கதையிலிருந்து சில பகுதிகள்

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer

காலையிலேயே வெய்யில் மண்டையைப் பிளந்தது. எட்டு மணி தானென்று நம்பமுடியவில்லை. சமையலறையில் வேர்வையில் குளித்தபடி ரவைகிச்சடியைக் கிளறிக் கொண்டிருந்தார் விஜயா. கடைசியாக ஒருமுறை அதை கிளறி விட்டு, அடுப்பை அணைத்தார். ஒரு தட்டைப் போட்டு கடாயை மூடி விட்டு, வரவேற்பறை சுவரில் இருந்த கடிகாரத்தில் ஒரு கண் வைத்தபடி, கேஸ் அடுப்புக்கு கீழே இருந்த அலமாரியைத் திறக்க அவர் குனிந்த போது இடுப்பில் அப்படியொரு வலி.​

“முருகா” என்று முணங்கியபடி, அலமாரி கதவை பிடித்துக் கொண்டு மெதுவாக நிமிர்ந்தவர், அப்படியே ஒரு கையால் டிஃபன் பாக்ஸை வெளியே எடுத்து அதை மேடை மீது வைத்து விட்டு இரண்டு கைகளையும் பின்னே கொண்டு சென்று பிராப்ளம் கொடுத்த இடத்தை வேகமாக தேய்த்து விட்டுக் கொண்டிருந்த போது,​

“நீங்க எதுக்கு இப்படி சட்டு சட்டுன்னு குனியறீங்கம்மா? நான் எடுத்துக் கொடுத்திருபேன்னில்லே.” என்றபடி சமையலறையினுள் வந்தான் ஷண்முகம்.​

“நீ வெளியே போ சாமி..அபிஸுக்குத் தயாரான பிறகு இங்கே வராதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது..நட..நட.” என்று வந்த வழியே திரும்பிப் போகும்படி மகனை விரட்டினார்.​

உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருந்த தருணங்களை மனத்தில் கொண்டு வந்தவன் அதைப் பற்றி ஒரு வார்த்தை வெளியிடாமல்,“ஒண்ணுமாகாது ம்மா..கொஞ்சம் வேர்வை வழியும்..இந்தியாவோட தலை நகர்லே ஜுன் மாசத்திலே வேற எப்படி இருக்கும்?” என்று கேட்டான்.​

“நம்மூர்லே எப்போதும் இந்த மாதிரி தான் இருக்கும் சாமி..சில நாள் ஜன்னல் கதவைத் திறந்து வைச்சிட்டு தான் தூங்குவோம்..அண்ணன் வீட்லேயாவது தோட்டத்திலிருந்து காத்து வரும்..அக்கா வீட்லே எப்போதும் வண்டி சத்தம் தான் கேட்டிட்டு இருக்கும்..படுத்திருந்த பாயும் தலைகாணியும் வேர்வைலே நனைஞ்சு போயிடும்..அதெல்லாம் உனக்கு நியாபகம் இருக்குதா சாமி?” என்று அவர் தயக்கத்துடன் கேட்க,​

சிறு வயது நிகழ்வுகளைக் கடந்து வர, அவைகளை மறக்க எத்தனை பாடுபட்டான் என்று தெரிய வந்தால் அவர் பெரிதும் மனம் வருந்துவார் என்பதால்,“எப்படி மறக்கும் ம்மா? ஹாஸ்டல்லேயும் நிறைய பவர் கட் ஆகும்.” என்று சொன்னவன் அவனுடைய மாமா, பெரியம்மா வீட்டில் இருந்த நாள்களைப் பற்றி பேசவில்லை.​

“இங்கேயும் அப்படித் தான் இருக்கும்னு எனக்கு எப்படித் தெரியும் சாமி? நான் இந்த ஊருக்கு வந்த போது சுள்ளுனு வெய்யில் ஆனா ஒரு பொட்டு வேர்வை இல்லை..இப்போ இப்படி ஊத்துது..நான் ஓர் ஆள் இங்கே நிக்க முடியலை, காத்து போய் வர இடமில்லாம கஷ்டமாயிருக்கு..இதிலே நீ வேற விசாரணை நடத்திட்டு இருக்க..நீ போ சாமி...டிஃபனைத் தட்டிலே போட்டுக் கொண்டு வரேன்.” என்று ஷண்முகத்தை வெளியே அனுப்பி வைத்தார் விஜயா.​

