ஏரிக்கரை 8

Thoshi

Writers Team
Tamil Novel Writer
செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும் மழலையின் புன்னகை அழகு .....

ஏரிக்கரை 8 :

அரசுவும் ,முகிலும் ஏரிக்கரைக்கு சென்றபோது போலீசார் சொன்ன தகவலின்படி அங்கு ஏற்கனவே வந்திருந்த அப்பெண்ணின் கணவர் அப்பிணத்தின் கிழிந்த உடையை கண்டு அது தனது மனைவி தான் என அடையாளம் காட்டியவர் , குழந்தை காணாமப்போனதுல இவ இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லயே சார் ...நான் அழும்போது கூட அவ தன் துக்கத்தை மறைச்சிகிட்டு என்னை தேத்துனா சார்... குழந்தை கிடைச்சுடும்னு நம்புறானு தான நினைச்சேன் இப்படி என்ன தனியா விட்டுட்டு போவான்னு நினைக்கலயே என கதறினார். அவரின் கதறலில் சுற்றிஇருந்தோர்களின் மனமும் கலங்கியது .

அங்கு வந்திருந்த வசந்த் ,ச்சோ ...இதே வேலையா போச்சி ...வரவர இந்த ஏரி தற்கொலை பண்ணிக்கிற இடமாவே மாறிடிச்சி என சலிப்புடன் கூறியதை கேட்டு பதிலுக்கு பேசபோன முகிலின் கைபிடித்து தடுத்த அரசு , டேய் இப்போ எதையும் பேசாத ... தேவையில்லாம இங்க இருக்க மக்களோட மனசுல பயத்தை உருவாக்க வேண்டாம். எதுவா இருந்தாலும் ஸ்டேஷன் போய்ட்டு பேசிக்கலாம் .

முகில் , ஆனா பாஸ் .

அரசு , முகில்ல் ...நீ இப்போ இவங்க கூடவே போயிட்டு போஸ்ட்மார்ட்டம் சீக்கிரம் பண்ண வச்சு ரிப்போர்ட் வாங்கிட்டு வா.

முகில் , போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட் எல்லாம் உடனே தர மாட்டாங்க பாஸ் .

அரசு , அதுக்குதான் உன்ன போ சொல்றேன் எதாவது பண்ணி சீக்கிரம் ரிப்போர்ட் வாங்கிட்டு வா .

முகில் , எஸ் பாஸ் எனக்கும் அந்த காயங்களை பத்தி தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு .நான் போய் ரிப்போர்ட் வாங்கிட்டு வரேன் .

அரசு , சீக்கிரம் கண்டுபிடிக்கனும்அடுத்து அவன் யாரையும் கொல்லறத்துக்கு முன்னாடி முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமே கண்டுபிடிக்கணும் .

.................................................

இரண்டு மணி நேரங்களுக்கு பின்பு :

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அரசவிடம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டை குடுத்த முகில் , பாஸ் ரிப்போர்ட் வந்துருச்சு ஆனா இதுவரைக்கும் என்ன எழுதியிருந்ததோ அதேமாதிரிதான் இதுலயும் இருக்கு . அந்த காயங்கள் மீன்கள் கடிச்சதுனு தான் இருக்கு .

வசந்த் , அது மீன்கள் கடிச்சதுதான ....அப்போஅதான ரிப்போர்ட்ல வரும் .

முகில் , வசந்த் சார் அந்த ஏரில மீன்கள் மட்டும் தான் இருக்கா ?

வசந்த், அது முகில் சார் பொதுவா ஏரினா மீன் , நண்டு , நத்தை, குட்டிக்குட்டி புழு பூச்சிகள்லாம் நிறைய இருக்கும் ஆனா இந்த ஏரில ரெண்டுவருஷத்துக்கு முன்னாடி ***** கட்சிக்காரங்க தண்ணில ஏதோ கலந்ததுல மொத்தமா எல்லாம் செத்து போய்டிச்சி நீங்க பேப்பர்லலாம் படிச்சிருப்பிங்க . அதுக்கப்றம் இப்போ அந்த ஏரில வெறும் மீன்கள் மட்டும் தான் இருக்கு .

