என் உறவென வந்தவனே - 6

Gayus

Writers Team
Tamil Novel Writer
#1
1000 times sorry toooo late frds & siss...
என் உறவென வந்தவனே 6 post pannivitten..

அத்தியாயம் - 6

அமைதியாக இருந்த மனதை...
அடிமையாக மாற்றிவிட்டாய் உனக்கு...
நீ கொடுக்கும் உணர்வுகளில்...
இனிமையாக வைத்துக்கொள்வேன்...
என் காதல் மனதை....

அதிகாலை சூரியன் உதிக்கவும்.. தனது கையை பார்த்துக்கொண்டே எழுந்தாள் தனு... அவள் கையில் ரவியின் அம்மா வைத்த மருதாணி நன்றாக சிவந்திருந்தது... அதை பார்த்துக்கொண்டு இருந்தவளை குளித்துவிட்டு வந்த பானு "ஏய்... கல்யாணப்பொண்ணு நான் டி... நீயில்ல... இப்படியே கனவு உலகத்துல உட்காரப்போறியா.. இல்ல... என் கல்யாணத்துக்கு ரெடியாகப்போறியா..." என்று பானு கேட்க... "இதோ.. கொஞ்ச நேரத்துல கிளம்பிடறேன்... ஆமா.. உனக்கு மேக்கப் பன்றவங்க இன்னும் வரலயா..." என்று துண்டை எடுத்துக்கொண்டே தனு கேட்க...
"இப்ப வந்துருவாங்கடி... நீ முதல்ல குளிச்சிட்டுக்கிளம்பு..." என்று பானு பரபறக்கவும்... "ம்ம்ம்... சரிடி.." என்று சிரித்துக்கொண்டே குளியலறைக்கு சென்றாள் தனு...

இங்கே ரவியின் அறையில் "மாப்பிள்ளை நானா? இல்ல இவனா?.." என்ற குழப்பத்தில் இருந்தான் ரவி... பின்ன கண்ணாடி முன்பு நின்று தனது முடியை சரி செய்து கொண்டிருந்தான் ஜான்... "டேய் மச்சான் போதும்டா..." என்று ரவி சலித்துக்கொள்ள... "ரொம்ப சலிச்சுக்காத மச்சான்... மாப்பிள்ளை நீ மட்டும் நல்லாருந்தாப் போதுமா.. மாப்பிள்ளைத் தோழன் நானும் நல்லாருக்கவேணா...?" என்று ஜான் சொல்ல.... "வேணான்னு சொன்னா மட்டும் நிறுத்தவாப்போற... ஏதோ பன்னித்தொலடா..." என்று தலையிலேயே அடித்துக்கொண்டான் ரவி...

மணமேடை அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க... அய்யர் மந்திரங்கள் முழங்க... தன்னவளின் வருகைக்காக காத்திருந்தான் ரவி.. இவன் மட்டுமல்ல ஜானும் தான்... அய்யர் பெண்ணை அழைத்து வாருங்கள் என்று சொல்ல... சில பெண்கள் சேர்ந்து மணமகளை அழைத்து வந்தனர்...

அழகிய பதுமைப்போல் நடந்து வந்து ரவியின் அருகில் அமர்ந்தால் பானு...
ஜான்.. வந்ததிலிருந்து தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதால் நிமிரக்கூட முடியாமல் நின்றிருந்தாள் தனு...
"ப்ச்.. என்னடா இவ.. குனிஞ்ச தலை நிமிராம இருக்கா... ம்ம்... என்னப் பண்ணலாம்... ஐடியா..." உடனே ரவியின் காதருகில் குனிந்தவன்... "டேய்.. மச்சான் நீ என்னப்பன்னுவியோ ஏதுப்பன்னுவியோ... தெரியாது... தாலி அர்ச்சதத்தட்ட தனு தான் வாங்கனும்... இல்ல.. காலேஜ் மேட்டரை தங்கச்சிக்கிட்டே சொல்லுவேன் பாத்துக்கோ..." என்று சொல்ல...
"அடப்பாவி... என் கல்யாணத்த நடத்த வந்தியா இல்ல நிறுத்த வந்தியா.... ஆமா... காலேஜ்ல நான் என்னடாப்பன்னே... ஆண்டவா... இப்படியோரு ப்ரெண்டா எனக்கு கிடைக்கனும்.... போடா... பண்ணித்தொலையிறேன்..." என்று கையெடுத்துக்கும்பிட்டான்.... ரவி....

