உறவால் உயிரானவள் teaser 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ முதல் அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி டீஸர்:geek::geek:

இப்போதான் எழுதவே ஆரம்பிச்சேன் நல்லா இருக்குனு தோணினதால டீஸர் போட்டுட்டேன். Sunday தான் UD வரும்.

download (6).jpg

அந்த காலைப்பொழுதில் மெடிக்கல் காலேஜ் வாசலில் வந்து நின்ற பஸ்ஸில் இருந்து இறங்கிய மாணவியர்கள் சிலர் அங்கே இருந்த மரத்தடியில் காத்திருக்க, ஸ்கூட்டியில் வந்த சிலரும் நின்றிருந்தனர். கார்த்திக்கோடு அவனின் பல்சரில் வந்திறங்கினாள் கவிலயா.



"ஹாய் டி.." அவளுடைய நண்பிகள் அனைவரும் கையசைக்க



"கார்த்தி நீ திரும்பிப் பார்க்காம அப்படியே போய்டு" நண்பிகளுக்கு ஹாய் சொன்னவள் கார்த்திக்கின் காதில் சொல்ல புன்னகைத்தவன்



"ஒரு பொண்ணையாச்சும் சைட் அடிக்க விடுறியா? அட்லீஸ்ட் இண்டடியூஸ் பண்ணியாச்சும் வைக்கலாமில்ல"



"செருப்பு பிஞ்சிடும். பேசாம போய்டு இல்ல போலீஸ்னு கூட பாக்க மாட்டேன்" கவி பல்கலைக் கடிக்க



அவளின் முகத்தில் விழும் முடியை ஒதுக்கி விட்டவன் "காலைலயே டென்ஷன் ஆகாது அம்மு. ஒழுங்கா படி" அவளின் கன்னம் கிள்ளி விட்டே பைக்கை கிளப்பினான்.



நுழைவாயிலில் இந்த காட்ச்சி அரங்கேற ஆயிரம் கண்கள் அவர்களை பார்க்க பொறாமையாய் சில விழிகள்.



"ஏன் டி நாலு வருசமா எங்க கூட படிக்கிற உனக்கொரு அண்ணன் இருக்கிறதே இந்த ஒரு வாரமா தான் தெரியும். உங்கண்ணன எங்களுக்கு இண்டடியூஸ் பண்ணி வைக்க மாட்டியா?" கீதா பொரும


4f628c4c7500ceea37488f0cd682c4a5.jpg
"அவன் என் அண்ணன்னு நா சொன்னேனா? அவன் என் BF" அவளை முறைத்தவள் அமைதியாக நடக்க,




ஆ... என்று வாயை பிளந்தனர் தோழிகள்.



"கங்கிராட்ஸ் டி. ரொம்ப ஹண்டசம்மா இருக்குறாரு, ஜோடி பொருத்தம் சூப்பர்" எல்லா குரல்களும் வாழ்த்தினாலும், பொறாமையும், துக்கமும் இழையோடியது.



பின்ன இருக்காதா நாலு வருடங்களாக கவிலாயாவை தெரியும். கவிலயா அந்த மெடிக்கல் காலேஜ் சேர்ந்த அன்றிலிருந்து கீதா, குமுதா, பிரபா, நிகிதா, அனைவரும் தோழிகள். எல்லா அரட்டையும் காலேஜ் உள்ள மட்டும் தான். தன்னை பற்றி அதிகம் பகிரவும் மாட்டாள். அவளின் விருப்பு, வெறுப்பு கூட இவர்களுக்கு இன்னும் சரியாக தெரியாது. வெளியே கண்டால் அதிகம் பேசவும் மாட்டாள். அவள் அவர்களுக்கு புரியாத புதிராகவே இருக்க,



இந்த ஒரு வாரமாய் பல்சரில் ஒருவன் அவளை பிக்கப்பு, ட்ராப்பு னு சேவகம் செய்ய, அவனின் அழகும், கம்பீரமும், அவனை பற்றி அறிந்துக் கொள்ள தூண்டி இருக்க, கவியிடம் என்ன கேட்டாலும் புன்னகை முகமாக நகர்ந்து விட இன்று உண்மையை வர வழைத்து விட வேண்டும் என்று தான் கீதா அவ்வாறு கேட்டாள்.



ஆனாலும் மனதுக்குள் "இவளோட அண்ணனாகவே இருக்கணும்" என்று வேண்டுதல் வேறு வைக்க அவளின் வேண்டுதலை நிராகரித்த கடவுள் அவளுக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார்.



அவளின் டிபார்ட்மெண்டில் சில பெண்களும் அவனை சைட் அடிக்க தவம் கிடக்க கவியின் BF என்ற வார்த்தை நரசமாய் ஒலிக்க



"அடுத்தவ பாய் பிரெண்டுக்கு ரூட்டு விடுறதே நமக்கு வேலையா போச்சு" என்று சிலர் முணுமுணுக்க,



"கடவுளே பிக்கப்பு என்று ஒன்று இருந்தா.. ட்ராப்பு னு ஒன்னு இருக்கும், லவ் னு ஒன்னு இருந்த பிரேக் அப் னு ஒன்னு இருக்கு கவி கு பிரேக்.... ஆ...ப்ப சீக்கிரம் கொடு" என்ற பிராத்தினையும் வைத்தவாறே தங்களது வகுப்புக்களை நோக்கி நடந்தனர்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உறவால்
உயிரானவள்"-ங்கிற புதிய
அழகான அருமையான
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Excellent teaser Mila dear(y)
Policeve mirattura kavilaya:p
Aduthava boyfriend ah route vidurathe velaiyapochu:LOL::LOL::LOL:
Breakup aagunumnu venduthala:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top