ளுங்கள்... எனக்கும் ஆபீஸ் வேலை அதிகம் இருப்பதால் வீட்டின் நிர்வகிக்க முடியவில்லை நீங்கள் இருவரும் அதை பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் மிகவும் நம்பிக்கையானவள் என்று தீபக் மனைவி கூறியதால் எனக்கு இது எந்த ஆட்சேபினையும் இல்லை என்று கூறி அவர்களை அங்கேயே தங்க வைத்துக் கொண்டாள்...

மிக்க நன்றி அம்மா... பெத்த மகனே எங்களை தூக்கி எறிந்து பேசிய பின் எங்களுக்கு வேலை கொடுத்த காரணத்திற்காக எங்களை இங்கே தங்க வைத்த நீ நன்றாய் இருக்க வேண்டும் என்று கூறினாள் .

அதற்கு அவர் நான் அவ்வளவு பெரிய காரியம் ஒன்றும் செய்யவில்லை என்னை அம்மா என்று என்றெல்லாம் அழைக்க வேண்டாம் வழக்கம் போல் பாப்பா என்று கூப்பிடு அப்படித்தானே நீ எப்பொழுதும் கூப்பிடுவாய் என்று கூறிவிட்டு மேலே சென்றாள்.

அறைக்குள் வந்தவள் தன் உடைகளை கலைந்து நைட்டிக்கு மாறினாள் .அவள் தனித்திருந்த நேரத்தில் எல்லாம் அவள் மனதில் நிறைந்திருந்தது அகிலன் நினைப்பு மட்டுமே....

மலரும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top