“எல்லாத்தையும் எடுத்திட்டு நீங்களும் வாங்க..வரவேற்பறைலே ஏஸி போடறேன்.” என்றான் ஷண்முகவேல்.​

“வேணாம் சாமி..கரெண்ட் பில் அதிகமாகிடும் சாமி.” என்று அன்னை மறுக்க,​

“இந்த மாசம் சம்பளம் முழுக்க போகட்டும்..நீங்க வாங்க.” என்று கடுமைனான குரலில் கட்டளையிட்டான் மகன்.​

மகனின் கட்டளைக்கு அடிபணிந்து கிச்சிடி கிளறிய கடாயைத் தூக்கிக் கொண்டு போய் வரவேற்பறை தரையில், கார்பெட் மீது வைத்தார். அங்கே சேஃபாவில் அமர்ந்து அவனது ப்ரீஃப்கேஸை ஷண்முகவேல் சரி பார்த்துக் கொண்டிருந்த போது இரண்டு அடுக்கு ஸ்டீல் டிஃபன் பாக்ஸில் கிச்சடியை அடைக்க முயன்று கொண்டிருந்தார் விஜயா. அவனது ப்ரீஃப்கேஸை மூடி விட்டு சமையலறைக்குச் சென்று திரும்பிய ஷண்முகத்தின் கையில் வட்ட ஸ்டீல் டிஃபன் பாக்ஸ் ஒன்று இருந்தது. அதைக் கார்பெட்டில் வைத்து,​

“இதிலே பேக் செய்து கொடுங்க ம்மா..எனக்குப் போதும்.” என்றான் ஷண்முகவேல்.​

அதைக் கோபத்துடன் தூர வைத்து விட்டு, இரண்டு அடுக்கில் கிச்சடியைப் பேக் செய்து, அதனுடைய உறையில் போட்டு ப்ரீஃப்கேஸ் அருகே வைத்தவர்,”இரண்டுத்தையும் மிச்சம் வைக்காம சாப்பிடணும்..இப்போ இதைச் சாப்பிடு சாமி.” என்று அவன் முன் தட்டை வைத்து பள்ளிக்கூடத்திற்குப் போகும் பத்து வயது பிள்ளைக்கு சொல்வது போல் மத்திய அரசில் பெரிய பதவியில் இருந்த முப்பத்தி மூன்று வயது மகனுக்குக் கட்டளையிட்டார் விஜயா.​

அதற்கு ஷண்முகவேல் பதில் சொல்ல நினைத்த போது டக்கென்ற ஓசையுடன் ஏஸி அதன் செயல்பாட்டை நிறுத்த, எப்போதுமே எதற்குமே அவனது உணர்ச்சிகளை வெளியிட்டு பழக்கமில்லாதவன்,”ச்சே..இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் போயிருந்தா இந்த ரூமாவது கூலா இருந்திருக்கும் ம்மா.” என்றான்.​

“நம்மூர்லே மின்வெட்டுக்கு ஓர் அட்டவணை இருக்கும்..இல்லை ஏதாவது காரணம் இருக்கும்..இங்கே நினைச்ச போதெல்லாம் கரெண்ட் போகுது..ஃப்ரிஜ்லே ஒரு சாமான் வைக்க முடியறதில்லை..நேரத்துக்கு எதுவும் செய்ய முடியறதில்லை..ஒண்ணு முன்னாடியே செய்து வைக்கணும்..இல்லை கரெண்ட் வரட்டும்னு காத்திட்டு இருந்திட்டு தாமதமா செய்யணும்..எப்படித் தான் இங்கே இருக்கறவங்க எல்லோரும் நேரத்துக்கு ஆபிஸ், பள்ளிக்கூடம்னு போறாங்களோ.” என்றார் விஜயா.​

