அன்பின் இனியா 22 3

Advertisement

achuma

Well-Known Member
Hi friends thanks for all your support
please read and give your suggestions
all take care
be safe dears


அதிதியின் திருமணம் பற்றி அன்புவிடம் அவனின் பெரியன்னை கூறியதும், அவனுக்கு அதற்குள் ஒரு அதிர்வு, அதற்குள் தன தங்கை திருமண வயதை நெருங்கி விட்டாளா, என்ற தவிப்பு பெண்ணை பெற்ற வீட்டினுள் உள்ள அனைவர்க்கும் வரும் ஒரு வித உணர்வு.
"பெரியத்தை, அவர் இன்னும் அதிதியை சின்ன குழந்தைன்னே நினைக்குறாரு, அவர்கிட்ட போய் சொன்னீங்கன்னா, அவர் இப்படி சிலையாட்டம் தான் நிற்பார், அத்தை என்ன சொல்றாங்கன்னு கேட்போம், என்று சுமதியை கண்டாள், இனியா .
சுமதிக்கு சரனுடன், அதிதிக்கு திருமணம் நடப்பதில் முழு மகிழ்ச்சி, அனால், தான் போய் நேரில் கேட்டால் சந்திரா தன மீது உள்ள கோவத்தில் எங்கு வேண்டாம் என்று மறுப்பாரோ, என்று ஒரு பயம்.
அதே நேரத்தில் அவரின் சுயநலமும் ஒரு காரணம் .
இங்கு தான் அதிதியை அவர் சரியாக பார்த்துக்கொள்ள வில்லை.
சரண் அன்புவின் உயிர் நண்பன், அவனுடன் மகளுக்கு திருமணம் நடந்தால், மகளை நன்றாக பார்த்துகொள்ளவான் என்ற விருப்பம்.
விஷாகாவை, ஒரு நாத்தனார் வீட்டினில் மருமகளாக கொடுத்தது போல், இரண்டாம் மகளை, சின்ன நாத்தனார் வீட்டிற்கு கொடுத்தால், தன காலம் பிறகு, அன்பு சொந்த பந்ததுடன் இருப்பான், சந்திராவிற்கும் குடும்பாத்தாருடன் ஒரு ஓட்டுதல் இருக்கும் என்று காலம் கடந்து யோசனை.
ஆகையால், அவரின் விருப்பத்தை, மகனிடம் கூறினார்.
அன்பு அதற்கு மறுப்பு தெரிவித்தான்.
கண்டிப்பாக, சரண் உறவுகளில், திருமணம் நடப்பதை விரும்பமாட்டான் என்று உறுதியாக கூறினான்.
சுமதியும் எதுவும் முறையாக தெரியாமல், ஆவணி அதிதியை விரும்புகிறான், என்று கூற தயங்கி, அவரும் வந்திருக்கும் வரன் பற்றி அக்காவிடம் கேட்டு கொண்டார்.
ஆனால், இந்த விஷயம் அதிதி காதுக்கு சென்றதும், அண்ணனிடம் தனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம் என்று கூறி, சிறு பிள்ளை போல் அழுதாள் .
"அதி மா, அவங்க ஜஸ்ட் பார்த்துட்டு போக மட்டும் தான் வராங்க உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் டா, பெரியம்மா சொன்னாங்க இல்லையா, அவங்களுக்கு மதிப்பு கொடுத்து, அந்த பையன் வீட்டுல வர சொல்லி இருக்கோம், நீ இதுக்கு எல்லாம் பீல் பண்ணாத," என்று அவளை தேற்றி, அவளுக்கு அன்புவே உணவு கொடுத்தான்.
தன் மனம் என்ன நினைக்கிறது என்று தனக்கே சரியாக தெரியாத போது , எதற்கு இந்த தவிப்பு, என்று அவளுக்குள் ஒரு கேள்வி.
"அதுக்கு உன்னை அசிங்கமா பேசின அவனையே கல்யாணம் செய்துக்க போறியா, என்று மனசாட்சி கேட்ட கேள்விக்கு, அவளிடம் பதில் இல்லை.
அதே நேரத்தில் தந்தைக்கு நிகராக தன்னை வளர்த்த அண்ணனின் வார்த்தைக்கு மதிப்பளித்து, திருமணத்திற்கு அரை மனதாக சம்மதம் தெரிவித்தாள்.
அனால் அன்றில் இருந்து அவள் அவளாக இல்லை, ஏதோ நடமாடி கொண்டிருந்தாள் .
அதிதியிடம் இனியா எவ்வளவு குடைந்தும் அவளிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை, சாதாரணமாக இருப்பது போல் காட்டி கொண்டாள் .
இது வேலைக்காகாது, என்று, "அதி மா, யாரையாவது லவ் பண்றியா" என்று இனியா நேரடியாக கேட்டு விட்டாள் .
அதில் திடுக்கிட்ட அதிதி, "அப்படி எல்லாம் இல்லை அண்ணி, ஏன் கேட்குறீங்க "என்று திக்கி திணறி வார்த்தை வந்தது அவளிடம் இருந்து .
"பின்ன, உங்க அண்ணா எவ்வளவோ, சொல்றாங்க, உனக்கு விருப்பம் இல்லைனா, எதுவும் இல்லைன்னு, ஆனா நீ இப்படி உம்முன்னே இருந்தா, நல்லவை இருக்கு, எங்களுக்கு இந்த சேட்டை அதிதியை பார்த்துட்டு இப்போ டல் அடிக்கிற உன்னை பார்த்தா எப்படியோ இருக்கு ," என்று அவளை தேற்றி, ஆனால் இப்படியே விட கூடாது, எதுக்கு ஒரு முயற்சி எடுத்து பாப்போம், என்று இனியா அடுத்து சந்திராவை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்று வந்தாள் .
சந்திராவின் வீட்டிற்கு இனியா சென்றாள் .
"அடடே, வா இனியா, எப்படி இருக்கே, நேத்து அன்பு வந்து பார்த்துட்டு போனான், குழந்தையை கூட்டிட்டு வந்து இருக்கலாம் தானே, பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ."
"ஏன் பெரியம்மா நீங்க உங்க பேரன, பார்க்க அங்க வரலாம் இல்ல,"
"நான் பிறந்து வீடுன்னு உறவை விட்டு ரொம்ப நாள் ஆச்சு மா, புதுசா எந்த உறவையும் உருவாக்க விரும்புல, "இப்போ, தான் கொஞ்ச நாளா, அக்கா வந்துட்டு போறா, என்னை எப்பவும் பணத்தோட ஒப்பிட்டு பார்க்காம எனக்குன்னு, இருக்கும் என் பிறந்த வீட்டு சொந்தம் அன்பு மட்டும் தான்."
"அவன் சரண் இங்க இல்லைங்கிற குறை தெரியாம, என்னை வந்து இங்க அடிக்கடி பார்த்துட்டு போறான் .
அன்புவை நம்பி தான் சரணும், அங்க நிம்மதியா வேலை பார்த்துட்டு இருக்கான் ."
"ஹ்ம்ம் இப்போ என்ன பணம் வீடுன்னு எல்லா வசதியும் இருந்து என்ன பிரயோஜனம், சரண் ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டா, எனக்கு நிம்மதியா இருக்கும், நானும் உன் புருஷனும் அவன் கிட்ட சொல்லி சலிச்சிட்டோம்".
"ஏன் பெரியம்மா சரண் அண்ணா,யாரையாவது விரும்புறாரா, "
"கேட்காம இருப்போமா, அப்படி எதுவும் இல்லைன்னு சொல்லிட்டான், அப்பறம் கல்யாணதுக்கு நாங்க பொண்ணு பார்க்குறோம்ன்னு சொன்னாலும் எங்களோட சண்டை போடுறான், போமா, நீயும் உன் அண்ணா கிட்ட பேசி பாரு மா, என்னனு பார்க்கலாம்."
"வர ஞாயிற்று கிழமை, அதிதியை பார்க்க மதுரைல இருந்து வரங்களாம்,"
"ரொம்ப சந்தோஷம் மா, அன்பு நேத்து சொன்னான், என்னையும் வர சொல்லி கூப்பிட்டான், எல்லாம் நல்லபடியா பேசி முடிங்க, இந்த பசங்க கண்ணு முன்னயே எவ்வளவு சீக்கிரம் வளர்ந்து நிக்கிறாங்க ."
இதில் இருந்தே, அவருக்கு மனதில் துளியும் அதிதியை சரணுக்கு என்று அவர் நினைத்து பார்க்கவில்லை என்று தெரிந்து கொண்டாள் .
ஆனால், வந்த விஷயம் பேசியே தீர வேண்டிய கட்டாயத்தில், பேச முடிவெடுத்தாள் .
"எனக்கு ஒரு யோசனை, ஜஸ்ட் கேட்குறேன், நீங்க தப்ப எடுத்துக்கலான, " என்று இனியா அவரிடம் பேச தயங்கியதும்,
"என்ன டா சொல்லு, நான் எதுவும் நினைக்க மாட்டேன் ." சந்திரா ஊக்குவித்ததும் மனதில் திடம் வரவைத்து, "அதிதியை, சரண் அண்ணாக்கு கல்யாணம் செய்து வைக்க உங்களுக்கு தோணலையா, எவ்வளவோ இடம் பாற்குறதா சொல்றீங்க, ஆனா, சொந்த அண்ணா பொண்ண, கேட்க மாட்டேங்குறீங்களே, அந்த சந்தேகம் தான்," என்று சாதாரணம் போல் கேட்டு விட்டாள் .
கேட்ட பின்பு, எங்கு அன்புவிற்கு விஷயம் செல்லுமோ, அவன் ஏதேனும் அவளிடம் சண்டையிடுவானோ, என்று பயம் .
சந்திரா, இனியாவை பார்த்து சிரித்து, "ஆமா உனக்கு ஏன் இந்த டவுட் இனியா, எனக்கு அண்ணன் பொண்ணை விட்டு வெளிய பார்க்க நினைப்பேனா, ஆனா எனக்கு கூட பொறந்துட்டா மட்டும் அண்ணன் ஆகிட முடியுமா, சொல்லு மா, அதுவும் இல்லாம, நானாவது, எல்லாரோடும் பேசுறேன், சரண் அன்புவை தவிர, யாரையும் மதிக்க கூட மாட்டான்."
"இதுல எப்படி நான் கல்யாணத்தை பற்றி பேசுறது சொல்லு, எனக்கு அதிதி குட்டிய ரொம்ப பிடிக்கும், அவ விஷா மாதிரி இல்லை, அன்பு வளர்த்த வளர்ப்பு, ஆனா சரண் சம்மதிக்கணுமே," என்று சலித்து கொண்டார்.
இதற்கு மேல், இனியா எப்படி அவளுக்கே உறுதியில்லாத விஷயத்தை கூற முடியும் ஆகையால் சிறிது நேரம், அங்கு இருந்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டாள் .
எப்பொழுதும் போல், சரண் அவன் அன்னைக்கு அழைத்தான் .
சந்திரா, அவனிடம் பேசிவிட்டு, அதிதியின் திருமண விஷயமும் அவனிடம் பகிர்ந்து கொண்டார்.
அங்கு சரண், தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் .
அவன் மனம் எல்லாம் அதிதியை நேசித்தது, ராஜசேகரிடம் சண்டை போட்டது, என்று எல்லாம் மனதில் வந்து சென்றன .
அன்பு மற்றும் சரண் இருவரும் வேலைக்கு சேர்ந்த புதிதில், இருவருக்கும் வேறு வேறு ஷிபிட் என்று இருந்ததால், அந்த இரு வாரங்கள் மட்டும், சரணை அதிதியை பள்ளியில் இருந்து அழைத்து வருமாறு கூறினான் .

அதன் பின்பு, பள்ளி பேருந்தில் அனுப்பி விடுவது பற்றி பேசுவதாகநினைத்து கொண்டான் .
வீட்டினரையும் நம்பமுடியாது, தனியாக அனுப்பவும் பயம்.
அதுவரை சரணை அழைத்து வர சொன்னான் .
அதிதியை தவிர, வேறு யாரேனும் உறவு என்றால் சரணும் சம்மதித்து இருக்க மாட்டான் .
எப்பொழுதேனும் அவனுடன் அதிதி, சந்திரா வீட்டிற்கு வந்தால், அவளுடன் கலாட்டாவாக பேசுவான் அவ்வளவு தான் .
"சரி" என்று சம்மதம் கூறி, அவள் பள்ளி வாசலில் அவளுக்காக காத்திருந்தான் .
அதிதியும் வகுப்புகள் முடிந்து, அங்கு வாசலில் சரணை கண்டு, இங்கு எதற்கு சரண் நிக்கிறான், என்று நினைத்து அவனிடம் சென்றாள்.
"என்ன மாமா, இங்க வெய்ட் பண்றீங்க, யாருக்காக, யாரையாவது சைட் அடிக்க வந்து இருக்கீங்களா," என்று கண்ணடித்து கேட்டாள் .
அவள் தலையில் செல்லமாக கொட்டு வைத்து, "உனக்கு வாய் தான், நாங்க எல்லாம் காலேஜ் டைம் லேயே, சைட் அடிக்கல, இப்போ மட்டுமா, நாங்க எல்லாம் ரொம்ப பிஸி மா, முரட்டு சிங்கிள்ஸ், யாரும் எங்கள் நெருங்க முடியாது,"
"ரொம்ப பெருமை தான், உங்க மூஞ்சிய யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க, ரொம்ப பந்தா பண்ணாம என்னனு சொல்லுங்க."
அவனும் சிரித்து விட்டு "சேட்டை உனக்கு"
"உன் அண்ணா தான் உன்னை வீட்டுல விட சொன்னான், சோ டூ வீக்ஸ் நான் தான் உனக்கு டிரைவர், வா வண்டில ஏறு ," என்று அவன் வண்டியை திருப்பினான் .
"இருங்க மாமா, என் பிரெண்ட்ஸ் அங்க இருக்காங்க சொல்லிட்டு வரேன்," என்று சிட்டாக பறந்தாள் .
"அதோ என் மாமா டீ அவரு, அவரோட நான் வண்டில கிளம்புறேன்," என்று தோழிகளிடம் கூறினாள் .
அவளின் தோழிகளுக்கு கிண்டலுக்கு ஒரு ஆள் கிடைத்த மகிழிச்சியில், சரணையும் அதிதியும், சேர்த்து கிண்டலடித்தனர்.
அதிதிக்கு சரண் அவள் மனதில் இடம் பிடிக்க அந்த ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது.
தோழிகளின் சரணையும் அவளையும் ஜோடி சேர்த்து பேசியதில், அவள் மனதில் சரண் இடம் பிடித்தான் .
அதுவரை, அண்ணனின், நண்பன், அத்தை மகன் என்று பார்த்த பார்வை, அந்த நொடியில் இருந்து, அவளின் முறை பையனாக, அவளின் காதலனாக பார்க்க தோன்றியது.
அதிதிக்கு சரணை பற்றி நன்கு தெரியும், அவன் வாழ்க்கையில் அவன் அன்னையை தவிர, வேறு பெண் என்று அவன் பழகியதில்லை, அப்படி இருக்க, இன்று தன்னை வண்டியில் ஏற்றி செல்வது, அவளுக்கு ஏதோ வானத்தில் பறக்கும் எண்ணம், அவனுக்கும் தன் மீது காதல் இருக்கிறது, ஆகையால் தான் தன்னை அழைத்து செல்ல வந்து இருக்கிறான், என்று நினைத்து கொண்டாள்
அவனுடன் வண்டியில் சென்று வந்தாள் .
முதல் இரு நாட்கள் சரண் கவனிக்கவில்லை.
எப்பொழுதும் அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேசும் அதிதியின் பார்வை, இப்பொழுது எல்லாம் பள்ளி வாசலில், அவனை கண்டால், முதலில் ஒரு பரவசம், பிறகு, தலை குனிந்து கொண்டு, அவன் கேட்கும் கேள்விக்கு மட்டும் வெட்கதுடன் ஒரு பதில் என்று, அவளிடம் புதிதாக ஒரு மாற்றம் .
தோழிகள் ஏதேனும் இவனை பார்த்து கேட்பதற்கு, இவள் வெட்கதுடன் அவர்களிடம் பதிலளித்து, விடை பெற்று, அவனின் அருகில் வந்து ஏறுவது.
வார்த்தைக்கு வார்த்தை பேசும் அதிதியா இது, என்று நினைத்தாலும், அவனுக்கு நன்றாக தெரிந்தது, அது தன் மீதான அத்தை மகன் என்ற நினைப்பா, என்று அவளிடம் கேட்கவும் முடியாமல், இங்கு சரணுக்கு தான் குழப்பமாக இருந்தது.
அதிதி, என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும், நண்பனின் தங்கை என்ற அளவில் தான் இது வரை நினைத்திருக்கிறான் .
ஆனால், தன் வருகையை, ஒரு பெண் இந்த அளவிற்கு எதிர்பார்க்கிறாள், அவனின் முகம் பார்த்து பேச தயக்கம், அவனை கண்டால் வரும் வெட்கம், என்று இந்த நாட்களில் அதிதியின் பல முகங்கள், ஒரு ஆண் மகனாக அவனுக்குள் ஒரு கர்வம்.
அவளிடம் அவனும் காதல் பார்வை வீச தொடங்கினான், அந்த பார்வையில் பெண்ணவள் தவித்தாள் என்றே கூறலாம்.
சிலநேரங்களில், அதிதியை, பள்ளி முடிந்து, அவளை, பீச்சிற்கு அழைத்து செல்வான் .
அவளுக்கு பிடித்த ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பது, காதல் பற்றி, மற்ற பொதுவான விஷயங்கள் கேலி கிண்டலுடன், இருவரும் பேசுவர் .
சரணுக்கு, அந்த நேரத்தில் அவளுடன் இருக்கும் அன்மையை ரசித்தான், என்றால், அதிதிக்கு, அவனுடனே எங்கேனும் சென்று விடலாம், என்று அதிதி நினைத்தாள் .
வீட்டின் அருகில் சென்றதும், அதிதி, மொட்டை மாடியில் இருந்து பார்த்து கொண்டிருக்கும் தந்தையை கண்டு முகத்தை சாதாரணமாக வைத்து கொள்வாள் .
ஆனால் சரணுக்கு அது எல்லாம் எங்கு தெரியும், வண்டியை விட்டு அவள் இறங்கியதும், "சரி அதி, ஒழுங்கா சாப்பிடு, அப்டியே, டைம் ஓட்டிட்டு தூங்கிடாதே, நாளைக்கு பிராக்டிகல் டெஸ்ட் இருக்குன்னு சொன்ன , ஏதாவது டௌட்ன்னா கேளு," என்று முகம் எல்லாம் மகிழ்ச்சி பொங்க, மனதிற்கு இனியவளிடம், பேசி கொண்டிருந்தததை, இராஜசேகர் கண்டு விட்டு, ஒரு முறை அங்கு வாசலில் வந்து அவனின் முன் நின்றார்.
சரண் அவரை கண்டு கொள்ளாது, வண்டியை இயக்கினான்.
"டேய் நில்லு டா," என்றதும் அவரை முறைத்து விட்டு, வண்டியில் இருந்து இறங்கினான் .
என்ன என்றும் கேட்காமல், அவரை முறைத்து பார்த்து கொண்டிருக்கும் தங்கை மகனை அவரும் பதிலுக்கு முறைத்து "என்ன, புது வழில சம்பாதிக்க திட்டமா, உனக்கு காசு வேணும்ன்னா, உழைச்சி சாப்பிடு டா, உங்க அப்பன் ஹாஸ்பிடல்ல, இருந்தான்னு, ஒரு நாடகம் போட்டு, பணம் கேட்டீங்க, அப்போ கொடுக்குல, இப்போ, இவளை ஏமாத்தி பணம், என் கிட்ட பணம் திருடலாம்ன்னு பார்க்குறீங்களா, உனக்கு தான் அறிவில்லை, உங்க அம்மாவுக்கும் கூடவா, தெரியாது, ச்சி, என்ன ஜென்மமோ, நீங்க எல்லாம்."
"உன்னையும், உன் அம்மாவையும் பார்த்தாலே, எனக்கு பத்திகிட்டு வருது, உங்களை மாதிரி பிச்சை காரங்களுக்கு, இந்த வீட்டு பொண்ணை எப்படி கொடுப்பேன்னு, யோசிச்சி பார்க்க வேண்டாம்."
"இன்னொரு முறை, இவளோட உன்னை பார்த்தேன், தொலைச்சிடுவேன்," என்று வாய்க்கு வந்ததை, தங்கை மகன் என்றும் பார்க்காமல், அவர் பேசி கொண்டே சென்றார்.
ஒரு கட்டத்தில் சரணுக்கு கோவம் அடங்காமல், அவரின், சட்டை காலரை பிடித்து "யோவ் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின, அவ்வளவு தான் சொல்லிட்டேன், நரம்பில்லாம பேசுற நாக்கு இருக்காது பார்த்துக்கோ ."
"பணம் பணம்ன்னு நாங்க ஒன்னும் அலையில டா, நீ தான், உன் புத்தி அப்படி தன் யோசிக்கும் அது தான், மற்றவங்களையும் உன்னை போலவே நினைச்சிட்டே ."
"அப்போ, ஏன் டா அதிதியை, நீ கூட்டிட்டு வர, அவளை பார்க்கும் போது, உன் பார்வையே சரி இல்லையே ."
"ஆமா, அப்படியே பொண்ணு மேல ரொம்ப பாசம் தான், உனக்கு, சும்மா தண்டமா தானே இப்போ இருக்குற, உன் பொண்ணை, நீ ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரது தானே, அன்பு சொல்லி தான், நான் அதிதியை, வீட்டுல விடுறேன், அவனுக்கு நேரம் சரியா இருக்கு, இப்போ டிராவெல்சும் பார்க்கணும், ஷிப்ட்டும் மாத்தி இருக்காங்க, அவன் கேட்டுக்கிட்டதால தான் நான் ட்ரோப் பண்றேன் ."
"ஏதாவது வாய்க்கு வந்ததை உளறிட்டு இருந்த," என்று அவரின் வயதிற்கும் மரியாதை அளிக்காமல், மிரட்டினான் .
அதில் கோவம் கொண்ட, இராஜசேகர், "ஓஹ் அண்ணனே தங்கையை, உன்னோட அனுப்பி வெச்சானா, அவனும் இதுக்கு உடந்தையா," என்று அவரின் வார்த்தை ஒன்றும் சரியில்லை.
"ச்சி சாக்கடை மேல கல்லெறிஞ்சா, அது நம்ம மேலயே தெளிக்கும், யாருக்கு வேணும்னயா உன் பொண்ணு, அன்புவை பற்றி, என் அம்மாவை பற்றி பேச உனக்கு தகுதியே இல்லை, " என்று இராஜ சேகருக்கு எது வேண்டுமோ, அதனையே, அவன் வாயால் கூற வைத்து, புதிதாக துளிர்த்த காதலுக்கு முற்று புள்ளி வைத்தார்.
இவை எல்லாம் சரண் நினைத்தான் .

அடுத்த நாளே, அன்புவுக்கு முன்பு, அதிதி பள்ளி பேருந்தில் சென்று வருவதற்கு, இவன் பேசி விட்டு,அதற்கான ஏற்பாடு செய்தான்.
அன்று மாலை, அவளிடம் தகவல் கூறுவதற்கும் அவள் அதில் ஏறுகிறாளா, என்று பார்ப்பதற்கும் அங்கு சென்று காத்து கொண்டிருந்தான் .
"என்ன மாமா, இன்னும் டூ வீக்ஸ் நீங்க தான் வருவீங்கன்னு சொன்னீங்க, இப்போ பஸ்," என்று திக்கி திணறி, அவளின் ஏமாற்றம் வார்த்தைகளாக வெளி வந்தது.
அவளின் ஏக்கம் நிறைந்த முகம் அவன் மனதை வதைத்தாலும் அவளிடம் முகத்தை கோவமாக வைத்து கொண்டு, நான் என்ன உனக்கு டிரைவர் வேலை பார்க்கணுமா, என்று சிடு சிடுத்தான் .
அதில் பெண்ணின் மனம் காயப்பட்டது.
அவளின் அடிபட்ட பார்வை, கண்டு, "உங்க அண்ணாக்கு டைம் இல்லை, அதான் நானே பஸ் ஏற்பாடு செய்தேன், இப்போ நீ பிளஸ் ஒன் படிக்கிறே, ஒழுங்கா படிப்புல மட்டும் கவனமா இரு, உங்க அப்பா அன்பு தொழிலுக்கு கூட, பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு, அவன் தான் எப்படியோ பார்ட் டைம் வேலை செய்து, ஒரு வழியா லோன் போட்டு டிராவெல்ஸ், ஆரம்பிச்சு, எப்படியோ, கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான் ."
"அவனுக்கு நல்ல பேரை எடுத்து கொடுக்குற வழியப்பாரு."
"ஹ்ம்ம் சரி மாமா, நான் நல்ல படிக்குறேன், உங்க கிட்ட நான் ... அது, எப்படி சொல்லன்னு," என்று அவள் தயங்கியதில் எங்கு காதலை சொல்லிவிடுவாளோ என்ற பயம் தான் அவனுக்கு.
இறுதியில் அவன் பயந்ததற்கு ஏற்ப, அவளும் அவளின் காதலை கூறி விட்டாள் .
"எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா, நான் உங்களை லவ் பண்றேன் ."
ஒரு வழியாக கூறி முடித்தாள் .
அவனுக்கு மகிழ்ச்சியை கொண்டாடும் தருணம் தான் இல்லை பாவம் .
"சின்ன பொண்ணா இருந்துகிட்டு, பேச்சை பாரு, அதிதி, எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை, இந்த வயசுல வர எண்ணம் தான் இது, நான் உன்னை எந்த வகையிலயாவது தொந்தரவு செய்திருந்தா, ஐம் சாரி."
"உனக்கு ஏன் இப்படி எல்லாம்எண்ணம் வருதுன்னு எனக்கு தெரியலை ."
"இல்லை மாமா, நீங்க பொய் சொல்றீங்க, நீங்க மத்த பொண்ணுங்க கிட்ட எல்லாம் பேச கூட மாடீங்க, எனக்கு நல்லா தெரியும், உங்களுக்கு என்னை பிடிக்கும், நேத்து எங்க அப்பா உங்களை ஏதாவது திட்டி இருப்பாரு, அதான் என் மேல கோவ படுறீங்க, அதுக்கு சாரி."
கண்களில் கண்ணீரோடு, பேசி கொண்டிருக்கும் அவன் அதிதியை காண அவன் மனம் வெகுவாக தவித்தது.
ஆனால் இராஜசேகரை மீறி திருமணம் செய்ய அவனுக்கு துணிச்சல் இருக்கிறது தான், என் முறை பெண் யார் என்ன செய்ய முடியும் என்ற தைரியம் தான் அது .
ஆனால் அவன் அன்னை, மற்றும் உயிர் நண்பனை நேற்று அவர் பேசிய பேச்சு, அவன் மனதில் தீயாக எரிந்து கொண்டிருக்கிறது.
"நல்லா பேசுற, சின்ன பொண்ணுன்னு சிரிச்சி பேசுனா, உனக்கு இப்படி தோணுதா, இளமை உணர்வுக்கு மதிப்பு கொடுக்காம, வாழ்க்கையில் முன்னேரும் வழிய பாரு, இனி என்னை பார்க்க நினைக்காத, நீ இப்படி உளறாம இரு," என்று மனதை கல்லாக்கி கொண்டு, அவளிடம் சிடுசிடுத்து, அங்கிருந்து சென்று விட்டான்.
அன்று அவனின் உதாசீனம், இன்று வரை, அவன் மீது கோவமும், அதே நேரத்தில் அவனை மறக்க முடியா அவளின் காதலும், என்று அதிதி, இப்பொழுது வரை, மனதளவில் தவிக்கிறாள் தான்.
அதே நிலை தான், சரணுக்கு .
அவளிடம் கடுமையாக பேசிவிட்டாலும், அவன் காதல் என்றும் மறந்ததில்லை.
அன்று அவள் ஒழுங்காக பேருந்தில் ஏறி, வீடு சென்றாளா , என்று அவளுக்கே தெரியாமல் பின் தொடர்ந்து, சென்று அதன் பின்பு, அவளை காண்பதை தவிர்த்தான் .
அவளும் அன்புவுடன், சந்திரா வீட்டிற்கு செலவதில்லை.
அவள் கவனம் முழுதும் படிப்பில் என்றானது.
சிறிது நாட்களில், அவனுக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிடைத்ததும், உடனே, சென்று விட்டான்.
வெறித்தனமாக, வாழ்க்கையில் பணக்காரனாக உயர வேண்டும் என்ற எண்ணம் மனம் முழுதும் வியாபிக்க, கடுமையாக உழைத்தான்.
கிடைத்த பணத்தில் அன்னைக்கு, வீடு, வாங்கி கணக்கில் ஒரு தொகை , நகை என்று அனைத்தும் இருக்கிறது, அவனின் அதிதியை தவிர.
இப்பொழுது, இதுநாள் வரை இல்லாத பயம், அதிதிக்கு வேறு இடத்தில மாப்பிளை பார்த்திருப்பதாக கூறியதும், "எவனோ இவள பொண்ணு பார்க்க வரான், இவ அவனுக்கு காபி எடுத்து கொடுக்குனுமா, நான் இருக்க வேண்டிய இடத்தில வேற எவன் இருக்கான்னு நானும் பார்க்குறேன்," என்று, அவன் அலுவலகத்தில் விடுமுறை கேட்டு கொண்டு, அடுத்த விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தான் .
















 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top