அத்தியாயம் -3

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கதம்பவனம் – 3
வளமை செழிக்கும் இயற்கையைக் கொண்ட வாழை தோப்பு பறவைகள் பாசுரம் பாட சூரிய பகவான் அதில் மகிழ்ச்சி கொண்டு இன்னும் பிரகாசமாக எரிந்தாலும் குளுமையாகத் தான் இருந்தது அவ்விடம்.அழகுக்கு அழகு சேர்ப்பது போல நான்கு பெண்களின் கும்மாளம் ஓரகத்திகள் அனைவரும் அந்தப் பம்பு செட்டில் விளையாடி கொண்டு இருந்தனர்.ஒருவரை ஒருவர் அடித்தும்,தண்ணீரை தெளித்தும்,பாவாடைகளைப் பிடித்து இழுத்தும் லூட்டி அடித்தனர்.

ராஜனுக்கும்,விமலாவிற்கும் நிச்சியம் முடிந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் சீதா,அமுதா,தாமரை,விமலா அனைவரும் இதோ இங்கு மீன்களாகத் துள்ளி விளையாடி கொண்டு இருந்தனர் அக்கா தங்கைகளைப் போல (இன்று சாத்தியமா என்ன? கூட்டுக் குடும்பம் பிளவு கண்டது இக்காலத்திற்குப் பின்பு தான்)

பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதால் சுந்தரம் மற்றும் பங்கஜத்தின் பொறுப்பில் பிள்ளைகளை விட்டுட்டு இங்கு வந்தனர். மாதங்கிக்கு தாய் வீடு தான் வசதி இது போல ஓய்வுகளையும், மனுஷாளையும் ஏனோ அவள் தேடுவதில்லை.
அதனால் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீடு சென்று ஆயிற்று எஞ்சி இருப்பது இவர்கள் தான் நிச்சியம் முடிந்து விமலாவின் கலக்கணமான முகத்தை பார்த்த மூவராலும் தாங்கி கொள்ள முடியவில்லை.

அதிலும் தாமரை சற்று நடுங்கி தான் போனாள் தன் நிலையை விட விமலாவின் நிலை தான் அவளை உறுத்தியது. ராஜனோ ஒரு முறை தான் விமலாவைப் பார்த்தான்,

உள்ளுக்குள் அத்தனை கடுப்பு அதுவும் விமலாவின் பெற்றோர்களைப் பார்க்க பார்க்க அவனது இரத்த அழுத்தம் ஏறி கொண்டு தான் இருந்தது.என்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்க இவர்கள் யார் அக்காவை போலத் தான் இவளும் இருப்பாள் என்ற எண்ணம் வேறு.அவனது முகத்தைப் பார்த்த அவனது அண்ணிகளுக்கோ பயம் பிடித்து கொண்டது அதனால் தான் இந்த மங்கையர் மாநாடு.

தன்னை மறந்து மீன் குஞ்சாக நீந்தி கொண்டு இருந்த விமலாவிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார் சீதா “விமலா உனக்கு தம்பிய பிடித்து இருக்கு தானே" அதுவரை இருந்த சிரிப்பு இந்த கேள்வியில் மறைந்து போனது.அவளது அமைதி இன்னும் கலக்கத்தை கொடுக்க தாமரை அவளது தோள் மீது கை வைத்து ஆதரவாக கையை பற்றி கொண்டாள்.

விமலாவை அனைவருக்கும் பிடிக்கும் மாதங்கி திருமணமாகி வந்த புதிதில் அவள் சிறு பிள்ளை. அவர்கள் வட்டாரத்தில் அனைவரிடமும் பாசமாக இருப்பாள்.விடுமுறை நாட்களில் சுந்தரம் வீட்டில் தான் அவளது ஜாகை எனவே தான் இந்த ஒட்டுதல் அதை விட குணத்தில் தங்கம்.அதனால் தானே சுந்தரம் வம்பு செய்து மருமகளாக தேர்வு செய்தார்.

அவளது அமைதி கலக்கத்தைக் கொடுக்க என்ன விமலா?அமுதா கொஞ்சம் பதட்டமாக கேட்க “அவருக்கு தான் எங்க குடும்பத்தை கண்டாலே பிடிக்கா தேக்கா அப்பாவும்,மாமாவும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க அக்காவை மனசுல வச்சுட்டு அவர் என்னிடம் ஒதுங்கி போறார்” விமலாவின் கூற்றில் தாமரைக்கு இப்போது பயம் அதிகமாகியது.

“இன்னொரு தாமரை வேண்டாம் விமலா நாங்க வேணா தம்பிகிட்ட பேசவா” தலையை வேகமாக ஆட்டியவள் “நானே பார்த்துகிறேன் அக்கா முடியலைன்னா உங்ககிட்ட சொல்லுறேன்” அவளது தைரியமும் பக்குவமும் பெண்களுக்கு நிம்மதியை அளித்தது.

சூழ்நிலை இறுக்கத்தை குறைக்க அமுதா "கல்யாணம் முடியட்டும் அப்புறம் வச்சுக்கலாம் அண்ணனுக்கும்,தம்பிக்கும் ரொம்ப தான் பண்ணுறாங்க.தாமரை உன் புருசனுக்கு தினமும் முருங்காக்கையா செஞ்சு கொடுக்குற” சீதா சொல்லவே அழகாக வெட்க பட்டாள் தாமரை.
விமலா தான் நொடித்து கொண்டாள் "அக்கா, மாமாக்கும் அவருக்கும் முருங்கை மரத்தையே வெட்டுனாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது”அவளது கேலி பேச்சில் ஏய்! என்று அவளை பிடித்து கொண்டனர் மூவரும் அதன் பின் குதூகலமாக குளித்து முடித்து வீடு திரும்பினர்.

விமலா அவள் வீட்டை நோக்கி செல்ல இவர்கள் தங்கள் இல்லத்தை நோக்கி வந்தனர்.இன்று தான் செல்வத்திற்கு ஓய்வு கிடைத்தது தொடர்ந்து ஒரு வாரம் வேலை என்பதால் இரு தினங்கள் விடுமுறை வீட்டில் நுழைந்ததும் அவன் தேடியது தாமரையை தான் அவள் இல்லாமல் போகவே கோபம் உச்சம் தொட்டது.

நேராக அவரவர் அறைக்கு சென்று துணியை மாற்றி கொண்டு சமையல் அறைக்கு வந்த பெண்கள். பங்கஜத்திடம் பேச்சு கொடுத்து கொண்டே சமைக்க பிள்ளைகளை சுந்தரம் பார்த்து கொண்டு இருந்தார்.தாமரை மட்டும் இன்னும் அறையில் இருந்து வராததை கண்டு சீதா பார்க்க போக “எங்க போற சீதா”அவளை தடுத்தவரே பங்கஜம் கேட்க

“தாமரையை இன்னும் காணோம் அத்தை என்ன பண்ணுறான்னு பார்த்துட்டு வரேன்” மீண்டும் அவளை தடுத்தவர் “செல்வம் வந்து இருக்கான் சீதா” அந்த ஒரு சொல்லே அவளை தடுத்தது கொழுந்தனின் வரவு குறிஞ்சி பூ போல் என்பதினால் பதில் பேசாமல் பின் வாங்கினாள் சீதா.
அங்கோ ....

சட்டமாகக் கட்டிலில் படுத்துக் கொண்டு தனது மனையாளை பார்த்துக் கொண்டு இருந்தான் செல்வம். ஈரம் சொட்ட சொட்ட அவள் நிற்க அவளுடைய புடவையில் படுத்துக் கொண்டு அலுச்சாட்டியம் செய்தான்.

எப்போதும் இது போல் சேட்டைகளை அவனிடம் கண்டதில்லை இன்று மட்டும் ஏன்? விடை தெரியாமல் அவனுடன் பேச பயம் கொண்டு நின்று கொண்டு இருந்தாள். எத்தனை நேரம் தான் நிற்பது ஒரு அறை அதில் தான் எல்லாம் இப்போது துணியை எடுத்தாலும் எங்குச் சென்று மாற்றுவது.

அவள் பேசமாட்டாள் என்பதை உணர்ந்தவன் அவளது புடவையை எடுக்கத் தோதாக சுவரை பார்த்து படுத்துக் கொள்ள வேகமாகப் புடவையை எடுத்து கட்டினாள்.அதே வேகத்துடன் கதைவை திறக்க போக செல்வத்தின் குரல் தடை செய்தது “தாமரை எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது கொஞ்சம் தூங்கனும்”

“சரிங்க தூங்கி முழிங்க சுடு தண்ணீர் வச்சு தரேன்” என்று நகர போக

"கதவத் திறக்க வேண்டாம் இங்க வா" திரும்பி படுத்த வாரே அவளை ஏவி கொண்டு இருந்தான்

பயத்துடன் அவனை நெருங்கிவளை இழுத்து படுக்க வைத்து இறுக்கமாகக் கட்டி கொண்டான்.அவனுடைய உடல் வலியை அவளிடம் கிடத்த எண்ணினான் போலும் தாமரைக்கு வலி உயிர் போனது.எந்த விதமான அத்து மீறல்களும் இல்லாமல் தூங்கி போனான் இறுக்கம் மட்டும் குறையவே இல்லை.அவனது நிலை உணர்ந்து கண்ணில் நீர் வழிய வழிய தாங்கி கொண்டாள்.

உடல் உழைப்பு தந்த களைப்பு அதனைத் தாங்க முடியாமல் தன்னை நாடியது அவளுக்கு மகிழ்ச்சியே அதிலும் அவன் கட்டுப்பாடோடு இருப்பது எண்ணி விமலா சொன்ன முருங்கை மரம் தான் நியாபகம் வந்தது,

சிரித்து விட்டாள் அவளது அசைவில் அவன் உடல் அசையவே கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.சுமார் மூன்று மணி நேரம் கழித்து அவனது பிடி சற்று இளக அவன் தூக்கம் கலையாதவாறு மெல்ல எழுந்து வந்தாள்.

அவளைப் பார்த்த ஓரகத்திகள் மர்மாகச் சிரிக்க பங்கஜம் முகத்தில் ஆர்வம் மின்ன கண்டும் காணாதது போலச் செவியை இவர்களிடம் கொடுத்து விட்டுக் கை மட்டும் தனது காதல் கணவனுக்குக் காபியை ஆற்றியது.
“தாமரை” அமுதாவும்,சீதாவும் அவளை இருபுறமும் கட்டிக்கொள்ள அவர்களது செய்கையில் மிரண்டவள்

"என்ன அக்கா?"

ஏய்! கள்ளி எங்களுக்கு எல்லாம் தெரியும் அமுதா அவளது கன்னத்தைக் கிள்ள அப்போது தான் அவளுக்குப் புரிந்தது.இவர்களது கேலி அட காலக் கொடுமையே என்று எண்ணியவள்.

ஐயோ! அக்கா அதெல்லாம் ஒண்ணுமில்லை அவளது மறுப்பைக் கண்டு கொள்ளாமல் அவர்கள் கற்பனை குதிரையை ஓடவிட காது கூசும் அளவிற்கு இருவரும் கேலி பேச பொறுக்க முடியாமல்.

"அய்யோ அக்கா” என்று கத்திய தாமரை நடந்தை சொல்ல

அமுதாவும்,சீதாவும் தலையில் அடித்துக் கொண்டனர் மேலும் அவளது தலையில் இரண்டு போட்டு தத்தி தத்தி என்று அவளை வசை படியே சென்றனர்.

பங்கஜமும் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கணவனை நோக்கி சென்றார் என்று தான் செல்வம்- தாமரைக்கு காலம் கனியுமோ? என்று அவரது மனம் அடித்து கொண்டது.
**************************************
காபியை கையில் ஏந்தி கொண்டு கண்களால் சுந்தரத்தை வலை வீசி கொண்டு இருந்தார் பங்கஜம்.திண்ணையில் உட்காந்து இருந்த தனது கணவனைக் காணாமல் எங்கே என்று தேட வீட்டுக்கு சற்று தள்ளி தண்ணீர் குழாய் அடியில் வருங்கால மருமகளும்,மாமனாரும் முறைத்துக் கொண்டு இருந்தனர்.

அதனைப் பார்த்த பங்கஜத்துக்குச் சற்று முன் மனதை அழுத்திய பாரம் உடனே மறைந்து கொள்ள வாய் கொள்ளா சிரிப்புடன் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.சற்று தள்ளி வேலையை முடித்து விட்டு வந்த ராஜனும் அவர்களைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றான் கோபமாக (இனி அடிக்கடி அவன் தலை அடிபடும் பாவம்)

நான்கு,ஐந்து தெருக்கள் தள்ளி சுந்தரம் வீட்டுக்குப் பக்கத்தில் தான் குடி நீர் குழாய் உள்ளது என்றுமே விமலாவின் அன்னை தான் தண்ணீர் எடுக்க வருவார்.இன்று உடல் உபாதை காரணமாக விமலா அந்தப் பணியைச் செய்ய அவளை பார்த்த மாத்திரத்தில் நமது கிழட்டு காளை தனது குசும்பை ஆரம்பித்து விட்டது.

பின்ன என்ன சிறு வயதில் இருந்தே விமலாவை சுந்தரத்திற்கு ரொம்பப் பிடிக்கும்.அவரை எதிர்த்து பாசமாகவும்,குறும்பாகவும்,வம்புக்கு இழுக்கும் ஒரே ஆள் அவள் தான் என்று ‘தனது மருமகளாக வா’ என்று கேட்டாரோ அன்றிலிருந்து அவள் பேசுவதில்லை ஒரு முறைப்புடன் தான் சுற்றி திரிந்தாள்.

தன்னிடம் அவர் பேச வந்தாலும் நாசுக்காக நகர்ந்து விடுவாள்.அவளது ஒதுக்கம் அவருக்கு அத்தனைக் கவலையை அளித்தது தன்னிடம் தள்ளி நிற்கும் மருமகள்கள் இடையில் விமலா வந்தாள் அவருக்கு அந்த நினைப்பே அத்தனை குதூகலமாக இருந்தது.

அவருக்கு என்றுமே வாழுமிடம் உயரிப்புடன் இருக்க வேண்டும்.அது விமலா போன்ற பெண்ணால் தான் முடியும் அதனால் தான் அவள் மறுக்க மறுக்க அவர் உறுதியாக இருந்து நிச்சயத்தை நடத்தியது.

தண்ணீர் குடம் நிரம்பி அவள் தூக்கும் தருவாயில் குடத்தைப் பிடித்து இழுத்தார் சுந்தரம் முதலில் திகைத்தவள் பின் தனது மாமன் தான் என்றவுடன் முறைத்துக் கொண்டு இருந்தாள்.

முட்டை கண்ணை வைத்து முறைக்கும் மருமகளுடன் விளையாட எண்ணி அவர் பக்கம் குடத்தை இழுக்க அவள் தன் பக்கம் இழுக்க என்று சில நொடிகள் கழிந்தது.

அவரது செயலில் பொறுமை பறக்க “மாமா என்ன பண்ணுறீங்க வீட்டுக்கு போகணும் குடத்தை விடுங்க"

"அப்போ முன்ன மாதிரி மாமா கிட்ட பேசு நான் விடுறேன்” அவர் செய்யும் வம்பில் தலையில் அடித்துக் கொண்டவள்

“நீங்க பண்ணிக்கிட்டு இருக்கீங்க" அவர் பற்றிய கையை சுட்டி காட்டி கேட்க அதில் கையில் இருந்து குடத்தை விட இது தான் சாக்கென்று அவள் நகரப் பார்க்க மீண்டும் கையைப் பிடித்துக் கொண்டார்.

“ஹலோ,மிஸ்டர்.சோமா சுந்தரம் பெரிய மனுஷன் பண்ணுற வேலையா இது அப்பாவுக்கும்,மகனுக்கும் என்ன பார்த்த எப்படி தெரியுது?” பழைய விமலாவாக அவரைக் கேட்க முகம் கொள்ளப் புன்னகையாக

“எங்க வீட்டு மஹாலக்ஷ்மி மாதிரி தெரியுது” அதில் அவள் கண்கள் பண்ணிக்க உள்ளம் உருக.

“போங்க மாமா”சிறு பிள்ளையாய் சீனுங்கிய அவளை வாஞ்சையோடு பார்த்தார் சுந்தரம்

விமலா பாப்பா! பல வருடங்கள் கழித்து அவரது அழைப்பு அழுகை வரும் போல் இருந்தது.அவளது கைகளைப் பற்றியவர் “நான் இருக்கேன் இந்த கல்யாணத்துல எந்தத் தப்பும் வராது உன் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு.

அந்த காளைக்கு ஏத்த மூக்கான கையறு நீ தான்.தாமரை மாதிரி பொண்ணு வந்தா இன்னும் இந்தப் பையல அடக்க முடியாது. தாமரை விஷியத்துல நான் சரிகிட்டேன் பாவம் அந்தப் பொண்ணு. நீ வந்தா எல்லாம் சரியாய் போயிடும்.அதுவும் மாதங்கிக்கு ஈடு கொடுக்க உன்னால தான்மா முடியும்”

அவர் கலங்குவதைப் பார்க்க முடியாமல் "என்ன மாமா" பதறியவள் அவர் கவலையைப் போக்கும் பொருட்டு “சரி சரி உங்க வீட்டுக்கு நான் தான்னு உங்க தலைல எழுதியிருக்கு நான் என்ன பண்ண முடியும்” விளையாட்டு போல் சொல்லியவள்.

"இருந்தாலும் ராஜன் மாமனுக்குக் கொஞ்ச நஞ்ச திமிர் இல்லை கல்யாணம் ஆகட்டும்" நம்பியார் போல் கைகளைப் பிசைந்து கொண்டு அவள் கூற மனம் நிறைந்தது அவருக்கு.சிரித்துக் கொண்டே

“வாம்மா காபி குடிக்கலாம்”

“ஐயோ! அம்மாவுக்குத் தெரிஞ்சுது அவுளோதான் மாமா நீங்க வேற”

"ஏன் நீ மருமக ஆகுறதுக்கு முன்னாடியே எங்க செல்ல பாப்பா"

“அது உங்களுக்குத் தெரியுது எங்க அக்காவுக்கும் அம்மாக்கும் தெரியலையே” பின்பு சிறுது நேரம் பேசிவிட்டு சென்றாள்

தனது வருங்கால மருமகளுடன் பேசியது சற்று மகிழ்ச்சியைத் தர உற்சாகமாக வந்து தனது ஆஸ்தான இடத்தில் அமர்ந்தார் சுந்தரம்.அடுத்த நொடி மணக்க மணக்க காப்பி மனைவியின் கையால் பங்கஜத்தை பார்த்தவரே ரசித்துக் குடித்தார்.அதில் வெட்கம் கொண்டவர் உள்ளே விரைவாகச் செல்ல சின்ன சிரிப்பு அவரிடம்.

எதிர்பார்ப்பு இல்லா வாழ்க்கை அன்பை மட்டும் அடிப்படியாகக் கொண்டு வாழ்ந்த நாட்கள் அன்று மட்டுமே இன்றைய குடும்பங்களில் உள்ளதா என்ன?

Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
கதம்பவனம் – 3
வழமை செழிக்கும் இயற்கையைக் கொண்ட வாழை தோப்பு பறவைகள் பாசுரம் பாட சூரிய பகவான் அதில் மகிழ்ச்சி கொண்டு இன்னும் பிரகாசமாக எரிந்தாலும் குளுமையாகத் தான் இருந்தது அவ்விடம்.அழகுக்கு அழகு சேர்ப்பது போல நான்கு பெண்களின் கும்மாளம் ஓரகத்திகள் அனைவரும் அந்தப் பம்பு செட்டில் விளையாடி கொண்டு இருந்தனர்.ஒருவரை ஒருவர் அடித்தும்,தண்ணீரை தெளித்தும்,பாவாடைகளைப் பிடித்து இழுத்தும் லூட்டி அடித்தனர்.

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top