“எல்லோர் வீட்லேயும் இன்வர்ட்டர் இருக்கு ம்மா...நம்ம வீட்டுக்கும் ஒண்ணு வாங்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்..இராத்திதி தூக்கமும் கெட்டுப் போகுது..ஷர்மாகிட்டே பேசறேன்.” என்றான்.​

“எதுக்கு சாமி வீண் செலவு..நீயும் வீட்லே இருக்கறதில்லை..நானும் நிறைய நாள் இருக்கப் போகறதில்லை..எப்படியும் ஒரு நாலு மணி நேரத்திலே வந்திடுது..நம்ம இரண்டு பேருக்கு பெரிசா ஃபிரிஜ்லே என்னத்தை செய்து வைக்கப் போறேன்? தொக்கு, புளிக்காச்சல்னு ஏதாவது இரண்டு சாமான் இருந்தா சாதம், சப்பாத்தியோட நீ சாப்பிடுவேன்னு நினைச்சேன்..இத்தனை வருஷத்திலே இப்போ தான் என் கையாலே உனக்கு சமைச்சுப் போடுறேன்..அதைக் கூட சரியாச் செய்ய முடியலை..நானாவது பகல்லே தூங்கிக்கறேன் நீ தான் சாமி சரியாத் தூக்கமில்லாம கஷ்டப்படற.” என்று பேசி முடித்த போது அவரது கண்கள் கலங்கியிருந்தன.​

தில்லியில் அவருடைய மகனுடன் இருக்க கிடைத்த இந்த வாய்ப்பை கூட மறுக்க தான் நினைத்தார் விஜயா. ஆனால் மகன் தான் பிடிவாதமாக அவரை அவனோடு அழைத்துக் கொண்டு விட்டான். கிட்டதட்ட பத்து வருடங்களாக தனியாக தான் வசித்து வருகிறான். அவன் வேலை செய்யும் அலுவலகம் தில்லியில் தான் என்றாலும் பல சமயங்களில் அவனது வேலை வெளியூரில் தான் என்பதால் அம்மாவை ஒருமுறை கூட தில்லிக்கு அழைத்துக் கொள்ளவில்லை. விஜாவிற்கும் பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை. எப்போதும் போல் அவருடைய உடன்பிறப்புக்களின் வீட்டில் மாறி மாறி இருக்கும் வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் விஜயா.​

******************​

மதிய நேர உறக்கத்தில் இருந்த விஜயாவை கைப்பேசி எழுப்பியது. ஷண்முகமாக தான் இருக்க வேண்டுமென்று என்று எண்ணியபடி, உறக்கத்தோடு கைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்தவுடன்,”ஸாரி ம்மா..அவசரமா ஒரு மீட்டிங் போயிட்டு இருக்கேன்..அது எப்போ முடியும்னு தெரியலை..ஷர்மா வருவார்..அவரோட நீங்க கோவிலுக்கு போயிடுங்க..அங்கேயிருந்து அந்தக் கடைக்கு அழைச்சிட்டுப் போவார்..நீங்க பார்த்திட்டு இருங்க..நான் வந்திடுவேன்..இல்லைன்னாலும் பிராப்ளமில்லை..ஷர்மா பணம் கட்டிடுவார்.” என்றான் ஷண்முகவேல்.​

“நீயில்லாம அங்கே போக விருப்பமில்லை சாமி..இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.” என்று மறுத்தார் விஜயா.​

“அம்மா, என்னை நம்பிட்டு இருந்தா நீங்க வீட்டுக்குள்ளே தான் இருக்கணும்..எனக்குப் பதிலா இரண்டு பேர் உங்ககூட இருப்பாங்க.” எndraan சற்று கோபத்துடன்.​