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை படித்து கொண்டே இவர்கள் பேசுவதை ஒரு காதில் கேட்டுக் கொண்டிருந்த அரசு , வசந்த் கடைசியாய் சொன்னதை கேட்டு ரிபோர்டின் பக்கத்தை திருப்பியவனின் கண்கள் ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது .

பின் வசந்த்திடம் , ஏன் வசந்த் சார் அந்த ஏரில மீன்கள் மட்டும் தான் இருக்குனு உங்களுக்கு நல்லா தெரியுமா ?

வசந்த்....எஸ் சார் கடந்த வருஷம் கூட நீர்வளத்துறைன்னு சொல்லிக்கிட்டு ஒரு கூட்டம் வந்து ஆராய்ச்சிலாம் பண்ணி சொன்னாங்களே .

தன் கையிலிருந்த ரிப்போர்ட்டை முன்வைத்து ஒரு குறிப்பிட்ட வரியை சுட்டிக்காட்டியவன் ... இதுல போட்டிருக்கிறத நீங்க ரெண்டு பேருமே கவனிக்கலையா மீன்களும் நண்டுகளும் கடித்த தடம் அந்த உடல்ல இருக்குனு போட்டிருக்கு .

வசந்த் , ஆனா சார் இதுக்கு வாய்ப்பே இல்லையே ...

முகில் , சொப்ப்பா இந்த ஏரிக்கரை நம்பள போட்டு ரொம்ப டார்ச்சர் பண்ணுது என புலம்ப அந்த நேரத்தில் இவர்களுக்காக டீ எடுத்துக்கொண்டு உள்ளே வந்த ஏட்டைய்யா , சார் எனக்கு 25 வருஷத்துக்கு முன்னாடியே ஒருதடவை இப்படி தோணிச்சி ஏரிக்கரை கேஸ் முடியாதோன்னு ....அந்த ஏரிக்கரை பக்கம் தான் என் வீடு ஆனா அத பாக்க பிடிக்காமா தினமும் சுத்துவழியா வரேன் சார் .ஆனா என்னமோ இந்த ஆறு மாசமா ஏரிக்கரை ஏரிக்கரைனு மட்டும் தான் காதுல விழுது எல்லாம் என் தலையெழுத்து என சலித்துகொண்டே வெளியேறினார் .

வெளியேறியவரை கண்ட அரசு , வசந்த் கொஞ்சம் அவர வர சொல்லுங்க என்றான்

உள்ளே வந்த அவரிடம் வாங்க சார் ...ஏன் நீங்க அப்படி சொன்னீங்க 25 வருஷத்துக்கு முன்னாடி ஏதாவது இதே மாதிரி நடந்துதா என்ன ?

அவர் , இதே மாதிரி இல்ல சார் அது வேற ஒரு கேஸ் .

அரசு முகிலை பார்க்க அவன் , ஏட்டய்யா அந்த கேச பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா ??? அது என்ன கேஸ் ??

அவர் , ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடி இருக்கும் சார் ... நான் அப்போ இந்த ஸ்டேஷன்ல கான்ஸ்டபிள் அ இருந்தேன் . ஒருநாள் காலையில் கணவன் மனைவி ரெண்டுபேர் குழந்தையைக் காணோம் கம்பளைன் குடுக்க வந்தாங்க சார் ....

காலைல ஒரு நாளு மணி போல அவங்க வீட்டுல கரண்ட் போனதாகவும் , கதவை துறந்து வச்சிட்டு தூங்குனவங்க எழுந்துபாக்கும்போது குழந்தையை காணோம்னும் கம்ப்ளைன் ல எழுதி குடுத்தாங்க சார் . அப்போ இருந்த இன்ஸ்பெக்டர் இந்த கேச எப்படியாவது கண்டுபிடிக்க நினைச்சாரு சார் . அவங்க வீட்டு பக்கத்துல இருக்கவங்கள விசாரிச்சதுல கரண்ட் போனது உண்மை தான்னு சொன்னாங்க ஆனா ரெண்டு பேர் அந்த நேரத்துக்கு ஒரு பொண்ணு தலையில முக்காடு போட்டு கைல குழந்தையோட போனதாவும் அது அந்த குழந்தையோட அம்மா மாதிரி இருந்ததாகவும் சொன்னாங்க .

