உள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 12

#1
உள்ளம் கொள்ளை போகுதடா
திருமண நாள் அழகாக விடிந்தது மூன்று திருமணமும் ஒரே மண்டபத்தில் நடை பெறுவதால் திருமண மண்டபமே கலை கட்டி இருந்தது மணப்பெண்கள் மூவரும் சீக்கிரமே எழுப்பப்பட்டு தயாராகிக்கொண்டிருந்தனர் மூன்று ஜோடிகளுக்கும் ஒரே மேடையில் திருமண சடங்குகள் நடைபெற்றன. மூன்று மணப்பெண்களுக்கும் திருமண பட்டு வழங்க பட்டு அவர்கள் தயாராகும் படி பணிக்க பட்டது. முதல் முகுர்த்தம் நெருங்கும் வேளை ஷக்திக்கு மிகவும் படபடப்பாக இருந்தது தன் அன்னையின் கையை பிடித்து கொண்டிருந்தாள். ஷிவா மணமேடையில் தன் மனதிற்கினிய மங்கையை கரம்பிடிக்க போகும் உவகையில் கம்பீரமாக அமர்திருந்தான். மணமகளை அழைத்து வர குறைவும் அரக்கு மற்றும் தங்க நிற பட்டு புடவையில் தேவதையை போல இருந்த ஷக்தியை விழிஅகற்றாது பார்த்துக்கொண்டிருந்தான். ஷக்தி ஷிவாவின் அருகினில் அமர்த்தப்பட்டு சடங்குகள் நடைபெற்றன.

ஷண்முகம் - லக்ஷ்மி தம்பதியினர் மகளின் திருமண கோலத்தை கண்டு ஆனந்தத்தில் திளைத்தனர். திருமாங்கல்யம் அனைவரின் ஆசிர்வாதங்களோடு ஷிவாவின் கரத்தில் வழங்கப்பட்டது. திருமாங்கல்யத்தை கையில் ஏந்தி அதுவரை கலக்கமாக அமர்ந்திருந்த ஷக்தியின் அருகே சென்று

ஷிவா : ஷக்தி இந்த ஆயிசு முழுக்க என்ன கண் களங்காம பாத்துப்பீங்களா

என்று கேட்க அதுவரை இறுக்கமாய் இருந்த ஷக்தி உடனே சிரித்துவிட அவள் கழுத்தில் மங்கள நாணை புட்டி நானும் அவளும் வேறல்ல என்று உலகுக்கு கூறிவிட்டான். நாத்தனார் முடிச்ச்சை போட வந்த ஷார்மியை தடுத்துவிட்டு தானே மூன்று முடிச்சையும் போட்டுவிட்டான்.

அன்று வீட்டில் நடந்த நிகழ்வுக்கு பிறகு ஷிவா ஷர்மியிடம் பேசவில்லை அதை ஷர்மியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை தனக்கு வினோத் உடன் திருமணம் என்னும் கனவில் மிதந்து கொண்டிருந்தாள். ஆனால் இப்பொழுது தான் மூணாவது முடிச்சை போட்டால் தான் ஷக்தி இந்த வீட்டிற்கு மருமகளாக வரமுடியும் என்ற தன் எண்ணத்திற்கு ஷிவா முற்றுப்புள்ளி வைத்துவிட தன் உரிமை பறிபோய் விட்டதாகவே எண்ணினாள். அனைவர் முன்பும் ஷிவா தன்னை நிராகரித்து விட்டதை உணர்ந்து தலை கவிழ்ந்து மேடையில் இருந்து இறங்கி மணப்பெண் அறைக்கு சென்றாள்.

ஷிவா திருமண சடங்குகள் அனைத்திலும் ஒரு பூரிபோடே கலந்து கொண்டான் ஆனால் ஷக்தியோ ஒரு மிரட்சியோடே அனைத்து சடங்குகளிலும் கலந்து கொண்டிருந்தாள். மெட்டி அணிவிக்கும் சடங்கில் ஷக்தியின் பாதங்களில் அருகே அமர்ந்து மென்மையாக அவள் பாதம் பற்றி அவள் மற்றும் கேட்க்கும் வண்ணம்

ஷிவா : இந்த ஜென்மம் முழுக்க நான் உனக்கு அடிமை ஷக்தி

இதை கேட்டதும் ஷக்தியின் குறும்பு தலை துக்க

ஷக்தி : என்னது இந்த ஜென்மம் மட்டுமா ஹலோ சார் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு வாய்த்த அடிமை நீங்க தான் புரியுதா.

என்று கூறி அழகாய் சிரிக்க அவனும் மலர்ந்து சிரிக்க அந்நிகழ்வு அழகாக படமாக்கப்பட்டது

அடுத்த முகுர்த்தத்திற்கு நேரம் ஆகிவிட மணமேடையில் வினோத் அமர்த்தப்பட்டு நீல நிற புடவையில் ஷர்மி அழைத்துவரப்பட்டாள். வினோத் ஷார்மியை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவனுக்கு ஷார்மியை பிடிக்கும் இருந்தாலும் தான் இன்னும் ஒரு வேலைக்கு செல்லாமல் திருமணம் செய்வதாய் அவன் நண்பர்கள் அவனை கேலி செய்ய மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானான். அவனால் இந்த திருமணத்தில் முழுமனதோடு ஒன்ற முடியவில்லை , மேலும் தனது தாயான அம்பிகாவுக்கு ஷார்மியை சுத்தமாக பிடிக்காது அவருக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை அவனது தந்தையின் வறுபுறுத்தலில் தான் தாய் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் . வினோத்தின் தாய் கடனே என்று மணவறையில் நின்றிருக்க அவனுக்கு ஏன் ஷர்மி இவ்வளவு அவசரப்பட்ட என்று கேட்க தான் தோன்றியது.