அவ்வளவு தான் விஜயாவின் கண்கள் குளமாகின.”சரி சாமி.” என்று அவர் ஒப்புதல் அளித்தவுடன் கைப்பேசியின் இணைப்பைத் துண்டித்தான் ஷண்முகவேல். அடுத்த சில நொடிகள் அவர் அப்படியே அமர்ந்திருக்க மீண்டும் கைப்பேசி ஒலி எழுப்பியது. அழைத்தது ஷண்முகவேல் தான். சற்று மனத்தை தேற்றிக் கொண்டு அந்த அழைப்பை விஜயா எடுக்க,”மீட்டிங் முடிஞ்சதும் நான் கிளம்பிடுவேன்..அந்தக் கடை தமிழ்க் கடை தானாம்..உங்களுக்குப் பிடிச்சதை வாங்கிக்கோங்க..அவங்களே தைச்சும் கொடுத்திடுவாங்க.” என்றான்.​

“எதுக்கு சாமி..நான் புடவையே” என்று விஜயா ஆரம்பித்தவுடன் இந்தமுறை புத்திசாலித்தனமாக அம்மாவைக் கோபித்துக் கொள்ளாமல் இணைப்பைத் துண்டித்தான் மகன்.​

‘அம்மாவை சுடிதார்லே பார்க்கணும்னு ஆசைப்படறான் போல..நிறைவேற்றி வைப்போம்..நம்ம கலருக்கு அந்தக் கடைலே கிடைக்குமா?” என்று எண்ணியபடி மதிய உறக்கத்தை தொடர்ந்தார் விஜயா.​

மாலை ஐந்து மணி போல் அந்தக் கடையில் இருந்தார் விஜயா. அலமாரி அடுக்கில் இருந்த ராணி கலர், நீலக் கலர், மஞ்சள் கலர் என்று ப்ரைட் கலர்களில் இருந்த சல்வார் செட்டை அவர் முன்னால் எடுத்து போட்டு விட்டு வீட்டினுள்ளே அழுது கொண்டிருந்த குழந்தையைக் கவனிக்க சென்று விட்டாள் அந்த இளம் பெண்.​

மயூர் விஹார் குருவாயூரப்பன் கோவிலிருந்து சில நிமிடங்கள் பயணத்தில் இருந்ததது ஷிக்கா பொட்டிக். முக்கிய சாலையின் திருப்பத்தில் இருந்த தரைத் தள ஃபிளாட்டின் வரவேற்பறையை கடையாக மாற்றி இருந்தார்கள். சின்னதாக இருந்தாலும் சரக்கு நிறைய இருந்தது. ஆனால் அதை எடுத்து போட தமிழ் தெரிந்த ஆள்கள் யாரும் விஜயாவின் கண்களுக்குத் தென்படவில்லை. மெயின் ரோட் என்பதால் வேறொரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு, காரில் அனிஷை விட்டு விட்டு விஜயாவை இந்த இடத்திற்கு நடத்தி அழைத்து வந்திருந்தார் ஷண்முகத்தின் உதவியாளர் ஷர்மா. கடையின் உள்ளே வராமல் மரியாதை நிமித்தமாக அவர் தெருவிலேயே நின்று கொள்ள, விஜயாவிற்கு தான் பாஷை தெரியாமல் பிரச்சனை ஆனது.​

விற்பனை பெண்ணிற்கு ஹிந்தியும் ஓரளவு ஆங்கிலமும் தெரிந்திருந்தது. விஜயாவிற்கு தமிழ் மட்டும் தெரியும் என்பதால், சைகையில் அவருக்கு வேண்டியதை சொல்ல, அவளுக்குப் புரிந்த விதத்தில் அவளும் பொருள்களைக் காண்பிக்க ஆரம்பித்தாள். பருத்தி துணி தான் என்றாலும் தரம், விலை என்று கேள்வி கேட்க விஜயாவிற்குத் தெரியவில்லை. அவளும் எடுத்துச் சொல்லவில்லை. விஜயாவின் தோற்றத்தைப் பார்த்து,’இவர் என்ன வாங்கப் போறார்? சும்மா பார்க்க வந்திருக்காங்க.’ என்று நினைத்து அசிரத்தையாக வேலை செய்து கொண்டிருந்தாள்.​

************************​

அவரது திடுக்கிடலைக் கண்டவுடன்,”ஸாரி ஆன்ட்டி இப்படி ஓடி வந்தா தான் இந்த சைட் வர முடியும்..இல்லைன்னா அந்த சைட்லேயே தவம் கிடக்கணும்..சடார்ன்னு நான் கதவு திறந்ததுலே பயந்து போயிட்டீங்கயில்லே..ஸாரி.” என்று மறுபடியும் மன்னிப்பு கேட்டாள் அந்த இளம் பெண்.​

ஒரு நொடிக்கு எதுவும் புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயா. அப்புறம் தான் அவள் தமிழில் பேசியதை அவர் உணர, அவரது முகத்தில் நிம்மதி பரவ, உதட்டில் புன்னகை அரும்பியது. அவரைக் கடந்து போய் கல்லாவில் இருந்த டிராவைத் திறந்து அவளது கைப்பையை உள்ளே வைத்து விட்டு, குமிந்திருந்த துணிகளை ஒதுக்கி விட்டு,”என்ன மாதிரி வேணும்? வீட்லே போட்டுக்கவா, வெளியே போட்டுக்கவா, வெளியேன்னா கோவிலுக்கா, பார்ட்டிக்கா இல்லை டிராவல்க்கா இல்லை..” என்றவளை இடைமறித்து,​

“எனக்கு சுடிதார் போட்டு பழக்கமில்லை ம்மா..என் பையன் தான் நான் பழகிக்கணும்னு பிடிவாதம் பிடிக்கறான்..இது தமிழ்க் கடை..துணி எடுத்தா அவங்களே தைச்சும் கொடுப்பாங்கண்ணு உங்க கடையைப் பற்றி யாரோ அவனுக்கு சொல்லியிருக்காங்க..கொஞ்சம் நேரம் முன்னே இதையெல்லாம் எடுத்து போட்ட பெண்ணுக்கு தமிழ் தெரியாது போல..எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும்..குழந்தை அழுததுன்னு வீட்டுள்ளே போயிருக்கா..வேற யாரையும் கடைலே பார்க்கலை ம்மா..கிளம்பிப் போயிடலாம்னு நினைச்சிட்டு இருந்த போது தான் நீ வந்த..எனக்கு எப்போதும் புடவை தான் ம்மா..வெளியே எங்கேயாவது போனா சுடிதார் போட்டுக்கிட்டு போனா எனக்கு வசதியா இருக்கும்னு என் பையன் சொல்றான்..எனக்கு அதெல்லாம் ஒத்து வராத்துன்னு சொல்லிப் பார்த்தேன், கெஞ்சிப் பார்த்திட்டேன் கேட்க மாட்டாங்கறான்..இதெல்லாம் எனக்கு எப்படி ம்மா பொருந்தும்?” என்று அவரது தேவையையும் தயக்கத்தையும் சொல்லி முடித்தார் விஜயா.​

“எல்லாம் பொருந்தும்..பொருந்தற மாதிரி செய்து கொடுப்போம்..இது தமிழ்க் கடை மட்டுமில்லை..பஞ்சாபி கடையும் தான்..நீங்க சொன்ன அந்தப் பெண் என்னோட அண்ணி ஷிக்கா..என் அண்ணனோட வீடு ஆன்ட்டி இது..வரவேற்பறையைக் கடையா மாத்தியிருக்கோம்..பின்னாடி ஒரு ரூம், சமையலறை, பால்கனி இருக்கு..வேலைக்கு ஆளெல்லாம் வைச்சுகற அளவுக்கு வியாபரமில்லை. ஷிக்கா, எங்கம்மா, அண்ணன், நான்னு மாறி மாறி கடையைப் பார்த்துப்போம்..நானும் எங்கம்மாவும் தனியா இருக்கோம்..அண்ணன், அண்ணி, அவங்க குட்டி பையன் மந்தீப் இங்கே இருக்காங்க.” என்று சினேக பாவத்துடன் அவளின் குடும்பத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டு,”உங்களுக்குப் பிடிக்கற மாதிரி நான் காட்டறேன்..பட்ஜெட் எவ்வளவு?” என்று கேட்டாள்.​

’பட்ஜெட்டா?’ என்று யோசனையான விஜயாவின் முகத்தைப் பார்த்து,”நோ பிராப்ளம்..எல்லா ரேஞ்லேயும் காட்டறேன்.” என்று ஒரு சின்ன ஸ்ட்டூல் மீது ஏறி நின்று, உயரத்தில் இருந்த ஒரு பண்டலை கீழே இறக்கி, பிரித்து அதிலிருந்து சில சல்வார் செட்டை எடுத்துப் போட்டாள் அந்தப் பெண். அப்போது வீட்டினுள்ளே இருந்து வந்த பெண் ஹிந்தியில் அவளிடம் ஏதோ சொல்ல, குனிந்த தலையை நிமிர்த்தாமல் இவளும் பதில் சொல்ல, கடுகடு முகத்துடன் அந்த பெண் உள்ளே சென்று விட்டாள்.​

கால்மணி நேரம் போல் விஜயாவிற்கு பொருத்தமாக இருக்கும் செட்களைக் பொறுமையாக காட்டினாள் அந்தப் பெண். அப்படியே இடையே அவளுக்கு வந்த கைப்பேசி அழைப்புகளையும் ஏற்று புன்னகைத்தபடி ஆங்கிலம், ஹிந்தி என்று கலந்து பேசிக் கொண்டிருந்தாள். கோடை காலத்திற்கு ஏற்றார் போல் கையில்லாத உடையில் இருந்தாள் அவள். முதலில் அவளைப் பார்க்கவே ஒரு மாதிரி கூச்சமாக இருந்தது விஜயாவிற்கு. பொதுவாக சிகப்பாக இருப்பவர்கள் தான் சிகப்பு நிறத்தில் உடை அணிவது வழக்கம். சிகப்பு இல்லை என்றாலும் அந்தப் பெண்ணனின் நிறம் என்னயென்று விஜயாவினால் கணிக்க முடியவில்லை. முகம், கைகள் இரண்டும் ஒரு மாதிரி கறுத்துப் போயிருந்தது. இரண்டு நாள்கள் கழித்து அவளைப் பார்த்திருந்தால் மகனைப் போல் அவளும் மாநிறமென்று புரிந்திருக்கும்.​

சிகப்பு நிறப் பின்ணனியில் பல வண்ணப் பூக்களை வாரியிறைத்த ஷர்ட்டும் பேண்ட்டும் அணிந்திருக்கிறாள் என்று நினைத்தார் விஜயா. ஆண்கள் அணியும் சட்டை போல் முன்பக்கத்தில் பொத்தான், பேக்கெட் இருந்தாலும் கீழே இருந்த பேண்ட்டுடன் இணைந்திருந்தது அந்த மேல்சட்டை. ‘இதென்ன டிரெஸ்? இங்கே இதுபோல நாம இதுவரை பார்த்ததேயில்லையே’ என்று நினைத்துக் கொண்டிருந்தார்.​

அவர் முன் கிடந்த துணிகள் அனைத்துமே அழகாக இருந்தன. எது அவருக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற யோசனையோடு விஜயா பார்த்துக் கொண்டிருக்க, எந்தக் கதவை வேகமாக திறந்து சத்தத்துடன் கடையில் நுழைந்தாளோ அதே கதவைச் சத்தமில்லாமல் திறந்து பூனை போல் அவன் அம்மா அருகே வந்து நின்றான் ஷண்முகம். பிஸியாக எதையோ எடுத்துக் கொண்டிருந்தவளின் பின்பக்கத்தை அரை நொடிக்கும் குறைவான அவகாசத்தில் நிதானமாக அளந்தவன், ‘ஜம்ப்ஸுட்’ என்று அவளது உடையை அடையாளம் கண்டு கொண்டிருந்தான்.​

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

வாங்க.. வாங்க.. புது கதைக்கு தான் வெயிட்டிங்....
 
Last edited:

Nirmala senthilkumar

Nirmala vandhachu
Welcome back ma
Nalla irrukku
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top