இடைமறித்த முகில் , கரண்ட் இல்ல சொல்றிங்க அந்த நேரத்துல அவ்ளோ வெளிச்சமும் இருந்துருக்காதே அப்றம் எப்படி அது அந்த குழந்தையோட அம்மானு அவங்க சொல்றாங்க .

அரசு , இருட்டா இருந்தா என்ன முகில் ...நம்பளுக்கு நல்லா தெரிஞ்சவங்கள நிழலுருவத்தை வச்சே கண்டுபிடிக்கலாம். நீங்க மேல சொல்லுங்க ஏட்டைய்யா .

அவர் , முகில் சார் கேட்டதா தான் அப்போ இருந்த இன்ஸ்பெக்டரும் யோசிச்சாரு .அதுனால அவர் நேரடியாவே அந்த பொண்ண விசாரிச்சப்போ முன்னுக்கு முரணா பதில் சொன்னதுல சந்தேகப்பட்டு ஸ்டேஷன் கூட்டிட்டு வந்தோம் . அப்பரும் லேடி கான்ஸ்டபிள் வச்சி விசாரிக்கும் போது தான் சார் அந்த பொண்ணு பண்ண அந்த கொடூரமான வேல தெரிஞ்சிது .

சொன்னவர் சிறிது நேரம் அமைதியாய் இருந்தார் அந்த சிறுஇடைவெளியை கூட பொறுக்க முடியாமல் வசந்த் , ஏட்டைய்யா நடுவுல இப்படி நிறுத்துனா எப்படி ....சொல்லுங்க என்னாச்சி ?? குழந்தை கிடைச்சிதா ??

பெருமூச்சிவிட்டவர் ,அந்த பொண்ணுக்கு ரொம்ப சின்ன வயசுலையே கல்யாணம் பண்ணிவச்சிருக்காங்க சார் அவங்க வீட்ல. ரொம்ப பலவீனமா இருந்ததால ரெண்டு வாட்டி குழந்தை உருவாகியும் தங்கல ...மூணாவதாதான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த குழந்தைய பெத்துற்கு ....ஆனா அதுகப்றமும் அந்த குழந்தைக்கு பால் குடுக்கும்போது வலிதாங்க முடியாம இருந்ததுல டாக்டர் ஆஹ் பாத்து மருந்து வாங்கிட்டு வந்துருக்கு. ஆனா அவங்க வீட்ல இருக்கவங்க மருந்து சாப்பிட்டா குழந்தைக்கு சேராதுனு சாப்பிட விடாம பண்ணிர்காங்க...ஒவ்வொரு தடவையும் வலிரொம்ப அதிகாமானதுல சொந்தகாரங்க கிட்டலாம் குழந்தைய தத்தெடுத்துக்க சொல்லி கெஞ்சிருக்கு....அந்த பொண்ணு பெத்தவங்களும் பொண்ணுனா இதுலாம் சகஜம்னுன்னதுல... யாருமே நம்ப வலியை பார்கலை அதுக்கு அந்த குழந்தை தான் காரணம்னு அன்னிக்கு அவங்க வீட்ல கரண்டு போன நேரத்துல குழந்தைய தூக்கிட்டுப்போய் அந்த ஏரில போட்டுட்டு ஒண்ணும் தெரியாதமாதிரி குழந்தையை காணும்னு புருஷன் கூட சேர்ந்து கம்பளைன் பண்ணிற்கு சார் .

இதெல்லாம் கேட்டு ஒரு நொடி எங்க நெஞ்சம் எல்லாம் பதறி போச்சி சார் ....அவசரஅவசரமா கிளம்புன இன்ஸ்பெக்டர் கூடவே நாங்க எல்லோரும் போனும் ...ஆனாஎவ்ளோ தேடியும் அந்த குழந்தை கிடைக்கவே இல்ல ..அதுகப்ரும் அந்த ஏரிக்கரைய பார்த்தாலே அந்த குழந்தை நினைவு தான் என சொல்லியவர் சோக பெருமூச்சுவிட்டார் .

