இறுதி அத்தியாயம்

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டனாடி தில்லையிலே

அத்தியாயம் – 21

கூதக் காத்து மேனியை தீண்டி தீண்டி மோகம் தணிக்க எண்ணி, நாச்சி வீட்டு பிச்சிப்பூக்களை சீண்டிக் கொண்டு இருக்க, அக்காற்றின் மீது கோபம் கொண்ட நாச்சி வீட்டுக் காளை, அந்நியனிடம் இருந்து தன் துணையினைக் காக்கும் பொருட்டு,இறுக்க அணைத்துக் கொண்டார், யார் கண்ணும் கவராதவாறு...!

முகத்தில் அடித்த காற்றில் கண்களை மூடி ரசித்துச் சிரித்து வரும் மனைவியைப் பார்க்கும் போது, நாகரிகம் நான்கடி தள்ளி நிற்கச் சொல்லி பாடாய்ப் படுத்தியது. அம்பலத்தானை, அண்ணன் நிலை இப்படி என்றால், தம்பியின் நிலை.

புதுமணத் தம்பதிகளைப் போல, இரு ஜோடிகளும் தங்கள் இணையுடன் ஏகாந்த காலைப் பொழுதை ஒருவித போதையோடு அனுபவித்து பயணித்து கொண்டு இருந்தனர்.

இரு ஜோடிகளும் மதுரைக்குத் தான் வந்து கொண்டு இருந்தனர். இன்று மருத்துவமனைக்குச் சென்று வாசுகி சுப்பிரமணியன் செய்தி என்ன ஏது என்று அறிந்து, தம்பதிகளுக்கு ஒரு முடிவு கொடுக்க எண்ணி இந்தப் பயணம்.

முன்னமே சொன்னது போல் சரசும் மீனம்மாளும் நேராக மதுரைக்கு வந்து கொண்டு இருப்பதாகத் தகவல் வர, இந்த ஜோடிகளும் நாச்சிக்கு வேண்டியதை செய்து வைத்து விட்டு, அவரது பாதுகாப்பை உறுதி செய்து விட்டுக் கிளம்பி விட்டனர்.

திருமணம் முடிந்து முதல் பயணம் இருவருக்குமே! அம்பலத்தானைப் பார்த்து சுப்பிரமணியன் திருமணமே வேண்டாம் என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தான். நாச்சியும் அம்பலத்தானும் தான் அவனைச் சமாதானம் செய்து திருமணம் செய்து வைத்தது.

அதன் பின் இயல்பு வாழ்க்கை தான் என்றாலும்,இருவரும் தனியாக வெளியில் சென்றதில்லை. வாசுகி பிறந்தகம் தவிர. இன்று வெகு வருடங்கள் சென்று இரு ஜோடிகளும் தங்களது பிணக்கை மறந்து, உல்லாச நிலையில் இருந்தனர்.

வழியில் இறங்கி காலை உணவை முடித்துக் கொண்டு, மருத்துமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கே இவர்களைப் பார்த்தவுடன் சரசும்,மீனம்மாளும் இவர்களை நோக்கி வந்தனர்.

“வாங்க அண்ணே! வா வாசுகி, வெரசா வா! டாக்டர் பொண்ணு வந்துட்டாக. எங்க பெரியம்மா உறவுத்தேன். பயம் இல்லாமப் பேசு, என்ன?” என்று அறிவுரை சொல்லிக்கொண்டே வாசுகியை அழைத்துச் சென்றார், மீனம்மாள். சற்று பதட்டமாக இருந்ததால் அவரால் நின்று கூடப் பேச முடியவில்லை பாவம்.

சரசு தான் வெளியில் நின்று சிவகாமியுடன் பேசி கொண்டு இருந்தார். அம்பலத்தான் நாற்காலியில் அமர்ந்திருக்க, வாசுகியை தொடர்ந்து உள்ளே சென்றான், சுப்பிரமணியன்.

அனைவருக்கும் பதட்டமாகத் தான் இருந்தது. இருந்தும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. தாங்கள் உடைந்தால் வாசுகியின் தெளிவில்லா மனம் இன்னும் நொந்து போகும் என்று அறிந்தவர்கள், அடுத்து என்ன என்று யோசித்துக் கொண்டு இருந்தனர்.

சரசு “ஏன் சிவா, எல்லாம் நல்லதே நடக்கும் தானே!”

“என்ன அண்ணி கண்டிப்பா அப்படி இல்லனாலும் அடுத்து என்ன செய்யணும்னு யோசிப்போம். என்ன அவளைச் சமாளிக்குறது தான் கொஞ்சம் கஷ்டம்!”

“அதேன் என் பயமே. பாவம் அண்ணே!”

“ப்ச் பயந்துக்காத சரசு. சுப்பு சமாளிச்சுக்கிடுவான்.” என்று பெண்களது பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த அம்பலத்தான் ஆறுதல் சொல்ல, இரு பெண்களும் அதனை ஏற்பது போல் மௌனமாக இருந்தனர்.

சரியாக அரை மணி நேரம் சென்று மருத்துவர் அறையில் இருந்து அழுதுக் கொண்டே ஓடி வந்த வாசுகி, காரில் ஏறி அமர்ந்து கொள்ள, அவள் பின்னே ஓட்டமும் நடையுமாகச் சென்றான், சுப்ரமணியன்.

அவளது ஓட்டத்தில் அதிர்ந்து நின்றனர் மூவரும். முதலில் தெளிந்த அம்பலத்தான், சோர்த்து போய் மருத்துவர் அறையில் இருந்து வந்த மீனம்மாளை பிடித்துக் கொண்டார்.

“என்ன மீனா?எதுக்கு வாசுகி அழுதுகிட்டுப் போறாக. எதுவும் சங்கடமா சொல்லிப் புட்டாகளா?”

“அண்ணே! அதெல்லாம் ஒன்னும் சொல்லல அவ சரியான லூசு. நீக வாக அம்மைய வச்சு பேசுனாத்தேன், இந்த வாசுகி மதனிக்கு சரி வரும்.”

“என்னமா இது? சரி வாக. என்னனு பார்ப்போம்.” என்றவர் மூவரையும் அழைத்துக் கொண்டு தாங்கள் வந்த அம்பாசிடரில் வீட்டை நோக்கிச் சென்றார்.

வழி நடுவிலும் அழுதுக் கொண்டே இருந்தாள் பெண். சுப்புவுக்கு ஏக எரிச்சல் மனைவியின் மேல் இருந்தாலும், அவளது அழுகையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை முதுகை தடவி கொண்டே வந்தார், மனிதர்.

யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை வீடு வரும்வரை. வீடு வந்தவுடன் அறைக்குள் முடங்க முயற்சித்த வாசுகியை நிறுத்திய மீனம்மாள்,

“இங்கன பாருக, இப்போ என்ன ஆச்சுன்னு அழுது கரைரீக! எனக்குப் புரியல, மருத்துவச்சி என்ன சொன்னாக?” சற்று குரல் உயர்த்தி தான் பேசினாள்.

இவர்கள் அரவம் கேட்டு மெல்ல எழுந்து வந்த நாச்சி, நாற்காலியில் அமர்ந்து கொண்டார் கோபமாக பேசும் தனது மகளை பார்த்து.

“என்ன ஆச்சு மீனா?”

“அம்மா இரண்டு பேருக்கும் ஒரு குறையுமில்லை. ஆனா கரு பிடிக்கல. சில சமயம் சில பேருக்கு ரொம்ப நாள் செண்டு தான் கரு பிடிக்குமாம். உடம்பு சூடு கூடக் காரணமா சொல்லுறாக. பெரிய குறை ஒண்ணுமில்லை. அதுக்குத் தான் ஒப்பாரி!”

மீனா பொரிய, அப்பாடி என்றுருந்தது மற்றவர்களுக்கு.

இருக்காதா பின்னே, வாசுகி அழுத அழுகையைப் பார்த்து, என்னவோ ஏதோவென்று தானே பயந்து கொண்டு வந்தனர்.

“ஐத்த அது மட்டுமே சொல்லல. உறுதியா குழந்தை பிறக்குமா பிறக்காதான்னு சொல்லச் சொல்லிக் கேட்டேன். அவுக உறுதியா என்னால சொல்ல முடியாதுனு சொல்லராக! அப்பனா என்ன அர்த்தம்?” நாச்சியிடம் வாசுகி சொல்லி கொண்டு இருக்க,

பதில் சுப்புவிடம் இருந்து வந்தது

“என்னடி அர்த்தம்? அதையும் நீயே சொல்லு.” என்று கடிந்தவன், பொறுமை இழந்து தனது தாயிடம்,

“அம்மா என்னால முடியல, என்னனு நீங்களே கேட்டுச் சொல்லுக! எனக்கு இங்கன இருக்கவே புடிக்கல. நான் மதுரைக்குப் போறேன்.” என்றவனை வாசுகி அதிர்ந்து பார்க்க,

மற்றவர்கள் கவலையாகப் பார்த்தனர்.

நடப்பதை பொறுமையாகப் பார்த்துக் கொண்டு இருந்த நாச்சி, வாசுகியை தனது அருகில் வருமாறு அழைத்தார்.

அவருக்குப் பணிந்து அவரிடம் சென்றவளது கைகளைப் பற்றிக் கொண்டு,

“எப்படி ஒரே வாழ்க்கை ஒரே உசுரோ, அதே மாதிரி கண்ணாலமும் ஒரே முறை தேன்! என்னைப் பொறுத்தவரை உம்ம மெல்ல உசுரா இருக்கப் போயித்தேன் தவிச்சுப் போயி நிக்காக! நீக ஏன் முரண்டு பிடிக்கீக?”

முகத்தில் கோபம் இல்லாமல் போனாலும், பேச்சில் கடுமை இருந்தது.

தனது இரு பிள்ளைகளின் வாழ்க்கையும் சரியில்லாமல் இருப்பதை அறிந்த நாச்சி, தனக்குள் உழன்று தான் நோவு கண்டது.

“வயசு தொலைவு போகுது. உம்ம கூடெல்லாம் மல்லுக்கு நிக்கத் தெம்பில்லை. பார்த்து நடந்துக்கிடுக. சுப்புக்கு வாசுகித்தேன்.

பிள்ளை பெறும் பிறப்பும் அவனா கொடுக்கிற பிச்சை நமக்கு என்னைக்குக் கிடைக்கிதோ இரு கையேந்தி வாங்கிக்கிடுக இல்லையா ஊருல சாதி சனம் தாண்டி எம்புட்டு குழந்தைங்க தாய் தகப்பன் இல்லாம இருக்கு, அதுல ஒன்னப் பார்த்து தத்து எடுத்துக்கோங்க,

அதுக்கும் மனசு ஒப்பலையா உன் புருஷன் உனக்கு வரம் நீ அவனுக்கு வரம். பிறவு உம்ம முடிவு, என் மவ்வேன் மாறிக்கிடமாட்டான் நாணுந்தேன்” என்றவர் வேகமாக எழுந்து தனது அறைக்குச் சென்று விட்டார்,

மௌனமாக இருந்தாள் வாசுகி.

நாச்சி இத்தனை கோபமாகப் பேசியதே இல்லை. இன்று அவர் பேசியதும் பயம் வந்து விட்டது.

தனது அறையை நோக்கிச் சென்றவர், நின்று திரும்பி வாசுகியை பார்த்து,“அந்த அம்பலத்தான் என்னைக் கைவிட மாட்டான்! அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு, பார்த்துக்கிடுக! என் அய்யன் ராசா கணக்கா வந்து பொறுப்பான்!” என்று சொல்லிவிட்டுச் செல்ல.

மற்றவர்கள் இதழில் லேசாகச் சிறு புன்னகை.

வாசுகியிடமும் தான் மனம் கொடுத்து வைத்தவள், நான் என்றும் அதற்கு நியாயம் செய்யவில்லையே என்றும் இருவேறு எண்ணங்களில் உழன்றாலும், செத்தாலும் நாச்சி மருமகள் தான் என்ற முடிவை மட்டுமே அங்ஙனம் தீர்க்கமாக எடுக்க வைத்தது.

அண்ணன் தம்பி இருவரும் கடைக்குச் சென்றுவிட்டனர். இங்குச் சுப்புவை விட்டு வைத்தால், வாசுகியிடம் சண்டை கட்டுவான் என்று அம்பலத்தான் கடைக்கு அழைத்துச் சென்று விட்டார்.

அதன் பின் இருவரும் மீனம்மாள் சரசு வாசுகிக்கு அறிவுரை சொல்லி தனது அன்னையிடமும் சிவகாமியிடமும் சொல்லிக் கொண்டு புகுந்தகம் கிளம்பிச் சென்றனர்.

தங்களது கடமையை நாத்தியாகச் சரியாகச் செய்து விட்டனர். இந்த அளவு தான் செய்ய முடியும் என்பதையும் வாசுகியிடம் தெளிவாகச் சொல்லிவிட்டே சென்றனர்.

மாலையில் நாச்சி திண்ணையில் வந்து அமர, மச்சியில் உள்ள முல்லைக் கோடியில் உள்ள பூக்களை மடி நிறையப் பறித்துக் கொண்டு வந்தவள் அவருடன் அமர்ந்து கொள்ள, மூவருக்கும் தேநீர் எடுத்து வந்த வாசுகியும் அவர்களுடன் அமர்ந்து கொண்டாள்.

பூவை தொடுத்துக் கொண்டே, வழமை போல் நாச்சியின் வாயைப் பிடிக்கினாள்,சிவகாமி.

“மாமி!”

“சொல்லுக சிவா பாப்பா!”

“நேத்து உங்க பிள்ளையாண்டான் கூட சண்டை பிடிச்சேன்..”

“ஓ…!”

“ஏன்னு அதுக்குக் கேட்க மாட்டேளா?”

“புருஷன் பொஞ்சாதி சண்டை எனக்கு எதுக்குச் சாமி”

“ப்ச் இது பொதுச் சண்டை மாமி.”

“ஹா ஹா” சிரித்தவர் “பொதுச் சண்டையா, அப்போ கேட்போம் சொல்லுக. நம்ம வூட்டு ராசா என்ன பண்ணார்?”

நாச்சியின் இயல்புப் பேச்சும், அதற்கு சிவகாமியின் உரிமையான பேச்சையும், ஓர் அதிர்வுடன் ரசித்துக் கொண்டு இருந்தாள், வாசுகி.

வாசுகிக்கு இந்தப் பேச்சும் வராது, இயல்பும் வராது. மாமியார் பேச வந்தால் கூட, பயம் மட்டுமே முதலில் வந்து நிற்கும். பிறகு தான் வார்த்தை வரும். அவர் இலகுவாகப் பழகினாலும், ஓர் அடி தள்ளி தான் நிற்பாள். ஆனால் இவர்களது உறவை பார்க்கும் போது, ரசிக்கத் தோன்றியது. அப்படி என்ன அன்பு என்ற ஆர்வம் வேறு.

“எப்படி உமையாளை பெண் பார்க்கலாம்? எப்படி என்ன விட்டுக்கொடுக்கலாம்னு சண்டை போட்டேன்.”

“ஓ ராசா என்ன சொன்னார்?”

“அவர் ஒரு பக்கத்துக்கு நியாயத்தைச் சொன்னார்.”

“சரித்தேன்.”

“ஆனா, நேக்கு அதில் உடைபாடில்லை. என் நியாயம் எனக்கு.”

“அதுவும் சரித்தேன்.”

“என்ன மாமி அதுவும் சரினு சொல்றேள். இதுவும் சரினு சொல்றேள்!”

“நாணயத்துக்கு இரண்டு பக்கம் சாமி! இதுக்குப் பிள்ளையார் சுழி போட்ட என் பக்கமும் நியாயம் இருக்கு. கண்ணனுக்குத் தோதா அம்பாள் சிலை ஒன்னு வந்து வந்து போகும் போது, அதைப் பக்கத்துல வச்சு பார்க்கனமுண்டு கொள்ள ஆசை! வாய்ப்பு கிடைச்சுது கெட்டியா புடிச்சுக் கிட்டேன்.” சொன்னவரை கனிவுடன் பார்த்தவள்

“என்ன அவுளோ புடிக்குமா மாமி!” குறும்பாகக் கேட்ட பெண்ணைக் கன்னம் வழித்துக் கொஞ்சியவர்,

“ரொம்ப.. ஏன்னு தெரியாது, அடுத்துக் கேள்வி கேக்காதீக. புடிக்கும், கோவில் போய்வரும் போதெல்லாம் பார்ப்பேன். தங்கச் சிலை! மான் போல துள்ளி திரிவீக”

வாசுகி என்றவளை மறந்து இருவரும் தங்கள் உலகில் இருக்க, பொறாமைக்குப் பதில் ஆர்வம் தான் வந்தது வாசுகிக்கு,‘என்ன பொண்ணுங்கடா சாமி’ என்று.

அவரது கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டவள்,“அவர் சொன்னார் மாமி, நீங்க எத்தனைத் தூரம் என்னைப் பாதுகாக்க மெனக்கேட்டு இருக்கீங்க.”

“ப்ச் விடுக. கலப்பு மணம் அதனால் தேன் பேச்சு வார்த்தை முத்திப் போச்சு. சம்மந்தப்பட்டவங்க சம்மதம் சொல்லிதேன், கண்ணாலம் நடந்தது பிறவு என்ன பார்த்துக்கிடலாம் தான் இருந்தேன்.”

அம்பலத்தான் சொன்னது மூன்றில் ஒரு பங்கு தான் சும்மா சண்டைக்கெல்லாம் நெஞ்சை பிடிக்கும் ஆள் இல்லை நாச்சி. என்ன நடந்தது என்பதை ஒரு அளவுக்குக் கணிக்க முடிந்தது.

ஆனால், உறுதியாக என்னப் பேச்சு வார்த்தை நடந்து இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை.

என்ன நடந்திருந்தாலும் அம்பலத்தானும் சரி, நாச்சியும் சரி, சொல்ல போவதில்லை என்பதை அறிந்தவள், இப்பிறவியில் இவர்களுக்கு என்ன செய்து தனது நன்றியை கழிப்பது என்று தெரியவில்லை, என சிவகாமி இமைக்காமல் நாச்சியைப் பார்க்க…

சிரித்துக் கொண்டே “என்ன பாப்பா அப்புடி பார்க்குறீக?”

“நான் என்ன மாமி செஞ்சேன். உங்க மகள்களை விட என்கிட்ட அன்பு காட்ட பரிவு காட்ட முடியுது. அதுமட்டுமா எப்புடி மாமி, பெத்த அம்மா என் தோப்பனாரை மறக்குற அளவுக்கு நேக்கு அன்பு கொடுக்குறேள்…!”

“தெரியலை பாப்பா, விடை தேடுறேன். அம்புடுச்சுனா முதல உங்களுக்குத் தேன் சொல்லுவேன்!”

“கண்டிப்பா சொல்லனும் ஆனா எதாவது சில காரணம் இருக்குமே அதை சொல்லுங்கோ.”

“கண்டிப்பா... சில நேரம் காரணமே இல்லாமே சிலரை புடிக்கும். அது போலக் கூட இருக்கலாம், சிவா பாப்பா!”

“ஹ்ம்ம்…”

“நீ தைரியமான பொண்ணு, அதுனால இருக்கலாம்.”

“ஹ்ம்ம்…”

“செவத்த புள்ள வேற, அதுனால கூட இருக்கலாம்.” நாச்சி குறும்பாகச் சொல்ல

“ஹ்ம்ம்” அதற்கும் அவள் ஹ்ம்ம் கொட்ட, சத்தமாகச் சிரித்து விட்டார்.

“மாமி, போங்கோ கிண்டல் செய்றேள்!” என்றவள், அவரது மடியில் தனது தலையைப் புதைத்துக் கொண்டாள்.

சிறுது நேரத்தில் அவரது தொடையில் ஈரம் உணர, தன்னோடு இறுக்கிக் கொண்டார், நாச்சி.

அங்கனம் இருவரையும் பார்த்து, தனது உறுதியை வழுயேற்றி கொண்டாள் வாசுகி. இனி இக்குடும்பம் தான் இறுதி வரை என்று..!

நாச்சி சிவகாமியின் முதுகை இதமாகத் தடவிக் கொடுத்தார். இரு பெண்களும் தனித்துவமானவர்கள்.

நாச்சி முற்போக்குவாதி என்பதைச் சிவகாமி அறிந்து கொண்டாள்!

சிவகாமி திறமையான தைரியசாலி என்பதை நாச்சி அறிந்து கொண்டார்.

தனது மக்களிடம் தேடிய திறமை,தைரியம்,முற்போக்குச் சிந்தனை அனைத்தும் நாச்சி சிவகாமியிடம் கண்டு கொண்டார் போலும்!

அதே போல் பெற்றவர்களிடம் தேடிய ஆறுதலும் பாதுகாப்புமும் நாச்சியிடம் சிவகாமி கண்டு கொண்டார் போலும்.

இதுவே அனுமானம் தான். எவ்வாறு இருவரும் பொருந்திப் போனார்கள் என்பதை அந்த அம்பலத்தான் தான் சொல்ல வேண்டும்.

பல கேட்க விரும்பாத ரகசியங்கள் நாச்சியிடமும் உண்டு. அன்று நடந்த பேச்சு வார்த்தையில் சிவகாமியின் பிறந்தகம் ஆட்கள் சிலர் பேசிய வார்த்தைகள், சற்று அதிகப் படிதான்!

உதவி செய்ய வந்த தனக்கு இது தேவையா என்று ஒரு சதவீதம் கூட நாச்சி எண்ணவில்லை. மாறாகச் சிவகாமியை தக்க வைக்க அவர் போராடிய போராட்டம் சொல்லி மாளாது. தனியாகத் தன்னுடைய முடிவைக் கொண்டு நடந்த திருமணம், பொய்த்துப் போக விடவில்லை அந்தப் பெண்மணி.. அப்பா வைரம் பாய்ந்த கட்டை என்பது இது தான் போலும்.

தனக்குப் பின் சிவகாமி தான் குடும்பப் பெண் என்பதைக் கொண்டு, நாச்சி எடுத்து வைத்த அடிகள் அனைத்தும் வெற்றி தான்.

இனி என்ன சிவனே என்று அமர்ந்து விடுவார். எத்தனை வருடங்களுக்கு முன்னாள் கணித்த கணிப்புக்கு இன்று தான் சரியான விடை கிட்டியது போலும்.

இருவரது நிலையையும் கலைக்காமல் சிறு சிரிப்புடன் இரவு உணவு வேலையைக் கவனிக்கச் சென்றாள், வாசுகி. மனம் தெளிந்தாலோ என்னமோ, வேலை சற்று சுறு சுறுப்பாக நடந்தது.

***

இரவு வீட்டுக்கு வந்த ஆண்கள் பார்த்தது, நாச்சியின் மடியில் துயில் கொள்ளும் சிவகாமியைத் தான்.

சுப்பு சிறு புன்னகையுடன் உள்ளே செல்ல, அம்பலத்தான் நாச்சியுடன் அமர்ந்து கொண்டார்.

தனது அறைக்குள் சென்ற சுப்பு, தனது மனைவியை எதிர்கொள்ள சிறு புன்னகை முகமாக அவனை வரவேற்றவள்,எதுவும் நடவாதது போல் இயல்பாகப் பேசினாள்.

“சாப்புடுறீகளா? சாப்பாடு எடுத்து வைக்கவா?”

அவளது இயல்பில் மகிழ்ந்தாலும், காரியமே கண்ணாக அவளிடம் “என்ன யோசுச்சு வச்சு இருக்கீக? நேரடியாகக் கேட்க,

சற்றும் யோசிக்காமல் பதில் அளித்தாள், வாசுகி.

“காலம் முழுமைக்கும் நாச்சி மருவதேன்!”

“ஓ..!” பெரும் புன்னகையுடன் “ஏன் சுப்பு பொஞ்சாதி இல்லையா?”

“நாச்சி மறுவானா, சுப்புக்கு பொஞ்சாதி தானே!”

“அடேயப்பா இது என்ன அந்தப் பக்கம் போய்ட்டு வரதுக்குள்ள, இம்புட்டு பெரிய முடிவு!” என்றவனை நெருங்கி அமர்ந்தவள்,

“சொல்ல தெரியல ஆனா வாழ்ந்துந்தேன் பார்ப்போமே”

“சரிதான்”

பிறகு நாச்சி சிவகாமி பேச்சைச் சொல்ல,

அவனும் நடந்த நிகழ்வை தனக்குத் தெரிந்ததை சொன்னான்.

மெய் உருகிக் கேட்டு கொண்டு இருந்தாள், வாசுகி....இனி அவளது நினைவு பிரிவை பற்றிப் போகும்

பிள்ளை என்ற வரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இனி வாழ்ந்து பார்ப்போம் என்ற முடிவுக்கு வாசுகி வந்ததால் இனி அவர்கள் வாழ்வில் வசந்தமும் வரும் என்பதில் ஐய்யமில்லை.

*

இங்கு நாச்சியின் மடியில் சிவகாமி அழுது கொண்டே நிம்மதியான தூக்கம்.

அம்பலத்தான் தூங்கும் மனைவியை ஏக்கமாகப் பார்த்து கொண்ட,“நீக ரொம்ப அநியாயம் பண்ணுறீக. ரொம்பத்தேன் பாரபட்சம்!”போலி முகம் காட்டி, சிறு பிள்ளை போல் கோபம் வைக்க.

“ஏன் ராசா?” சிறு சிரிப்புடன் நாச்சி.

“எங்களுக்கு கிடைக்காத சலுகை அம்புட்டும் இவளுக்குத்தேன் வஞ்சனை இல்லாமக் கிடைக்குது.”

“உங்களைவிட சிறுசு....இது என் பாப்பா சாமி..... நீங்க என் ராசா....!”

“அது சரி! என்ன மாயம் செஞ்சாளோ, வந்த நாளுல இருந்து உங்க முந்தானைய விடாம பிடிச்சுக்கிட்டு.....உண்க, உடுக்க, படுக்க, அம்புட்டும் உங்கள உரசிக் கிட்டே!”இப்போது உண்மையான ஏக்கம் அவருக்கு. தனக்கு இது போல் நீங்கள் இல்லையென்று நாச்சி பெத்த அத்தனை மக்களுக்கும், இந்த விஷயத்தில் சிறு பிணக்கு உண்டு தான்.

“மாயம்தென் போல, ஒரு வேலை தேவதையா இருக்குமோ, ராசா?” என்று சிவகாமியின் குண்டுக் கன்னங்களை தாயின் வாஞ்சையோடு வருட, அதிர்ந்து போனான், அம்பலம்.

“என்ன ராசா?”

“ஒண்ணுமில்லை…” என்று சிரித்தவனுக்குத் தான் தெரியுமே, இரு பெண்களைப் பற்றியும்.

