என்றென்றும் அன்புடன் அழகி - 4

Advertisement

Dharanika

Active Member
கல்யாணம் முடிந்ததும் வீட்டிற்கு வந்த அழகம்மை நேராக பரசிவத்திடம் சென்று அனைத்தையும் கூறினார். பரசிவம் மனதுக்குள் தன் ஆசையால் பேத்தியின் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது புரிந்து தன்னுள்ளே மருகினார். அழகம்மை அறையை விட்டு வெளியே வரவில்லை என்றாலும் வரவேற்பறையில் நடந்த உரையாடல்கள் அனைத்தையும் கேட்டு கொண்டுதான் இருந்தார்.

தாயிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்த மதியின் மனது எரிமலையை போல் புகைந்து கொண்டிருந்தது. "ச்சே.. எப்படியாவது பிளான் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்னு பார்த்தா இப்போ யாருன்னே தெரியாத ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சே.. அவனும் தாலி கட்டி முடிச்சவுடன் கடமை முடிஞ்சதுன்னு கிளம்பி போய்ட்டான்.

இதுல அம்மா வேற அவன் கூட சேர்ந்து ஒரே வீட்ல இருக்கணும்னு நினைக்கிறாங்க. நோ.. நெவெர்.. என்னை மதிக்காதவன் கூட நான் வாழமாட்டேன்" என மனதுக்குள் சூளுரைத்து கொண்டாள். அடுத்த மாதத்தில் செமிஸ்டர் தேர்வுகள் இருக்க, தன் மனதை படிப்பில் திசை திருப்பினாள். மதி திருச்சியில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி படிப்பதால் இன்னும் இரண்டு நாளில் விடுதி செல்ல முடிவெடுத்திருந்தாள்.

****************************************************************************

இரவு ஒரு மணி போல சென்னையில் உள்ள ஜனனியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர். பயண களைப்பு தீர இருவரும் குளித்துவிட்டு வர ஜனனி, "மனோ, அன்புக்கிட்ட பேசுனீங்களா?"

இல்ல ஜனனி..அவன் ரொம்ப கோவமா இருக்கான்..நேர்ல பேசலாம்னு இருக்கேன்.

"நீங்களும் அன்புவும் சொந்தக்காரங்களா?"

"எனக்கும் தெரியாது ஜனனி. அன்புவை அங்க பார்த்ததும் எனக்கும் அதிர்ச்சி தான். அத்தைக்கு இப்படி ஒரு சொந்தம் சென்னைல இருக்குனு எனக்கு தெரியாது "

"ம்ம்.. நம்ம பிரச்சனைல தேவையில்லாம மதியழகியும் மாட்டிக்கிட்டா"

"நானும் அவங்க கல்யாணத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. ஆனா அன்புவோட அப்பத்தா சரியா பிளான் பண்ணி அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்க. இல்லனா இன்னும் பழசையே நினைச்சிட்டு கல்யாணத்தை தள்ளி போட்டுட்டு இருப்பான்"

எல்லாம் சரிதான் .. ஆனா நீங்களும் மதியும் அவசரப்படாம உங்க வீட்ல நம்ம காதலிக்கிற விஷயத்தை சொல்லி இருந்தா யாருக்கும் வருத்தம் இல்லாம பேசி இந்த கல்யாணம் நல்லபடியா நடந்திருக்கலாம்.

"கண்டிப்பா கல்யாணம் நடந்திருக்கும். ஆனா உன் இடத்துல மதி இருந்திருப்பா கல்யாண பொண்ணா. உனக்கு எங்க அழகம்மை ஆச்சியை பத்தி தெரியாது. இப்போ கூட எதுக்கு எனக்கும் மதிக்கும் கல்யாணம் நடத்த முடிவு பண்ணாங்கன்னு நினைக்குற? எல்லாம் சொத்துக்காக தான். மதியோட அப்பா இறந்ததும் எங்க தாத்தா தான் எல்லாம் பார்த்துக்கிட்டாங்க. தாத்தா அவங்களுக்கு பிறகு மதிக்கு தான் தன்னுடைய சொத்துனு எழுதி வச்சுட்டாங்க. என்னுடைய யூகம் சரின்னா ஆச்சி எங்க கல்யாணத்துக்கு அவரப்படுத்த சொத்தும் ஒரு காரணமா இருக்கலாம்."

"அது எப்படி இவ்ளோ உறுதியா சொல்றிங்க?"

"தாத்தாவுக்கு மதிய நல்லா படிக்க வைக்கணும்னு ஆசை. அவ ஸ்கூல் முடிச்சதும் கல்யாணம் பண்ணிடலாம்னு ஆச்சி சொல்ல, தாத்தா தான் அவங்களோட எதிர்ப்பை மீறி காலேஜ் சேர்த்தாங்க. அதுவும் அவ வீட்ல இருந்தா அவளை படிக்கவிட மாட்டாங்கன்னு காலேஜ் ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. தாத்தா நல்ல இருந்த வரைக்கும் ஆச்சி எந்த பிரச்சனையும் பண்ணாம அமைதியா இருந்தாங்க. தாத்தாக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகவும் அவங்க சொல்றது தான் எல்லாரும் கேட்கணும்னு நினைக்கிறாங்க"

"ஏன் மதியழகியை உங்க ஆச்சிக்கு பிடிக்காதா?"

"உனக்கு எப்படி சொல்றது ஜனனி.. ஆச்சி அந்த காலத்து மனுஷி. அவங்களுக்கு பையன் தான் உசத்தினு எண்ணம். மதி பிறந்தப்போ பொண்ணு பொறந்திடுச்சுனு ஆச்சி அவளை தூக்கவே இல்லையாம். எங்க சொத்தெல்லாம் மதிக்கு போயிடுமோன்னு தான் எனக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் சொத்து வெளிய போகாதுல.."

"அப்புறம் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க?"

"நம்ம பிளான் படி நீ ஊரு முன்னாடி வந்து நம்ம காதலிக்கறோம்னு சொல்லிட்ட. அப்போ விஷயம் ஊர்ல இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. பொண்ணு விஷயங்கரதுனால அவங்களால எதுவும் பண்ண முடியல. மீறி பிரச்சனை பண்ணா பஞ்சாயத்தை கூட்டுவாங்க. அதுனால தான் ஆச்சி அமைதியா இருந்துட்டாங்க"

"இப்போ புரியுது.. நீங்க ஏன் என்னை ஊர் முன்னாடி சொல்ல சொன்னிங்கனு"

"ம்ம்.. எனக்கு இப்போ அன்பையும் மதியும் நினைச்சா தான் கவலையா இருக்கு"

"அவங்களுக்கும் எதிர்பார்க்காத கல்யாணம் தானே.. கொஞ்சம் காலம் ஆகும் இந்த கல்யாணத்தை ஏத்துக்கறதுக்கு..மனோ நான் ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?"

என்னனு சொல்லு ஜனனி..

"அது.. மதியும், அன்புவும் ஒன்னா சேர்றவரைக்கும் நாமளும் தள்ளி இருப்போமா? எனக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியா இருக்கு.. நம்ம கல்யாணத்தால விருப்பம் இல்லாம அவங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்க வேண்டியதா போயிடுச்சு."

"நீ சொல்றது சரி தான். நானும் அது தான் நினைச்சேன்.. சரி போய் தூங்கு" என்றவன் ஒரு தலையணை, போர்வை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வர "மனோ என்னாச்சு.. கட்டில்ல படுக்க வேண்டியது தானே?"

"நீ தானா சொன்ன தள்ளி இருக்கலாம்னு?"

"அதுக்காக இப்படியா? ஒரே கட்டில்ல படுத்தா கட்டுப்பாடோட இருக்க முடியாதா?"

"அப்பாடி.. நல்ல வேளை.. எங்க இங்கேயே படுத்துக்கோன்னு சொல்லிடுவியோன்னு நினைச்சேன்"

அப்போ சும்மா தான் போர்வைய எடுத்துட்டு வந்திங்களா?

"தள்ளி இருக்கலாம்னு சொன்ன சரி.. அதுக்காக இவ்ளோ நாள் காதலிச்சிட்டு கல்யாணத்துக்கு அப்புறமும் தனியா படுக்க நான் என்ன சாமியாரா? சரி.. சரி.. முறைக்காத.. இந்த மனோ வாக்கு கொடுத்தா அத அவனே மதிக்க மாட்டான்.." என்றான் அவளை சீண்டுவதற்காக. அவனின் விளையாட்டு புரிந்து "அப்போ நீங்க இங்கேயே படுத்துக்கோங்க" என இன்னொரு தலையணையை அவன் மேல் வீசிவிட்டு படுக்கையறை கதவை தாழிட, "ஐயோ.. ஜனனி.. நான் சும்மா சொன்னேன்..நான் நல்ல பையான உன் மேல கை, கால் படாம தூங்குறேன்" என அவளிடம் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தான்.

அன்பு தொடரும்...
 

தரணி

Well-Known Member
பாருடா முன்னாடியே அன்புவை தெரிஞ்சி இருக்கு அவுங்களுக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top