அய்யர் அர்ச்சதத்தட்டை நீட்டி "ஆசீர்வாதம் வாங்கிண்டுவாங்கோ..." என்று சொல்ல... ரவி வாய் திறக்கும் முன்பாகவே அவனின் அம்மா "தனு... நீப்போய் வாங்குமா..." என்று சொல்ல... "அம்மா.. நான் எப்படி..." என்று அவள் தயங்க... "ஏன்மா... நீ வாங்கனா என்ன... நேரமாகுதுப்பார்... சீக்கிரம் போமா..." என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட வேறுவழியில்லாமல் தட்டை வாங்கிக்கொண்டு கீழே சென்றாள்...
ரவிக்கு இப்போது தான் மூச்சே வந்தது....

"வா.. தனுமா.. இப்போ என்னை நீ பார்த்து தான் ஆகவேண்டும்..ஹா..ஹா..." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஜான்... கீழே அமர்ந்திருந்த அனைவருக்கும் அர்ச்சதைக்கொடுத்துவிட்டு... மேலே ஏறும்போது தான் அவனின் நினைவே வந்தது... அழுத்தமாக கண்ணை மூடித்திறந்தவள்... எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டே வர... அவனின் இடம் வந்ததும் கால் மெதுவாக நகர... கீழே குனிந்து கொண்டேக்கொடுக்க... அவன் அர்ச்சதையை எடுத்தப்பாடில்லை...
"இவன்...வேணும்னே இப்படியெல்லாம் செய்கிறான்..." என்று மனதில் அவனை திட்டிவிட்டு... "எடுத்துக்கோங்க..." என்று அவனின் முன்பு நீட்டி மெதுவாக சொல்ல... "நிஜமாகவே உன்னை எடுத்துக்கதான் போறேன்..." அவனும் மெதுவாகவே சொல்ல... ஜான் இப்படி சொன்னதும் வேகமாக நிமிர்ந்து அவனை பார்த்தாள்...

"உன்னை.. பார்க்க வைக்க இவ்ளோ கஷ்டம்பட வேண்டியதா இருக்கு... ம்ம்...பரவால இதுக்கூட நல்லா தான் இருக்கு..."என்று மனதில் நினைத்தவன்...
அவளை பார்த்து கண் சிமிட்ட... அதில் சுயநினைவுப் பெற்றவள்... "ச்ச..." என்று சொல்லிவிட்டு தட்டை அய்யரிடம் கொடுத்துவிட்டு ஓரமாக சென்று நின்றுக்கொண்டாள்... அவள் மனதில் இந்த நிமிடம் நினைப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் தனக்கும் அவனுக்கும் இப்படி தான் திருமணம்நடக்குமா... என்று தான்...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... அது வாழ்க்கையே இல்லை...

சுபமங்கள நேரத்தில் பானுவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான் ரவி... பிறகு மெட்டி போடும் சடங்கு நடக்க.. அது ஏனோ தெரியவில்லை தனுவிற்கு மிகவும் பிடித்திருந்தது... காலில் உள்ள மருதாணி மற்றும் கொலுசைவிட..மெட்டியிட்டவுடன் அப்படியொரு அழகாக தெரிந்தது...

அனைத்து சுபசடங்குகளும் முடிந்து... உறவினர்கள் கூட்டம் குறையத் தொடங்க... மாலையாகி விட்டது... பானுவிடம் வந்த தனு "சரி.. பானுமா... நீ சொன்ன மாதிரி கல்யாணம் முடியும் வரை இருந்துவிட்டேன்.... அப்போ நான்.. நைட் கிளம்பறேன்டி..." என்று சொல்ல... "என்னடி... அதுக்குள்ள போகணுமா.... நாளைக்கு போகலாமே..." என்று பானு கேட்க.. "அதெல்லாம் சரிவராது... அல்ரெடி நாலுநாள் லீவ் போட்டாச்சு... அதுவும் இல்லாம ரிட்டன் டிக்கெட்டும் இன்னைக்கு நைட்னு முன்னாடியே வாங்கிட்டேன்டி..." என்று தனு சொல்ல... "ம்ம்... சரிடி.. அதான் முன்னாடியே ப்ளான் பன்னிதான வந்துருக்க...நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ... நைட் ட்ராவல்பன்ன கரெக்ட்டா இருக்கும்..."என்று சொல்ல... தனுவும் தலையை ஆட்டிவிட்டு.. அறையிலிருந்து வெளியே சென்றாள்....

அவன் எங்கேயாவது இருக்கிறானா... என்று பார்த்துக்கொண்டே படியேறியவள்... யார் மீதோ மோதி கீழே விழப்போக... ஒரு வலிய கரம் இவளின் மென்மையான கரத்தைப் பிடித்து.. இழுத்து நிறுத்தியது... தனு அழுத்தமாக மூடியிருந்த கண்ணை மெதுவாக திறக்க.. அவளின் முன்பு ஜான் அவளையே பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தான்... தனு "தேங்ஸ்..." என்று சொல்லிவிட்டு மீண்டும் படியேறப்போக... அவளின் முன்பு கை நீட்டி தடுத்தவன்... "யாரையோ தேடிகிட்டே... வந்த மாதிரி இருந்துச்சி... ஒரு வேல என்னதான் தேடிவந்தீ..." என்று சொல்லி முடிக்கவில்லை... "அப்படியெல்லாம் இல்ல... கொஞ்...கொஞ்சம் நகர்ந்தீங்கன்னா நான் போவேன்..." என்று வேகமாக அவள் சொல்ல... "கூல் பேபி... எதுக்கு இவ்ளோ பதட்டப்படற..." என்று அவளுக்கு வழிவிட்டு நிற்க... தனு விட்டால் போதும் என்று வேகமாக ஏற... "ஒரு மினிட் பேபி... நான் சொன்ன விஷயத்த விளையாட்டா நினைக்காத... நான் தான் உன்னோட ஹப்பி... நீ தான் என்னோட பேபி பொண்டாட்டி... ஓகே... சரி சரி... போய் நல்லா ரெஸ்ட் எடு... நைட் ட்ராவல்பன்னனும் இல்ல..." என்று சொல்லிவிட்டு ஒரே தாவலில் படியைவிட்டு இறங்கியவன் திரும்பி அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றான்....

அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் செய்கைகளும் உண்டாக்கும் உணர்வு தனுவிற்கு மிகவும் பிடித்திருந்தது... ஆனால் அவளின் காதலை சொல்வதற்கு ஏதோ ஒன்று தடுக்கிறது.... அந்த ஒன்று அவளுக்கே தெரியவில்லை...

- தொடரும்....
 
#3
@Gayus டியர்
நல்லாயிருக்கீங்களா, காயத்ரி டியர்?
பார்த்து ரொம்பவே நாளாச்சு
ஏன் நீங்க இவ்வளவு நாளா வரலை?
உடம்பு சௌகர்யம்தானேப்பா
 
Last edited:

Gayus

Writers Team
Tamil Novel Writer
#6
@Gayus டியர்
நல்லாயிருக்கீங்களா, காயத்ரி டியர்?
பார்த்து ரொம்பவே நாளாச்சு
ஏன் நீங்க இவ்வளவு நாளா வரலை?
உடம்பு சௌகர்யம்தானேப்பா
இப்போது நான் மிகவும் நலமாக உள்ளேன்.... bj sis...ஒரு சிறிய விபத்து... கையில் சின்னதாக அடி... அதனால் எழுத முடியவில்லை... (y):giggle::giggle:
 

Janavi

Well-Known Member
#9
இப்போது நான் மிகவும் நலமாக உள்ளேன்.... bj sis...ஒரு சிறிய விபத்து... கையில் சின்னதாக அடி... அதனால் எழுத முடியவில்லை... (y):giggle::giggle:
Take care sis...