வினோத்தின் கையில் மாங்கல்யம் வழங்க பட்டது. வினோத்திற்கு ஒரு அண்ணன் மட்டுமே அதனால் நாத்தனார் முடிச்சை யார் போடுவது என்று யோசிக்கும் சமயம் அம்பிகா ஷக்தியின் அருகினில் வந்து நீ என் பையனுக்கு தங்கை முறைதான் நீ தான் நாத்தனார் முடிச்சு போடணும் வா என்று அவளை மணமேடை அழைத்து சென்றார். அம்பிகாவுக்கு எப்பொழுதுமே ஷிவா என்றாள் அத்தனை பிரியம் அதனால் இயல்பாக அவன் மனைவி மீதும் அவருக்கு பிரியம் வந்தது.

ஷர்மிக்கு தான் கோவமாக வந்தது பிறந்த வீட்டில் தன் உரிமை பறிபோய் விட்டதாக எண்ணி இருந்த சமையம் புகுந்த வீட்டிலும் ஷக்தியின் மதிப்பு உயர்ந்து இருப்பது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வினோத் காதருகினில் சென்று.

ஷர்மி : வினோ நீ தான் எனக்கு மூணு முடிகிச்சும் போடணும் இது ஏன் கௌரவ பிரச்சனை புரிஞ்சிதா அந்த ஷக்தி எனக்கு மூணாவது முடிச்சு போடக்கூடாது

வினோத் : என்ன எனக்கு வேலையிலன்னு அதிகாரம் பண்ண பாக்குறியா , எங்க வீட்டுல எங்க அம்மா வெச்சதுதான் சட்டம். ஏதோ உன்ன நான் விரும்பி தொலைச்சிட்டேன்னு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்காங்க. என்னால இனிமே அவங்கள காய படுத்த முடியாது. அப்புறம் இன்னொரு வாட்டி ஷக்தியை பேர் சொல்லி கூப்பிடற வேலை வெச்சிக்காத அவங்க உன் அண்ணி மட்டும் இல்ல இப்போல இருந்து ஏன் தங்கச்சியும் தான் புரிஞ்சிதா .

எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் வினோத்தின் இந்த புதிய பரிமாணத்தில் ஷர்மி மிரண்டு இருக்கும் சமயம் அவள் கழுத்தில் மங்கள நாண் பூட்டப்பட்டு மூன்றாவது முடிச்சு ஷக்தியின் கரங்களால் போடப்பட்டது.

அடுத்த முகுர்த்தம் நெருங்கும் வேளை வசந்த் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டான் . மணமகளாக அஸ்வினி பச்சை பட்டுடுத்தி அழகோவியமாக அவன் அருகினில் அமர்த்தப்பட்டாள். வீட்டில் நடந்த பிரச்சனையில் அஸ்வினி அவனிடம் பேசாமல் இருக்க இன்று அவளது தரிசனம் கிடைத்ததில் வசந்த் மனதில் ஆனந்த கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தான். அஸ்வினியோ முகத்தில் வெட்க சாயல் பூசி அவனை பார்க்க தயங்கி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள். ஷிவாவும் ஷக்தியும் மணமேடையில் தம்பதி சமேதராய் இருந்து காண்போர் அனைவருக்கும் அழகாக காட்சிதந்தனர். ஷர்மி ஒரு ஓரத்தில் அமர்ந்து நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருந்தாள், தன் பிறந்த வீட்டில் தான் ஒதுக்க பட்டது போல் ஒரு உணர்வு அவளிடம். ஷக்தி மற்றும் அஸ்வினியின் மலர்திருந்த முகத்திற்கு அவர்கள் அருகினில் கம்பீரமாக வீற்றிருக்கும் கணவன்மார்களே காரணம் என்றுணர்ந்து தன் துணையை தேடினாள். ஆனால் வினோதோ தன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தான்.

மகளின் ஓய்ந்த தோற்றம் கண்ட பரமேஸ்வரி ஷர்மியின் அருகினில் வந்து அவளை மேடைக்கு அழைக்க கடனே என்று மேடை ஏறினாள். ஷிவாவை போலவே வசந்தம் மூன்று முடிச்சுகளையும் தானே அஸ்வினிக்கு போட்டு தன் சரி பாதியாக ஏற்றுக்கொண்டான்.

தொடரும்
 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷக்திமகிழ்வதனி டியர்

ஷர்மிக்கு நல்லா வேணும்
அண்ணன்களை மதிக்காத இவளுக்கு ஷிவாவும் வசந்தும் நல்லா கொடுத்துக் கட்டினாங்க
வினோத் நல்ல பையனாத்தான் இருக்கான்
இந்த ஷர்மிதான் ஒரு அராத்து பேர்வழி போல
வேலையில்லாமல் பொண்டாட்டிக்கு ஒரு முழம் பூ கூட வாங்கித் தர முடியாதுன்னா வினோத்துக்கு வருத்தமாத்தானே இருக்கும்
ஷிவா, வசந்த் இல்லை இவங்க அப்பா யாராவது ஒருத்தர் வினோத்துக்கு வேலை கிடைக்க ஹெல்ப் பண்ணலாமே
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement