ஆசிரியர் கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.

Advertisement

Eswari kasi

Well-Known Member
ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..
#சிகரெட் பிடிக்கப் பழகினான்...
பதினொன்றாம் வகுப்பிலேயே
#தண்ணி அடிக்கப் பழகினான்.

தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான். அங்கு #சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.

அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்...
#பொய்_சொல்லவும், #திருடவும்_ஆரம்பித்தான்.
இறுதியில் #கொலைகாரனாகவும்_ஆனான்...

கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல் கோர்ட் என வழக்கு நடந்து,
இறுதியாக...
#தூக்கு_தண்டனை_விதிக்கப்பட்டது. அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது...

தூக்கிற்கு முன்தினம் #கடைசி_ஆசை_கேட்கப்பட்டது.
பெற்றோரை சந்திக்க விரும்பினான்.
பெற்றோரும் வந்தனர்.

கதறினர்...
போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்...

மகன் அமைதியாகச் சொன்னான். #அவர்கள்_காரணமில்லை...

#நீங்கள்தான், நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது..
#ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.

வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும்....
#அடித்து_மிரட்டி... போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.

அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் .....
#தூக்கு_மேடை_வரை_வந்திருக்கிறது!

“எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்...

ஆசிரியர் கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.

இதை பெற்றோர் உணரவேண்டும்.

பரிவும், பாசமும் பிள்ளைகளின் பண்பையும், வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்.

Padithathil pidithathu
 

Eswari kasi

Well-Known Member
உண்மை தான். ஆனால் இப்பொழுது ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் விதமும் கேள்விக்குறியதே?
Yelloraiyum thapa nenaika mudiyathey dear, yella thuraiyelum ketavarkal eruparkal, parents dhan paguthu arinthu seyal padanum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top