அன்பின் இனியா 5

Advertisement

achuma

Well-Known Member
"அத்தை, மாவு அரைச்சி வச்சிட்டேன் , பூண்டு குழம்பும், கோஸ் கூட்டும் ரசமும் வச்சிட்டேன், மறக்காம இரண்டு மணிக்கு நீங்களும் மாமாவும் சாப்பிடுங்க, பசங்க வந்ததும், அவங்களுக்கும் உங்களுக்கும் மட்டும் டீ, போட்டுக்கிட்டா போதும், நாங்க எப்படியாவது, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, இனியாவை பார்த்துட்டு போனதும்,உடனே அங்க இருந்து கிளம்பிடுறோம்," என்று அம்மா வீட்டுக்கு செல்வதற்காக அணைத்து வீட்டு வேலைகளும் முடித்து விட்டு மாமியாரிடம் கேட்டுக் (கெஞ்சி )கொண்டிருந்தாள் இலக்கியா ..


அவருக்கு அப்படி என்ன போகணும்னு , அதுவும் மாமனார் மாமியாருக்கு பக்கத்துல இருந்து கூட சாப்பாடு போடாம, என்று முகத்தில் முள்ளை கட்டி அமர்ந்து இருந்தார் ..


"நீங்க போயிட்டு வாங்க மா , அங்க உங்க அம்மாக்கும், நீ உதவியா இருக்கனும் இல்லை , இனியா பொண்ணுக்கும் நீ வந்தா ஒரு தெம்பு, நாங்க பார்த்துக்குறோம்,"

"நீ இப்போவே டீ, செஞ்சிட்டு பிளாஸ்குலா ஊத்தி வெச்சிட்டு போனா கூட, உன் அத்தை வேண்டாம்னு சொல்ல மாட்டா ," என்று மாமனார் ..

இருந்தாலும் இலக்கியா மாமியார் முகம் பார்த்து நின்றாள் ..

அவரை ஒரு முறை முறைத்து, "அதான் , உன் மாமனார் சொல்லிட்டாரு இல்ல , என் மூஞ்சியா ஏன் பார்த்துட்டு இருக்கே, வேண்டாம்னு சொன்னா அப்படியே கேட்டுட்டு இருந்துடுவியா இல்லை நீயே இருந்தாலும் உன் வீட்டுக்காரன் விட்டுருவானா , எனக்கு இந்த வீட்டுல எப்போவோ மரியாதை போய்டுச்சு"..

இலக்கியாவுக்கு ஆயாசமாக இருந்தது ..
நாத்தனார் வீட்டுக்கு வந்து சென்ற இந்த இரண்டு நாட்களாக , இவரின் குத்தல் பேச்சு தாங்க முடியாமல் , பல்லை கடித்து கொண்டு இருக்கிறாள் ..







எப்படியும், இவங்களை திருப்தி செய்ய முடியாது, ஒரு சலிப்பு, இலக்கியாவுக்கும் ..
"அவ கெடுக்குறா நீ போமா , உங்க அண்ணி வந்ததுக்கு, உன் மாமியார் காலுல சலங்கை கட்டி விட்டுட்டு போய் இருக்கா , ஒரு வாரத்துக்கு இப்படி தான் ஆடுவா" ..
திருப்பியும் "பழைய குருடி கதவை திறடி கதையா," நீங்க தான் அவளுக்குனு தெரிஞ்சி அடங்கி இருப்பா ..
அதற்குள், செழியனிடம் இருந்து அழைப்பு,



"நான் வெளியே தான் இருக்கேன், வீட்டுக்கு வந்தா அப்படியே எனக்கு, நேரம் போய்டும், ரெடினா , கிளம்பி வெளியே வா"..


"மாமா, அவர் வெளியே தான் வெய்ட் பன்றார், வாரேன் அத்தை , வரேன் மாமா," வாசல் வரை கூடவே மாமனார் வந்து, கேட் வெளியே பைக்கில் மகன் இருப்பதை பார்த்து, அவன் தந்தைக்கு தலை அசைத்தும், இருவரையும் வழி அனுப்பி விட்டு , வாசல் கதவை சாற்றினார்.
"திருந்தாத ஜென்மம்," என்று மனைவியை திட்டி ஓய்வுக்கு சென்றார் ..





"சட்டமா, அம்மா வீட்டுக்கு போய்ட்டா பாரு, பொண்ணு பார்க்க தானே வராங்க," மாமியார் சாந்தியும் மனதிலே இலக்கியாவை கருவிக்கொண்டே அமர்ந்து இருந்தார் ..
வண்டியில் செழியனுடன் அமர்ந்திருந்தாலும், இலக்கியாவுக்கு, இந்த பத்து வருட திருமண வாழ்க்கையை, அசை போட்ட படியே வந்து கொண்டிருந்தாள் ..


இருபத்திரண்டு வயதில் செழியனின் கை பிடித்து இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தாள் ..
பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் வேலைக்கு செல்லலாம் என்று இலக்கிய நினைத்து இருந்தால், பெற்றவர்கள் திருமணம் என்று நினைத்தார்கள் ..
சரி என்று அவர்களின் சம்மதத்திற்கு, ஒத்துக்கொண்டாள் ..
B E Mechanical engineering, முடித்து புகழ் பெற்ற கார் கம்பெனியில் , நல்ல சம்பளத்தில், செழியனின் சம்மந்தம் வந்ததும், பெற்றவர்களும் ஜாதகம் பொருத்தம் பார்த்து, திருப்த்தியாகவே , பெண் பார்ப்பதற்கு, செழியன் வீட்டில் இருந்து, அவன் தாய், தந்தை, அவனின் அக்கா குடும்பம் வந்து சேர்ந்தது ..
செழியனின் தந்தை நல்ல வசதி, ஹோட்டல் பிசினஸ் செய்து கொண்டு வந்தவர், ஆதம்பாக்கம், வசதி படைத்தவர்கள் வசிக்கும் பகுதியில், ஒன்றரை கிரௌண்ட் நிலத்தில், பெரிய பங்களா , போன்று இருந்தது அவர் வீடு ..
சாந்திக்கும் , மற்றும் செழியனின், அக்கா தாரணி , எப்பொழுதும் பணத்தை பார்த்து பழகும் குணம், கர்வம், பண திமிர், கொண்டவர்கள் ..



வசதிக்கு ஏற்றது போல் பார்க்கலாம் என்றால், தரகர் கொண்டு வந்த சம்மந்தத்தில், செழியனுக்கு இலக்கியவை பிடிக்கவே, பெற்றவர்களிடம், இந்த சம்மந்தத்தை பார்க்க சொன்னான்..

மகனின் விருப்பத்திற்கு ஏற்ப, ஜாதகம் பொருந்தி வர , செழியனின் தந்தை, மூர்த்தி இந்த இடமே முடித்து கொண்டார்.
மிடில் கிளாஸ் , என்று ஒரு இளக்காரம், மாமியாருக்கும், நாத்தனாருக்கும் ..


பெண் பார்க்க வந்த இடத்தில செழியனுக்கு இலக்கியாவை நேரில் பார்த்ததும் இன்னும் பிடித்தது, நிறத்தை பார்த்து இலக்கியா என்ன சொல்லுவாளோ, என்ற பயமே செழியனுக்கு..

பொண்ணு நல்ல சிவப்பா அழகா தான் இருக்கா என்று நேரில் பார்த்ததும், மாமியாருக்கும் திருப்தி ..

செழியனை பார்த்ததும், கருப்பாக இருந்தாலும் நல்ல கலையாக, விஷால் போன்று இருக்கிறார், என்று நினைத்த இலக்கியா, அவள் தந்தை, விருப்பம் கேட்டதும் , சரி என்று சம்மதம் தெரிவித்தாள் ..

மாப்பிளை வீட்டில் தான் மேற்கொண்டன பேச்சு வார்த்தை பேச வேண்டும், என்பதால், செழியன் வீட்டிற்கு, சென்றனர்..

இவர்கள் பக்கம், அனைத்தும் பெண் வீட்டு செலவே ..
முப்பது சவரன் நகை,போட்டு கட்டில், மர பீரோ ,பாத்திரம், என்று மோகன் தம்பதி ஒரு கணக்கில் சென்றால்,
அங்கு, "ஐம்பது பவுன் போட்டால் தான் எங்கள் குடும்பத்துக்கு கொஞ்சமாவது மதிப்பு," என்று சாந்தி ஒரே போடாக போட்டார் ..


வேண்டாம் வேறு இடம் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்தால், மகள், செழியன் மீதான விருப்பம் கண் முன் சென்று வந்தது , சரி என்று சம்மதம் கூறி, திருமணமும் நல்ல முறையில் நடந்தது ..

அப்பொழுது,இனியாவும் பத்தாம் வகுப்பு தான், அவளுக்கு என்று போட்டு வைத்த நகை சீட்டையும் சேர்த்து இலக்கியாவுக்கு , திருமண செய்து வைத்தனர் , இனியா திருமணத்துக்குள், பார்த்து கொள்ளலாம் என்று ..

அப்பொழுதே, இதை எல்லாம் பார்த்து வளர்ந்த இனியா, ஒரு முடிவுடன், தந்தைக்கு உதவாமல், முடிந்தளவு, தனக்காவது திருமணத்துக்கு சேர்த்து கொள்ளாமல், திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள கூடாது என்ற முடிவில் இருந்தாள் ..

திருமணமும் நன்றாகவே நடந்து முடிந்தது ..
செழியனும், இலக்கியவும் ஒருவருக்கொருவர், அன்னியோன்மாகவே வாழ்ந்து வந்தனர் .
மாமியார் எப்பொழுதும் அதிகாரம் தான், வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் சமையல் இலக்கியா தான், அதிலும் மாமியாரிடம் கேட்டு தான் ..


மகள் வீட்டுக்கு வந்து விட்டால், சாந்தியை பிடிக்க முடியாது..
வேலைக்கு சென்றால் மதிக்க மாட்டாள் என்ற மகளின் அறிவுரை கேட்டு, சாந்தி இலக்கியாவை வேலைக்கு அனுமதிக்கவில்லை


"வேலைக்கு போய் இங்க வடிச்சு கொட்டுற நிலைமை இல்லை, வீட்டுலயே இரு ," என்று விட்டார்..

அவளின் வருத்தம் எல்லாம் செழியனின் ஆறுதல், அவன் அரவணைப்பில் காணாமல் போய் விடும்.

அவனும், சாந்தியை, இலக்கியவை ஏதேனும் வருந்துமார் அவன் முன்பு சொல்லி விட்டால், நன்றாக திருப்பி கொடுப்பான்..

ஆனால் , அவன் தனக்கு சப்போர்ட்டாக எதுவும் பேசாமலே இருந்து இருக்கலாம், என்று என்னும் அளவுக்கு, இலக்கியா நினைக்க வேண்டி வரும் அதன் பிறகு ..

ஒரு வருடத்தில், இவர்கள் குடும்பத்தின் புது வரவாக, இலக்கியா செழியன் தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான் ..

இவ்வாறே ஐந்து வருடம் எந்த துன்பமும் இன்றி , அவர்கள் வாழ்க்கை சென்றது ..

ஒரு நாள், மூர்த்தி மகனிடம் மிகவும் படபடப்புடன் வந்து, நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டலை பைவ் ஸ்டாராக மாற்ற எடுத்த முயற்சியில், ஹோட்டலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார் ..

நண்பர்கள் இதில் எங்கு இருந்து வந்தார்கள் என்று அவன் கேட்டதற்கு, அவர் தலை குனிந்து , வருந்தினார் ..

தந்தையை இவ்வாறு பார்க்க முடியாமல் வருந்திய செழியன் , அவரை சமாதானம் செய்து, என்ன என்று ஒவ்வொன்றாக கேட்டான்

நண்பர்களையும் பங்கு தாரராக , சேர்த்துள்ளார், இப்பொழுது நஷ்டமாகவே, அவர்களின் பணத்தை கேட்க வந்துள்ளனர் ..

எவ்வளவு என்று கேட்டதற்கு, செழியனுக்கு அதிர்ச்சி ..

ஹோட்டலை விற்றாலும் இவர்களுக்கு பணம் கொடுக்க முடியாதே என்று ..

அப்பொழுது தான் இலக்கியாவுக்கு இரண்டாவது, பெண் குழந்தை பிறந்து, அவள் அன்னை வீட்டில் இருந்தாள்..

பிறகு ஒரு முடிவெடுத்தவனாக, தந்தையிடம் அவன் யோசனையை கூறி அன்னைக்கு பக்குவமாக கூற சென்றான் ..

சாந்தியால், இப்படி திடீர் என்ற வீழ்ச்சி தாங்க முடியாமல் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் ..

ஒருத்தர் பிறவியில் இருந்தே வசதி குறைவாக இருப்பதை விட, நல்ல வசதியாக வாழ்ந்து, திடீர் என்று கீழ் இறங்கினால் ,அதை தாங்கும் சக்தி அவர்களுக்கு இருக்காது..

வீட்டையும் அன்னையின் நகையையும் கேட்டான்..
வீட்டை விற்கவும், அவரின் நகைகள் கொடுக்கவும், சாந்திக்கு விருப்பம் இல்லை ..


சரி , மா , நான் என் சம்பளம் எல்லாம் உங்க கிட்ட தானே கொடுத்து இருக்கேன், அது இத்தனை வருஷம், ஓரளவுக்கு சேர்ந்து இருக்கும், அதையாவது எடுத்து கொடுங்க, நான் எங்கயாவது மேனேஜ் செய்ய முடியுதான்னு, பார்க்குறேன்..

அவங்க எல்லாரும் சண்டைக்கு வராம , எந்த அசிங்கமும் இல்லாமல் கொடுத்து விடலாம் என்ற முடிவு, செழியனுக்கு ..

இனி ஹோட்டல் இல்லைனு ஆயிடுச்சு ..
அம்மா அவங்க நகை கொடுக்க மாட்டாங்க, இந்த பதி மூன்று வருஷமும், முழு சம்பளமும் அம்மாவிடம் தான் , அதை வைத்து கொண்டும், லோன் ஏற்பாடும் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தான் ..


லோனும் இவ்வளவு அமௌன்ட் தர மாட்டாங்களே என்ன செய்யலாம் என்று ஒரே குழப்பம் , செழியனுக்கு ..

சாந்திக்கு, பயம் ,அவரின் முகம் பார்த்த மூர்த்தி, "என்ன டீ , நீ உன் பங்குக்கு, அவன் தலையில என்ன இடிய இறக்க போறே," மனைவியிடம் கேட்டார் ..

"என் பொண்ணுக்கு , வருஷா வருஷம், தீபாவளி சீர் தவிர நீங்க என்ன செய்யுறீங்க, அதான் இவன் சம்பளத்தை மாசா மாசம், அவளுக்கு ட்ரான்ஸ்வெர் பண்றேன், அப்போ தானே அவளுக்கு, அவங்க மாமியார் வீட்டுல ஒரு நல்ல பேர் இருக்கும் ..

செழியன் தலையையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் ..

"அடி பாவி, இவன் உழைப்பை எடுத்து கொடுப்பியா ,அவளுக்கு, என்ன செய்யல, நல்ல இடத்துல கட்டி கொடுத்து இருக்கோம், ஒரு வீடு, அவ பெயர்ல எழுதி கொடுத்து இருக்கோம், இப்போ இந்த பையன நடு ரோட்டுல நிற்க வச்சிட்டேன்."

"ஏன் உங்களுக்கு எங்க போச்சு புத்தி, நல்லா போயிட்டு இருக்கிறத , உயர்த்துறேன், நாசம் பண்ணதே நீங்க தான் , என்ன பேச வந்துடீங்க".
"அது என்னோடது, நான் எதுவும் செய்யுறேன், நீ , எப்படி அவன் காச எடுத்து, உன் பொண்ணுக்கு கொடுக்கலாம், இது தப்பில்லையா"..


"ஒரு பெத்தவங்களா , நம்ம பொண்ணுக்கு செய்யறது வேற, புள்ளை காச, தூக்கி, பொண்ணுக்கு கொடுக்குறது தப்பு" ..

"அவன் குடும்பத்துக்கு என்ன செய்வான்," மூர்த்திக்கு, மகனுக்கு இப்படி துரோகம் செஞ்சிட்டோமே, என்று மிகவும் குற்றவுணர்வு , அவன் முகத்தை மேற்கொண்டு பார்க்க, முடியாமல், கூனி குறுகி நின்றார் .

இவர்களின் சண்டை வேறு எரிச்சலை கொடுத்தது, அங்கு நிற்க பிடிக்காமல், தந்தையின் நண்பர்களை சந்திக்க சென்றான் ..


அவர்களிடம் பக்குவமாக பேசி டைம் கேட்டு கொண்டான் ..

பிறகு ஆபீசில் லோன் கேட்டான் , அவ்வளவு பெரிய தொகை முடியாது என்றனர் ..
மீண்டும் முதல் இருந்தா என்ற ஆயாசம் ..


வீட்டிற்கு வந்ததும், தந்தை, வீடு விற்க சம்மதம் கூறினார் ..
அன்னையிடம் நகையை கேட்கவில்லை அவன், அவரிடம் என்ன என்று பேசுவது.


பிறகு ஒரு முடிவு எடுத்தவனாக , கம்பெனிக்கு சென்று, வேலை விடுவதாக கூறி ரிசைன் செய்தான் ..
வீடும் ஒரு நல்ல தொகைக்கு விற்று, அதில் யார் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு கொடுத்து விட்டான் ..


அவனுக்கு வந்த செட்டில்மென்ட் பணத்துடன் சேர்ந்து, ஹோட்டலும் ஒருவர் கைக்கு சென்றது ..
அங்கு ஒரே படுக்கை அறை உள்ள வாடகை வீட்டில் தங்கி கொண்டனர் ..


இந்த நான்கு மாதத்தில் என்னவெல்லாம் நடந்து விட்டது ..
மனைவிக்கு, ஹோட்டல் பிசினஸ் நஷ்டம் பற்றி மட்டுமே கூறினான் தவிர , வேரெதுவும் கூற அவனுக்கு நேரமும் இல்லை ..


"எல்லாம் சரி ஆகிடும்," அவளின் இந்த ஒரு ஆறுதல் அவனுக்கு, தூண்டுகோள் ..
மனைவி நான்கு மாதமாக கணவன், வீட்டு பக்கமே வராமல் இருக்கிறானே, அவளும் பல முறை அழைத்து விட்டாள் , இன்று நாளை, என்று நேரம் கடத்தி, முதலில், கடன் பிரச்சனையும், வீட்டு பிரச்சனையும் முடித்து விட்டான் ..


இலக்கியாவுக்கு, அவனை தவிர, வீட்டில் நடப்பது, வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் வேறு ..
அன்றும் அவள் அழைத்ததும், மதியம் கண்டிப்பாக, வருவதாக கூறி, மாமியார் வீட்டுக்கு சென்றான் ..


மகன் உறங்கி கொண்டும், மனைவி நான்கு மாத அவள் மகளுக்கு பாலூட்டி கொண்டு இருந்தாள் ..
தூக்கத்தில் இருந்த மகனுக்கு ஒரு முத்தம் வைத்து , மகளை அவளிடம் இருந்து வாங்கி மடியில் வைத்து கொண்டு, ஆசையாக மகள் உறங்குவதையே பார்த்து, கொண்டிருந்தான் ..
அவனின் கலையிழந்த முகம் இலக்கியாவுக்கு படபடப்பை கொடுத்தது ..


மனுஷனுக்கு இந்த குழந்தை பருவம் தான் கவலையே இல்லாத காலம் இல்ல , விரக்தியுடன் பேசிக்கொண்டிருந்தான் ..
என்ன ஆச்சு என்று கேட்டதற்கு, அனைத்தும் கூறி முடித்தான் ..


தற்போது, வேலையும் இல்லை, வாடகை வீட்டில் இருப்பது, மேலும் அவன் புது தொழிலுக்கான யோசனையை கூறி அவள் முகம் பார்த்தான் ..
இலக்கியாவுக்கு, மாமியார் மீது கோவம், கணவன் பணத்தையும் கொடுத்து விட்டாரே என்று..


இப்பொழுது முடிந்த விஷயத்துக்கு, சண்டை போடும் நேரமும் இதுவல்ல ..
ஆதம்பாக்கத்தில் , முக்கியமாக , நிறைய மக்கள் புழங்கும் இடத்தில, உள்ள மெயின் ரோட்டில் , கடைகள் வைப்பது, என்பது சாதாரணம் அல்ல..


கடைகளும் லீசுக்கு, என்று எடுத்து , நன்றாகவே லாபம் பார்க்கலாம் ..
நிறைய கடைகள் சிறிய சிறிது சிறிதாக கட்டி லீசுக்கு விட்டுள்ளனர் ..


அதில் மெக்கானிக் ஷெட் ஒன்று வைப்பதாக , தன்னுடைய திட்டத்தை கூறினான் ..
இலக்கியாவும் அதற்க்கு, சம்மதம் கூறி, அவள் நகைகளை கொடுத்தாள் ..


அவனுக்கு தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது ..
அவனை மாமியாரும் மாமனாரும் வற்புறுத்தி இலக்கியா நகையை விற்க செய்தனர் ..


வந்த தொகையில், ஐந்து வருட லீசுக்கு எடுத்து, மீதம் உள்ள பணத்தில், ஒரு முன்தொகையாக, ஆதம்பாக்கத்தில் இருந்து சிறிது தூரம், செல்லக்கூடிய , இடத்தில் , ஒரு இடம் வாங்கி போட்டான் ..

மீதி பணம், தவணை முறையில் செலுத்தி இடத்தை சொந்தமாக பெற்று கொண்டான் ..
அந்த ரோட்டில் அனைத்தும் கடைகளும் மிகவும் சிறியதாகவே இருக்கும், ஆனாலும் கடை வைத்தால் , நன்றாக லாபம் ஈட்டும் பகுதி ..


என்ன ஒன்று, இவன் வீடு கட்டிய இடத்தில, அங்கங்கு தான் சிலர் வீடு கட்டி வசிகின்றனரே தவிர, ஒரு கடை, கோவில் என்று எதுவும் இல்லை

செழியன் அனைத்தும் நன்றாக ஆலோசித்தே திட்டம் செலுத்தி காய் நகர்த்தினான் ..
எதற்கு வேர்ரொருவரிடம், கை கட்டி வேலை பார்ப்பது, சொந்தமாக பிசினஸில் இறங்கலாம்..
இரண்டு பிள்ளைகள் ஆகிற்று, அவர்கள் வளர்ந்தால், அவர்கள் கல்விக்கே சரியாய் செல்லும், அம்மா வேறு சொந்த வீடு போயிற்று என்ற புலம்பல், இப்பொழுதே வீடு ஒன்று சொந்தமாக வாங்கினால் தான் உண்டு,
பிள்ளைகள் வளர வளர செலவுகளும் பெருகும், என்ற முடிவுடன், இரண்டு படுக்கை அறையுடன் கூடிய ஒரு வீட்டை கட்டி கொண்டான் ..


அதுவே தாராணிக்கு கோவம், அவளின் பங்கு பணமும், வீடு விற்றதுக்கு கேட்டாள் , இதில் குழந்தை பிறந்த நேரம் என்று கூறவே, மூர்த்தி மகளை அடித்து விட்டார் ..

இத்தனை வருடம் அவனின் பணத்தை சுரண்டியது, இன்னும் தாய் வீட்டு சீர் வேண்டுமானால், அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம் கொடுக்குமாறு கூறினார்..
தாரணி எங்கிருந்து கொடுப்பாள்,எல்லாம் பட்டுகளும், நகைகளுமாக, அவள் பீரோவில் தூங்கி கொண்டிருக்கிறது, கொடுக்க மனமும் இல்லை , அது வேறு ..


சாந்தியால் வாயை திறக்கமுடியவில்லை, இனி அவரின் கையில் எதுவும் இல்லை ..
தாலியுடன் மங்சள் கயிறு மட்டும் போட்டு கொண்டு வளம் வரும் மருமகளுக்கு தனது நகையை கொஞ்சம் கொடுக்க மாமியாருக்கு மனம் வரவில்லை, மகள் அதற்க்கு இடம் கொடுக்கவில்லை..


இலக்கியாவை இந்த நன்றி கெட்ட குடும்பத்துக்கு, உழைத்து கொட்ட வேண்டாம் என்று செழியன் கூறினான் ..

காலையில், பிள்ளைகளை, பள்ளிக்கு சென்று விட்டு விட்டு, செழியன் நேராக கடைக்கு சென்று விடடுவான் ..

பிறகு மீண்டும், மாலை பிள்ளைகளை அழைத்து வந்து விடுவான் ..

அதன் பிறகு, இரவு பதினோரு மணி வரை அவனுக்கு வேலை இருக்கும்..
நடுவில் எதற்கும் வீட்டுக்கு வர முடியாது..


குடும்ப பொறுப்பு, இலக்கியா கையில் என்று வந்தது ..
முன்பு போல், தாரிணி, இங்கு வந்தால்,தங்க முடியவில்லையே என்ற வயிறெரிச்சல், வேறு ,மாமியாருக்கும் நாத்தனாருக்கும் , தந்தை வீட்டில் அவளுக்கு என்று ஒரு அரை இருந்தது ..


ஆனால் இங்கு இரண்டு அறைகள், தான், வீடும் செழியன் பெயரில்.
வருடத்திற்கு ஒரு முறை என்று, தாய் வீட்டு சீர் ..
இலக்கியாவும் நன்றாக திட்டமிட்டு குடும்பம் நடத்துகிறாள் ..


இந்திராவின் ஆலோசனை கேட்டு, வீட்டிலே, முடிந்த அளவு, தென்னை மரம், மாம் மரம், மாதுளை, கொய்யா , என்றும், காய் கறி செடிகளும், வைத்து, வீட்டிற்கு தேவையான காய்கள் அவளே பார்த்து கொண்டாள் ..

பூக்களும், பூஜைக்கு என்று செம்பருத்தி, மல்லி, மகளின் விருப்பத்துக்கு என்று, பல வண்ண ரோஜாக்கள், என்று வீடு பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும் .

முன்பெல்லாம் மாமியாருக்கு பயந்து, கேட் வெளியே வர மாட்டாள் .
இப்பொழுது, அக்கம் பக்கம் அங்கங்கு இருக்கும் வீட்டில் உள்ளவர்களுடன் , நல்ல நட்புடன் இருக்கிறாள்.


தனியாக இருக்கிறோம், அவர்களுடன் இருக்கும் நட்புதான், பாதுகாப்பு, என்று சந்திக்கு தான் எடுத்து சொல்ல முடியாமல், விட்டு விட்டாள் .

மாதத்திற்கு ஒரு முறை, கணவனும் மனைவியும் சென்று, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், வாங்கி வருவர் ..


அதற்கே, இருவரும் ஜோடியாக எங்கேனும், ஊர் சுற்றுவது போல், மாமியார், மகளிடம் போனில் குறை படுவார் ..

மகன் இந்த அளவுக்கு, பெற்றவர்களை, பார்த்துக்கொள்கிறானே, என்று மூர்த்திக்கு, ஒரு பக்கம் குற்ற உணர்ச்சியும், ஒரு பக்கம் மகிழ்ச்சியும் .

செழியனும் வீட்டு செலவுக்கு போக, மீதி அன்னையிடம் கொடுப்பதில்லை .
அவர்களின் மருந்து மாத்திரைகள் முதல், அவனே எல்லாம் கவனித்து கொண்டான் .


ஒரு தொகை மனைவிக்கு நகைக்கு என்றும், பாங்கில் ஒரு தொகையும் என்று, அவனுக்கும் செலவு சரியாக இருக்கிறது.

ஆனால்,பெற்றவர்களால், பட்ட அடி , சேமிக்க கற்று கொண்டான் .

அவ்வளவு பெரிய கம்பெனியில் இவனுக்கு கீழ் என்று பத்து பெயரை ஒரு குழுவாக நியமித்து, அவர்களுக்கு வேலை கொடுக்கும் , பதவியை விட்டு, இப்பொழுது,கிரீஸ் கரை , ஆயில், என்று அழுக்கு உடையில் கணவனை காணும் போது இலக்கியாவுக்கு வருத்தமாக இருக்கும் .

சில நேரங்களில், அவளையும் மீறி உடைந்து விடுவாள்.

தானும் அழுதாள் , கனவுனுக்கு யார் தைரியம் கூறுவது, என்று தன்னையே தேற்றி கொள்வாள்..
இது எல்லாம் நினைத்து பார்த்து செழியன் தோள் மீது வைத்திருக்கும் கையை திடீர் என்று அழுத்தவே, செழியன் இவள் பக்கம் பக்கவாட்டில் திரும்பி, என்ன மா என்று கேட்டான் .


அவ்வளவு தான் அவளிடம் இருந்து ஒரு கேவல் ..
செழியன் பதைப்புதான், வண்டியை ஓரமாக நிறுத்தி, என்ன என்று அவளை கேட்டதும், உடனே சமாளித்து , "இல்லை மூச்சு முட்டுது, அப்பப்போ, என்னையும் மீறி கஷ்டமாகிடுது," அவன் தோள் சாய்ந்து கதறினாள் .


அவனும் அணைத்து , "ப்ளீஸ் மா, நீ கொடுக்குற தைரியத்துல தான், நான் நிற்கிறேன்".
"உடையதா , வந்துடுவோம், இப்போவே கொஞ்சம் மேல வந்துட்டோம், இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்ததுன்னா , நான் கண்டிப்பா ஷோரூம் ஆரம்பிச்சிடுவேன்" .


"உன் தைரியத்துல தான் நான் இருக்கேன்".
அவளும் கண்களை துடைத்து அவனை பார்த்தாள் .


"அக்கா வந்துட்டு போனாளே , ஏதாவது பத்த வெச்சி இருப்பா , என்னனு சொல்லு நான் கேட்குறேன்" .

"அப்பா சாமி, நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் , ஏதாவது கேட்டுட்டு போயிடுவீங்க, நான் தான் உங்கள பேச வெச்சிட்டேன்னு, அதுக்கப்பறம், அத்தை என்ன வெச்சு செய்வாங்க" .

"நானே பார்த்துகிறேன், நீங்க வண்டிய எடுங்க, ஏதோ கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது , வாங்க வாங்க," என்று வண்டியின் அருகில் சென்றாள் .
ஒரு பெருமூச்சுடன், செழியனும் வண்டி எடுத்து இனியா வீடு நோக்கி சென்றனர் .



"சொன்ன கேளு இளங்கோ , இந்த மாற செய்ற அப்படியே விடு, எல்லாம் சுத்தமா தான் இருக்கு," என்று ஆழாக்கு அவனிடம் கூறி கொண்டிருந்தாள்.

"அத்தை, எல்லாம் சோஃபாலயும், குஷன் இருக்கு, ஆனா இந்த சேர்ல, மாட்டு குஷன் இல்லம் அப்டியே எம்டியா இருக்கு, இந்த தலைகாணி எடுத்து வெச்சிட்டு அது மேல, சாட்டின் கவர் போட்டுடலாம் ."


"வரவங்க எல்லாம் இங்க உட்காரட்டும், மாப்பிள்ளையை இங்க உட்கார வெச்சிடலாம் .
அவங்க சொன்ன கணக்குக்கு , இந்த சோபால அந்த சோஃபாலயும், நாலு பேர் சரியா போய்டும்."


"செழியன் மாமா, நம்ம அப்பா , இந்த பிளாஸ்டிக் சேர்ல , வர மாப்பிள்ளைக்கு, ஸ்டூலையா, போடா முடியும் அதான், தாத்தாவோட மர சேர் ரெடி செஞ்சேன்" .

அதில் விஷாகா வந்து அமர்ந்து, இதனால், மோகன் இளங்கோவை, ரௌண்டு கட்டி அடிக்க போவது தெரிந்தால், இளங்கோ இப்படி செய்திருக்க மாட்டான் .





 

achuma

Well-Known Member
hai friends no space, so iam typing here, thanks forr all your likes and comments
ஓர் அளவுக்கு இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களை, உங்களுக்கு தெரியப்படுத்தி விட்டேன், இனி நேராக இனியா அன்பு திருமண கலாட்டாவுக்கு செல்வோம்
 

achuma

Well-Known Member
hai friends no space, so i'am typing here, thanks for all your likes and comments
ஓர் அளவுக்கு இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களை, உங்களுக்கு தெரியப்படுத்தி விட்டேன், இனி நேராக இனியா அன்பு திருமண கலாட்டாவுக்கு செல்வோம்
 

Saroja

Well-Known Member
என்ன அம்மா ரொம்ப
நல்ல செயல்
கஷ்டப்பட்டு சம்பாதித்த
காச வசதியா இருக்கும்
மகளுக்கு குடுத்துட்டு
இப்ப மருமகளுக்கு ஒரு
நகை கூட குடுக்கல
ஆனா நல்லா அவள குறை
சொல்ல தெரியும்
அருமையான பதிவு
 

achuma

Well-Known Member
என்ன அம்மா ரொம்ப
நல்ல செயல்
கஷ்டப்பட்டு சம்பாதித்த
காச வசதியா இருக்கும்
மகளுக்கு குடுத்துட்டு
இப்ப மருமகளுக்கு ஒரு
நகை கூட குடுக்கல
ஆனா நல்லா அவள குறை
சொல்ல தெரியும்
அருமையான பதிவு
Thanks
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top