முகில் , ம்ம்ம் அந்த குழந்தை ரொம்பவே பாவம்ல அரசு என்றவன் அவனின் சிந்தனை முகத்தை கண்டு பாஸ் ....பாஸ் என்னாச்சி ...

அவனின் கேள்விக்கு பதில் சொல்லாதவன் , அவரிடம் ஏன் ஏட்டைய்யா அந்த குழந்தை உயிரோட இருக்க எதுனா வாய்ப்பிருக்கா .

அது எப்படி என தொடங்கிய முகிலை தடுத்தவன் , நீங்க சொல்லுங்க ஏட்டய்யா அப்படி நடக்க வாய்ப்பிருக்கா .

சிறிது நேரம் யோசித்தவர் , உடம்பு எதுவும் கிடைக்கலையே சார் அதுனால அதுக்கும் வாய்ப்பிருக்கு . ஆனா, சார் இப்போமாதிரி அப்பஇந்த ஏரிக்கரை இல்லை சார் . இப்போ வெறும் மீன் மட்டும் தான் அதுல இருக்கு. அப்போ என்னென்னமோ இருந்திச்சி குழந்தை தண்ணில விழுந்திருந்தா பொழைச்சிருக்க வாய்ப்பில்லை சார் .

அரசு , சரிங்க ஏட்டய்யா ரொம்ப நன்றி ....வசந்த் சார் எனக்கு அந்த கேஸ் பைல் கிடைக்குமா .

வசந்த், நிச்சயம் சார் நான் பாக்க சொல்றேன் என அவ்விடத்தை விட்டு சென்றான் .

இப்போ அந்த அறையில் அரசுவும் முகிலும் மட்டுமே இருந்தனர் .

முகில் , பாஸ் இப்போ இருக்க கேஸையே முடிக்கல நீங்க எதுக்கு அந்த கேஸ கேக்குறீங்க .

அரசு , ஏன் முகில் ஒரு வேளை அந்த குழந்தை நீயா இருந்தா ...உனக்கு இப்டிலாம் நடந்துருக்குனு தெரியவந்தா நீ என்ன பண்ணுவ .

முகில் , யோசிக்காம சொல்லட்டுமா ....நான் மட்டும் போலீஸா இல்லாம இருந்தா அவங்க எங்க இருக்காங்கனு கண்டுபிடிச்சி கொல்லநினைப்பேன்.

அரசு , ம்ம்ம் தட்ஸ் இட்.

முகில் , பாஸ்ஸ்ஸ்ஸ் .

அரசு , ஆமா முகில் ஏன் அந்த குழந்தை உயிரோட இருக்கக்கூடாது ?? நீயே யோசிச்சி பாரு ...இந்த எல்லா கொலையிலையும் குழந்தையை சரியா பாத்துக்கலைனு வருதா. அதுமட்டுமில்லை அவங்க எல்லோருமே வேற வேற ஊர சேர்ந்தவங்க அவங்களுக்கும் அந்த ஏரிக்கரைக்கு என்ன சம்பந்தம் இருக்க போகுது அவங்களுக்கு சம்பந்தம் இல்லனா அந்த கொலைகாரனுக்கு தான அது சம்பந்தமா இருக்கணும் ???

முகில், எஸ் பாஸ் ...அப்போ நம்ப அடுத்த கட்ட நடவடிக்கை என்ன பாஸ் ...

அரசு , முதல அந்த கேஸ் பைலை பார்க்கணும் ...அப்றம் அந்த ஏரிக்கரைக்கு போகணும் ....நண்டுராஜா வேற எங்க இருந்து வந்தாருனு தெரிஞ்சிக்கணுமே என்றான் .


ஆம் எங்க தொலைச்சமோ அங்க தான தேடணும் ....


----------------------------------------------
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement