ஆள வந்தாள் -19

Advertisement

Sai deepalakshmi

Active Member
அற்புதமான ,அருமையான விளக்கம்.
இனி சேரன் மதுரா இடையே எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதை தாண்டி வந்து விடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
நல்ல அழகான அழுத்தமான பதிவு.
 
Sathya Velusamy

Well-Known Member
ஹீரோ கவுன்சிலர் தான...

அவனுக்குனு சம்பளம் மேக்ஸிமம் ஒரு இருபதாயிரம்னாலும் வரும் தான...

என்னமோ கூலி வேலை பாக்குற மாதிரி காசுக்கு ரொம்ப கஷ்டப்படுற மாதிரி பேசுறானே...

அதுபோக அவனை கவுன்சிலர்னு சொன்னதோட சரி... கவுன்சிலருக்கான எந்த அடையாளமும் அவன்கிட்ட இல்லையே..
அவன் சம்பளத்துல இருந்த காசுல தான் மதுராக்கு 2 லட்சத்துல அட்டிகை வாங்கி தந்துட்டானே....அதோட இனி அடுத்த மாச சம்பளம் வந்தாத்த காசுனு சொன்னானே....
அப்பா இருக்க தைரியத்துல காச பத்தி யோசிக்காம அவன்கிட்ட இருந்ததை செலவு பண்ணிட்டான்....இப்ப அதனால் தான் யோசிக்கறான்
 
jeevaranjani

மாசம் ஒரு அமௌண்ட் வரும் போது இவ்வளவு யோசிக்க தேவையில்லை. காசே இல்லைனு புலம்புறது தேவையில்லைனு எனக்கு தோனுச்சு.
 
Renugamuthukumar

Well-Known Member
ஹீரோ கவுன்சிலர் தான...

அவனுக்குனு சம்பளம் மேக்ஸிமம் ஒரு இருபதாயிரம்னாலும் வரும் தான...

என்னமோ கூலி வேலை பாக்குற மாதிரி காசுக்கு ரொம்ப கஷ்டப்படுற மாதிரி பேசுறானே...

அதுபோக அவனை கவுன்சிலர்னு சொன்னதோட சரி... கவுன்சிலருக்கான எந்த அடையாளமும் அவன்கிட்ட இல்லையே..
வணக்கம் சகோதரி!

இது கிராமத்து குடும்பம் மற்றும் காதல் கதை. அரசியல் கதை அல்ல.

இரு குடும்பங்கள் காதலை ஏற்றுக்கொள்ளாமல் போக ஜாதி அல்லது முன் பகை காரணமாக இருக்கும். அது வேண்டாம் என்பதால் அரசியல் எதிரிகள் என காண்பிக்க மட்டுமே அரசியலில் இருக்கிறார்கள் என காட்டியிருக்கிறேன்.

அப்படியும் ஒரு எபியில் ஹீரோவிடம் வார்டு பிரச்சனைகள் பாராமல் வத்தல் பிழிகிறாயா என கந்தசாமி கேள்வி கேட்பது போல வைத்திருக்கிறேன். அதற்குள் அதிகம் உள்ளே சென்றால் கதை வேறு பக்கம் சென்று விடும் என்பதால் மேலோட்டமாக சொல்வதோடு நிறுத்திக் கொண்டேன் சிஸ்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல சம்பளம் கிராம பஞ்சாயத்துகளில் கிடைப்பதில்லை சிஸ். சில ஆயிரங்களில்தான் சம்பளம் கிடைக்கிறது. அதை சேர்த்து வைத்திருந்ததில்தான் நகை வாங்கி விட்டான்.

அரசியலிலும் அவனுக்கு ஈடுபாடு கிடையாது, அப்பாவின் வற்புறுத்தலில் இருக்கிறான். இது நிரந்தரமும் அல்ல. இவன் விஷயத்தில் சும்மா குடும்பத்தை ஓட்டினால் மட்டும் போதாதே, மனைவிக்கு உண்டான அனைத்தையும் செய்ய வேண்டும். ஆகவே அவன் பொருளாதார நெருக்கடியில்தான் இருக்கிறான் சிஸ்.

மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் சிஸ் :)
 
இல்ல... அவனை அரசியல்ல இருக்க மாதிரி காட்டலைனு சொல்ல வரல... ஃபேமிலி ஸ்டோரிதான் புரியுது.

நான் இருக்கிறதும் கிராமம் தான். ஆனா சம்பள நிலவரம் எப்பிடினு தெரியல.

இவனுக்கு அடுத்த சம்பளம் வர வரை கஷ்டம்தான்..

ஆனா அந்த நேரத்தில அவங்க இரண்டு பேர் பேச்சுலயும் அவ்ளோ பஞ்பப்பாட்டு தேவையில்லைனு தோனுச்சு அவ்ளோதான்.
 
Geetha sen

Well-Known Member
ஆளவந்தவள்ன்னு ஒரே வார்த்தையில் வனராஜனை off பண்ணிட்டானே எங்க சேரா.
அசத்தலான எபி சூப்பர்மா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top