இருவரது உறவுமே தன்னைக் கொண்டு தான் என்றாலும், தன்னை கொண்டு மட்டுமே இல்லை. இவர்களை நன்றாக அறிந்தவருக்குச் சிரிப்பு தான் வந்தது.

“நேரம் ஆகுது உண்க போங்க.” என்றவன் யாரையும் கணக்கில் கொள்ளாமல் அள்ளி கொண்டான், தனது அல்லி மலரை பூ போல்! அவளை தூக்கிக் கொண்டு தனது அறைக்குச் சென்றவன் கட்டிலில் விட, சிரிப்பை அடக்கி கொண்டு கண்களை மட்டும் மூடி இருந்தாள்.

அவளைக் கண்டு கொண்டவர்

“கள்ளி முழிச்சுகிட்டு தான் இருந்தீகளா.. இது தெரியாம கை கடுக்க தூக்கி வந்தேன்.” அம்பலத்தான் சிரித்து கொண்டே சொல்ல, பொங்கி விட்டாள்!

“யாரைப் பார்த்து கள்ளி சொல்றேள்! நீங்க தான் களவாணி, அம்பலம்!”

“இது என்னடி வம்பு? அப்படி என்னத்த களவாண்டேன்?” என்றவர் பார்வை கண்ணியம் தொலைக்க…

தன்னைக் கொள்ளையிடும் அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டே,

“அம்பலத்தான் ஏடு கண்டது தில்லையிலேனா, இந்த அம்பலத்தான் சிவகாமியை களவு கொண்டது இந்த தில்லையிலே!”

“என்னடா இது கணக்கு டீச்சர் எதுகை மோனையோடு கவிதை படிக்கிறாக! படிப்பும் மாமியாரும் மட்டுமே தெரியுமுண்டு நெனைச்சேன் அது சரி..... எதை களவாண்டேன் எம்புட்டு தூரம் களவாண்டேன்னு பாக்கேன், இருக!” என்றவர் தனது களவைத் தொடர, சுகமாக களவு கொடுத்தாள் சிவகாமி...!

அம்பலம் ஏறிய தாண்டவத்தோன் – அவன்

ஆடிய ஆட்டம் கண்டிடத்தான் – கண்களும்

காவியம் பேசாதோ!

ஆதி சக்தியவள் வென்றிடத்தான் –அவள்

பாடிய பாட்டும் கண்டிடத்தான் – தென்றலும்

ஓவியம் தீட்டாதோ!

களவு கொண்ட கள்வனாய்

இளவு காத்த கிளிக்கு

தில்லையில் ஆடிய அம்பலத்தான்

கொள்ளை கொண்டானவன் சிவகாமியையே!

வாழ்க பல்லாண்டு
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
@dhanuja senthilkumar எங்களையும் நீங்கள் களவு கொண்டுவிட்டீர்கள்... உறவுகளின் உரிமைகளையும் கடமைகளையும் அன்போடும் அறிவோடும் நகர்த்திச் செல்வது எப்படி என்று இதில் நான் அறிந்துகொண்டேன்... வெறும் கதையாக மட்டுமல்ல அக்குடும்பத்தில் ஒருவராக எண்ணச் செய்துவிட்டீர்கள்... அதுமட்டுமல்ல உலகை ஆளும் அம்பலத்தான்- சிவகாமி சுந்தரியின் சிறப்புக்களை நான் தெரிந்து கொள்ள எனக்கு இது ஒரு திறவுகோல் எப்படியென்றால் இவ்விரு பெயர்களின் மீது மோகம் கொண்டு இணையத்தில் கட்டுரைகள் காணொளிகள் மூலமாக அறிந்தேன்... இதுபோல கதம்பவனம் கதையிலும் உறவுகளின்
முக்கியத்துவமும் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்... மென்மேலும் சிறந்த கதைகள் எழுத இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... நன்றி தெரிவித்து விடைபெறாமல் நல்லவை அல்லவை அறிந்து கொள்ள ஆவலுடன் உங்கள் அடுத்த கதையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்... விரைவில் வாருங்கள்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top